Dinamani - முகப்பு - http://dinamani.com/ |
- இலங்கை கடற்படை தொடர் அச்சுறுத்தல்: கச்சத்தீவுக்குச் செல்ல மீனவர்கள் தயக்கம்
- சசிகலா புஷ்பா எம்.பி., குடும்பத்தினர் மீது 6 பிரிவுகளில் வழக்கு
- கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணுஉலைகள் அமைக்க விரைவில் ஒப்பந்தம்: வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர்
- ராஜஸ்தானில் நவம்பர் 9-இல் விவசாயிகள் மாநாடு
- 4 மீனவர்கள், 103 படகுகளை இலங்கை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம்
- சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு: தில்லி உயர் நீதிமன்ற வரம்பு குறித்து தமிழக அரசு கேள்வி
- ரயிலையே காணோமாம்..!
- 4.39 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம்
- ஆடி சுவாதி: திருச்செந்தூரில் "வெள்ளை யானை' வீதியுலா
- ஆக.15இல் கோவில்பட்டியில் மாரத்தான் ஓட்டப்பந்தயம்
- காயல்பட்டினத்தில் ஆலோசனைக் கூட்டம்
- கல்லூரியில் மெடிக்கல் எக்ஸ்போ கண்காட்சி
- திருச்செந்தூர் அரசு ஐடிஐ-யில் வெல்டிங் பயிற்சி 22-இல் தொடக்கம்
- ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு
- தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம்
- "வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்'
- ஆக. 15இல் மதுக்கடைகளை மூட உத்தரவு
- திருச்செந்தூர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா
- 8 கிராமங்களை புறக்கணித்துச் செல்லும் உடன்குடி-திருநெல்வேலி அரசுப் பேருந்து: இந்து முன்னணி புகார்
- மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
- கராத்தே: காமராஜ் கல்லூரி மாணவர் சிறப்பிடம்
- சுகாதார விழிப்புணர்வுப் பேரணி
- கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை
- ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: காங்கிரஸ் வலியுறுத்தல்
- தூத்துக்குடி புறநகர் பகுதியில் ஆகஸ்ட் 12 மின்தடை
- கோவில்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்
- அரசு வழங்கிய இலவச நிலங்களை விற்றவர்களின் பட்டாக்கள் ரத்து: உயர்நீதிமன்றத்தில் தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்
- மனுநீதி நாள் முகாம்: ரூ.23 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு
- தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: பெயர் பதிவுக்கு ஆக. 16 கடைசி
- நாகர்கோவிலில் 14இல் நூல் அறிமுக விழா
- தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம்
- முகநூலில் அவதூறு கருத்து: 5 பேர் கைது
- திற்பரப்பில் ரூ. 39 கோடியில் மேம்பாட்டுப் பணி: அதிகாரி ஆய்வு
- திருவண்ணாமலையில் மாநில மாநாடு நாகர்கோவிலில் இருந்து மின் ஊழியர்கள் பயணம்
- அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்ப்பு நாளை கடைசி
- சந்தையடியில் மனுநீதி நாள் முகாம்: 49 பயனாளிகளுக்கு நல உதவிகள்
- "முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்'
- தரமான சாலைப் பணி: ஆட்சியர் அறிவுறுத்தல்
- புதைச் சாக்கடைத் திட்டப் பணி நாகர்கோவில் கடற்கரை சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம்
- குமரியில் சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு
- வாவுபலி பொருள்காட்சி நிறைவு: குழித்துறை நகராட்சிக்கு ரூ. 70 லட்சம் வருவாய்
- என்.ஐ. கல்லூரியில் நாளை பட்டமளிப்பு
- மாவட்டத்தில் மேலும் 8 இடங்களில் வை-பை வசதி: பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர்
- இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம்
- திற்பரப்பு அருவியில் பயணிகள் உற்சாக குளியல்
- உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறை: மேல்புறம் ஒன்றியத்தில் இயந்திர வாக்குப்பதிவுக்கு திட்டம்
- தேசிய குடல் புழு நீக்க தினம்: குமரியில் 4.9 லட்சம் குழந்தைகளுக்கு "அல்பண்டோசால்' மாத்திரைகள்
- வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குழந்தைகள் பாரம்பரிய சுற்றுப்பயணம்
- ஆடித் திருவிழா: ராமேசுவரத்தில் சுவாமி, அம்மன் ஏகசிம்மாசனத்தில் வீதியுலா
- இலங்கை கடற்படை தொடர் அச்சுறுத்தல்: கச்சத்தீவுக்கு செல்ல மீனவர்கள் தயக்கம்: படகுகள் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்தது
- தாழ்வாகச் செல்லும் உயரழுத்த மின் கம்பிகள்: 5 ஆண்டுகளாக கண்டுகொள்ளாத அதிகாரிகள்: திருவாடானை ஒன்றியக்குழு கூட்டத்தில் உறுப்பினர்கள் புகார்
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 994 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
- ஆப்பனூரில் ரூ.1.15 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல்
- கமுதியில் வட்டார அளவிலான மகளிர் விளையாட்டு போட்டிகள்
- மண்டபம் அருகே பெட்டிக்கடைக்காரர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு
- ராமநாதபுரம் மாவட்டத்தில் 994 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்
- திருப்பாலைக்குடி கடற்கரையில் 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: மீனவர் கைது
- ஆக. 13இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீர் கூட்டம்
- மீன் பிடி நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் பொருள்கள் சேதம்
- அழகப்பா பல்கலை.யில் குரூப் -4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி
- ராமநாதபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை
- ஆக.19இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம்
- செயல் அலுவலர் இல்லாத மானாமதுரை பேரூராட்சி: வளர்ச்சிப் பணிகள் பாதிப்பு: ஆட்சியரிடம் உறுப்பினர்கள் புகார்
- தாமிரவருணி கூட்டுக்குடிநீர்த் திட்ட விளக்கக் கூட்டம்
- நியாய விலை கடையில் பொருள்கள் திருட்டு
- சரக்கு வாகனம் மீது வேன் மோதியதில் 3 பேர் பலத்த காயம்
- காட்டழகர் கோயில் பாதையை சீரமைக்க கோரிக்கை
- தனியார் சிப்ஸ் ஆலையை அகற்றக் கோரி நகராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை
- அறிவியல் அடிப்படையில் பட்டாசு தயாரித்தால் விபத்தை குறைக்கலாம்: பட்டாசு பாதுகாப்பு பயிற்சி மைய இணை இயக்குநர் தகவல்
- ஒரே நாளில் இரண்டு அரசுத் தேர்வுகள் தட்டெழுத்துத் தேர்வை வேறு தேதிக்கு மாற்றக் கோரிக்கை
- அருப்புக்கோட்டை அருகே வீட்டின் சுவரில் துளையிட்டு 7 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் திருட்டு
- சமூக பாதுகாப்புத் துறையில் காலிப் பணியிடங்களுக்கு ஆக.19 வரை விண்ணப்பிக்கலாம்
- 4.91 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்கல் மாத்திரைகள் வழங்கல்: மாவட்ட ஆட்சியர் தகவல்
- சிலை திருட்டு வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் தீனதயாளன் ஆஜர்
- சிவகாசி அரசு கல்லூரியில் ஹிரோஷிமா நாகசாகி தினம்
- கல்லூரியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம்
- ராஜபாளையம் நகர்மன்றக் கூட்டம்
- ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம்
- வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மீண்டும் இலவச தொழில் பயிற்சி வழங்க கோரிக்கை
- இருக்கன்குடி கோயிலில் நிரம்பியுள்ள உண்டியலை திறந்து எண்ண கோரிக்கை
- மனிதக் கழிவுகள் அகற்றம்: விழிப்புணர்வுக் கூட்டம்
- வழக்குரைஞர்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன்
- தேனி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட குறைதீர் முகாம்
- கள்ளக்காதலுக்கு இடையூறு: சிறுவன் அடித்துக் கொலை- தாய் கைது
- பெண் எரித்துக் கொலை: இளைஞர் கைது
- உரம் விலை குறைப்பு
- தேக்குமரக் கட்டைகள் கடத்தியவர் கைது
- பாலியல் வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு
- உத்தமபாளையத்தில் வீடு, கடைகளில் தொடர் திருட்டு
- வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு
- ஒட்டன்சத்திரத்தில் ஆகஸ்ட் 12 மின்தடை
- குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி தலைமறைவான கஞ்சா வியாபாரி கைது
- தேனி ஆர்.சி. தேவாலயத்தில் கருப்பு நாள் அனுசரிப்பு
- கடமலைக்குண்டில் அனுமதி பெறாத குழாய் இணைப்புகள் துண்டிப்பு: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை
- மாநில தொழில் முறை போட்டி: திண்டுக்கல் ஊர்க்காவல் படை அணி முதலிடம்
- தேவாரத்தில் ஆகஸ்ட் 11 மின்தடை
- போடியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
- தூய்மை பள்ளி விருதுக்கான விண்ணப்பத்தில் தமிழகம் முன்னிலை: கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த கூடுதல் நிதி கிடைக்க வாய்ப்பு
- பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி
- தங்கம் பவுனுக்கு ரூ.272 அதிகரிப்பு
| இலங்கை கடற்படை தொடர் அச்சுறுத்தல்: கச்சத்தீவுக்குச் செல்ல மீனவர்கள் தயக்கம் Posted: 10 Aug 2016 01:21 PM PDT கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால் ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் படகுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. |
| சசிகலா புஷ்பா எம்.பி., குடும்பத்தினர் மீது 6 பிரிவுகளில் வழக்கு Posted: 10 Aug 2016 01:21 PM PDT மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா, குடும்பத்தினர் மீது 6 பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர். |
| கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணுஉலைகள் அமைக்க விரைவில் ஒப்பந்தம்: வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர் Posted: 10 Aug 2016 01:20 PM PDT கூடங்குளத்தில் 5, 6-ஆவது அணு உலைகள் அமைப்பதற்கான ஒப்பந்தம் விரைவில் கையெழுத்தாகும் என்றார் அதன் வளாக இயக்குநர் ஆர்.எஸ். சுந்தர். |
| ராஜஸ்தானில் நவம்பர் 9-இல் விவசாயிகள் மாநாடு Posted: 10 Aug 2016 01:20 PM PDT ராஜஸ்தான் மாநிலத்தில் சர்வதேச வேளாண் விவசாயிகள் தொழில்நுட்ப மாநாடு நவம்பர் 9-ஆம் தேதி முதல் 11-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. |
