Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


உள்ளத்தைக் கொள்ளை கொள்ளும் குறுங்கவிதைகள்!

Posted: 15 Aug 2016 04:09 PM PDT

- நன்னூலார், ஒரு நல்ல நூலுக்கு இருக்க வேண்டிய பத்து வகையான அழகுகளைப் பட்டியல் இடும்போது, முதலாவதாகச் சுருங்கச் சொல்லலைக் குறிப்பிடுவார். அடுத்து, விளங்க வைத்தலை இரண்டாவது அழகாகச் சுட்டுவார். - கவிதை உலகிலும் நெடுங்கவிதைகளை விட, குறுங் கவிதைகளே ஆற்றலும் வலிமையும் மிக்கனவாக விளங்குகின்றன. மக்களுக்கு அவை எளிதில் சென்று சேருவதோடு, அடிக்கடி மேற்கோள் காட்டப் படுவனவாகவும் திகழ்கின்றன. - இவ்வகையில் சிறப்பாகக் குறிப்பிடத்தக்க சில குறுங் கவிதைகள் குறித்து ஈண்டுக் காண்போம். - சுஜாதா ...

ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம்!

Posted: 15 Aug 2016 04:00 PM PDT

- இந்திய தேசத்தின் 70-ஆவது சுதந்திர தினம் இன்று. 69 ஆண்டுகளுக்கு முன்னால், முதல் சுதந்திர தினத்தை - 15.08.1947-அன்று கொண்டாடியதும், குதூகலித்து மகிழ்ந்ததும் உலக வரலாற்றில் இடம் பெறத்தக்க நிகழ்வுகள். ஆங்கிலேயர் இந்தியத் துணைக் கண்டத்தை விட்டு வெளியேற முடிவு செய்தபோது. 1947 ஆகஸ்ட் 15-ஆம் நாளை ஆட்சி மாற்றத்துக்குத் தேர்வு செய்தனர். அது இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்த இரண்டாவது ஆண்டு தினம். "போரில் கிடைத்த வெற்றி எங்களுக்கு மகிழ்ச்சி தருவதை விட, போரில்லாமல் ...

சுதந்திரதின விழா: ஸ்ரீநடராஜர் கோயில் கோபுரத்தில் தேசியக்கொடி ஏற்றப்பட்டது

Posted: 15 Aug 2016 03:58 PM PDT

- நாட்டின் 70-வது சுதந்திரதின விழாவை முன்னிட்டு திங்கள்கிழமை சிதம்பரம் ஸ்ரீநடராஜர் கோயில் கிழக்கு கோபுரத்தில் பொதுதீட்சிதர்களால் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சிதம்பரம் ஸ்ரீநடாரஜர் கோயிலில் 70-வது சுதந்திரதினத்தை முன்னிட்டு பொதுதீட்சிதர்கள் திங்கள்கிழமை காலை 6 மணிக்கு தேசியக்கொடியை வெள்ளித்தட்டில் வைத்து சித்சபையில் உள்ள ஸ்ரீசிவகாமசுந்தரி சமேத ஸ்ரீமந்நடராஜமூர்த்திக்கு அர்ச்சனை மற்றும் தீபாராதனை செய்தனர். பின்னர் மேளதாளத்துடன் பொதுதீட்சிதர்கள் தேசியக்கொடியை எடுத்து வந்து கிழக்கு ...

help

Posted: 15 Aug 2016 02:14 PM PDT

sorry to text here in English bcz I'm texting by my android where no tamil font. I tried to download "The Secret in tamil Pdf" which unable to download. Please help me with other sources

மணிபல்லவம் நூல் தேவை

Posted: 15 Aug 2016 11:04 AM PDT

மணிபல்லவம் நூல் தேவை. பகிரவும். நன்றி.

