Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


தொலைந்த இதயம்

Posted: 08 Aug 2016 03:14 PM PDT

எண்ணத்தை வெளியிடும்
கவிதைகள் அறிவாய்!
எண்ணங்கள் உருவாகும்
மனதை அறிவாயோ ?
உதடுகள் உரைத்திடும்
வார்த்தைகள் அறிவாய் !
உள்ளம் பேசிடும்
மொழி அறிவாயோ ?
கண்கள் சிந்தும்
கண்ணீர் அறிவாய் !
விழிசுடும் கண்ணீரின்
காரணி அறிவாயோ ?
மனதின் எண்ணங்கள் அறிந்தும்
உள்ளத்தின் மொழி அறிந்தும்
கண்ணீரின் வலி அறிந்தும்
காதலோடு வாழ சொல்கிறாய்
தொலைந்த இதயத்தை தேடுபவளிடம் !

இந்த வார திரைத்துளிகள் - தொடர் பதிவு

Posted: 08 Aug 2016 08:09 AM PDT

- கோலிவுட்டில் பிசியாக இருக்கும் நடிகைகளில் கீர்த்தி சுரேஷும் ஒருவர். – தற்போது விஜய்க்கு ஜோடியாக விஜய் 60 படத்தில் நடித்து வருகிறார். அடுத்ததாக சூர்யா படத்தில் நடிக்க உள்ளார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் கீர்த்தி தனது திரையுலக வாழ்க்கை பற்றி கூறுகையில், – நிதானம் வந்த வேகத்தில் அதிக படங்கள் ஒத்துக்கிட்டு நடிக்க விரும்பவில்லை. எதையும் நிதானமாக செய்ய விரும்புகிறேன். எதிலும் அவசரப்படக் கூடாது என்று நினைப்பவள் நான். – என் வாழ்வில் இதுவரை காதல் வரவில்லை. காதல் வந்தாலும் அதற்கு ...

புறங்கூற்று

Posted: 08 Aug 2016 05:42 AM PDT

- * குற்றம் சொல்லவும் குறைகள் பேசவும் முற்றம் தேவையில்லை இவர்களுக்கு! – * வென்றவனைக் கண்டால் அதிர்ஷ்டம் என்று அலட்டிக் கொள்வர்! – * தோற்றவனை கண்டால் தேவை தானா என்று எகத்தாளம் பேசுவர்! – * உள்ளவனைக் கண்டால் கொள்ளை அடித்த பணமென்று குற்றம் சொல்வர்! * இல்லாதவனைக் கண்டால் பிழைக்க தெரியாதவனென்று இகழ்ந்து பேசுவர்! – * தப்பு செய்தவன் தண்டனை பெற்றால் சட்டம் சரியில்லை என்பர்! – * தப்பு செய்யாதவன் தண்டனை பெற்றால் சரியான நீதி என்பர்! – * பிழைப்பு தேடி பிற நாடு சென்றால் பேராசை ...

தலைவர் இனிமே சைகையிலேதான் பேசுவாராம்...!!

Posted: 08 Aug 2016 05:00 AM PDT


-

ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிச் சுற்றில் தீபா கர்மாகர்

Posted: 08 Aug 2016 04:43 AM PDT

- ரியோ : பெண்கள் ஜிம்னாஸ்டிக்ஸ் இறுதிப் போட்டிக்கு, இந்திய வீராங்கனை தீபா கர்மாகர் முன்னேறினார். இந்திய ஒலிம்பிக் வரலாற்றில் ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிக்கு தகுதி பெற்ற முதல் வீராங்கனையான தீபா கர்மாகர், வால்ட் பிரிவில் நடந்த தகுதிச் சுற்றில் 14.85 புள்ளிகள் எடுத்து 8வது இடம் பிடித்தார். இதனையடுத்து இறுதிச் சுற்றுக்கு முன்னேறி சாதனை படைத்தார். இதன் மூலம் ஒலிம்பிக்கில் ஜிம்னாஸ்டிக்ஸ் பிரிவில் பைனலுக்கு முன்னேறிய முதல் இந்திய வீராங்கனை என்ற சாதனைக்கும் சொந்தக்காரர் ஆனார். – ——————————————– தினமலர்

மத்திய அமைச்சர் மீது வழக்குப்பதிவு

Posted: 08 Aug 2016 04:38 AM PDT

- லக்னோ : மத்திய இணையமைச்சர் அனுப்பிரியா பட்டேல் மீது உ.பி., போலீசார் நேற்று வழக்குப்பதிவு செய்துள்ளனர். லக்னோவைச் சேர்ந்த 35 வயதாகும் அனுப்பிரியா பட்டேல் மிர்சாபூர் தொகுதியில் இருந்து எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இவருக்கு மத்திய இணையமைச்சர் பதவியும் வழங்கப்பட்டது. மத்திய அமைச்சர் ஆன பிறகு அனுப்பிரியா, நேற்று முதல் முறையாக உ.பி., வந்தார். அவரை வரவேற்க விமான நிலையத்தில் அவரது ஆதரவாளர்கள் ஏராளமானோர் குவிந்தனர். விமான நிலையத்தில் இருந்து சர்தார் வல்லபாய் பட்டேலின் நினைவிடத்திற்கு ...

அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு)

Posted: 08 Aug 2016 04:35 AM PDT


-

-

-
நன்றி- தினமலர்

இந்தியா மீது அணுஆயுத போர்: பயங்கரவாதி மிரட்டல்

Posted: 08 Aug 2016 03:55 AM PDT

- இஸ்லாமாபாத் : காஷ்மீர் பிரச்னையில் இந்தியா மீது பாகிஸ்தான் அணுஆயுத போர் தொடுக்கும் என பாகிஸ்தானைச் சேர்ந்த பயங்கரவாதி சையது பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளான். - இந்த மிரட்டல் வீடியோ தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. - வீடியோவில் பயங்கரவாதி கூறுகையில், காஷ்மீர் பிரச்னையில் இந்த முறை காஷ்மீரிகள் விட்டுக் கொடுக்க போவதில்லை. இந்தியா மீது அணுஆயுத போர் தொடுக்கப்படும். இந்திய மண்ணில் ரத்த ஆறு ஓடும். காஷ்மீர் பிரச்னையில் நடக்கும் இந்த 4வது உரிமைப் போரில் காஷ்மீரிகள் ...

முல்லாவி கதை.

Posted: 07 Aug 2016 06:03 PM PDT

* '' ஹோ டேய், நீங்கள் ஏன் சிரிக்காமல் இருக்கிறீர்கள்? " என்று கேட்டார். அவர் தனது கண்களைத் திறந்து, " நான் அதற்கு தயார் செய்து கொண்டு இருக்கிறேன் " என்றார். கேள்வி கேட்டவரால் இதைப் புரிந்துக் கொள்ள முடியவில்லை. " நீங்கள் தயார் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுவதற்கு என்ன அர்த்தம்? " என்று கேட்டார். அதற்கு அவர் " சிரிப்பதற்கு நான் என்னைத் தயார் செய்ய வேண்டும். நான் எனக்கு ஓய்வு கொடுத்தாக வேண்டும். நான் எனக்குள் செல்ல வேண்டும். நான் இந்த ஒட்டு மொத்த உலகையும் மறந்தாக வேண்டும்.. அப்போது ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™