ஈகரை தமிழ் களஞ்சியம் |
- யாரோ எழுதிய கவிதை ...!
- காணி நிலம் வேண்டும்’னு பாரதி இப்ப பாடினார்னா…
- வயல்வெளியில்: கோ. மன்றவாணன்
- பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! –
- மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம்
- துப்பாக்கி சுடுதல்: அபினவ் பிந்த்ரா தோல்வி
- ரெயிலின் மேற்கூரையை உடைத்து ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளையடித்த கும்பல்
- ரியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி
- அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள்.
- நக்சலைட் நயிமுதீன் வீட்டில் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள்-
- இன்று நல்ல விருந்து…!
- இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள்
- நிலம் எனும் நல்லாள்...!
- கல்விக்காக ஓர் நடனம்!
- ஆண்ட்ராய்டு ரூட்
- கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது சந்திரபாபுநாயுடு அறிவிப்பு
- ‘‘தெய்வமே நீ இங்கயா இருக்கே?
- பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார்
- தொடத் தொடத் தொல்காப்பியம்(435)
- the seecret tamil book download
- பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார்
- நெருப்பில் குதித்து வெளியேறிய தெருக்கூத்து கலைஞர்
- ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம்
- ஆகஸ்ட் 15 முதல் மதுவிலக்கு தேவை
- பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி
- வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன்.
- ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி
| Posted: 09 Aug 2016 10:38 AM PDT யாரோ எழுதிய கவிதை வாசிக்க வாசிக்க போர்வையானது என் இதயம் இழுத்து போர்திய விழிகள் இரண்டும் நினைவு சூட்டில் கானல் நீர் வடிக்க லேசான தென்றல் பட்டு புதுக்கவிதை பிறந்ததும் இளநீரான தேகம் சூடும் தனிந்து புதுச் சுதந்திரம் படைத்தது கவிதை...! |
| காணி நிலம் வேண்டும்’னு பாரதி இப்ப பாடினார்னா… Posted: 09 Aug 2016 09:19 AM PDT – பெருமைக்காக சொல்லலைன்னு சொல்லிட்டு, பிறகு சொல்பவை அனைத்தும் பெருமைக்காகவே இருக்கும்! – – எம்டிஸ் மெயில் பெங்களூர் – ——————————————- – கடமைக்காக கேட்கப்படும் 'நல்லாருக்கியா?', 'சாப்ட்டியா?' போன்ற கேள்விகள் பதில்களை எதிர்பார்ப்பதில்லை! – – ப்ரீதா – ———————————————- – @iam_v_jey இப்ப பாரதி இருந்து 'காணி நிலம் வேண்டும்'னு பாடினார்னா… 'எட்டயபுரத்துக்கு மிக அருகில்'னு எர்ணாகுளத்துல ஒரு பிளாட்டை அவருக்கும் வித்துருப்பானுக… – ——————————————- |
| Posted: 09 Aug 2016 09:19 AM PDT - கால் கடுக்காதோ காவல் பொம்மைக்கு வயல்வெளியில் சேற்று நண்டுகள் சிலுமிஷங்கள் வயலுக்குக் கிச்சுக்கிச்சு தானியப் பதுக்கல் தண்டனையில் இருந்து தப்பும் எலிகள் வயல்மண் தயாரித்தநூடுல்ஸ் மண்புழுக்கள் காற்று தலைகோதி விடுகிறது நாற்றுகள் வரப்புகள் வழக்குகள் எல்லை தாண்டும் ஆசைகள் சுற்றிலும் தென்னை வாழை மரங்கள் வயல் விசிறிகள் இன்றும் போரடிக்கின்றது இயந்திர யானை டிராக்டர் தங்கப்பல் வரிசை காட்டிச் சிரிக்கின்றன நெற்கதிர்கள் மரகதப்புல் சேலையில் வெட்கப்படும் நிலமங்கை நாளை ... |
| பொண்ணு, Pokemon Go விளையாடிட்டு இருக்கு! – Posted: 09 Aug 2016 09:18 AM PDT சட்டங்களை கடுமையாகக் கடைப்பிடிக்கும் சவூதி அரேபியாவிலும் சம்பளம் கொடுக்காமல் இருப்பதும், ஊழியர்கள் சோற்றுக்குத் திண்டாடுவதும் நடக்கிறது. மோசமான முதலாளிகள் எல்லா இடங்களிலும் இருக்கிறார்கள். வேலையை வாங்கிவிட்டு தெருவில் விடுவது எல்லாம் எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம்! – – குமார் துரைசாமி – ————————————————- அந்தமான் சென்று மாயமான விமானத்தில் பயணித்தவர் மொபைல் இயங்குகிறது: செய்தி # ஆனா இன்னும் உங்களால ட்ரேஸ் பண்ணமுடியல… இதுல்லாம் நம்புற மாதிரியா இருக்கு? சரி… சரி… அப்டியே உண்மையா ... |
| மூட்டுவலி குணமாக – இயற்கை வைத்தியம் Posted: 09 Aug 2016 09:15 AM PDT முடக்கத்தான் கீரையை தினமும் காலையில் வெறும் வயிற்றில் சாப்பிட்டால் மூட்டுவலி குணமாகும். ஆரம்பம் என்றால் உடனே குணம் கிடைக்கும். நாள்பட்ட வலி என்றால் கண்டிப்பாக 40 நாட்கள் சாப்பிட வேண்டும். வலியிலிருந்து விடுபடுவது உறுதி. சாப்பிடும் விதம் – முடக்கத்தான் கீரையில் உள்ள காய், இலைகளைப் பறித்து நன்கு சுத்தம் செய்து, கழுவி அரைத்து வைத்துக் கொள்ளலாம். பிரிஜ்ஜில் வைத்துக் கொண்டு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 தேக்கரண்டி சாப்பிடலாம். சுத்தம் செய்தபின் தண்ணீர் வடியும் வரை நிழலில் விரித்து காய ... |
| துப்பாக்கி சுடுதல்: அபினவ் பிந்த்ரா தோல்வி Posted: 09 Aug 2016 09:15 AM PDT - ரியோ டி ஜெனிரோ: ரியோ ஒலிம்பிக் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு துப்பாக்கி சுடுதல் பைனலில் இந்திய வீரர் அபினவ் பிந்த்ரா 4 வது இடம் பிடித்து தோல்வியடைந்தார். பிரேசிலில், 31வது ரியோ ஒலிம்பிக் போட்டிகள் நடக்கிறது. இதில் ஆண்களுக்கான 10 மீ., 'ஏர் ரைபிள்' பிரிவு துப்பாக்கி சுடுதல் தகுதிச் சுற்றில் இந்தியா சார்பில் அபினவ் பிந்த்ரா, 625.7 புள்ளிகள் பெற்று 7வது இடம் பிடித்தார். பைனலில் 163.8 புள்ளிகள் பெற்று 4 வது இடத்தை பிடித்து தோல்வியடைந்தார். – ———————————— தினமலர் |
| ரெயிலின் மேற்கூரையை உடைத்து ரிசர்வ் வங்கி பணத்தை கொள்ளையடித்த கும்பல் Posted: 09 Aug 2016 09:14 AM PDT சென்னை: சேலத்தில் இருந்து சென்னைக்கு வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில், பழைய ரூபாய் நோட்டு கட்டுக்கள் பெட்டிகளில் அடைத்து அனுப்பப்பட்டன. வங்கிகளில் பெறப்பட்ட இந்த பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தும் ரிசர்வ் வங்கிக்கு அனுப்பப்பட்டவை ஆகும். இந்த ரெயில் இன்று சென்னை வந்து சேர்ந்ததும் பணம் வைக்கப் பட்டிருந்த கம்பாட்மென்ட்டை திறந்தபோது அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். மொத்தம் உள்ள 228 பணப்பெட்டிகளில் சில பெட்டிகளை உடைத்து அதில் இருந்த பணம் கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. பணம் கொள்ளை போனது குறித்து ... |