ஒரு ஆசிரியரின் மரணத்திற்கு இந்திய நாடே கண்ணீர் அஞ்சலி

Posted: 15 Aug 2016 10:41 AM PDT

தெலுங்கானா மாநிலத்தில் ரங்காரெட்டி மாவட்டம் மேடிகொண்டா கிராமத்தில் உள்ள தொடக்க பள்ளி ஒன்றில் சுதந்திர தின விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளை செய்து வந்தனர். நேற்று மாலை, அந்த ஏற்பாடுகளை அப்பள்ளியின் தலைமை ஆசிரியை பிரபாவதி பார்வையிட்டு வந்தார். சில மாணவர்களும் இதை வேடிக்கை பார்த்து வந்தனர். இந்நிலையில், கொடி கம்பம் நடப்பட்ட போது அருகிலிருந்த மின்சார கம்பி எதிர்பாராதவிதமாக அறுந்து விழுந்தது. மின்சார கம்பி 4 பள்ளி மாணவிகளை நோக்கி வருவதை கண்ட  தலைமை ஆசிரியை, ஓடிச் சென்று அந்த மாணவர்களை ...

மயக்க தோசை

Posted: 15 Aug 2016 10:39 AM PDT

மீண்டும் உறவுகளுடன் இணைவதில் மகிழ்ச்சி!

Posted: 15 Aug 2016 10:29 AM PDT

நீண்ட இடைவெளிக்குப் பிறகு உறவுகளுடன் இணைவதில் மிக்க மகிழ்ச்சியடைகிறேன்!

தளத்தை சிறப்பாக வழிநடத்திச் செல்லும் அனைத்து உறவுகளுக்கும் பாராட்டுக்கள்.

இனிமேல் தினமும் ஈகரையில் இணைவேன், ஆனால் முன்பு போல் அதிக நேரம் இணைந்திருக்க முடியாது! நக்கல் நாயகம்

ருத்ர வீணை பாகம் - 01 - இந்திரா சௌந்தராஐன் (தெளிவான மின்னூல்)

Posted: 15 Aug 2016 10:09 AM PDT



http://www.mediafire.com/download/guu136llz5o1cel/Rudra+Veenai+-+Part+01.pdf

என்றும் அன்புடன்
செல்லா

மொய் காப்பாளராம்…!!

Posted: 15 Aug 2016 09:45 AM PDT

சுதந்திரக் கனவு!

Posted: 15 Aug 2016 09:36 AM PDT

இந்தியா தனது 70-ஆவது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. தில்லி செங்கோட்டையில் இந்தியாவின் 14-ஆவது பிரதமரான நரேந்திர மோடி மூவர்ணக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றப் போகிறார். இந்த நேரத்தில், இந்தியாவின் முதல் பிரதமர் பண்டித ஜவாஹர்லால் நேரு, அரசியல் நிர்ணய சபையில் ஆகஸ்ட் 14, 1947 நள்ளிரவில் நிகழ்த்திய அந்த உரை நினைவுக்கு வருகிறது. "முன்பு எப்பொழுதோ நாம் விதியுடன் செய்து கொண்ட அந்த ஒப்பந்தத்தை, முழுமையாக இல்லாவிட்டாலும் கணிசமாக நிறைவேற்றும் நேரம் கைகூடி இருக்கிறது. இன்னும் சில ...

கிடைக்குமா சுதந்திரம்?

Posted: 15 Aug 2016 09:29 AM PDT

கிடைக்குமா சுதந்திரம்? கல்வி இலவசமாய் கற்றிடச் சுதந்திரம் காற்றை மாசின்றி சுவாசிக்கச் சுதந்திரம் கிழடுகள் வாரிசோடு வாழ்ந்திடச் சுதந்திரம் கீழ்த்தட்டு மனிதனுக்கும் சமநீதிச் சுதந்திரம் குமரிப்பெண் குதூகலமாய் சுற்றிவரச் சுதந்திரம் கூடப்பிறந்தவளைக் கொண்டாடச் சுதந்திரம் கூடி மகிழ்ந்தவளைக் கூப்பிடும் சுதந்திரம் கெடுபிடி ஏதுமின்றி நீதி கேட்கச் சுதந்திரம் கேள்விகள் பல கேட்டு தேர்வில் வெல்லச் சுதந்திரம் கையூட்டு பெறுவோரை காட்டிக் கொடுக்கச் சுதந்திரம் கொலைகாரனை ...

பேய்க்கு வாக்கப்பட்டால் – கிராமத்து பழமொழிகள்

Posted: 15 Aug 2016 09:27 AM PDT

கலாதர் அவர்களின்வீ டியோ தேவை

Posted: 15 Aug 2016 07:24 AM PDT

எழுத்தாளர் கலாதர் அவர்களின் (2000 ஆண்டு) வெளியிடப்பட்ட வீடியோ (தற்காப்பு கலை) தேவை. வைத்திருப்பவர்கள் அளிக்கவும்.

[REQ] அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள்

Posted: 15 Aug 2016 05:54 AM PDT

அமிஷ் திரிபாதி அவர்களுடைய புத்தகங்கள் வேண்டும். அவர் எழுதிய "சிவா trilogy" இல் உள்ள 2 புத்தகங்கள் வேண்டும். யாராவது இருந்தால் பதிவிடவும். 3'ம் பாகம் இன்னும் தமிழில் வெளி வர வில்லை

1. மெழுக'வின் அமரர்கள் - The Immortals of Meluha
2.நாகர்களின் ரகசியம் - The Secret of the Nagas

மிக்க நன்றி.

நாடு முழுவதும் 886 ‘டிவி’ சேனல்கள்

Posted: 15 Aug 2016 04:50 AM PDT

புதுடில்லி : நாடு முழுவதும், 886 தனியார், 'டிவி' சேனல்கள் இயங்கி வருவதாக, தகவல் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. – மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டு உள்ள அறிக்கை: கடந்த மாதம் வரை, 1,035 தனியார் சேனல்களுக்கு, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. – பல்வேறு காரணங்களால், அதில், 149 சேனல்களுக்கான உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. தற்போது நாடு முழுவதும், 886 தனியார், 'டிவி' சேனல்கள் இயங்கி வருகின்றன. – இவற்றில், செய்தி சேனல்களின் எண்ணிக்கை, 399; மீதமுள்ள, 487 ...

சான்றோர் வாழ்வில்... பழைய மேசை

Posted: 15 Aug 2016 04:49 AM PDT

ஒரு சமயம் கும்பகோணம் காலேஜில் மேசை, நாற்காலி போன்ற சில மரச்சாமான்களை ஏலம் போட்டார்கள். தியாகராச செட்டியார் பயன்படுத்திய மேசையும் அவற்றில் இருந்தது. தமக்கு வேலை பண்ணிவைத்த தியாகராச செட்டியாரிடம் பெரிதும் நன்றியறிவுடையவர் ஆசிரியர். அவரை நினைவுகூரத் தம்முடைய வீட்டுக்குத் "தியாகராச விலாசம்' என்று பெயர் வைத்தார். அவருடைய வரலாற்றையும் எழுதியிருக்கிறார். ஆகவே, தியாகராச செட்டியார் பல காலம் இருந்து பாடம் சொல்லும்போது, அவரது கைப்பட்ட அந்த மேசை ஆசிரியருக்குப் புனிதமான பண்டமாகத் ...

தமிழ்நாட்டில் தாவரங்கள் (173)

Posted: 15 Aug 2016 04:42 AM PDT

தமிழ்நாட்டில் தாவரங்கள் (1) - முனைவர் சு.சௌந்தரபாண்டியன் எம்.ஏ.(தமிழ்), எம்.ஏ.(ஆங்கிலம்), பி.எட்., டிப்.(வடமொழி), பி.எச்டி சென்னை-33 தமிழ்ப் பெயர் - அம்மையார் கூந்தல் தமிழில் வேறு பெயர்கள் – கொடியார் கூந்தல் ; ஆகாச வல்லி தாவரவியல் பெயர் - CUCUSTA REFLEXA சிறப்பு -  இதன் கசாயம் புற்றுநோயைக் குணப்படுத்தும் காணப்பட்ட இடம் -  சென்னை -113

மதுரை விமான நிலைய நிலையத்தின் கழிப்பறையில் கட்டு கட்டாக பணம்

Posted: 15 Aug 2016 04:29 AM PDT

மதுரை விமான நிலைய நிலையத்தின் கழிப்பறையில் கட்டு கட்டாக கிடந்த பணம் மீட்கப்பட்டுள்ளது. மதுரை விமான நிலையத்தில் நேற்று காலை விமான நிலைய ஊழியர் சண்முகம், கழிவறையை சுத்தம் செய்வதற்காக சென்றுள்ளார். அப்போது, ஆயிரம் ரூபாய் தாள்கள் கொண்ட 2 கட்டுகள் அங்கு கேட்பாரற்று கிடந்துள்ளன. அதன் அருகே கருப்பு கலர் பவுடர் பாக்கெட் ஒன்றும் கிடந்துள்ளது. இதை கண்ட சண்முகம், அந்த பணத்தை எடுத்து விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அதில், ரூ.2,20,000 இருந்தது தெரிய வந்தது. இதையடுத்து, ...

கம்பரின் சொல்லாட்சி

Posted: 15 Aug 2016 04:28 AM PDT

கம்பராமாயணத்தின் யுத்த காண்டத்தில், விடை கொடுத்த படலத்தில் வருகிறது கீழ்க்காணும் பாடல். - "அங்கதம் இல்லாத கொற்றத்து அண்ணலும் அகிலம் எல்லாம் அங்கதன் என்னும் நாமம் அழகுறத் திருத்து மாபோல் அங்கதம் கன்னல் தோளாற்கு அயன் கொடுத்ததனை ஈந்தான் அங்கதன் பெருமை மண்மேல் ஆர் அறிந்து அறைய கிற்பார்'' - இப்பாடலில் "அங்கதம்' எனும் சொல்லை இரு இடங்களிலும், "அங்கதன்' எனும் சொல்லை இரு இடங்களிலும் வெவ்வேறு பொருள்களில் கம்பர் கையாண்டுள்ளார். முதல் அடியில் உள்ள "அங்கதம்' என்பதற்குக் "குற்றம்' என்று ...

நாகரிகத்திற்கும் வறுமைக்கும் என்ன வேறுபாடு?

Posted: 15 Aug 2016 04:08 AM PDT

இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் முழுபுத்தகம் ஒரே கோப்பாக

Posted: 15 Aug 2016 03:37 AM PDT

அனைவருக்கும் வணக்கம் இந்திரா செளந்திரராஜன் எழுதிய சிவமயம் எழுதிய நாவலை கைபேசியில் படிக்குமாறு ஒவ்வொரு பக்கம் படிக்குமளவுக்கு மாற்றி கொடுத்துளேன் தரவிறக்கி கொள்ளுங்கள் முழு புத்தகமும் ஒரே கோப்பாக கொடுத்துள்ள்ளேன்.  தரவிறக்கி படித்து விட்டு சொல்லுங்கள் இது போன்ற பிடிஎப் கோப்புகளை ஆன்ட்ராய்ட் செல்பேசி அல்லது டேப்ளேட்டில் புத்தகம் போல பக்கங்களை திருப்பி படிக்க Favorite Book Reader ( FBReader ) என்ற ஆப் பயன் படும் அதை நேரடியாக் கூகிள் ப்ளே ஸ்டோரில் தரவிறக்கி கொள்ளலாம். சிவமயம் முழுவதும் ஒரே பிடிஎப் ...

இவர்தான் உண்மையான ஒலிம்பியன் – ஒற்றை ஷூவோடு ஓடிய வீராங்கனை!

Posted: 15 Aug 2016 03:17 AM PDT

- – வெற்றி யாருக்கும் எளிதாகக் கிடைத்துவிடுவதில்லை. எத்தனையோ தடைகளைத் தாண்டித் தான் ஒவ்வொருவரும் வெற்றிகளைக் கடக்க வேண்டியிருக்கிறது. – இயலாமை முதல் இயற்கை வரை அனைத்தையும் தாண்டி வருபவருக்கே அது வசப்படுகிறது. ஒலிம்பிக் என்னும் மாபெரும் களத்தில் வெற்றி வாகை சூடும் ஒவ்வொருவரும் பல இன்னல்களைத் தாண்டித் தான் வெற்றி மேடை ஏறுகின்றனர். – அந்த வெற்றிகளின் பின்னால் இருக்கும் கண்ணீரும், கண்ணீர்களின் பின்னால் உள்ள வலிகளும் நாம் அறியாதவை. ரியோவில் மல்லுக்கட்டிக் கொண்டிருப்பவர்கள் ஒவ்வொருவருக்கும் ...

ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வியை கண்டு துவளாதீர்கள் வீரர்களுக்கு மோடி அறிவுரை

Posted: 15 Aug 2016 03:06 AM PDT

புதுடெல்லி, மனம் துவண்டு விடாமல் உறுதியுடன் விளையாடுங்கள் என்று ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ள இந்திய வீரர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். 31 வது ஒலிம்பிக் போட்டிகள் பிரேசில் நாட்டில் உள்ள ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வருகிறது. இதில் இந்தியா சார்பில் 118 வீரர்-,வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். இந்தியா சார்பில் அதிக வீரர்கள் ஒலிம்பிக்கில் கலந்துகொள்வது இதுவே முதல் முறை. துப்பாக்கிச் சுடுதல், வில்வித்தை, ஹாக்கி, டென்னிஸ் உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் ...

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு!

Posted: 15 Aug 2016 01:53 AM PDT

குறைந்த செலவில் அதிக லாபம் குவிக்கும் தொழிலாக கருநாக வளர்ப்பு வளர்ச்சியடைந்து வருகிறது.'சிநேக் இந்தியா பார்ம்' என்ற பெயரில் தமிழகத்தில் கருநாக வளர்ப்பு தொழிலை வெற்றிகரமாக நடத்திவரும் ஈரோடு பெருந்துறையைச் சேர்ந்த பாலா இதுபற்றி எழுதியுள்ள கட்டுரை: நான் இந்த பாம்பு பண்ணையை 2009-ம் ஆண்டு 5 ஜோடி குட்டிகளுடன் தொடங்கினேன். ஆரம்பத் தில் நிறைய தடுமாற்றங்களைச் சந்தித்தேன். பிறகு இது தொடர்பாக நிறைய பண்ணையாளர்களுடன் கலந்துரையாடிய பின் இதை எப்படி வெற்றிகரமாகச் செய்வது என்ற தெளிவைப் பெற்றேன். அதை ...

நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே

Posted: 15 Aug 2016 12:37 AM PDT

படம்- நானும் ரௌடிதான் பாடல் வரிகள்- தாமரை இசை அனிருத் பாடியவர்கள்- அனிருத், நீத்மோகன் =================================== நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே நீலம் கூட வானில் இல்லை எங்கும் வெள்ளை மேகமே போக போக ஏனோ நீளும் தூரமே மேகம் வந்து போகும் போது தூறல் கொஞ்சம் தூறுமே – என் அச்சம் ஆசை எல்லாமே தள்ளிப் போகட்டும் எந்தன் இன்பம் துன்பம் எல்லாமே உன்னைச் சேரட்டும் – நான் பகல் இரவு நீ கதிர் நிலவு என் வெயில் மழையில் உன் குடை அழகு (2) நீ வேண்டுமே எந்த நிலையிலும் எனக்கென நீ போதுமே – ஒளி ...

சில கவிதைகளும் மொக்கைகளும்..........

Posted: 15 Aug 2016 12:22 AM PDT

கவிதை எண் 2001 அருகில் இருந்தும் பேச முடியவில்லை உரிமை இருந்தும் கேட்க முடியவில்லை -எக்ஸாம் ஹாலில் என்ன கொடுமை சார் இது.... கவிதை எண் 2002 பலருக்கு விருப்பம் உண்டு உன்னை அடைய ! எனக்கு மட்டுமே உரிமை உண்டு உன்ன்ன காக்க! மலரிடம் சொன்னது முள்.... கவிதை எண் 2003 ஆசை படுவதை மறந்து விடு ! ஆனால் ஆசை பட்டதை மறந்து விடாதே கவிதை எண் 2004 ஆண்டவன் சோதிப்பது எல்லோரையும் அல்ல உன்னை போல் சாதிக்க துடிக்கும் புத்திசாலியை மட்டும் என்னை பார்த்து அப்துல் கலாம் சொன்னார். கவிதை எண் ...

பாரத தாயே உன்னை வணங்குகிறேன்...

