Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


கோலாகலம்! 70வது சுதந்திர தின கொண்டாட்டம் நாடு முழுவதும்... டில்லியில் தேசியக்கொடியேற்றி பிரதமர் மோடி உரை ஏழை குடும்பங்கள் மருத்துவ செலவுக்கு ஆண்டுக்கு ரூ.1 லட்சம்... தியாகிகள் ஓய்வூதியம் ரூ.30 ஆயிரமாகும் எனவும் அறிவிப்பு

Posted: 15 Aug 2016 09:52 AM PDT

புதுடில்லி,:நாடு முழுவதும், 70வது சுதந்திர தினம், நேற்று கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. டில்லியில் தேசியக் கொடியை ஏற்றி உரை நிகழ்த்திய பிரதமர் மோடி, ஏழை குடும்பங்களின் மருத்துவச் செலவுக்கு, ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வழங்குதல், தியாகிகள் ஓய்வூதியத்தை, 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்துதல் போன்ற அறிவிப்புகளையும் வெளியிட்டார்.
நாட்டின், 70வது சுதந்திர தினத்தையொட்டி, டில்லியில் நேற்று, 93 நிமிடம், பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
நாட்டின் சுதந்திர தினத்தில், செங்கோட்டையில் உரையாற்றும் நான், குறிப்பாக ...

உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு 'கிரெடிட் கார்டு' அசத்தல் ! பீஹார் முதல்வர் நிதிஷ் குமாரின் அடுத்த அதிரடி

Posted: 15 Aug 2016 10:01 AM PDT

பாட்னா:பீஹார் மாநிலத்தில் அடுத்தடுத்து அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்டு வரும், முதல்வர் நிதிஷ் குமார், உயர் கல்வி பயிலும் மாணவர்களுக்கு, நான்கு லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'கிரெடிட் கார்டு' வழங்கும் திட்டத்தை நேற்று அறிவித்தார்.

பீஹாரில், முதல்வர் நிதிஷ் குமார் தலைமையிலான, ஐக்கிய ஜனதா தளம் - ராஷ்ட்ரீய ஜனதா தள கூட்டணி ஆட்சி நடக்கிறது. சட்டசபை தேர்தல் பிரசாரத்தின் போது, ஐந்து ஆண்டுகளுக்கான தொலைநோக்கு ஆவணத்தை, நிதிஷ் குமார் வெளியிட்டார். 'பூரண மது விலக்கு, அரசு வேலையில், 35 சதவீதம் மகளிருக்கு ஒதுக்கீடு' என, பல வாக்குறுதிகளை அவர், அப்போது தெரிவித்தார். ...

பிரதமர் மோடி உரை: தலைமை நீதிபதி அதிருப்தி

Posted: 15 Aug 2016 10:11 AM PDT

புதுடில்லி:''நீதிபதிகள் நியமனம் குறித்து, பிரதமர் மோடி, சுதந்திர தின உரையில் எதுவும் கூறாதது, மிகுந்த ஏமாற்றமளிக்கிறது,'' என, சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் அதிருப்தி தெரிவித்து உள்ளார்.

சுதந்திர தினத்தை முன்னிட்டு, டில்லி, சுப்ரீம் கோர்ட் வளாகத்தில், தேசியக் கொடியை ஏற்றி வைத்து, தலைமை நீதிபதி, டி.எஸ்.தாக்கூர் பேசியதாவது: சில விஷயங்களை வெளிப்படையாக சொல்வதில், எனக்கு தயக்கமில்லை. நீதிபதிகள் பற்றாக்குறையால், நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் லட்சக்கணக்கான வழக்குகள் தேங்கிக் கிடக்கின்றன. புதிய நீதிபதிகள் நியமனம் ...

ஏழைகளே இல்லாத தமிழகம் சுதந்திர தின விழாவில் முதல்வர் ஜெ., சூளுரை

Posted: 15 Aug 2016 10:17 AM PDT

சென்னை: ''சுதந்திர போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம், 11 ஆயிரத்தில் இருந்து, 12 ஆயிரம் ரூபாயாகவும்; அவர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம், 5,500 லிருந்து, 6,000 ரூபாயாகவும் உயர்த்தப்படும்,'' என, சுதந்திர தின விழாவில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார்.

தமிழக அரசு சார்பில், செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், நேற்று சுதந்திர தின விழா, வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. காலை, 9:12 மணிக்கு, கோட்டை கொத்தளம் முன் அமைக்கப்பட்டு இருந்த, அணிவகுப்பு ஏற்பு மேடைக்கு, முதல்வர் ஜெயலலிதா வந்தார்.பாதுகாப்பு படைத்தலைவர்கள், போலீஸ் உயர் அதிகாரிகள் ...

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் ரூ. 186 கோடி மதிப்பிலான தங்கத்தை காணவில்லை; அறிக்கையில் பகீர் தகவல்

Posted: 15 Aug 2016 10:26 AM PDT

புதுடில்லி: திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் ரகசிய அறையில் இருந்து எடுக்கப்பட்ட 186 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை காணவில்லை என உச்சநீதிமன்றத்தில் வினோத் ராய் தலைமையிலான கமிட்டி அறிக்கை சமர்பித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயிலில் உள்ள ரகசிய அறைகளை திறக்க கடந்த 2011ம் ஆண்டு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மொத்தம் உள்ள 6 ரகசிய அறைகளில் 1 அறை தவிர மற்ற அறைகள் திறக்கப்பட்டன. இதில் பல விலைமதிக்க முடியாத தங்கங்கள் இருந்தது. தெரியவந்தது. இதையடுத்து கோயிலுக்கு ஆயுதம் ஏந்திய போலீசார் ...

பயங்கரவாதத்துக்கு இந்தியா அடிபணியாது: பிரதமர் மோடி உறுதி

Posted: 15 Aug 2016 10:43 AM PDT

புதுடில்லி,: டில்லி செங்கோட்டையில் தேசியக்கொடி ஏற்றி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள குடும்பங்கள் பயனடையும் வகையில், ஆண்டுதோறும் தலா ஒரு லட்ச ரூபாய் வரையிலான, அவர்களின் மருத்துவச் செலவுகளை மத்திய அரசு ஏற்கும்.

கூட்டு பொறுப்பு
சமூக நீதி, கூட்டு பொறுப்பாக இருக்க வேண்டும். தலித், பழங்குடியினர் உள்ளிட்டோரை, நாட்டு வளர்ச்சியில் அரவணைத்து செல்ல வேண்டும். வலிமையான சமுதாயமே, வலிமையான இந்தியாவை உறுதி செய்யும்; சமூக நீதியே, வலிமையான சமூகத்தை உருவாக்கும்.நாட்டின் பணவீக்கம், 6 சதவீதத்துக்கு மேல் போகாமல் ...

'ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்வது தமிழக பா.ஜ., தலைவர்களுக்கு நல்லதல்ல'

Posted: 15 Aug 2016 10:47 AM PDT

சென்னை,: ''தமிழக பா.ஜ., தலைவர்கள், ஜல்லிக்கட்டை வைத்து அரசியல் செய்வது நல்லதல்ல. தமிழகத்தில் செயல்படுத்த வேண்டிய திட்டங்கள் எத்தனையோ உள்ளன; அதில் அவர்கள் கவனம் செலுத்தலாம்,'' என, மத்திய அமைச்சர் மேனகா கூறினார்.

மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத்துறை அமைச்சர் மேனகா, நேற்று மாலை, 3:30 மணிக்கு, ஏர் இந்தியா விமானம் மூலம் டில்லியில் இருந்து சென்னை வந்தார்.
அப்போது, அவர் கூறியதாவது:சுதந்திர தினவிழாவில், பெண்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கும் வகையில், பிரதமர் பேசியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. பெண்கள் ...

ம.ந.கூ., தலைவர்களுடன் சந்திப்பு : விஜயகாந்த் திடீர் ஒப்புதல்

Posted: 15 Aug 2016 10:51 AM PDT

நீண்ட அலைக்கழிப்பிற்கு பின், மக்கள் நலக் கூட்டணி தலைவர்களை சந்திப்பதற்கு, விஜயகாந்த் ஒப்புதல் வழங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சட்டசபை தேர்தலில், ம.ந.கூ., கூட்டணியில் இணைந்து, தே.மு.தி.க., போட்டியிட்டது. தே.மு.தி.க.,விற்கு, 104 தொகுதிகள் ஒதுக்கப்பட்ட நிலையில், ஒரு தொகுதியில் கூட அக்கட்சியால் வெற்றி பெற முடியவில்லை.உளுந்துார்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட, தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தும், 'டிபாசிட்' இழந்தார். இதனால், 'ம.ந.கூ., கூட்டணியை முறித்துக் கொள்ள வேண்டும்' என, தே.மு.தி.க.,வினர் கூறி வருகின்றனர். அதே நேரம், கூட்டணி முறிவு குறித்து எந்த ...

உள்ளாட்சி தேர்தலுக்கு அ.தி.மு.க., சுறுசுறுப்பு வேட்பாளர்களை தேர்வு செய்ய குழு அமைப்பு

Posted: 15 Aug 2016 10:55 AM PDT

உள்ளாட்சி தேர்தலில், அ.தி.மு.க., சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை தேர்வு செய்ய, மாவட்ட அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது.
உள்ளாட்சி தேர்தல், அக்., மாத இறுதியில் நடைபெற உள்ளது. வரும், செப்., 2ல், சட்டபை பட்ஜெட் கூட்டத் தொடர் முடிந்தவுடன், உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தலைமையின் ஒப்புதல் :
உள்ளாட்சி தேர்தலுக்காக, அ.தி.மு.க., சார்பில் நிர்வாகிகள், செயல்வீரர்கள் கூட்டம், தமிழகம் முழுவதும் நடந்து வருகிறது. வழக்கமாக, உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் ...

ஏமாற்றிய தென்மேற்கு பருவ மழை: மின் நிலையங்களில் உற்பத்தி பாதிப்பு

Posted: 15 Aug 2016 11:13 AM PDT

தென்மேற்கு பருவ மழை எதிர்பார்த்த அளவுக்கு பெய்யாததால், நீர் மின் நிலையங்களில் உற்பத்தி பாதிக்கப்பட்டு உள்ளது.

நீலகிரி மாவட்டம் - குந்தா; கோவை - காடம்பாறை; ஈரோடு, நெல்லையில், தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 2,307 மெகாவாட் திறன் உடைய, நீர் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், ஒரு யூனிட் மின் உற்பத்தி செலவு, 50 பைசாவுக்கு கீழ் உள்ளது. தென் மேற்கு மற்றும் வட கிழக்கு பருவ மழை பெய்யும் போது, நீர் மின் நிலைய அணைகளில், தண்ணீர் தேக்கப்படும். தொடர்ந்து மழை பெய்யும் போது, நீர் மின் நிலையங்களில், முழு அளவிலும், மற்றகாலங்களில், காலை, மாலை நேரத்தில் மட்டும் மின் ...

மெக்சிகோவில் ஓட்டலில் புகுந்து மர்ம நபர்கள் தாக்குதல்

Posted: 15 Aug 2016 01:21 PM PDT

மெக்சிகோசிட்டி: மெக்சிகோவில் ஓட்டலில் புகுந்த மர்ம நபர்கள் திடீர் தாக்குதல் நடத்தி அங்கிருந்தவர்களை பிணைய கைதிகளாக சிறை பிடித்தனர்.மெக்சிகோ நாட்டின் பியூர்டோ வல்லார்டா என்ற பகுதியில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தங்கியுள்ள ஓட்டல் உள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் கடற்கரை பகுதியான இங்கு பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுற்றுலா பயணிகள் தங்கியுள்ளனர். இங்கு மர்மநபர்கள் சிலர் துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்களுடன் திடீரென புகுந்து தாக்குதல் நடத்தி, அங்கிருந்த சிலரை பிணய கைதிகளாக பிடித்துள்ளதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. சம்பவ இடத்திற்கு ...

ஒலிம்பிக் பாட்மின்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து

Posted: 15 Aug 2016 02:40 PM PDT

ரியோ டி ஜெனிரோ : ஒலிம்பிக் பாட்மின்டனில் இந்திய வீராங்கனை சிந்து காலிறுதி சுற்றுக்கு முன்னேறி அசத்தினார்.
ஒலிம்பிக் பாட்மின்டனில் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, சீன தைபேவை சேர்ந்த டாய் சு யிங்கை எதிர் கொண்டார். இதில் அபாரமாக செயல்பட்ட சிந்து, 21-13, 21-15 என்ற நேர் செட்களில் வெற்றி பெற்றார். காலிறுதியில் சீன வீராங்கனை யிஹான் வாங்கை, சிந்து எதிர் கொள்கிறார். கால் இறுதி போட்டி இந்திய நேரப்படி நாளை அதிகாலை 3 மணிக்கு நடக்கிறது. ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™