Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


தி.மு.க.,வில் கேட்கும் கலகக் குரல் : முப்பெரும் விழா : விருதுகள் அறிவிப்பு

Posted: 09 Aug 2016 10:10 AM PDT

தி.மு.க., முப்பெரும் விழா விருதுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன. துாத்துக்குடி மாவட்ட செயலர் பெரியசாமிக்கு, 'கலைஞர் விருது' அறிவிக்கப்பட்டு உள்ளதற்கு, ஒரு தரப்பில் எதிர்ப்பு கிளம்பி உள்ளதாக தெரிகிறது.

இது குறித்து, தி.மு.க., நிர்வாகி ஒருவர் கூறியதாவது: ஒவ்வொரு ஆண்டும்
செப்., 17ம் தேதி, தி.மு.க., சார்பில், முப்பெரும் விழா கொண்டா டப்படுகிறது. இதையொட்டி சென்னை, அறிவாலயத்தில் பல்வேறுநிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்படும். அதில், விருதுகள் வழங்கப்படும்.
இந்தாண்டு பெரியார் விருது - ...

ரூ.4,126 கோடி மின் திட்டங்கள்: முதல்வர் ஜெ., அறிவிப்பு

Posted: 09 Aug 2016 10:30 AM PDT

சென்னை:''மின் வாரியம் சார்பில், 4,126 கோடி ரூபாய் மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும்,'' என, முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

சட்டசபையில், 110 விதியின் கீழ், மின் துறை தொடர்பாக, முதல்வர் நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்புகள்:* குமரி மாவட்டம், கோதையாறு அணை, 2.6 டி.எம்.சி., அடி கொள்ளளவு உடையது. இந்நீரை பயன்படுத்தி, 60 மெகாவாட் மின் நிறுவு திறனுடைய, நீர்மின் நிலையம், 1970 முதல் செயல்பட்டு வருகிறது. இதன் மின் உற்பத்தி இலக்கு, 15 கோடி யூனிட் என, நிர்ணயிக்கப் பட்டிருந்தாலும், 2015ல், 19 கோடி யூனிட் மின் உற்பத்தி செய்யப்பட்டு, சாதனை படைக்கப்பட்டு உள்ளது.ஒரு நீர்மின் ...

'காஷ்மீர் சொர்க்கபுரியாக திகழ உதவுங்கள்!' இளைஞர்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

Posted: 09 Aug 2016 10:37 AM PDT

போபால்:''பூமியின் சொர்க்கபுரியாக கருதப்படும் காஷ்மீரில், அமைதி, நல்லிணக்கம் திகழ, அம்மாநில இளைஞர்கள் உதவ வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ம.பி., மாநிலம், அலிராஜ்பூர் மாவட்டத்தில், நேற்று நடந்த பொதுக்கூட்டத்தில், பிரதமர் மோடி பேசியதாவது: காஷ்மீர் மாநில இளைஞர் கள், புத்தகம், கிரிக்கெட் விளையாட்டு, லேப் - டாப் என, காலம் கழிக்க வேண்டியவர்கள்; துரதிருஷ்டவசமாக, அவர்களின் கைகளில் கற்கள் தரப்பட்டுள்ளன. காஷ்மீர் மாநில இளைஞர்கள் வன்முறைகளை கைவிட்டு, அமைதி, நல்லிணக்கம் ...

விஜயகாந்துக்கு நீதிபதி கண்டிப்பு 16ம் தேதி நேரில் ஆஜராக உத்தரவு

Posted: 09 Aug 2016 10:44 AM PDT

விழுப்புரம்:அவதுாறு வழக்குகளில் ஆஜராகாத விஜயகாந்துக்கு கண்டிப்பு தெரிவித்த நீதிபதி, வரும், 16ம் தேதி ஆஜராக வேண்டும் என, உத்தரவிட்டார்.

விழுப்புரத்தில், 2012ம் ஆண்டு நடந்த தே.மு.தி.க., பொதுக் கூட்டத்தில், முதல்வர் ஜெ.,வை அவதுாறாக பேசியதாக, அக்கட்சி தலைவர் விஜய காந்த் மீது, விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.அதேபோல், 2014ம் ஆண்டு எறஞ்சியில் நடந்த தே.மு.தி.க., மாநாட்டில், தமிழக அரசு மற்றும் காவல் துறையை அவதுாறாக பேசியதாக விஜயகாந்த், அவரது மனைவி பிரேம லதா, அப்போதைய எம்.எல்.ஏ.,க்கள் பார்த்தசாரதி, வெங்கடேசன் உள்ளிட்ட நால்வர் மீது, ...

ரூ.570 கோடி விவகாரம் கோவையில் விசாரணை

Posted: 09 Aug 2016 10:52 AM PDT

திருப்பூரில் பறிமுதல் செய்யப்பட்ட, 570 கோடி ரூபாய் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள, சி.பி.ஐ., குழுவினர் விரைவில் கோவை செல்ல உள்ளனர்.

சட்டசபை தேர்தலின் போது, கோவையில் இருந்து ஆந்திரா நோக்கிச் சென்ற மூன்று கன்டெய்னர் லாரிகளில் இருந்த, 570 கோடிரூபாய் கரன்சி நோட்டுகள், வாகன சோதனையில் சிக்கியது. இது தொடர்பாக, முதல் கட்ட விசாரணையை,சி.பி.ஐ., துவங்கியுள்ளது.எனவே, இந்த விசாரணை, சென்னை, ராஜாஜி பவனில் உள்ள சி.பி.ஐ., சிறப்பு புலனாய்வு பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. அப்பிரிவை சேர்ந்த அதிகாரிகள், விரைவில், கோவை சென்று, அங்குள்ள பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகளிடம் ...

துணிகரம்: தமிழகத்தில் முதல் முறையாக ஓடும் ரயிலில் பல கோடி கொள்ளை: பெட்டியின் மேற்கூரையை உடைத்து நடந்த சம்பவத்தால் பரபரப்பு

Posted: 09 Aug 2016 11:06 AM PDT

தமிழகத்தில் முதல் முறையாக, ஓடும் ரயிலில் பல கோடி ரூபாய் கொள்ளை அடிக்கப்பட்ட துணிகர சம்பவம் நடந்துள்ளது. சேலத்தில் இருந்து சென்னைக்கு வரும் வழியில், ரயில் பெட்டியின் மேற்கூரையை உடைத்து நடந்த இச்சம்பவத்தால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

சேலம் - சென்னை விரைவு ரயில், நேற்று முன்தினம் இரவு, 9:30 மணியளவில், சேலத்திலிருந்து புறப்பட்டது. 19 பெட்டிகள் உடைய அந்த ரயிலில், 16 பெட்டிகளில் பயணிகள் இருந்தனர். மூன்று பெட்டிகளில், பார்சல்கள் இருந்தன.ரூ.342 கோடி:ரயில் இன்ஜினுக்கு அருகில் உள்ள பெட்டியில், சேலம், நாமக்கல், ராசிபுரம் உள்ளிட்ட பகுதிகளில் ...

அருணாச்சல் 'மாஜி' முதல்வர் கலிகோ புல் தற்கொலை?: பதவி பறிபோன விரக்தியால் விபரீத முடிவு?

Posted: 09 Aug 2016 11:13 AM PDT

இடாநகர்:வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேச முன்னாள் முதல்வரும், காங்., அதிருப்தி தலைவருமான கலிகோ புல், 47, தன் வீட்டில் துாக்கில் தொங்கிய நிலையில், சடலமாக நேற்று மீட்கப்பட்டார். பதவி பறிபோன விரக்தியால், அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, அவரது ஆதரவாளர்கள், மாநிலம் முழுவதும் வன்முறையில் ஈடுபட்டதால், பதற்றம் நிலவுகிறது.கடந்த பிப்ரவரியில், அருணாச்சலப் பிரதேசத்தில், காங்கிரசைச் சேர்ந்த, முதல்வர் நபாம் துகிக்கு எதிராக, அதிருப்தி எம்.எல்.ஏ.,க் களை திரட்டி, ஆட்சியை கவிழ்த்தவர் கலிகோ புல். பின், பா.ஜ., ஆதரவுடன், மாநில ...

16 ஆண்டு உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தது: முதல்வராக போவதாக ஷர்மிளா அறிவிப்பு

Posted: 09 Aug 2016 12:08 PM PDT

இம்பால்:ஆயுதப்படை சிறப்பு அதிகார சட்டத்துக்கு எதிராக, 16 ஆண்டுகள் உண்ணா விரதம் இருந்து வந்த, மணிப்பூர் மாநிலத்தின் இரும்பு பெண், இரோம் ஷர்மிளா, 44,கண்ணீர் மல்க தன் போராட்டத்தை முடித்துக் கொண்டார். தேர்தலில் போட்டியிட்டு, மணிப்பூர் மாநில முதல்வராகி, பிரச்னைகளை தீர்க்கப் போவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார்.மருத்துவமனையில் சிறை:வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப் பூரில், முதல்வர் இபோபி சிங் தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. வடகிழக்கு மாநிலங்களில், சீனாவின் துாண்டுதலுடன் அவ்வப்போது போராட்டங்கள் வெடித்து வந்ததால் ராணுவ வீரர்கள் ...

தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் 16 ஆண்டுக்கு பின் ஒருவர் கைது

Posted: 09 Aug 2016 12:27 PM PDT

பெங்களூரு: கடந்த, 2000ம் ஆண்டு கர்நாடகாவில் நடந்த தொடர் குண்டு வெடிப்பு சம்பவத்தில், 16 ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளி ஷேக் அமீர் அலியை, சி.ஐ.டி., போலீசார், கைது செய்தனர்.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையிலான காங்., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள கலபுர்கி, கேசவாபுரா, பெங்களூரு ரோடு, ஜெகஜீவன்ராம் நகரின் பீட்டர் மற்றும் பால்ஸ் ஆலயம் போன்ற இடங்களில், 2000ம் ஆண்டில், குண்டு வெடிப்புகள் நடந்தன. இது தொடர்பாக, 29 பேர் மீது, சி.ஐ.டி., போலீசார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர். இதில், 11 பேருக்கு மரண தண்டனையும், 12 ...

'சசிகலா புஷ்பாவை நீக்கி விட்டோம்' கடிதம் தந்த அவசரக்குடுக்கை எம்.பி.,

Posted: 09 Aug 2016 12:33 PM PDT

ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா, அ.தி.மு.க., விலிருந்து நீக்கப்பட்டு விட்டாலும், அதுகுறித்த அதிகாரப்பூர்வமான கடிதம், ராஜ்யசபா செயலகத் திற்கு தரப்படவில்லை.

இந்நிலையில், சசிகலாபுஷ்பாவை கட்சியி லிருந்து நீக்கிவிட்டதாக கூறி, அ.தி.மு.க., -எம்.பி., ஒருவர், அவசரப்பட்டு ராஜ்யசபா செயலகத்தில் கடிதம் கொடுத்து, பின், அதை திரும்ப பெற்ற சம்பவம் அரங்கேறி உள்ளது.ராஜ்யசபா செயலக வட்டாரங்கள் கூறிய தாவது:முன்னெப்போதும் இல்லாத வகையில், இந்த மழைக்கால கூட்டத் தொடருக்கு முன், புதிய எம்.பி.,க்கள் அதிகம் பேர் பதவியேற்றனர். இதனால், அவர்களுக்கு ஏற்ற வகையில், ...

புதிய ஓய்வூதியம்; மத்திய அரசு விளக்கம்

Posted: 09 Aug 2016 12:56 PM PDT

புதுடில்லி: 'கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்ற, அனைத்து மத்திய அரசு ஓய்வூதியதாரர்களுக்கும், இந்த மாதத்திலேயே புதிய ஓய்வூதியம் மற்றும் 'அரியர்ஸ்' அளிக்கப்படும்' என, மத்திய அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: ஏழாவது சம்பள கமிஷனின் பரிந்துரைகளின் படி, கடந்த ஆண்டு இறுதி வரை ஓய்வு பெற்றவர்களுக்கு, இந்த மாதம் புதிய ஓய்வூதியம் அல்லது குடும்ப ஓய்வூதியம் மற்றும் இந்த ஆண்டு ஜனவரி முதலான நிலுவைத் தொகை, அரியர்ஸாக வழங்கப்படும். இதுவரை வாங்கிய ...

1.36 கோடி பேர் வரி செலுத்துவதில்லை

Posted: 09 Aug 2016 01:59 PM PDT

புதுடில்லி : கடந்த நிதி ஆண்டில் 1.36 கோடி பேர் வருமான வரி செலுத்துவதில்லை என மத்திய நிதித்துறை இணையமைச்சர் தெரிவித்தார்.
இதுகுறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் சந்தோஷ் குமார் கங்க்வார், ராஜ்யசபாவில் கேள்விக்கு பதிலளித்ததாவது: கடந்த நிதியாண்டில், நாடு முழுவதும், 5.24 கோடி பேர் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தனர். அதே நேரத்தில், வருமான வரி செலுத்தும் பிரிவில் இருந்தும், 1.36 கோடி பேர் அதற்கான கணக்கை காட்டுவதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
சுவிஸ் உடன் பேச்சு :
மேலும் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அவர் ...

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கு ரூ. 130 கோடி சொத்து

Posted: 09 Aug 2016 02:04 PM PDT

புதுடில்லி: ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏ.வுக்கு ரூ. 130 கோடி அளவிற்கு சொத்து சேர்த்திருப்பதாக வருமான வரித்துறை நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.டில்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடக்கிறது. முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளார். ஊழலுக்கு எதிரான இயக்கம் தொடங்கிய கெஜ்ரிவால் அந்த இயக்கத்தை கட்சியாக மாற்றி அரசியலில் குதித்தார். தற்போது டில்லி மாநில முதல்வராக உள்ளார்.இவர்து கட்சியின் தெற்கு டில்லி மெகரூலி தொகுதி எம்.எல்.ஏ.வாக இருப்பவர் கர்டார்சிங், 54, இவர் ரியல் எஸ்டேட் நிறுவனம் மற்றும் பல்வேறு நிறுவனங்களை நடத்தி வருகிறார். கடந்த மாதம் வருமான ...

பீகாரில் மதுபாட்டில்கள் பதுக்கிய கிராமத்திற்கு அபராதம்

Posted: 09 Aug 2016 02:29 PM PDT

பாட்னா: பீகாரில் பூரண மதுவிலக்கு அமலில் உள்ள நிலையில் மதுபாட்டீல்கள் பதுக்கிவைத்து விற்பனை செய்ததாக கிராமம் ஒன்றிற்கு அபாரதம் விதிக்கப்பட்ட சம்பவம் நடந்துள்ளது.பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதாதளம் கூட்டணி கட்சிகளின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார். கடந்த ஏப்ரல் 5ம் தேதி முதல் இம்மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதையடுத்து மதுபார்கள் மூடப்பட்டன. மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டது.இந்நிலையில் நாலந்தா மாவட்டம் கைலாஷ்புரி என்ற கிராமத்தில் வீடுகளில் குடிமகன்கள் மது பாட்டில்களை பதுக்கி ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™