Tamil News | Online Tamil News |
- காவிரி பிரச்னையில் புதிய வழக்கு : அரசுக்கு அதிகாரிகள் யோசனை
- மின்திட்ட பணிகள்: என்ன செய்கிறது எம்.பி.,க்கள் குழு?
- துவங்கியது! தேர்தல் நேரத்தில் ரூ.570 கோடி சிக்கியது குறித்த விசாரணை... கன்டெய்னர் லாரி பதிவெண்கள் போலி என சி.பி.ஐ., தகவல்
- லோக்சபாவிலும் நிறைவேறியது ஜி.எஸ்.டி., திருத்த மசோதா வெற்றி ! வரி பயங்கரவாதத்தில் இருந்து விடுதலை என மோடி பெருமிதம்
- அடுத்த ஆண்டு முதல் 'நீட்:' ஜனாதிபதி ஒப்புதல்
- நாட்டின் கிரீடத்தில் தீப்பற்றி எரிகிறது : ராஜ்யசபாவில் குலாம்நபி ஆவேசம்
- சசிகலா புஷ்பா வீட்டில் 'பாலியல் துன்புறுத்தல்' எஸ்.பி.,யிடம் சகோதரிகள் 'பகீர்' புகார்
- 'ஆன்லைன்' மூலம் மீன் விற்பனை:'ஆர்டர்' செய்தால் 'டோர் டெலிவரி'
- பால் கொள்முதல் விலையை உயர்த்த தி.மு.க., கோரிக்கை
- 'தலித் மக்களின் ஓட்டுக்காக நாடகமாடும் மோடி': மாயாவதி குற்றச்சாட்டு
- ஜி.எஸ்.டி.மசோதாவிற்கு டில்லி அரசு ஆதரவு தர முடிவு
- ஆந்திராவுக்கு இழப்பீடு தேவை: அருண் ஜெட்லி
| காவிரி பிரச்னையில் புதிய வழக்கு : அரசுக்கு அதிகாரிகள் யோசனை Posted: 08 Aug 2016 09:27 AM PDT தமிழகத்தின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, ஆண்டுதோறும், 192 டி.எம்.சி., காவிரி நீரை, கர்நாடக அரசு வழங்க வேண்டும். ஒவ்வொரு மாதமும், எவ்வளவு நீர் வழங்க வேண்டும் என்பதை, காவிரி நடுவர் மன்றம் நிர்ணயித்துள்ளது. ஆனால், முறைப்படி தண்ணீர் வழங்காமல், கர்நாடகா முரண்டு பிடித்து வருகிறது. கடந்த, 2015 - 16ல், 35 டி.எம்.சி.,யை வழங்காமல், பாக்கி வைத்துள்ளது. நடப்பு நிதியாண்டு நீர் வழங்கும் காலம், ஜூனில் துவங்கியது. ஜூன், ஜூலை மாதங்களுக்கும் சேர்த்து, 44 டி.எம்.சி.,யை கர்நாடக அரசு வழங்கி இருக்க வேண்டும்; இதில், 27 டி.எம்.சி.,யை வழங்கவில்லை. இரண்டு ஆண்டுகளுக்கும் ... |
| மின்திட்ட பணிகள்: என்ன செய்கிறது எம்.பி.,க்கள் குழு? Posted: 08 Aug 2016 09:29 AM PDT மின் திட்ட பணிகளை கண்காணிக்கும், எம்.பி., தலைமையிலான குழு, முறையாக செயல்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. 'தீன்தயாள் உபாத்யாயா கிராம மின்வசதி திட்டம்; ஐ.பி.டி.எஸ்., எனப்படும், ஒருங்கிணைந்த மின் மேம்பாட்டு திட்டம்' என, இரண்டு திட்டங்களை மத்திய அரசு அறிமுகம் செய்துள்ளது. இவற்றின் மூலம், 24 மணி நேரமும் தடையில்லாமல், மின் வினியோகம் செய்ய திட்டமிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், தீன்தயாள் திட்டத்திற்கு, 924 கோடி ரூபாய்; ஐ.பி.டி.எஸ்., திட்டத்திற்கு, 1,561 கோடி ரூபாய் நிதியை, மத்திய அரசு ஒதுக்கீடு செய்து உள்ளது. இப்பணிகளை கண்காணிக்க, மத்திய அரசு, ... |
| Posted: 08 Aug 2016 09:58 AM PDT தமிழக சட்டசபை தேர்தல் நேரத்தில், திருப்பூரில் சிக்கிய, 570 கோடி ரூபாய் பற்றிய முதல்கட்ட விசாரணையை, மத்திய புலனாய்வு அமைப்பான, சி.பி.ஐ., துவக்கி உள்ளது. பணத்துடன் பிடிபட்ட, மூன்று கன்டெய்னர் லாரிகளின் பதிவெண்கள் போலி என்றும், தகவல் தெரிவித்துள்ளது. விரட்டி பிடித்தனர் சட்டசபை தேர்தல் மே, 16ல் நடந்தது. அதற்கு, இரு நாட்களுக்கு முன், திருப்பூர் மாவட்டம், பெருமாநல்லுார் - குன்னத்துார் புறவழிச் சாலையில், தேர்தல் கண்காணிப்பு சிறப்பு படையினர், நள்ளிரவு வாகனச் சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, மூன்று கன்டெய்னர் லாரிகள் நிற்காமல் சென்றன; அவற்றை ... |
| Posted: 08 Aug 2016 10:02 AM PDT புதுடில்லி:பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா, லோக்சபாவில் வெற்றிகரமாக நிறைவேறியது. ''இந்த மசோதாவின் மூலம் வரி பயங்கரவாதத்தில் இருந்து மக்களுக்கு விடுதலை கிடைக்கும்,'' என, பிரதமர் மோடி, பெருமிதத்துடன் கூறினார். முன்னதாக, மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, அ.தி.மு.க., - எம்.பி.,க்கள் வெளிநடப்பு செய்தனர். நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்பை ஏற்படுத்தும் வகையில், ஜி.எஸ்.டி., வரி விதிப்பை கொண்டு வர, மத்திய அரசு தீவிரமாக உள்ளது. 2015 மே மாதம், இதற்கான மசோதா லோக்சபாவில் நிறைவேறியது. காங்கிரஸ் உள்ளிட்ட ... |
| அடுத்த ஆண்டு முதல் 'நீட்:' ஜனாதிபதி ஒப்புதல் Posted: 08 Aug 2016 10:06 AM PDT புதுடில்லி: அடுத்த ஆண்டு முதல், 'நீட்' எனப்படும், மருத்துவம் மற்றும் பல் மருத்துவக் கல்விக்கான பொது நுழைவுத் தேர்வு நடத்தும் மசோதாக்களுக்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார். 'மருத்துவக் கல்லுாரிகளுக்கு பொது நுழைவுத் தேர்வு நடத்த வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்திருந்தது. இந்த நுழைவுத் தேர்வை, இந்த ஆண்டே நடத்த வேண்டும் என்றும் சுப்ரீம்கோர்ட் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, மே, 1 மற்றும் ஜூலை, 24ம் தேதிகளில், இரண்டு கட்டங்களாக நுழைவுத் தேர்வு நடந்தது. தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், இந்த ... |
| நாட்டின் கிரீடத்தில் தீப்பற்றி எரிகிறது : ராஜ்யசபாவில் குலாம்நபி ஆவேசம் Posted: 08 Aug 2016 10:08 AM PDT ''காஷ்மீரில் நிலைமை, கையை விட்டுப்போவதற்கு முன், பிரதமர், தன் மவுனத்தை கலைக்க வேண்டும். பொதுமக்களை நேரில் சந்திக்க அனைத்துக் கட்சி குழுவை, அங்கு அனுப்ப வேண்டும்' என்று, பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கோரியுள்ளன. நேற்று ராஜ்யசபா அலுவல்கள் துவங்கியதும், முக்கிய எதிர்க்கட்சிகளின் தலைவர்கள், அலுவல்களை ஒத்திவைத்து விட்டு, காஷ்மீர் விவகாரம் குறித்து, விரிவான விவாதம் நடத்த, வலியுறுத்தினர். அதற்கு துணைத் தலைவர் குரியன், அனுமதி மறுக்கவே, சபையில் அமளி உருவானது.30 நாட்களாக இதையடுத்து, முக்கிய தலைவர்களுக்கு மட்டும் பேசுவதற்கு, வாய்ப்பு ... |
| சசிகலா புஷ்பா வீட்டில் 'பாலியல் துன்புறுத்தல்' எஸ்.பி.,யிடம் சகோதரிகள் 'பகீர்' புகார் Posted: 08 Aug 2016 10:33 AM PDT துாத்துக்குடி,: சசிகலா புஷ்பா எம்.பி., குடும்பத்தினர் பாலியல் தொந்தரவு செய்து கொடுமைப்படுத்தியதாக, அவரது வீட்டில் வேலை செய்த சகோதரிகள், துாத்துக்குடி எஸ்.பி., அலுவலகத்தில் புகார் அளித்தனர். திருநெல்வேலி மாவட்டம், ஆணைகுடி கிராமத்தைச் சேர்ந்த கருப்பசாமி மகள்கள் பானுமதி, ஜான்சிராணி ஆகியோர், துாத்துக்குடி எஸ்.பி., அலுவலகத்தில், கூடுதல் எஸ்.பி., கந்தசாமியிடம் அளித்த புகார் மனு:கடந்த, 2011ல், சசிகலா புஷ்பா வீட்டில் வேலைக்கு சேர்ந்தேன். வீட்டிற்கு, சசிகலா புஷ்பா மது போதையில் தான் வருவார். மசாஜ் செய்யச் சொல்லி மிரட்டுவார்; மசாஜ் செய்வேன். சரியாக ... |
| 'ஆன்லைன்' மூலம் மீன் விற்பனை:'ஆர்டர்' செய்தால் 'டோர் டெலிவரி' Posted: 08 Aug 2016 10:36 AM PDT சென்னை:''சென்னையில் இணையதளம், தொலைபேசி வாயிலாக, 'ஆர்டர்' செய்தால் வீடு தேடிச் சென்று மீன் உணவுகள் வழங்கப்படும்,'' என, மீன்வளத் துறை அமைச்சர் ஜெயகுமார் தெரிவித்தார். சட்டசபையில் மீன்வளத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளித்து, அவர் வெளியிட்ட அறிவிப்புகள்:பொதுமக்களுக்கு தரமான மீன்களை, நியாயமான விலையில் வழங்க, 10 நகரங்களில், நவீன மீன் விற்பனை நிலையங்கள் அமைக்கப்படும். தமிழகத்தின் பிரதான மீன் குஞ்சு உற்பத்தி மையமான, மேட்டூர் அணையில் அமைந்துள்ள மீன் பண்ணையின் உற்பத்தித் திறன், 3.37 கோடி ... |
| பால் கொள்முதல் விலையை உயர்த்த தி.மு.க., கோரிக்கை Posted: 08 Aug 2016 10:44 AM PDT சென்னை,:''பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும்,'' என, தி.மு.க., - எம்.எல்.ஏ., மதிவாணன் கோரிக்கை விடுத்தார். சட்டசபையில் நடந்த விவாதம்:தி.மு.க., - மதிவாணன்: என் தொகுதியான கீழ்வேலுாரில், குடிநீர் தட்டுப்பாடு உள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண, கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். தமிழக மீனவர்களின், 103 படகுகள், இலங்கை வசமுள்ளன. அவற்றை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.அமைச்சர் ஜெயக்குமார்: 2011 முதல், 2016 வரை, 2,481 மீனவர்களும், 350 படகுகளும் விடுவிக்கப்பட்டு உள்ளன. தற்போதுள்ள படகுகளையும் விடுவிக்க, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ... |
| 'தலித் மக்களின் ஓட்டுக்காக நாடகமாடும் மோடி': மாயாவதி குற்றச்சாட்டு Posted: 08 Aug 2016 12:37 PM PDT புதுடில்லி, ''தலித் மக்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளது, தலித் மக்களின் ஓட்டுகளை பெறுவதற்கான அரசியல் நாடகமே,'' என, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி கூறினார்.பசு பாதுகாப்பு என்ற பெயரில், தலித் மக்கள் தாக்கப்படும் சம்பவங்களை கண்டித்து, பிரதமர் மோடி பேசியுள்ளார். இதுகுறித்து, உ.பி., முன்னாள் முதல்வர் மாயாவதி கூறியதாவது:இத்தனை நாள், கும்பகர்ணன் போல் துாங்கி கொண்டிருந்தனர். உ.பி., உள்ளிட்ட சில மாநில சட்டசபைகளுக்கு தேர்தல் நடக்க உள்ளதால், திடீரென முழித்துக் கொண்டுள்ளனர். தலித் மக்களுக்கு ஆதரவாக பிரதமர் மோடி பேசியுள்ளது, வெறும் ஓட்டு ... |
| ஜி.எஸ்.டி.மசோதாவிற்கு டில்லி அரசு ஆதரவு தர முடிவு Posted: 08 Aug 2016 02:17 PM PDT புதுடில்லி: ஜி.எஸ்.டி. மசோதாவிற்கு டில்லி முதல்வர் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு தனது முழு ஆதரவினை அளித்திட முடிவு செய்திருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மத்திய அரசின் கனவு திட்டமான ஜி.எஸ்.டி. எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி திருத்த மசோதா கடந்த வெள்ளியன்று ராஜ்யசபாவில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டது. இதன் மூலம் இதன் நாடு முழுவதும் ஒரே சீரான வரி முறையை கொண்டுவர மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது. இதையடுத்து நேற்று பார்லி. மேலாக்சபாவில் இந்த திருத்த மசோதா விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டு இறுதியில் லோக்சபாவில் ஒரு ... |
| ஆந்திராவுக்கு இழப்பீடு தேவை: அருண் ஜெட்லி Posted: 08 Aug 2016 03:28 PM PDT புதுடில்லி : ஆந்திர மாநிலத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும் எனவும், இதற்கு விரைவில் தீர்வு காணப்படும் எனவும் மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்தார். இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் பேசியதாவது: ஆந்திர மாநிலம் பிரிக்கப்பட்ட காலம், வருவாய் மற்றும் நிதி தொடர்பான பிரச்னைகள், அம்மாநிலத்துக்கு அநீதி இழைக்கும் வகையில் அமைந்துள்ளன; அதற்குரிய இழப்பீடு வழங்கப்பட வேண்டும்; இப்பிரச்னைக்கு, விரைவில் தீர்வு காணப்படும். இவ்வாறு அவர் ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 09,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |