Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கால் முறிவடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

Posted: 10 Aug 2016 08:01 AM PDT

h

hஇன்று அதிகாலை அளவில் ஸ்காபரோ பகுதியில் கால் முறிவடைந்த நிலையில் இருந்த பெண் ஒருவர் காவல்த்துறையினரால் மீட்கப்பட்டுள்ளார்.

Danforth வீதி மற்றும் Eglinton Avenue பகுதியில் இன்று அதிகாலை 3.30 அளவில் அவர் கால் முறிந்த நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

சுமார் 30 வயது மதிக்கத்தக்க அந்த பெண்ணை மருத்துமவனையில் அனுமதித்துள்ளதாகவும், அவரின் உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் அவசர மருத்துவ பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர்.

குறித்த அந்த பெண் வாகனம் ஒன்றினால் மோதுண்டிருக்கலாம் என்றும், அவரை மோதிய வாகனம் சம்பவ இடத்தில் தரித்திருக்காது தப்பிச் சென்றிருக்கக்கூடும் எனவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.
ரொரன்ரோ காவல்த்துறையின் போக்குவரத்து கண்காணிப்பு அதிகாரிகள் இந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

The post கால் முறிவடைந்த நிலையில் மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனரக வாகன விபத்து – ஒருவர் பலி, 6பேர் காயம்

Posted: 10 Aug 2016 07:57 AM PDT

s

sநச்சுத் தன்மை உடையதும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான இரசாயனப் பொருளை தாங்கிய கொள்கலனுடன் பயணித்த கனரக வாகனம் ஒன்று விபத்துக்குள்ளான சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

மேலும் ஆறு பேர் காயமடைந்ததாக கூறப்படும் இந்த விபத்து மொன்றியலில் நேற்று செவ்வாய்கிழமை மாலை நான்கு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

நச்சுத் தன்மை உடையதும், சுற்றுச் சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடியதுமான இரசாயனப் பொருளை தாங்கிய கொள்கலனுடன் பயணித்த அந்த கனரக வாகனம் நெடுஞ்சாலையில் மோதுகைக்கு உட்பட்டு தீப்பிடித்துக் கொண்தாக தெரிவிக்கப்படுகிறது.s

குறித்த அந்த வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகி தீப்பற்றி எரிந்த நிலையில்,100 வரையிலான தீயணைப்பு வீரர்கள் சுமார் இரண்டரை மணித்தியாளப் போராட்டத்தின் பின்னர் தீப்பரவலை கட்டுப்பாட்டினுள் கொண்டுவந்திருந்தனர் என மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதையும், ஆறுபேர் காயமடைந்ததையும் அவசர மருத்துவப் பிரிவினர் உறுதிப்படுத்தியுள்ளனர்.

காயமடைந்தவர்களில் இருவர் சிறு அளவிலான காயங்களுக்கே ஆளானதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post கனரக வாகன விபத்து – ஒருவர் பலி, 6பேர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™