Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


பிரதமர் மோடியின் ஆலோசனைப்படி ரயில்வே வாரியத்தில் அதிரடி மாற்றம்?

Posted: 07 Aug 2016 10:59 AM PDT

புதுடில்லி: பிரதமர் நரேந்திர மோடியின் சீர் திருத்த திட்டங்களை நிறைவேற்றும் வகை யில், ரயில்வே வாரியத்தில் மாற்றம் செய்யும் துணிச்சலான நடவடிக்கையை ரயில்வே துறை துவக்கி உள்ளது.
'ரயில்வே வாரியத்தில், ரயில்வேக்கு தேவையான நிதி, பொருட்களை திரட்டும் பணிக்காக வெளியிலிருந்து ஆலோசகர் ஒருவரை நியமிக்க வேண்டும். ரயில்வே வாரிய பணிகளை, வாரிய உறுப்பினர் களிடையே தேவையான மாற்றங்கள் செய்து ஒப்படைக்க வேண்டும்' என, மோடி கூறியிருந்தார்.
நிதி ஆதாரம்:

இந்திய பத்திரிகையாளர்கள் விரட்டியடிப்பு பாகிஸ்தானில் அரங்கேறிய அதிர்ச்சி சம்பவம்

Posted: 07 Aug 2016 11:02 AM PDT

புதுடில்லி: பாகிஸ்தானில் நடந்த, 'சார்க்' உள்துறை அமைச்சர்கள் மாநாடு குறித்து செய்தி சேகரிக்க சென்ற இந்திய பத்திரிகை யாளர்களை, அந்நாட்டு அதிகாரிகள், ஓட்டலுக்கு வெளியே நிறுத்தி வைத்து, அவமானப்படுத்திய அதிர்ச்சி தகவல் தற்போது வெளியாகிஉள்ளது.

அனுமதி மறுப்பு:
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் நடந்த, 'சார்க்' எனப்படும், தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பு நாடுகளின் உள்துறை அமைச்சர்கள் மாநாட்
டில், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்று பேசினார்.இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற, இந்திய செய்தி நிறுவனங்கள் மற்றும் பத்திரிகை ...

சத்துணவில் பால் வழங்கும் திட்ட அறிவிப்பு சட்டசபையில் இன்று வெளியாகுமா? கொள்முதல் பிரச்னைக்கு முதல்வர் தீர்வு காண்பார் என எதிர்பார்ப்பு

Posted: 07 Aug 2016 11:06 AM PDT

பால் உற்பத்தியாளர்களிடம் இருந்து முழு அளவு பாலை கொள்முதல் செய்ய முடியா மலும், கொள்முதல் செய்த பாலுக்கான பணத்தை கொடுக்க முடியாமலும், ஆவின் நிறுவனம் திணறி வரும் நிலையில், சத்துண வில் பால் வழங்கும் திட்டம் குறித்த அறிவிப்பு, இன்று சட்டசபையில் வெளியாகுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இதன் மூலம், பால் கொள்முதல் பிரச்னைக்கு முதல்வர் ஜெயலலிதா தீர்வு காண்பார் என, நம்பப் படுகிறது.
பால் கொள்முதல் விலையை, தமிழக அரசு உயர்த்தியதால், ஆவின் நிறுவனத்தின், தினசரி பால் கொள்முதல், 30 லட்சம் லிட்டராக உயர்ந்துள்ளது. இதற்கு மேல் உற்பத்தியாளர் கள், பால் ...

'என்னை தாக்குங்க; தலித்துகளை விட்டு விடுங்க' பிரதமர் நரேந்திர மோடி ஆவேச பேச்சு

Posted: 07 Aug 2016 11:07 AM PDT

ஐதராபாத்: ''உங்களுக்கு யாரையாவது தாக்க வேண்டுமானால் என்னை தாக்குங்கள்; என்னை சுடுங்கள்; ஆனால், தலித் மக்களை விட்டு விடுங்கள்,'' என, பிரதமர் மோடி, ஆவேசமாக பேசினார்.

முதல்வர் சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி ஆட்சி உள்ள தெலுங்கானா மாநிலம், ஐதராபாத்தில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், பிரதமர் மோடி பேசியதாவது: தலித் மக்கள் மீது சமீபகாலமாக தாக்குதல்கள் நடந்து வருகின்றன. இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தலித் மக்களை வைத்து, யாரும் அரசியல் செய்ய வேண்டாம்.
யாரையாவது தாக்க ...