| ரியோ ஒலிம்பிக் போட்டி: இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி Posted: 09 Aug 2016 09:12 AM PDT - ரியோ டீ ஜெனீரோ, ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு முதல் வெற்றி கிடைத்துள்ளது. இந்திய ஆடவர் ஹாக்கி அணி பி பிரிவில் அயர்லாந்து அணியுடன் இன்று மோதியது. இதில் 3-2 கோல் கணக்கில் அயர்லாந்து அணியினை வீழ்த்தி இந்திய அணி முதல் வெற்றியை பெற்றுள்ளது. இந்திய அணியின் வீரர்கள் ரூபிந்தர் பால் சிங் 2 கோல் அடித்துள்ளார். ரகுநாத்தும் இந்திய அணிக்காக கோல் அடித்துள்ளார். – ———————– |
| அவசியம் தெரிந்து கொள்ளுங்கள் -பற்சுகாதார ஆய்வு முடிவுகள். Posted: 09 Aug 2016 08:36 AM PDT ஒவ்வொரு பல்மருத்துவரும் வெவ்வேறு விதமாக தங்கள் கருத்துகளை சொல்லி வருகின்றனர். இந்த நிலையில் தற்போது பற்சுகாதாரம் பற்றிய முழு ஆய்வு அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. மனிதனின் 32 பற்களில் 28 பற்கள் 13 வயதிலும்,மிகுதி நான்கு 18 வயதிற்குப் பின்னரும் வருகிறது.நல்ல பல் சுகாதாரமின்மையினால் உணவுப் பொருட்கள் பல்லின் இடையே தங்குவதால் கிருமிகள் உருவாகி மஞ்சள் நிறக் கறை படிவதுடன் இதய நோய், டயபிடிஸ்,பக்கவாதம் போன்ற சில ஆபத்தான நோய்கள் ஏற்படக் காரணமாகியும் விடுகிறது. அதனால் பல் ஈறுகளிடையே தங்கும் உணவுப் பொருட்களை ... |
| நக்சலைட் நயிமுதீன் வீட்டில் ரூ.1000 கோடி சொத்து ஆவணங்கள்- Posted: 09 Aug 2016 07:23 AM PDT - ஐதராபாத் ஐதராபாத்தை அடுத்த மணிகொண்டா நகரில் வசித்து வருபவர் நயிமுதீன். நக்சலைட்டாக இருந்த இவர் 10 வருடத்துக்கு முன்பு போலீசில் சரண் அடைந்து திருந்தி வாழ்வதாக அறிவித்தார். ஆனால் அவர் ஒரு கும்பலை உருவாக்கிக் கொண்டு கொலை, பணம் பறித்தல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடு பட்டு ரவுடியாக வலம் வந்தார். அவர் 20-க்கும் மேற்பட்ட கொலை வழக்கில் தொடர்புடையவர். இதில் ஐ.பி.எஸ். அதிகாரி வியாஸ், நக்சலைட்டு தலைவர் கோனாபூரி ராமுலு, நக்சல் பாடகர் பெல்லி லலிதா ஆகியோரை கொன்ற வழக்குகள் அவர் ... |
| Posted: 09 Aug 2016 07:17 AM PDT - ![]() |
| இனிய குரலில் 'டிக்கெட் டிக்கெட்': கொச்சி தனியார் பேருந்துகளில் பெண் நடத்துநர்கள் Posted: 09 Aug 2016 07:16 AM PDT - கொச்சி: கேரள மாநிலம் கக்கநாட் - எர்ணாகுளம் செல்லும் வழியில் தனியார் பேருந்தில் ஏறியவர்களுக்கு ஒரு இன்ப அதிர்ச்சி காத்திருக்கும்... இனிய குரலில் இளம் பெண் ஒருவர் சில்லறை அடங்கிய பையைக் குலுக்கியவாறு 'டிக்கெட் டிக்கெட்' என்று சொல்வதுதான். விண்வெளி முதல் ஆட்டோ ஓட்டுவது வரை அனைத்துத் துறையிலும் பெண்கள் தங்களது திறமையை நிரூபித்து விட்டார்கள். இந்த நிலையில், கொச்சி தனியார் பேருந்து சேவை நிறுவனத்தில், பெண் ஒருவர் நடத்துநர் பணியில் நியமிக்கப்பட்டுள்ளார். துத்தியூரைச் சேர்ந்த ... |
| Posted: 09 Aug 2016 07:14 AM PDT வயல்வெளிகளில்: கவிஞர் மலர்மகள் - - பச்சைகம்பளம் உடுத்திய வயல் வெளிகளில் உறவாடும் புள்ளினங்கள் கண்ணுக்கு'குளுமை. – முன்னத்திஏராய் மாடுகளோடு சேற்றில்கால்பதித்து கரைகளைசுற்றி மகிழும் சுகமோ மனதுக்கு மிக இனிமை. – மடைதிறந்த வெள்ளத்திலே தடைஇல்லா வெள்ளாமையோடு கலப்படமில்லா காற்றின் வாசனை உள்நுழையும் நுரையீரல்வரை. மங்கையராய் நாணித்தலைகுனியும் இளம்தளிரின் புன்னகையோடும் நிறைமாத கர்பிணியாய் சூல்கொண்டபயிரின் மணத்தோடும் மண்வாசனையின் துடிப்புகளோடு பாரிவாழ்க்கை தலைமுறைக்கு. வாழ்வாதாரதெய்வமென ... |