| 4 மீனவர்கள், 103 படகுகளை இலங்கை விடுவிக்க உடனடி நடவடிக்கை தேவை: பிரதமருக்கு முதல்வர் கடிதம் Posted: 10 Aug 2016 01:19 PM PDT இலங்கை கடற்படை சிறை பிடித்துள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தைச் சேர்ந்த நான்கு மீனவர்கள், 103 மீன்பிடி படகுகளை விடுவிக்க பிரதமர் தலையிட்டு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் ஜெயலலிதா வலியுறுத்தியுள்ளார். |
| சசிகலா புஷ்பா முன்ஜாமீன் மனு: தில்லி உயர் நீதிமன்ற வரம்பு குறித்து தமிழக அரசு கேள்வி Posted: 10 Aug 2016 01:19 PM PDT அதிமுகவில் இருந்து அண்மையில் நீக்கப்பட்ட மாநிலங்களவை உறுப்பினர் சசிகலா புஷ்பா தாக்கல் செய்துள்ள முன்ஜாமீன் மனுவை விசாரிப்பதற்கான வரம்பு தில்லி உயர் நீதிமன்றத்துக்கு உள்ளதா? என்று தமிழக அரசு புதன்கிழமை கேள்வி எழுப்பியது. இதைத் தொடர்ந்து, இந்த விவகாரம் குறித்து வியாழக்கிழமை (ஆகஸ்ட் 11) விசாரணை நடைபெறும் என்று தில்லி உயர் நீதிமன்றம் கூறியது. |
| Posted: 10 Aug 2016 01:18 PM PDT |
| 4.39 லட்சம் குழந்தைகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரை விநியோகம் Posted: 10 Aug 2016 01:17 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் 4.39 லட்சம் குழந்தைகளுக்கு புதன்கிழமை குடற்புழு நீக்க மாத்திரை விநியோகிக்கப்பட்டது. |
| ஆடி சுவாதி: திருச்செந்தூரில் "வெள்ளை யானை' வீதியுலா Posted: 10 Aug 2016 01:17 PM PDT திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆடி சுவாதியை முன்னிட்டு வெள்ளை யானை வீதியுலா நடைபெற்றது. |
| ஆக.15இல் கோவில்பட்டியில் மாரத்தான் ஓட்டப்பந்தயம் Posted: 10 Aug 2016 01:16 PM PDT சுதந்திர தின விழாவை முன்னிட்டு, பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கான மாரத்தான் ஓட்டப்பந்தயம் கோவில்பட்டியில் திங்கள்கிழமை (ஆக. 15) நடைபெறுகிறது. |
| காயல்பட்டினத்தில் ஆலோசனைக் கூட்டம் Posted: 10 Aug 2016 01:16 PM PDT காயல்பட்டினம் அரசு மருத்துவமனை நோயாளிகள் நலச் சங்க ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. |
| கல்லூரியில் மெடிக்கல் எக்ஸ்போ கண்காட்சி Posted: 10 Aug 2016 01:15 PM PDT கோவில்பட்டி எஸ்.எஸ்.துரைசாமி நாடார் மாரியம்மாள் கல்லூரியில் அப்போலோ பார்மஸி சார்பில் மெடிக்கல் எக்ஸ்போ கண்காட்சி இரு நாள்கள் நடைபெற்றது. |
| திருச்செந்தூர் அரசு ஐடிஐ-யில் வெல்டிங் பயிற்சி 22-இல் தொடக்கம் Posted: 10 Aug 2016 01:14 PM PDT திருச்செந்தூர் அரசு ஐடிஐ-யில் ஆகஸ்ட் 22 ஆம் தேதி தொடங்க உள்ள பற்றவைப்பாளர் (வெல்டர்) பணிக்கான பயிற்சி பெற விரும்புவோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஸ்ரீ கிருஷ்ணன் கோயிலுக்கு பால்குடம் எடுத்து பக்தர்கள் வழிபாடு Posted: 10 Aug 2016 01:14 PM PDT ஆடி சுவாதியை முன்னிட்டு, திருச்செந்தூர் அருள்மிகு ருக்மணி சத்ய பாமா சமேத கல்யாண கிருஷ்ணன் கோயிலுக்கு பக்தர்கள் பால்குடம் எடுத்து வழிபட்டனர். |
| தூத்துக்குடியில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ ஆலோசனை முகாம் Posted: 10 Aug 2016 01:14 PM PDT தூத்துக்குடியில் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் மாற்றுத் திறனாளிகளுக்கான மருத்துவ முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| "வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்கலாம்' Posted: 10 Aug 2016 01:13 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த மாற்றுத் திறனாளிகள் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| ஆக. 15இல் மதுக்கடைகளை மூட உத்தரவு Posted: 10 Aug 2016 01:13 PM PDT சுதந்திரதினத்தையொட்டி ஆக.15 ஆம் தேதி அனைத்து மதுக்கடைகளும் மூடப்பட்டிருக்க வேண்டும் என ஆட்சியர் ம. ரவிகுமார் உத்தரவிட்டுள்ளார். |
| திருச்செந்தூர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா Posted: 10 Aug 2016 01:12 PM PDT திருச்செந்தூர் ஸ்ரீ சந்தன மாரியம்மன் கோயில் கொடை விழா நடைபெற்றது. |
| 8 கிராமங்களை புறக்கணித்துச் செல்லும் உடன்குடி-திருநெல்வேலி அரசுப் பேருந்து: இந்து முன்னணி புகார் Posted: 10 Aug 2016 01:12 PM PDT உடன்குடி-திருநெல்வேலி வழித்தடத்தில் இயங்கும் தடம் எண் 137ஜி அரசுப் பேருந்து பரமன்குறிச்சி-மெஞ்ஞானபுரம் இடையிலான 8 கிராமங்களை புறக்கணித்துச் செல்வதாக இந்து முன்னணி புகார் தெரிவித்துள்ளது. |
| மாற்றுத் திறனாளிகள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Aug 2016 01:11 PM PDT பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விளாத்திகுளம் வட்டாட்சியர் அலுவலகம் முன் மாற்றுத் திறனாளிகள் புதன்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| கராத்தே: காமராஜ் கல்லூரி மாணவர் சிறப்பிடம் Posted: 10 Aug 2016 01:11 PM PDT சித்து ரையூ நிப்பான் கராத்தே தோகய் இந்தியா அமைப்பு நடத்திய மாநில அளவிலான கராத்தே போட்டியில், தூத்துக்குடி காமராஜ் கல்லூரி மாணவர் அருண்குமார் (பி.காம் முதலாமாண்டு) சிறப்பிடம் பெற்றார். |