Posted: 14 Aug 2016 11:20 PM PDT

பாரத தாயே உன்னை வணங்குகிறேன்! அந்நியன் பிடியிலிருந்து மீட்டு மீண்டும் 70 வயதில் அந்நியன் கைக்கு அடகு வைக்கும் வேலைகள் பிரமாதமாக நடந்து கொண்டிருக்கின்றன!! கல்வி கொள்கை கலாச்சாரம் தொழிற்சாலை அனைத்தும் முன்னேற்றத்தை நோக்கி அல்ல!! மீண்டும் அடகு வைக்கும் வேலையில் அரசு அந்நியனிடம் அந்நோன்யமாகி விட்டது!! இந்திய மக்களே விழித்துக் கொள்ளுவோம்! மீண்டும் ஓர் சத்தியாக்கிரகத்தை முன்னெடுக்க தலைவர்களும் இல்லை! தொண்டர்களும் இல்லை!! அகிம்சையை ...

வாட்ஸ் அப்-ல் பெறப்படவை - (பல்சுவை) - தொடர் பதிவு

Posted: 14 Aug 2016 11:19 PM PDT


-

-
-

இன்றைய (அரசியல்) கார்ட்டூன்...

Posted: 14 Aug 2016 11:17 PM PDT

வில்லன் – ஒரு பக்க கதை

Posted: 14 Aug 2016 10:21 PM PDT

மிகுந்த யோசனைக்குப் பிறகு ஒப்புக்கொண்டான் கேசவ் அந்த வேடத்தை. இப்போது முன்னணியில் இருக்கும் இளம் கதாநாயகனுக்கு தான் வில்லனாக நடிக்க வேண்டுமாம். – இருபது வருடங்களுக்கு முன்பு கேசவ் ஒரு சாக்லெட் பாய். பெண்களின் கனவு நாயகன். எங்கு சென்றாலும் இளம் பெண்கள் சூழ்ந்து கொள்வார்கள். 'கேசவ் மாதிரி மாப்பிள்ளை இருந்தா கண்ணை மூடிக்கிட்டு கல்யாணம் பண்ணிக்குவோம்' என சொல்லிச் சொல்லி, ஆண்களின் மனதில் பொறாமையை ஏற்படுத்தினார்கள். – அதெல்லாம் ஒரு காலம். கேசவ் பெருமுச்சு விட்டான்! படம் முடிந்தது. – ப்ரீமியர் ...

ருசி – ஒரு பக்க கதை

Posted: 14 Aug 2016 10:21 PM PDT

தொழிலதிபர் செல்வராகவனின் மகன் சங்கரை ஸ்கூலிலிருந்து கடத்தியவன் கரகர குரலில் பேசினான். ''பணத்தை ரெடி பண்ணு. போலீஸ் உன் வீட்ல இருக்காங்கனு தெரியும். போனை டிராக் பண்ணி, நேரத்தை வீணடிக்க வேண்டாம்னு சொல்லு. கொஞ்சம் இரு… உன் பையன் பேசுறான்!'' சில நொடிகள் கடந்த பிறகு சங்கர் பேசினான். ''அப்பா! இவங்க கேக்குற பணத்தைக் கொடுத்துடுங்க. நான் நல்லாயிருக்கேன். இவங்க ரொம்ப நல்லவங்க. பசிக்குதுன்னு சொன்னதும் எனக்கு ருசியான பிரியாணி வாங்கிக் கொடுத்தாங்க. பிரியாணி ருசி பிரமாதம்!'' – அதோடு தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஹெட்போனில் ...

மாற்றம் – ஒரு பக்க கதை

Posted: 14 Aug 2016 10:20 PM PDT

செப்டம்பர் – ''அந்தப் பாத்திரத்தில் இருக்கறது நேற்று வைத்த குழம்பு. கொட்டிட்டு கழுவி வச்சுடு. அம்மா பழசெல்லாம் சாப்பிட மாட்டாங்க…'' வேலை செய்ய வந்த வசந்தாவிடம் கூறினார் நாராயணன். – ''இன்னைக்கு வெள்ளிக்கிழமை. வீட்டை பெருக்கித் துடைக்கணும்'' வசந்தாவிடம் கண்டிப்புடன் சொன்னாள் லக்ஷ்மி. – ''புடவையை நல்லா அழுக்குப் போக தோய்க்கறாளா பாருங்கோ…'' மனைவி லக்ஷ்மியின் குரல் சொன்னபடி செய்தார் நாராயணன். – ''மணி ஏழு ஆச்சு, இன்னும் குளிக்காம இருக்கீங்க? உங்களுக்கே தெரிய வேண்டாம்?'' மறுபடியும் லக்ஷ்மியின் ...

இலவசம் – ஒரு பக்க கதை

Posted: 14 Aug 2016 10:20 PM PDT

பிரசவத்திற்கு இலவசம்' என எழுதப்பட்ட ஆட்டோ அது. 'ஆட்டோ… ஆட்டோ…' அவசரமாக ஒரு பெண் அழைத்த படியே வண்டியை வழியில் நிறுத்தினாள். – அவள் பின்னாலேயே நடக்க முடியாமல் நடந்தபடி ஒரு நிறைமாத கர்ப்பிணி… குடும்பத்தினர் சூழ வந்தாள். அவசரமாக இரு பெண்களையும் ஆட்டோவில் ஏற்றினார்கள் குடும்பத்தினர். – ஒரு ஆஸ்பத்திரியின் பெயரைச் சொல்லி, ''கொஞ்சம் சீக்கிரமா போப்பா…'' எனப் பதற்றமாகச் சொன்னாள், ஆட்டோவை நிறுத்திய பெண். ஆட்டோ டிரைவர் சூரி கேட்டான், ''இருநூறு ரூபா ஆகும்மா… ஓகேதானே?'' – ''இது பிரசவ கேஸ்ப்பா. ...

ரமணியின் கவிதைகள்

Posted: 14 Aug 2016 09:46 PM PDT

கணினி போற்றுதும்!? ரமணி, 18/08/2012 கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பணியெது வாகிலும் பாங்குறச் செய்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! பலவகை வடிவினில் உலகில் உறைந்திடும் பலவகை மனிதரும் பலவாறு உகந்திடும் கணினி போற்றுதும் கணினி போற்றுதும்! இன்றைய உலகின் எலிகள் போட்டியில் பகலும் இரவும் மனிதர் வாழ்வினை நிலைபெறச் செய்திடும் கணினி போற்றுதும்! குழந்தை மனம்முதல் கிழவர் மனம்வரை கலைகள் போற்றித் திறன்கள் வளர்த்து கனவுகள் தந்திடும் கணிணி போற்றுதும்! குடும்பம் முழுவதும் கணினி ...

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்

Posted: 14 Aug 2016 09:37 PM PDT

ரமணியின் நகைச்சுவைக் கவிதைகள்
#ரமணி_Clerihew_வாழ்நகை
20/01/2016
8.
வயிறு சுத்தம் ஆச்சு
டாய்லட் குப்பை ஆச்சு
கழுவப் பறந்தேன் ஆலா
கிடைத்தது கோக்கா கோலா!

‪#‎ரமணி_Balliol_rhyme_நகைத்துளி‬
8.
தகடூர்ப் போரில் அதியமான் அஞ்சி
பகையில் மாளக் கதறும் நெஞ்சு
நெல்லிக் கனியைத் தானே உண்டிருந்தால்
தில்லியில் நம்மை ஆண்டு கொண்டிருப்பான்!

*****

ரமணி ஹைக்கூ

Posted: 14 Aug 2016 09:31 PM PDT

ரமணி ஹைக்கூ
03/11/2015

1.
ஓவியக் கண்காட்சி
அகலும் விழிகள் நடுவே
கறுப்புக் கண்ணாடி

2.
அடைமழை அழிக்கதவு
ஓசையுடன் தாழ்ப்பாள் திறந்தார்
காற்றில் குழந்தையின் முகம்

3.
விண்வெளியில் பம்பரம்
சாட்டை எது? அப்பா ஆய்வு
மகன் கையில் பட்டம்

*****

அனுபவத் துளிகள்

Posted: 14 Aug 2016 09:25 PM PDT

அனுபவத் துளிகள் 01. காக்கை (நேரிசை ஆசிரியப்பா) ஆழ்துளைக் கிணற்றின் அருஞ்சுவை நீரை வாழ்தினத் தேவையில் வற்றா திருக்க வான்வெளி பார்த்த மாடித் தொட்டியில் தானாய்ச் சேர்க்கும் தனியொரு மின்விசை! நீரால் தொட்டி நிறைந்தே வழியும் நேரம் பார்த்தே நீரைப் பருக வாயசம் அமரும் வழிகுழாய்! மாயம் இஃதெவண்? மனத்தெழும் மலைப்பே! [வாயசம் = காக்கை] --ரமணி, 21/09/2015 *****

மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா…

Posted: 14 Aug 2016 09:22 PM PDT

பாடல்: மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா படம்: சுமைதாங்கி (ஆண்டு 1962) இசையமைப்பு: விஸ்வநாதன் – ராமமூர்த்தி பாடலாக்கம்: கவியரசர் கண்ணதாசன் பாடியவர்: P.B.ஸ்ரீனிவாஸ் – ———————————— – மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா – மயக்கமா கலக்கமா மனதிலே குழப்பமா வாழ்க்கையில் நடுக்கமா – வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வாழ்க்கை என்றால் ஆயிரம் இருக்கும் வாசல் தோறும் வேதனை இருக்கும் வந்த துன்பம் எது வந்தாலும் வாடி நின்றால் ஓடுவதில்லை வாடி நின்றால் ...

பாமரர் தேவாரம்

Posted: 14 Aug 2016 09:14 PM PDT

பாமரர் தேவாரம்: திருச்சோற்றுத்துறை (கலித்துறை: மா மா மா மா புளிமாங்காய்) (கோவில்: Chottruth Thurai பதிகம்: thiru aDangkal) அன்னம் காணிற் பசிபோய்க் கண்டோம் வரர்லோகம் முன்னோ னடியார் உண்ணச் செய்தல் உறுகோளே அன்னம் அளித்த முன்னோர் குலத்தின் வழிவந்தோர் இன்னும் சோற்றுத் துறையில் அன்னம் இடுவாரே. ... 1 [அன்னதானச் செய்தி: Aadalvallan மூவர் பாடிப் பரவும் பெம்மான் முழுதோனை மேவும் சோற்றுத் துறையில் முற்றும் விழியாரக் காவல் தெய்வம் போல நின்றே அருள்செய்வான் ஆவி சோரும் முன்னே தாளைப் பணிவோமே. ...

நாட்டியத்தால் இளமையாக திகழும் மாதுரி தீட்சித்

Posted: 14 Aug 2016 08:11 PM PDT

- 'இந்தி திரை உலகின் நாட்டியத் தாரகை' என்று புகழப் படுகிறவர், மாதுரி தீட்சித். இவரது நடனத்திற்கு இன்றும் ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கு இருப்பது ஒருபுறம் இருக்க, மறுபுறம் இந்தி திரையுலகில் இவரது இடத்தை நிரப்ப புது நடிகைகள் இல்லை என்பதையும் குறிப்பிட்டுத்தான் ஆகவேண்டும். இந்தி திரை உலகில் கொடிகட்டி பறந்த இவர், திருமணத்திற்கு பின்பு நடிப்புக்கு முழுக்குபோட்டார். இடைவெளிவிட்டு மீண்டும் நடிக்கத் தொடங்கியிருக்கிறார். விளம்பர படங்களிலும் நடிக்கிறார். தொலைக் காட்சி நாட்டிய நிகழ்ச்சிகளுக்கு நடுவராகவும் ...

அரசியல் கார்ட்டூன் (தொடர் பதிவு)

Posted: 14 Aug 2016 07:48 PM PDT


-

-

-
நன்றி- தினமலர்

கலங்கடிக்கும் கள்ள ரூபாய் நோட்டுகள்

Posted: 14 Aug 2016 07:41 PM PDT

- நாட்டில் கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கம் பெரிய அச்சுறுத்தலாக விளங்கி வருகிறது. இது மத்திய அரசுக்கும், இந்திய ரிசர்வ் வங்கிக்கும் சவாலாக உள்ளது. கள்ள ரூபாய் நோட்டுப் புழக்கம் பிரச்னை தொடர்பாக கொல்கத்தாவில் உள்ள இந்திய புள்ளியியல் மையம் (ஐ.எஸ்.ஐ.) தேசிய புலனாய்வு ஏஜென்சியுடன் (என்.ஐ.ஏ.) இணைந்து ஆய்வு ஒன்றை மேற்கொண்டது. இந்த ஆய்வில், நாட்டில் ரூ.400 கோடி அளவுக்கு கள்ள ரூபாய் நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரூ.400 கோடி கள்ள நோட்டுப் புழக்கமானது, கட்டுப்படுத்தப்படாமல், ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™