| Posted: 09 Aug 2016 07:12 AM PDT - ஏழைக் குழந்தைகளுக்கு சிறந்த கல்வி - தங்குமிடம் என்பது ஸ்வாமி தயானந்த சரஸ்வதியின் கனவு. அவரின் கனவை நனவாக்கி வருகிறது "எய்ம் ஃபார் சேவா' எனும் கல்வி அறக்கட்டளை. - கிராமப்புறம் மற்றும் மலைவாழ் குழந்தைகளின் கல்விக்காக சேவை செய்து வரும் இந்த அமைப்பு இந்தியா முழுவதும் நூறு இடங்களில் உண்டு, உறைவிடப்பள்ளியை நடத்தி வருகிறது. அவர்களின் கல்வி உதவிக்காக ஆண்டுதோறும் நடன நிகழ்ச்சி ஒன்றை நடத்தி, நிதி திரட்டி வருகிறது. - அந்தவகையில் சமீபத்தில் சென்னை மியூசிக் அகாதெமியில் பரதம், குச்சிப்புடி, ... |
| Posted: 09 Aug 2016 07:11 AM PDT Android Rooting என்றால் என்ன? கிட்டத்தட்ட அனைவரின் கையிலும் இப்போது ஆண்ட்ராய்டு மொபைல் தான் இருக்கும் .விலை குறைவு ,புதிய தொழில் நுட்பம் ஆகிய காரணங்கள் முக்கியமானவையாக இருக்கும் .இத்தகைய மொபைல்களில் பரவலாக பயன்படுத்தப்படும் வார்த்தைகள் os ,version upgrade ,new applications ,ரூட் இதில் ரூட் பற்றிய தகவல்களை பார்க்கலாம் ,இதைபற்றி பரவலாக அனைவருக்கும் தெரிந்திருக்கும் ,சிலர் வாரண்டி காரணமாக ,பழுதாக வாய்ப்பு உள்ளதாக பயன்படுத்துவதில்லை சுருங்க கூறுவதென்றால் ... |
| கைதான 32 தமிழர்களை விடுவிக்க முடியாது சந்திரபாபுநாயுடு அறிவிப்பு Posted: 09 Aug 2016 07:11 AM PDT சித்தூர் சித்தூர் சிறையில் உள்ள 32 தமிழர் களை விடுதலை செய்ய இயலாது என்று ஆந்திர முதல்- மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்துள்ளார். குப்பம் வந்திருந்த அவர் இது தொடர்பாக நிருபர்களிடம் கூறியதாவது:- சித்தூர் மாவட்டத்தில் விலை மதிப்புமிக்க செம் மரங்கள் தொடர்ந்து வெட்டி கடத்தப்படுகின்றன. அதை அனுமதிக்க இயலாது.கைதான 32 பேரும் அப்பாவிகள் அல்ல. அவர் கள் நல்லவர்கள் என்று நியாயப்படுத்த முடியாது. செம்மரம் வெட்டி கடத்துபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது தொடர்ந்து கடும் நடவடிக்கை ... |
| Posted: 09 Aug 2016 07:06 AM PDT ஒரு பிச்சைக்காரன் கோயிலுக்கு முன்பு அமர்ந்து பிச்சை எடுத்துக்கொண்டு இருந்தான். அங்கு வரும் மக்கள் ஒரு ரூபாய் மட்டும் போட்டார்கள். போதிய வருமானம் இல்லாமல் கடை வீதிக்குச் சென்றான். அங்குள்ள டாஸ்மாக் முன்பு அமர்ந்து பிச்சை எடுத்தான். வரும் குடிமகன்கள் பத்து, இருபது ரூபாய் தாள்கள் போட்டனர். மேலும் ஓசியில் குவார்ட்டரும் கிடைத்தது. போதையில் பிச்சைக்காரன் சொன்னான்… ''தெய்வமே நீ இங்கயா இருக்கே? நான் இவ்வளவு நாளா உன்னை கோயில்ல தேடிக்கிட்டு இருந்தேனே!'' – ———————————————- |
| பிரபல திரைப்படத் தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலம் காலமானார் Posted: 09 Aug 2016 07:05 AM PDT - பிரபல திரைப்படத் தயாரிப்பாளரும் கதாசிரியருமான பஞ்சு அருணாசலம் சென்னையில் இன்று காலமானார். அவருக்கு வயது 75. சென்னை தியாகராய நகரில் உள்ள இல்லத்தில் உடல்ந லக்குறைவால் உயிர் பிரிந்தது. இயக்குநர், எழுத்தாளர், பாடலாசிரியர் என பன்முகத்திறமை கொண்டவர். அன்னக்கிளி, உல்லாசப்பறவைகள் உள்ளிட்ட பல படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார். அன்னக்கிளி படம் மூலம் இளையராஜாவைத் திரையுலகுக்கு அறிமுகப்படுத்தியுள்ளார். ரஜினி, கமலைக் கொண்டு அதிகப் படங்களைத் தயாரித்துள்ளார். பஞ்சு அருணாசலத்தின் ... |