| Posted: 10 Aug 2016 01:10 PM PDT தூய்மை பாரத இயக்கத் திட்டத்தின் கீழ், கயத்தாறு ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட காளாம்பட்டியில் சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. |
| கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் முற்றுகை Posted: 10 Aug 2016 01:10 PM PDT கோவில்பட்டியையடுத்த ஆவல்நத்தம் ஊராட்சி, நாரணாபுரம் பகுதி மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவில்பட்டி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| ஸ்ரீவைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தியாகிகளுக்கு நினைவுத்தூண்: காங்கிரஸ் வலியுறுத்தல் Posted: 10 Aug 2016 01:10 PM PDT ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த சுதந்திர போராட்ட தியாகிகளுக்கு, வட்டாட்சியர் அலுவலகத்தில் நினைவுத்தூண் அமைக்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. |
| தூத்துக்குடி புறநகர் பகுதியில் ஆகஸ்ட் 12 மின்தடை Posted: 10 Aug 2016 01:09 PM PDT தூத்துக்குடி புறநகர் பகுதிகளில் வெள்ளிக்கிழமை (ஆக.12) மின்விநியோகம் இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. |
| கோவில்பட்டியில் திமுக செயல்வீரர்கள் கூட்டம் Posted: 10 Aug 2016 01:08 PM PDT கோவில்பட்டியில் நகர திமுக மற்றும் மேற்கு ஒன்றிய திமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. |
| Posted: 10 Aug 2016 01:08 PM PDT தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு வழங்கிய இலவச நிலங்களை விற்றவர்களின் பட்டாக்களை ரத்து செய்துள்ளதாக, ஆட்சியர் தெரிவித்ததை அடுத்து, மனுவை முடித்துவைத்து சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை திங்கள்கிழமை உத்தரவிட்டது. |
| மனுநீதி நாள் முகாம்: ரூ.23 லட்சம் நலத்திட்ட உதவிகள் அளிப்பு Posted: 10 Aug 2016 01:08 PM PDT எட்டயபுரம் வட்டம் டி. சண்முகபுரத்தில் மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு: பெயர் பதிவுக்கு ஆக. 16 கடைசி Posted: 10 Aug 2016 01:07 PM PDT தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாட்டில் பங்கேற்கும் குழந்தைகள் இம்மாதம் 16ஆம் தேதிக்குள் பெயர் பதிவு செய்துகொள்ளலாம் என தக்கலையில் நடைபெற்ற வழிகாட்டி ஆசிரியர்களுக்கான பயிற்சி முகாமில் தெரிவிக்கப்பட்டது. |
| நாகர்கோவிலில் 14இல் நூல் அறிமுக விழா Posted: 10 Aug 2016 01:07 PM PDT அறிவுசால் ஆன்மிகக் கல்விக் கழகம் சார்பில் ஞாயிற்றுக்கிழமை (ஆக. 14) காஷ்மீர் இந்தியாவுக்கே என்னும் புத்தக அறிமுக விழா நடைபெறுகிறது. |
| தமிழ் மாநில காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டம் Posted: 10 Aug 2016 01:06 PM PDT குமரி மேற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் மார்த்தாண்டம் அருகேயுள்ள வெட்டுவெந்நியில் நடைபெற்றது. |
| முகநூலில் அவதூறு கருத்து: 5 பேர் கைது Posted: 10 Aug 2016 01:05 PM PDT முகநூலில் அவதூறாக கருத்துப் பதிவு செய்ததாக, 5 இளைஞர்கள் புதன்கிழமை கைது செய்யப்பட்டனர். அவர்களை விடுவிக்கக் கோரி உறவினர்கள் மார்த்தாண்டம் காவல் நிலையத்தில் திரண்டதால் பரபரப்பு நிலவியது. |
| திற்பரப்பில் ரூ. 39 கோடியில் மேம்பாட்டுப் பணி: அதிகாரி ஆய்வு Posted: 10 Aug 2016 01:05 PM PDT திற்பரப்பு அருவியில் ரூ. 39 கோடியில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொள்வதற்காக பேரூராட்சிகளின் இயக்குநர் மகரபூஷணம் புதன்கிழமை ஆய்வு செய்தார். |
| திருவண்ணாமலையில் மாநில மாநாடு நாகர்கோவிலில் இருந்து மின் ஊழியர்கள் பயணம் Posted: 10 Aug 2016 01:04 PM PDT திருவண்ணாமலையில் நடைபெற உள்ள மின்சார ஊழியர் மாநில மாநாட்டுக்கு நாகர்கோவிலில் இருந்து ஊழியர் சங்கத்தினர் புதன்கிழமை புறப்பட்டுச் சென்றனர். |
| அரசு விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்ப்பு நாளை கடைசி Posted: 10 Aug 2016 01:04 PM PDT தமிழக அரசின் விளையாட்டு விடுதி, சிறப்பு விளையாட்டு விடுதிகளில் சேர மாணவ, மாணவிகள் தேர்வு வெள்ளிக்கிழமை (ஆக. 12) நடைபெறவுள்ளது. |
| சந்தையடியில் மனுநீதி நாள் முகாம்: 49 பயனாளிகளுக்கு நல உதவிகள் Posted: 10 Aug 2016 01:03 PM PDT அகஸ்தீசுவரம் ஒன்றியம், சந்தையடியில் இரண்டாம் கட்ட மனுநீதி நாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. |
| "முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்' Posted: 10 Aug 2016 01:03 PM PDT முற்பட்ட வகுப்பினருக்கும் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தமிழ்நாடு சைவ வேளாளர் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. |
| தரமான சாலைப் பணி: ஆட்சியர் அறிவுறுத்தல் Posted: 10 Aug 2016 01:02 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில் சாலைப் பணிகளை தரமாக, விரைந்து நிறைவேற்ற வேண்டும் என பொறியாளர்களுக்கு ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா. சவாண் அறிவுறுத்தினார். |
| புதைச் சாக்கடைத் திட்டப் பணி நாகர்கோவில் கடற்கரை சாலையில் இன்றுமுதல் போக்குவரத்து மாற்றம் Posted: 10 Aug 2016 01:02 PM PDT புதைச் சாக்கடைத் திட்டப் பணிகளுக்காக நாகர்கோவில் கடற்கரைச் சாலையில் வியாழக்கிழமை (ஆக.11) முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. |
| குமரியில் சுற்றுலாத் துறை அதிகாரிகள் ஆய்வு Posted: 10 Aug 2016 01:01 PM PDT கன்னியாகுமரியில் சுற்றுலா வளர்ச்சித் திட்டப் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக தமிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக அதிகாரிகள் குழுவினர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். |
| வாவுபலி பொருள்காட்சி நிறைவு: குழித்துறை நகராட்சிக்கு ரூ. 70 லட்சம் வருவாய் Posted: 10 Aug 2016 01:01 PM PDT குழித்துறையில் 20 நாள்களாக நடைபெற்று வந்த வாவுபலி பொருள்காட்சி செவ்வாய்க்கிழமை நிறைவுற்றது. இப்பொருள்காட்சி மூலம் குழித்துறை நகராட்சிக்கு ரூ.70 லட்சம் வருமானம் கிடைத்துள்ளது. |
| என்.ஐ. கல்லூரியில் நாளை பட்டமளிப்பு Posted: 10 Aug 2016 01:00 PM PDT குமாரகோவில் நூருல் இஸ்லாம் கலை- அறிவியல் கல்லூரியின் 10ஆவது பட்டமளிப்பு விழா வெள்ளிக்கிழமை (ஆக. 12) காலை நடைபெறுகிறது. |
| மாவட்டத்தில் மேலும் 8 இடங்களில் வை-பை வசதி: பி.எஸ்.என்.எல். பொதுமேலாளர் Posted: 10 Aug 2016 01:00 PM PDT கன்னியாகுமரி மாவட்டத்தில், பிஎஸ்என்எல் சார்பில் மேலும் 8 இடங்களில் வை-பை வசதி ஏற்படுத்தப்படும் என்றார் அதன் நாகர்கோவில் தொலைத்தொடர்பு மாவட்ட பொதுமேலாளர் கே. சாஜூ ஜார்ஜ். |
| இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பொதுக்குழுக் கூட்டம் Posted: 10 Aug 2016 12:59 PM PDT இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் பொதுக்குழுக் கூட்டம் குளச்சலில் நடைபெற்றது. |
| திற்பரப்பு அருவியில் பயணிகள் உற்சாக குளியல் Posted: 10 Aug 2016 12:58 PM PDT குமரி மாவட்டத்தில் வெயில் கடுமையாக நிலவி வரும் நிலையில், திற்பரப்பு அருவியில் தண்ணீர் மிதமாக கொட்டுவதால் சுற்றுலாப் பயணிகள் உற்சாகமாக குளித்து மகிழ்ந்தனர். |
| உள்ளாட்சித் தேர்தலில் முதல்முறை: மேல்புறம் ஒன்றியத்தில் இயந்திர வாக்குப்பதிவுக்கு திட்டம் Posted: 10 Aug 2016 12:58 PM PDT தமிழகத்தில் அக்டோபர் மாதம் நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில், கிராம ஊராட்சிகளை உள்ளடக்கிய ஒன்றியங்களில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை (இ.வி.எஸ்) பயன்படுத்தும் திட்டத்துக்கு, மேல்புறம் ஊராட்சி ஒன்றியம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. |
| தேசிய குடல் புழு நீக்க தினம்: குமரியில் 4.9 லட்சம் குழந்தைகளுக்கு "அல்பண்டோசால்' மாத்திரைகள் Posted: 10 Aug 2016 12:57 PM PDT தேசிய குடல் புழு நீக்கத் தினத்தையொட்டி, குமரி மாவட்டத்தில் 4.9 லட்சம் குழந்தைகளுக்கு "அல்பண்டோசால்' மாத்திரைகள் வழங்கப்பட உள்ளதாக ஆட்சியர் சஜ்ஜன் சிங் ரா.சவாண் தெரிவித்தார். |
| வெளிநாடுகளில் வசிக்கும் நகரத்தார் குழந்தைகள் பாரம்பரிய சுற்றுப்பயணம் Posted: 10 Aug 2016 12:56 PM PDT துபை, லண்டனில் வசித்துவரும் நகரத்தார் குழந்தைகள் செட்டிநாடு பாரம்பரியத்தை அறிந்துகொள்ள சுற்றுப்பயணம் செய்துவருகின்றனர். |
| ஆடித் திருவிழா: ராமேசுவரத்தில் சுவாமி, அம்மன் ஏகசிம்மாசனத்தில் வீதியுலா Posted: 10 Aug 2016 12:56 PM PDT ராமேசுவரம் ராமநாதசுவாமி திருக்கோயில் ஆடித்திருவிழாவில் புதன்கிழமை சுவாமி, அம்மன் ஏக சிம்மாசனத்தில் நான்கு ரதவீதிகளில் உலா வந்தனர். |
| Posted: 10 Aug 2016 12:55 PM PDT கச்சத்தீவு பகுதியில் இலங்கை கடற்படையினர் தொடர்ந்து அச்சுறுத்தி வருவதால் ராமேசுவரம் பகுதியிலிருந்து மீன்பிடிக்கச் செல்லும் படகுகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துள்ளது. |
| Posted: 10 Aug 2016 12:55 PM PDT திருவாடானை பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக தாழ்வான உயரழுத்த மின்கம்பிகளை சீரமைக்கக் கோரியும் அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என ஒன்றியக்குழுக்கூட்டத்தில் உறுப்பினர்கள் தெரிவித்தனர். |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் 994 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் Posted: 10 Aug 2016 12:54 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் 994 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். |
| ஆப்பனூரில் ரூ.1.15 கோடிக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கல் Posted: 10 Aug 2016 12:53 PM PDT ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் ஆப்பனூரில் புதன்கிழமை மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடைபெற்றது. இதில் ரூ.1.15 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. |
| கமுதியில் வட்டார அளவிலான மகளிர் விளையாட்டு போட்டிகள் Posted: 10 Aug 2016 12:49 PM PDT கமுதி அருகே 14,17,19 வயதிற்குள்பட்ட மகளிர் கோகோ, கபடி மற்றும் பூப்பந்து போட்டிகள் புதன்கிழமை நடைபெற்றன. |
| மண்டபம் அருகே பெட்டிக்கடைக்காரர் வீட்டில் 10 பவுன் நகைகள் திருட்டு Posted: 10 Aug 2016 12:48 PM PDT மண்டபம் அருகே செவ்வாய்க்கிழமை இரவு பெட்டிகடைக்காரர் வீட்டில் 10 பவுன் தங்க நகைகள் உள்ளிட்ட ரூ. 2 லட்சம் மதிப்பிலான பொருள்கள் திருடுபோயின. |
| ராமநாதபுரம் மாவட்டத்தில் 994 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் Posted: 10 Aug 2016 12:47 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் 994 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தும் பணி நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மணிவண்ணன் தெரிவித்துள்ளார். |
| திருப்பாலைக்குடி கடற்கரையில் 25 கிலோ கடல் அட்டைகள் பறிமுதல்: மீனவர் கைது Posted: 10 Aug 2016 12:47 PM PDT திருப்பாலைக்குடி கடற்கரையில் 25 கிலோ கடல் அட்டைகளை வைத்திருந்த மீனவரை தேவிபட்டிணம் கடலோரக் காவல்குழுமப் போலீஸார் புதன்கிழமை கைது செய்துள்ளனர். |
| ஆக. 13இல் ராமநாதபுரம் மாவட்டத்தில் பொது விநியோகத் திட்ட குறை தீர் கூட்டம் Posted: 10 Aug 2016 12:46 PM PDT ராமநாதபுரம் மாவட்டத்தில் ஒவ்வொரு வட்டாரத்திலும் ஆக. 13 ஆம் தேதி பொது விநியோகத் திட்ட குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது. |
| மீன் பிடி நிறுவனத்தில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் பொருள்கள் சேதம் Posted: 10 Aug 2016 12:46 PM PDT ராமேசுவரம் துறைமுகப்பகுதியில் மீன் பிடி நிறுவனத்தில் செவ்வாய்க்கிழமை இரவு தீ விபத்து ஏற்பட்டது. இதில், மீன் பிடி சாதனங்கள் உள்பட ரூ.2 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசமாகின. |
| அழகப்பா பல்கலை.யில் குரூப் -4 தேர்வுக்கான இலவசப் பயிற்சி Posted: 10 Aug 2016 12:46 PM PDT காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் டி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 தேர்வுக்கான இலவசப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளன. |
| ராமநாதபுரம் ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை Posted: 10 Aug 2016 12:44 PM PDT ராமநாதபுரம் வடக்குப்புதுத்தெருவில் உள்ள அருள்மிகு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடிஉற்சவத்தை முன்னிட்டு செவ்வாய்க்கிழமை திருவிளக்கு பூஜை நடைபெற்றது. |
| ஆக.19இல் விவசாயிகள் குறைதீர் கூட்டம் Posted: 10 Aug 2016 12:44 PM PDT ராமநாதபுரத்தில் விவசாயிகள் குறைதீர் கூட்டம் 19 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. |
| Posted: 10 Aug 2016 12:43 PM PDT மானாமதுரை பேரூராட்சி செயல் அலுவலர் நியமிக்கப்படாமல் இருப்பதால் வளர்ச்சித் திட்டப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியரிடம் உறுப்பினர்கள் புகார் அளித்தனர். |
| தாமிரவருணி கூட்டுக்குடிநீர்த் திட்ட விளக்கக் கூட்டம் Posted: 10 Aug 2016 12:43 PM PDT ராஜபாளையத்தில் தாமிரவருணி கூட்டுக் குடிநீர்த் திட்டம் குறித்த விளக்கக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. |
| நியாய விலை கடையில் பொருள்கள் திருட்டு Posted: 10 Aug 2016 12:43 PM PDT விருதுநகர் அருகே மணிப்பாறைபட்டியில் உள்ள நியாய விலைக் கடையில் ரூ.7 ஆயிரம் மதிப்புள்ள பொருள்களை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடி வருகின்றனர். |
| சரக்கு வாகனம் மீது வேன் மோதியதில் 3 பேர் பலத்த காயம் Posted: 10 Aug 2016 12:42 PM PDT அருப்புக்கோட்டை அருகே புதன்கிழமை இரவு சரக்கு வாகனம் மீது வேன் மோதியதில் 3 பேர் பலத்த காயமடைந்தனர். |
| காட்டழகர் கோயில் பாதையை சீரமைக்க கோரிக்கை Posted: 10 Aug 2016 12:42 PM PDT ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே செண்பகத் தோப்பு வனப்பகுதியில் உள்ள காட்டழகர் கோயிலுக்கு செல்லும் பாதையை சீரமைக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| தனியார் சிப்ஸ் ஆலையை அகற்றக் கோரி நகராட்சி அலுவலகத்தை பொது மக்கள் முற்றுகை Posted: 10 Aug 2016 12:41 PM PDT விருதுநகரில் தனியார் சிப்ஸ் ஆலையை அகற்றக் கோரி பொதுமக்கள் நகராட்சி அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| Posted: 10 Aug 2016 12:39 PM PDT பட்டாசு ஆலைகளில் அறிவியல் அடிப்படையில் பட்டாசு தயாரித்தால் விபத்தை குறைக்கலாம் என தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறையில் உள்ள பட்டாசு பாதுகாப்பு பயிற்சி மையத்தின் இணை இயக்குநர் கே.பாலகிருஷ்ணன் கூறினார். |
| ஒரே நாளில் இரண்டு அரசுத் தேர்வுகள் தட்டெழுத்துத் தேர்வை வேறு தேதிக்கு மாற்றக் கோரிக்கை Posted: 10 Aug 2016 12:39 PM PDT ஒரே நாளில் இரண்டு அரசுத் தேர்வுகள் வருவாதல் ஆக. 27, 28ஆம் தேதிகளில் தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் நடத்தும் தட்டெழுத்துத் தேர்வுகளை வேறு தேதிக்கு மாற்றம் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு தட்டெழுத்து கணினி பள்ளிகள் சங்கத்தின் மாநில தலைவர் சோமசங்கர் தமிழக முதல்வருக்கு புதன்கிழமை மனு அனுப்பியுள்ளனர். |
| அருப்புக்கோட்டை அருகே வீட்டின் சுவரில் துளையிட்டு 7 பவுன் நகை, ரூ. 60 ஆயிரம் திருட்டு Posted: 10 Aug 2016 12:38 PM PDT அருப்புக்கோட்டை அருகே புதன்கிழமை வீட்டின் சுவரில் துளையிட்டு 7 பவுன் நகை, ரூ. 60 ஆயிரத்தை திருடிச் சென்றவர்களை போலீஸார் தேடிவருகின்றனர். |
| சமூக பாதுகாப்புத் துறையில் காலிப் பணியிடங்களுக்கு ஆக.19 வரை விண்ணப்பிக்கலாம் Posted: 10 Aug 2016 12:38 PM PDT சமூக பாதுகாப்பு துறையின் கீழ் உள்ள கல்வி நிறுவனங்களில் உள்ள பணியிடங்களுக்கு ஆக.19 வரை விண்ணப்பிக்கலாம் என மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் மதியழகன் தெரிவித்தார். |
| 4.91 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்கல் மாத்திரைகள் வழங்கல்: மாவட்ட ஆட்சியர் தகவல் Posted: 10 Aug 2016 12:37 PM PDT விருதுநகர் மாவட்டத்தில் 4.91 லட்சம் மாணவ, மாணவிகளுக்கு குடல்புழு நீக்க மாத்திரைகள் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அ.சிவஞானம் புதன்கிழமை தெரிவித்தார். |
| சிலை திருட்டு வழக்கு: ஸ்ரீவிலி. நீதிமன்றத்தில் தீனதயாளன் ஆஜர் Posted: 10 Aug 2016 12:37 PM PDT திருநெல்வேலி மாவட்டத்தில் சிலைகள் திருடு போன வழக்கு விசாரணைக்காக ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் தீனதயாளன் புதன்கிழமை ஆஜர்படுத்தப்பட்டார். |
| சிவகாசி அரசு கல்லூரியில் ஹிரோஷிமா நாகசாகி தினம் Posted: 10 Aug 2016 12:37 PM PDT சிவகாசி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் செவ்வாய்க்கிழமை ஹிரோஷிமா நாகசாகி தினத்தை முன்னிட்டு, யுத்த எதிர்ப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. |
| கல்லூரியில் போட்டி தேர்வுக்கான பயிற்சி மையம் Posted: 10 Aug 2016 12:36 PM PDT சிவகாசி அய்யநாடார் ஜானகி அம்மாள் கல்லூரியில் புதன்கிழமை போட்டித் தேர்வுக்கான பயிற்சி மையத் தொடக்க விழா நடைபெற்றது. |
| Posted: 10 Aug 2016 12:36 PM PDT ராஜபாளையம் நகர்மன்றக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு நகர்மன்றத் தலைவர் பி.எஸ்.தனலட்சுமி செல்வசுப்பிரமணியராஜா தலைமை வகித்தார். பொறியாளர் சேர்மக்கனி, உதவிப் பொறியாளர் ராமச்சந்திரன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். இதில், நகர்மன்ற செலவினங்கள், புதிய வேலைப்பட்டியல் குறித்து 31 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. |
| ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டம் Posted: 10 Aug 2016 12:35 PM PDT ராஜபாளையம் அரசு மகப்பேறு மருத்துவமனை அருகே அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் ஆன்லைன் வர்த்தகத்தை தடை செய்யக்கோரி செவ்வாய்க்கிழமை இரவு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. |
| வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கு மீண்டும் இலவச தொழில் பயிற்சி வழங்க கோரிக்கை Posted: 10 Aug 2016 12:35 PM PDT கராட்சிப் பகுதிகளில் வறுமைக் கோட்டிற்கு கீழ் வாழும் பொது மக்களுக்கு மீண்டும் இலவச தொழில் பயிற்சி வழங்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| இருக்கன்குடி கோயிலில் நிரம்பியுள்ள உண்டியலை திறந்து எண்ண கோரிக்கை Posted: 10 Aug 2016 12:34 PM PDT இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் நிரம்பியுள்ள உண்டியல்களை திறந்து எண்ண வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். |
| மனிதக் கழிவுகள் அகற்றம்: விழிப்புணர்வுக் கூட்டம் Posted: 10 Aug 2016 12:33 PM PDT போடி நகராட்சியில் மனிதக் கழிவுகளை அகற்றுவது தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. |
| வழக்குரைஞர்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட வேண்டும்: ஜி.ராமகிருஷ்ணன் Posted: 10 Aug 2016 12:31 PM PDT வழக்குரைஞர்கள் பிரச்னையில் மத்திய, மாநில அரசுகள் தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலர் ஜி.ராமகிருஷ்ணன் கூறினார். |
| தேனி மாவட்டத்தில் நாளை அம்மா திட்ட குறைதீர் முகாம் Posted: 10 Aug 2016 12:31 PM PDT தேனி மாவட்டத்தில் வருவாய்த் துறை சார்பில் வெள்ளிக்கிழமை அம்மா திட்டத்தின் கீழ் 5 இடங்களில் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. |
| கள்ளக்காதலுக்கு இடையூறு: சிறுவன் அடித்துக் கொலை- தாய் கைது Posted: 10 Aug 2016 12:31 PM PDT திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே கள்ளக் காதலுக்கு இடையூறாக இருந்த மகனை அடித்துக் கொலை செய்த தாய் புதன்கிழமை கைது செய்யப்பட்டார். |
| பெண் எரித்துக் கொலை: இளைஞர் கைது Posted: 10 Aug 2016 12:30 PM PDT தேனி மாவட்டம் கம்பம் அருகே இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக இளைஞரை புதன்கிழமை போலீஸார் கைது செய்தனர். |
| Posted: 10 Aug 2016 12:30 PM PDT அரசு உரம் விலையை குறைத்து அறிவித்துள்ளதால், உரம் விற்பனைக் கடைகளில் திருத்தப்பட்ட விலைப் பட்டியலை அறிவிப்புப் பலகையில் வைக்க வேண்டும் என்று, மாவட்ட விவசாயத் துறை உத்தரவிட்டுள்ளது. |
| தேக்குமரக் கட்டைகள் கடத்தியவர் கைது Posted: 10 Aug 2016 12:29 PM PDT வருசநாடு அருகே தும்மகுண்டில் வனத்துறையினர் செவ்வாய்க்கிழமை காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர். |
| பாலியல் வழக்கில் சிக்கியவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு Posted: 10 Aug 2016 12:29 PM PDT கம்பம் அருகே சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் சிக்கியவரை, குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க புதன்கிழமை மாவட்ட ஆட்சியர் ந.வெங்கடாசலம் உத்தரவிட்டார். |
| உத்தமபாளையத்தில் வீடு, கடைகளில் தொடர் திருட்டு Posted: 10 Aug 2016 12:29 PM PDT உத்தமபாளையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு வீடுகள் மற்றும் கடையில் நகை, பணம் திருடப்பட்டன. |
| வீட்டின் பூட்டை உடைத்து நகை திருட்டு Posted: 10 Aug 2016 12:28 PM PDT தேனி அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகைகள் மற்றும் பணம் திருடு போனதாக புதன்கிழமை காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. |
| ஒட்டன்சத்திரத்தில் ஆகஸ்ட் 12 மின்தடை Posted: 10 Aug 2016 12:28 PM PDT ஒட்டன்சத்திரம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெறுவதால் வெள்ளிக்கிழமை ஒட்டன்சத்திரம், புது அத்திக்கோம்பை,விருப்பாச்சி, காவேரியம்மாபட்டி,தங்கச்சியம்மாபட்டி,புலியூர்நத்தம்,லெக்கையன்கோட்டை,காளாஞ்சிபட்டி,அரசப்பபிள்ளைபட்டி,காப்பிளியபட்டி,அம்பிளிக்கை உள்ளிட்ட கிராமங்களில் காலை 9 மணி முதல் பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று உதவி செயற்பொறியாளர் ஜே.விஜய் தெரிவித்துள்ளார். |
| குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதாகி தலைமறைவான கஞ்சா வியாபாரி கைது Posted: 10 Aug 2016 12:27 PM PDT உத்தமபாளையம் அருகே தலைமறைவாக இருந்த கஞ்சா வியாபாரியை தேனி போதைப் பொருள் தடுப்பு மற்றும் நுண்ணறிவுப் பிரிவு போலீஸார் புதன்கிழமை கைது செய்தனர். |
| தேனி ஆர்.சி. தேவாலயத்தில் கருப்பு நாள் அனுசரிப்பு Posted: 10 Aug 2016 12:26 PM PDT தேனி ஆர்.சி. தேவாலயத்தில், குடியரசுத் தலைவரின் பட்டியலினத்தார் ஆணையை எதிர்த்து கருப்புநாள் புதன்கிழமை அனுசரிக்கப்பட்டது. |
| கடமலைக்குண்டில் அனுமதி பெறாத குழாய் இணைப்புகள் துண்டிப்பு: அதிகாரிகளை பொதுமக்கள் முற்றுகை Posted: 10 Aug 2016 12:25 PM PDT கடமலைக்குண்டில் அனுமதி பெறாத குழாய் இணைப்புகளை துண்டித்ததைக் கண்டித்து பொதுமக்கள், அதிகாரிகளை புதன்கிழமை முற்றுகையிட்டனர். |
| மாநில தொழில் முறை போட்டி: திண்டுக்கல் ஊர்க்காவல் படை அணி முதலிடம் Posted: 10 Aug 2016 12:25 PM PDT கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான தொழில்முறை விளையாட்டு போட்டிகளில் திண்டுக்கல் ஊர்க்காவல்படை அணி தீத்தடுப்பு பணியில் முதலிடம் பிடித்தது. |
| Posted: 10 Aug 2016 12:22 PM PDT தேவாரம் துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை (ஆக. 11) மாதாந்திர பராமரிப்புப் பணி நடைபெறுகிறது. |
| போடியில் கல்லூரி பேராசிரியர்கள், அலுவலர்கள் ஆர்ப்பாட்டம் Posted: 10 Aug 2016 12:22 PM PDT போடியில் கல்லூரிப் பேராசிரியர்கள், அலுவலர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். |
| Posted: 10 Aug 2016 12:21 PM PDT தேசிய அளவில் வழங்கப்பட உள்ள தூய்மை பள்ளிக்கான விருதுக்கு, தமிழகத்தைச் சேர்ந்த 96 சதவீத அரசுப் பள்ளிகள் தற்போது வரை முழு விவரங்களையும் அளித்து முன்னிலை பெற்றுள்ளன. |
| பழனி பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி Posted: 10 Aug 2016 12:21 PM PDT பழனி அருள்மிகு பெரியநாயகியம்மன் கோயிலில் ஆடி லட்சார்ச்சனை வேள்வி புதன்கிழமை நடைபெற்றது. |
| தங்கம் பவுனுக்கு ரூ.272 அதிகரிப்பு Posted: 10 Aug 2016 12:17 PM PDT சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை புதன்கிழமை பவுனுக்கு ரூ.272 அதிகரித்து, ரூ.23,920-க்கு விற்பனையானது. |
| You are subscribed to email updates from Dinamani - முகப்பு - http://www.dinamani.com/. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |