Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


ஈற்ரோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 03 Aug 2016 08:30 AM PDT

hgjhk

hgjhkஈற்ரோபிக்கோ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் 40 வயது நபர் ஒருவர் காயமடைந்துள்ளார்.

ஈட்டோபிக்கோவின் Lawrence Avenue மற்றும் Scarlett வீதியில் அமைந்துள்ள Scarlettwood Courtஇல் இன்று அதிகாலை 3.30 அளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நபர் 40 வயதான Lerry Richardson என அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது மூன்று துப்பாக்கி வேட்டுக் காயங்கள் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

அவர் ஆபத்தான காயங்களுக்கு ஆளான போதிலும் உயிர் பிழைத்து விடுவார் என காவல்த்துறையினர் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.hgjhk

இதேவேளை இந்த சம்பவத்தின் போது மொத்தம் 10 துப்பாக்கி வேட்டுக்கள் தீர்க்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர் குறித்த விபரங்கள் எதனையும் காவல்த்துறையினர் வெளியிடவில்லை என்ற போதிலும், அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு ஒளிப்பதிவுக் கருவியில் பதிவான காட்சிகளை ஆராய்வதாக தெரிவித்துள்ளனர்.

The post ஈற்ரோபிக்கோ பகுதியில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரஸ்ய தகவல்களை உக்ரெய்னுக்கு வழங்குவதில் நெருக்கடி

Posted: 03 Aug 2016 08:00 AM PDT

l

lரஸ்ய துருப்புக்கள் குறித்த தகவல்களை உக்ரெய்னுக்கு வழங்கும் கனடாவின் நடவடிக்கைகளில் பல்வேறு நெருக்கடிகள் எதிர்நோக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

ராடார்சட்-2 என்ற உயர் தொழில்நுட்பம் கொண்ட செய்மதியின் மூலம் பெறப்படும் ரஷ்யா மற்றும் உக்ரெய்ன் பிரிவினைத் தரப்பினரின் படங்களை உக்ரெய்னுக்கு வழங்குவதாக கடந்த 2015ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் முன்னைய பழமைவாதக் கட்சி அரசாங்கம் அறிவித்திருந்தது.

ஆனால் அவ்வாறான படங்களை உக்ரெய்னுக்கு வழங்குவதற்கான பல்வேறு அனுமதிகளை கனேடிய மத்திய அரசாங்க துறைகளிடம் இருந்து பெற்றுக் கொள்வதில் தொடர்ந்து பல சிக்கல்கள் எதிர்நோக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.

குறிப்பாக அனுமதிகளை ஒட்டாவாவில் இருந்து பெற்றுக்கொள்வதில் கடுமையான தடைகள் காணப்படுவதாகவும், அவ்வாறான தகவல்களை வழங்குவது தொடர்பில் பல்வேறு சட்ட கட்டுப்பாடுகள் காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

குறிப்பாக அவ்வாறான தகவல்களை பயன்படுத்தி குறித்த சில இலக்குகள் மீது உக்ரெய்ன் தாக்குதல்களை நடாத்துமானால், அவை குறித்து அதிகம் சிந்திக்க வேண்டியுள்ளதாக கூறப்படுகிறது.

அதேவேளை இந்த தகவல்கள் உக்ரெய்ன் இராணுவத்துக்கு பயனுள்ளவையாக அமைய வேண்டும் எனின் அவை உரிய காலத்தினுள் வழங்கப்பட வேண்டும் என்றும், இவ்வாறு உரிய காலத்தினுள் வழங்கப்பட்டாலே உக்ரெய்ன் இராணுவத்துக்கு அவை பயனுள்ளவையாக அமையும் எனவும் இராணுவ ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

The post ரஸ்ய தகவல்களை உக்ரெய்னுக்கு வழங்குவதில் நெருக்கடி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™