| தொடத் தொடத் தொல்காப்பியம்(435) Posted: 09 Aug 2016 06:19 AM PDT தொடத் தொடத் தொல்காப்பியம் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி சென்னை-33 தொல்காப்பியத்தின் முதல் நூற்பாவில், " எழுத்தெனப் படுப அகரமுதல் னகர இறுவாய் முப்பஃது என்ப " எனக் காண்கிறோம். இதில் இரண்டு நுட்பங்கள் உள்ளன. 1) முப்பது எழுத்துக்களைக் கணக்கிடும்போது, ... |
| the seecret tamil book download Posted: 09 Aug 2016 03:07 AM PDT சார், என்னால் தி சீகிரெட் புத்தகத்தை டவுன்லோட் செய்ய இயலவில்லை. எனது ஈமெயில் mksj2016@ஜிமெயில்.காம். தயவு செய்து எனக்கு அனுப்பவும். நன்றி |
| பழம்பெரும் நடிகை ஜோதிலட்சுமி காலமானார் Posted: 09 Aug 2016 01:09 AM PDT - பழம்பெரும் திரைப்பட நடிகை ஜோதிலட்சுமி (68) உடநலக்கு றைவால் இன்று சென்னையில் காலமானார். 1963ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் நடித்த பெரியஇடத்துப் பெண் என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் ஜோதிலட்சுமி. அதன் பின்னர் எம்.ஜி.ஆர், சிவாஜி, கமல், ரஜினி உள்ளிட்ட பிரபலங்கள் திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்கள் ஏற்று நடித்திருக்கிறார். ஜோதிலட்சுமி தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் 300க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். முத்து, சேது என தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். நடனம் ... |
| நெருப்பில் குதித்து வெளியேறிய தெருக்கூத்து கலைஞர் Posted: 08 Aug 2016 10:20 PM PDT - ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியையொட்டி நடத்தப்பட்ட வன்னியர் புராணம் நிகழ்ச்சியில் தெருக்கூத்து கலைஞர் ஒருவர் நெருப்பில் குதித்து எந்தவித பாதிப்பும் இன்றி வெளியேறி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார். ஹிந்து ஆன்மிக சேவை கண்காட்சியின் இறுதி நிகழ்ச்சியாக திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அருகேயுள்ள செவரப்பூண்டி ராஜ கோபால் கவுண்டரின் காமாட்சி அம்மன் நாடகக்குழு நடத்தும் வன்னியர் புராணம் தெருக்கூத்து திங்கள்கிழமை இரவு நடைபெற்றது. வட மாவட்ட கிராமங்களில் ஆண்டுக்கு ஆறு மாதங்கள் நடத்தப்படும் ... |
| ஜி.எஸ்.டி. திருத்த மசோதா: லோக்சபாவில் நிறைவேற்றம் Posted: 08 Aug 2016 09:48 PM PDT புதுடில்லி: திருத்தப்பட்ட ஜி.எஸ்.டி மசோதா லோக்சபாவில் ஒரு மனதாக நிறைவேறியது. ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை திருத்த மசோதா குறித்து பார்லி. லோக்சபாவில் இன்று விவாதம் நடந்தது. கடந்த சில தினங்களுக்கு முன் ராஜ்யசபாவில் ஒரு மனதாக இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், இன்று லோக்சபாவில் பிரதமர் மோடி மசோதா குறித்து ரை ஆற்றினார். பின்னர் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி, ஜி.எஸ்.டி. திருத்த மசோதா தொடர்பாக எதிர்க்கட்சியினரின் கேள்விகளுக்கு பதில் அளித்து பேசினார். இதையடுத்து ஓட்டெடுப்பு ... |