எட்டு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மூடுவிழா? மத்திய அரசுக்கு 'நிடி ஆயோக்' பரிந்துரை

Posted: 07 Aug 2016 11:10 AM PDT

புதுடில்லி: மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்து வரும் அமைப்பான, 'நிடி ஆயோக்' புத்துயிர் அளிக்க முடியாத, எட்டு பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து, அவற்றை மூடிவிடும்படி, மத்திய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது.

நலிவடைந்த பொதுத்துறை நிறுவனங்களை கண்டறிந்து, அடுத்த கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து ஆலோசனை அளிக்கும்படி, 'நிடி ஆயோக்' அமைப்புக்கு, பிரதமர் நரேந்திர மோடி உத்தரவிட்டிருந்தார்.
இயங்க வைக்க முடியுமா?:
இதன்படி, ஆய்வு நடத்திய, நிடி ஆயோக், புத்து யிர் அளிப்பதற்கான நடவடிக்கைகள் எடுத்தா லும், செயல்படத் தகுதியற்ற எட்டு பொதுத் துறை ...

பிரதமர் 'அப்பாயின்மென்ட்' காத்திருக்கும் சசிகலா புஷ்பா

Posted: 07 Aug 2016 11:11 AM PDT

அ.தி.மு.க.,விலிருந்து நீக்கப்பட்ட சசிகலா புஷ்பா எம்.பி., பிரதமர் மோடியை சந்திக்க, 'அப்பாயின்மென்ட்' கேட்டுள்ளார்.

டில்லி விமான நிலையத்தில், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவை அடித்து, சர்ச்சையில் சிக்கிய வர், ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா.
இது தொடர்பாக, போயஸ் தோட்டத்துக்கு அழைத்து விசாரித்த முதல்வர் ஜெயலலிதா,
தன்னை அடித்ததாகவும், வற்புறுத்தி ராஜினாமா கடிதம் எழுதி வாங்கியதாகவும், சசிகலா புஷ்பா, ராஜ்யசபாவில் புகார் தெரிவித்தார். அதைத் தொடர்ந்து, அவரை கட்சியை விட்டு நீக்கினார் ஜெயலலிதா.இந்நிலையில், பிரதமர் மோடியை சந்திக்க, சசிகலா ...

உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட 'சீட்' முக்கிய புள்ளிகளை சுற்றும் கட்சியினர்

Posted: 07 Aug 2016 11:12 AM PDT

உள்ளாட்சி தேர்தலில், 'சீட்' பெறுவதற்காக, அரசியல் கட்சிகளின் முக்கிய புள்ளிகளை பலரும் சுற்றி வர துவங்கி உள்ளனர்.

தமிழகத்தில் உள்ளாட்சி பிரதிநிதிகளாக உள்ளவர்களின் பதவிக்காலம், வரும் அக்., மாதத்துடன் முடிவடைகிறது. இதனால், அக்., மாதத்திலேயே உள்ளாட்சி தேர்தல் நடத்துவதற் கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் கமிஷன் துவங்கியுள்ளது.
பெண்களுக்கு...:
தமிழகத்தில் மொத்தம், 1,48,478 உள்ளாட்சி பதவிகள் உள்ளன. இவற்றில், 50 சதவீத பதவி களை பெண்களுக்கு வழங்கும் வகையில் அரசு, சட்டம் இயற்றியுள்ளது. அதன் அடிப்படை யில்
உள்ளாட்சி பதவிகளைபெண்களுக்கு என ...

தமிழக காங்கிரசிற்கு 'ஆக்டிங்' தலைவர்

Posted: 07 Aug 2016 11:13 AM PDT

தமிழக காங்கிரஸ், தலைவர் இல்லாமலே, 50 நாட்களுக்கும் மேலாக முடங்கி கிடக்கிறது. இதையடுத்து, முன்னாள் தலைவர் குமரி அனந் தனை, 'ஆக்டிங்' தலைவராக தேர்வு செய்து, கட்சியை செயல்பட வைக்கும் முயற்சி யில் சிலர் ஈடுபட்டுள்ளனர்.

தமிழக காங்கிரஸ், சட்டசபை தேர்தலில் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றி பெறவில்லை. இதையடுத்து, மாநில தலைவர் பதவியை
இளங்கோவன் ராஜினாமா செய்தார். அவர் ராஜினாமா செய்து, 50 நாட்களுக்கு மேலாகியும் புதிய தலைவர் நியமிக்கப்படவில்லை. இதனால், எப்போதும் பரபரப்பாக இருக்கும் சத்தியமூர்த்தி பவன், மற்ற மாநில நிர்வாகிகளும் வராமல் வெறிச்சோடி ...

மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தீவிரம்

Posted: 07 Aug 2016 11:15 AM PDT

மும்பை: சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், விஜய் மல்லையாவின், 6,000 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய, அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொழிலதிபர் விஜய் மல்லையா, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' உள்ளிட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனின் லண்டன் நகருக்கு
தப்பிச் சென்றார்; அவர், தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நடந்து வருகின்றன.
மல்லையா மீது, சட்டவிரோத பண பரிமாற்ற ...

ஒலிம்பிக் வில்வித்தை - காலிறுதியில் இந்திய பெண்கள் அணி தோல்வி

Posted: 07 Aug 2016 11:55 AM PDT

ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் வில்வித்தை பெண்கள் அணிக்கான 'ரிகர்வ்' பிரிவில் இந்திய அணி காலிறுதியில் தோல்வியை தழுவியது.
பிரேசிலில் 31வது ஒலிம்பிக் போட்டி நடக்கிறது. இதன் பெண்கள் அணிகளுக்கான வில்வித்தை 'ரவுண்டு-16' போட்டியில், கொலம்பியா அணியை வீழ்த்திய இந்திய அணி காலிறுதிக்கு தகுதி பெற்றது. காலிறுதியில் இந்தியா, ரஷ்ய அணிகள் மோதின. இந்தியா சார்பில் தீபிகா குமாரி, பம்பயலா தேவி, லட்சுமி ராணி ஆகியோர் பங்கேற்றனர். இதில் 4-5 (48-55, 53-52, 53-50, 53-55, 25-24) என்ற கணக்கில் இந்திய அணி ரஷ்யாவிடம் தோல்வியடைந்தது. ...

காங்., கூட்டணியில் இருந்து கேரள காங்கிரஸ் விலகல்

Posted: 07 Aug 2016 01:31 PM PDT

திருவனந்தபுரம் : கேரளாவில், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணியில், 30 ஆண்டுகளுக்கு மேலாக அங்கம் வகித்த கேரள காங்கிரஸ் மாணி பிரிவு, அந்த கூட்டணியிலிருந்து நேற்று விலகியது.
கேரள மாநிலத்தில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது; அங்கு, காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி எதிர்க்கட்சி கூட்டணியாக செயல்பட்டு வருகிறது. இந்நிலையில், முக்கிய கட்சியான கேரள காங்கிரஸ் மாணி பிரிவு, கூட்டணியில் இருந்து விலகியுள்ளது.
பத்தனம்திட்டா அருகே நடந்த, அக்கட்சியின் இரண்டு நாள் மாநாட்டில் ...

மல்லையாவின் சொத்துக்களை பறிமுதல் செய்ய தீவிரம்

Posted: 07 Aug 2016 01:35 PM PDT

மும்பை:சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில், விஜய் மல்லையாவின், 6,000 கோடி ரூபாய் சொத்துக்களை பறிமுதல் செய்ய, அமலாக்கப் பிரிவினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

தொழிலதிபர் விஜய் மல்லையா, 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' உள்ளிட்ட வங்கிகளில், 9,000 கோடி ரூபாய் கடன் வாங்கி, திருப்பிச் செலுத்தாமல், பிரிட்டனின் லண்டன் நகருக்கு தப்பிச் சென்றார்; அவர், தேடப்படும் குற்றவாளி யாக அறிவிக்கப்பட்டார். அவருக்கு எதிராக பல்வேறு கோர்ட்டுகளில் வழக்குகள் நடந்து வருகின்றன. மல்லையா மீது, சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை நட வடிக்கை எடுத்து ...

ஜி.எஸ்.டி., திருத்த மசோதா லோக்சபாவில் இன்று தாக்கல்

Posted: 07 Aug 2016 03:32 PM PDT

புதுடில்லி : திருத்தங்களுடன் கூடிய ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரி மசோதா, லோக்சபாவில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது.
நாடு முழுவதும் ஒரே சீரான வரி விதிப்புக்காக, ஜி.எஸ்.டி., வரிவிதிப்பை கொண்டு வருவதற்கான முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. இது தொடர்பான மசோதா, லோக்சபாவில், 2015 மே மாதம் நிறைவேறியது. ராஜ்யசபாவில், ஆளும் பா.ஜ., கூட்டணிக்கு போதிய பலம் இல்லாததால், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளுடன், மத்திய அரசு கடந்த ஓராண்டாக ஆலோசனை நடத்தி வந்தது. எதிர்க்கட்சிகள் கூறிய பல்வேறு அம்சங்கள் சேர்க்கப்பட்டு, சில பிரிவுகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™