| ஆகஸ்ட் 15 முதல் மதுவிலக்கு தேவை Posted: 08 Aug 2016 09:44 PM PDT தமிழகத்தில் பூரண மதுவிலக்கை ஆகஸ்ட் 15 முதல் அமல்படுத்த வேண்டும் என்று பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக அவர் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கை:- 10 மாதக் குழந்தைக்கு அதன் தந்தையே மதுவைப் புகட்டுவது போன்ற விடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. இத்தகைய செயலை மன்னிக்க முடியாது. குழந்தைக்கு மது புகட்டிய தந்தையைக் கைது செய்ய வேண்டும் சென்னையில்தான் இந்த விடியோ பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது. இந்த நிகழ்வு குறித்த செய்தியும், படமும் ... |
| பாகிஸ்தான் மருத்துவமனையில் குண்டுவெடிப்பு: 75 பேர் பலி Posted: 08 Aug 2016 09:43 PM PDT பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், குவெட்டா நகரத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் திங்கள்கிழமை நிகழ்த்தப்பட்ட தற்கொலை குண்டுவெடிப்பில் 75 பேர் பலியாகினர். உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் வழக்குரைஞர்கள். போலீஸார், செய்தியாளர்களும் இந்த குண்டு வெடிப்பில் பலியானார்கள். நூறுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். பலூசிஸ்தான் மாகாணத்தில் 3 நாள் துக்கம் கடைப்பிடிக்கப்படும் என்று மாகாண அரசு அறிவித்தது. முன்னதாக, பலூசிஸ்தான் பார் கவுன்சில் தலைவர் பிலால் அன்வர் காஸி, காலையில் மர்ம நபர்களால் சுடப்பட்டார். ... |
| வயல் வெளிகளில்: அழகூர். அருண். ஞானசேகரன். Posted: 08 Aug 2016 09:39 PM PDT - வயல்வெளி தன்னில் ஏர்வுழவன் —- அன்று வகையாய் உழுதுநற் பயிர்விளைக்க அயரா துழைத்ததன் பலனன்றோ — நாம் அமர்ந்தே உணவுண்டு மகிழ்வதெலாம் ! துயர்களைக் கண்டிட்டும் துவளாமல் — அவன் துடிப்புடன் உழைத்திடும் விவேகமதை நயமுடன் போற்றிட்டு வாழ்த்துவதே —. என்றும் நம்மின் கடனென்றும் உணர்வோமே ! இயற்கை நமக்கென்றும் துணைநிற்கும் —- அது என்றென்றும் நம்மைக் காக்குமென்றே வியர்வையைச் சிந்திட்டு உழைக்கின்றான் —- அவன் விவேகம் தவறென்றும் ஆகிடுமோ ? உயர்வான செயலே அவனின்செயல் —– என்றும் உலகோர் பசிதன்னைப் போக்கும்செயல் ... |
| ஹாக்கி போட்டியில் இந்திய பெண்கள் அணி தோல்வி Posted: 08 Aug 2016 06:36 PM PDT - ரியோ : ரியோ ஒலிம்பிக் போட்டியில் பெண்கள் ஹாக்கி போட்டியில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் இந்திய அணி தோல்வியடைந்தது. பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் 31வது ஒலிம்பிக் போட்டிகள் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய அணி, இங்கிலாந்து அணிகள் பலப் பரீட்சை நடத்தின. ஆட்டத்தின் 24வது நிமிடத்தில் ஜெர்மனி அணியின் கிஸ்லி ஆன்ஸ்லே தனது முதல் கோலை போட்டார். அடுத்த 3 நிமிடத்தில் நிகோலா ஒரு கோலும், பின் அலெக்ஸ் டேன்சன் ஒரு கோலும் போட்டனர். முடிவில் இந்திய அணியை 0-3 என்ற ... |
| You are subscribed to email updates from ஈகரை தமிழ் களஞ்சியம். To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |
