Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


'துப்பறிவாளன்' அடுத்த மாதம் படப்பிடிப்பு

Posted:

மிஷ்கின் இயக்கத்தில் விஷால், ரகுல் ப்ரீதி சிங் மற்றும் பலர் நடிக்கும் 'துப்பறிவாளன்' படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் ஆரம்பமாக உள்ளது. விஷால் தற்போது நடித்து வரும் 'கத்திச்சண்டை' படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில நாட்களில் முடிவடைய உள்ளது. அதற்கடுத்து இடைவெளி இல்லாமல் மிஷ்கின் படத்தில் நடிக்க உள்ளார் விஷால். ரகுல் ...

பெண்களை மட்டமாக பேசியதற்காக வருத்தப்படும் பிருத்விராஜ்..!

Posted:

கடந்த நான்கு வருடங்களாக வெளியாகி வரும் பிருத்விராஜின் படங்களை கவனித்து பார்த்தால் அதில் பெண்களை திட்டுவது போன்றோ, அல்லது மோசமான வசனங்களால் இழிவுபடுத்துவது போன்றோ காட்சிகள் இடம்பெறவே இல்லை என்பதை கண்டுபிடிக்கலாம்... அதற்கு காரணமும் இருக்கிறது என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் மனம் திறந்துள்ளார் பிருத்விராஜ்.. தான் நடிகனாக மாறி, ...

தயாரிப்பாளருக்கு சாபம் விட்ட துல்கர் பட இயக்குனர்..!

Posted:

துல்கர் சல்மான் கதாநாயகனாக அறிமுகமானபின் அவரது நடிப்பில் வெளியான மூன்றாவது படம் தான் 'தீவ்ரம்'. டார்க் த்ரில்லர் வகையில் உருவாகி இருந்த இந்தப்படம் கமர்ஷியல் அம்சங்களுடன் இருந்தாலும் துல்கரின் முதல் இரண்டு படங்களைப்போல பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை.. அதேசமயம் தயாரிப்பாளர் வி.சி.இஸ்மாயிலுக்கு போட்ட முதலுக்கு நட்டம் இல்லை ...

ரோஷன் ஆண்ட்ரூஸ்-நிவின்பாலி இணையும் 'காயங்குளம் கொச்சுன்னி'..!

Posted:

எவ்வளவு பெரிய இயக்குனர்களாக இருந்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கும் படங்களை இயக்கினால் மட்டுமே அது ஹிட்டாகும்.. தங்களது கனவுப்படம் என்றோ, அல்லது தங்களை பாதித்த கதை என்றோ தங்களுக்கு (மட்டுமே) பிடித்த, எதைக்கொடுத்தாலும் ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை என்றால் அது தோல்விப்படமாகத்தான் ஆகும்.. சமீபத்தில் ஹிட் படங்களாக இயக்கி ரசிகர்களை ...

ஜூனியர் என்.டி.ஆருடன் நடித்தது மகிழ்ச்சி : நித்யா மேனன்

Posted:

மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால், ஜூனியர் என்.டி.ஆருடன் இணைந்து நடிக்கும் ஜனதா கேரேஜ் திரைப்படத்தில் சமந்தா மற்றும் நித்யா மேனன் நாயகிகளாக நடிக்கின்றனர். இதில் நித்யா மேனன், ஜூனியர் என்.டி.ஆரின் மனைவியாக நடிக்கின்றாராம். பொதுவாக படங்களின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளாத நித்யா மேனன், இப்படத்தில் தனக்கு அதிக ...

மஜ்னு பாடல்கள் வெளியீடு ஒத்திவைப்பு

Posted:

மஜ்னு, நேனு லோகல் போன்ற படங்களில் பிசியாகியிருக்கும் நானி நடிப்பில் மஜ்னு திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது. மஜ்னு படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா இன்று(ஆகஸ்ட் 26) நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் இன்னும் இரண்டு நாட்கள் கழித்தே மஜ்னு பாடல்கள் வெளிவரும் என நானி தனது டுவிட்டர் பக்கத்தில் ...

தெலுங்கு பிரேமம் படத்தில் இணையும் நாகார்ஜூனா மற்றும் வெங்கடேஷ்

Posted:

மலையாள பிளாக்பஸ்டர் திரைப்படமான பிரேமம் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நாகசைதன்யா நாயகனாக நடிக்கின்றார். தெலுங்கிலும் பிரேமம் என்ற பெயரிலேயே இயக்குனர் சண்டூ மொண்டேடி இயக்கும் இப்படத்தில் அனுபமா பரமேஷ்வரன், ஸ்ருதிஹாசன், மடோனா செபாஸ்டியன் என மூவர் நாயகிகளாக நடிக்கின்றனர். அக்டோபர் முதல் வாரத்தில் திரைக்கு வரவிருக்கும் ...

விரைவில் ‛வீர சிவாஜி' பாடல் விழா

Posted:

விக்ரம் பிரபு நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் 'வாகா'. ஜி.என்.ஆர்.குமரவேலன் இயக்கத்தில் வெளியான இந்த படம் தோல்வியடைந்துவிட்டது. இந்தப் படத்தில் நடித்ததற்கு விக்ரம் பிரபுவுக்கு பேசப்பட்ட சம்பளம் ஒரு கோடி. படம் வெளியாகும் நேரத்தில் ஏற்பட்ட பிரச்சனையை சமாளிக்க தன் சம்பளத்தை விட்டுக் கொடுத்தார் விக்ரம் ...

ஆதி படத்தில் ஆடு பாட்டு

Posted:

மிருகம் படத்தில் அறிமுகமான தெலுங்கு நடிகர் ஆதிக்கு தமிழில் இன்னும் நேரம் வொர்க் அவுட்டாகவில்லை. பல படங்களில் நடித்தும் அவரால் முதல்வரிசைக்கு வர முடியவில்லை. கடைசியாய் அவர் நடித்த படம் 'யாகவராயினும் நா காக்கா'. இந்தப் படத்தை அவரது அப்பா தயாரித்தார். ஆதியின் சகோதரர் இயக்கினார். 'யாகவராயினும் நா காக்கா' படமும் ...

தமன்னா கேட்கும் எக்ஸ்ட்ரா மீட்டர்

Posted:

சுராஜ் இயக்கத்தில், விஷால், தமன்னா ஜோடியாக நடிக்கும் படம் 'கத்திசண்டை'. 'ரோமியோ ஜுலியட்', விரைவில் ரிலிசாகவிருக்கிற 'வீரசிவாஜி' ஆகிய படங்களை தயாரித்த 'மெட்ராஸ் என்டர்பிரைசஸ்' நிறுவனம் சார்பில் நந்தகோபால் தயாரிக்கும் 'கத்திசண்டை' படம் தீபாவளிக்கு ரிலீசாக திரைக்கு வரவிருக்கிறது. எனவே இப்படத்தின் வேலைகள் பரபரப்பாக ...

திருட்டு விசிடியில் படம் பார்த்தால் கைகள் உடைக்கப்படும் - ஜாக்குவார் தங்கம்

Posted:

சில வருடங்களுக்கு முன் தமிழ்சினிமாவில் ஃபைட் மாஸ்டராக இருந்தவர் ஜாகுவார் தங்கம். ஒரு கட்டத்தில் இவருக்கு படங்கள் இல்லாமல் போனதால் கில்டு என்ற ஒரு அமைப்பில் நுழைந்து மெல்ல அதன் தலைமைப் பொறுப்பை கைப்பற்றினார். அதன் பிறகு சின்ன பட்ஜெட் படங்களின் விழாக்களுக்கு வர ஆரம்பித்தார். அப்படி வரும்போது ஏடாகூடமா எதையாவது பேசுவதை ...

ரெமோ பட இயக்குநருக்கு 5 கோடி சம்பளம்?

Posted:

சிவகார்த்திகேயன் தன்னுடைய நண்பர் பெயரில் தயாரித்து வரும் முதல் தயாரிப்பான 'ரெமோ' திரைப்படம் ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு அக்டோபர் முதல் வாரம் வெளியாகவிருக்கிறது. பாண்டிராஜின் உதவியாளரான பாக்யராஜ் கண்ணன் இயக்கும் இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக கீர்த்தி சுரேஷ் இணைந்து நடித்துள்ளார். அனிருத் இசை அமைத்துள்ள ...

முதல்வர் ஜெயலலிதா தொகுதியில் விஷால்

Posted:

தமிழ் சினிமாவின் புரட்சி நாயகனாக பல்வேறு புரட்சிகளையும், அதிரடி நடவடிக்கைகளையும் செய்து வருபவர் நடிகர் விஷால். அதற்கு சமீபத்திய உதாரணம் நடிகர் சங்கம் தேர்தல், திருட்டு விசிடி தொடர்பான நடவடிக்கை உள்ளிட்ட பல விஷயங்களையும் சொல்லலாம்.

இந்நிலையில் நடிகர் விஷால் வருகிற ஆகஸ்ட் 29ம் தேதி, தனது பிறந்தநாளை கொண்டாட உள்ளார். தனது ...

இந்த வாரம் 7 படங்கள் ரிலீஸ்

Posted:

தமிழ் சினிமாவில் கடந்த இரண்டு ஆண்டுகளாக படங்களின் எண்ணிக்கை ஓராண்டில் 200-ஐ தாண்டி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் இதில் பெரிய வெற்றி பெற்ற படங்கள் என்று பார்த்தால் சொர்ப்பம் தான். அதிலும் ஒவ்வொரு வெள்ளிக்கிழமை குறைந்தது 3 முதல் 8 படங்கள் வரை ரிலீஸாகிறது. இந்தவாரம் 7 படங்கள் ரிலீஸாகியுள்ளன. நேற்று கோகுல அஷ்டமி என்பதால் நேற்றே சில ...

சிரஞ்சீவியுடன் ஜோடியாக நடிப்பது பெருமை - காஜல் அகர்வால்

Posted:

தெலுங்கத் திரையுலகில் மிகப் பெரிய ஸ்டார் குடும்பமாக இருப்பது சிரஞ்சீவியின் குடும்பம் தான். அந்தக் குடும்பத்தில் அடுத்த தலைமுறையினர் கூட நாயகர்களாக அறிமுகமாகி தெலுங்குத் திரையுலகத்தை ஆண்டு கொண்டிருக்கிறார்கள். 'மெகா' குடும்பம் என அழைக்கப்படும் சிரஞ்சீவி குடும்பத்து நடிகர்களில் முதன்மையானவராக இருக்கும் சிரஞ்சீவி, நீண்ட ...

பாகுபலி உயிருடன் இருக்கலாம் - புதிய தகவல்

Posted:

ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ், ராணா டகுபட்டி, அனுஷ்கா, தமன்னா, சத்யராஜ் மற்றும் பலர் நடிப்பில் 'பாகுபலி' படத்தின் இரண்டாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஐதராபாத்தில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் படப்பிடிப்பு கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வருகிறது. இதற்காக 4 விதமான கிளைமாக்ஸை ராஜமௌலி படமாக்கியுள்ளார் ...

ஜீவா பட டீசரை வெளியிடும் தனுஷ்

Posted:

'யாமிருக்க பயமே' படத்தை இயக்கிய டீகே இயக்கத்தில் ஜீவா, காஜல் அகர்வால் மற்றும் பலர் நடிக்கும் படம் 'கவலை வேண்டாம்'. இப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியிடப்படுகிறது. இந்த டீசரை நடிகர் தனுஷ் வெளியிட உள்ளார். ஏற்கெனவே, ஜீவாவுக்கும் தனுஷுக்கும் ஆகாத நிலையில் தற்போது ஜீவா பட டீசரை தனுஷ் வெளியிடுவது பலத்த ஆச்சரியத்தை ...

சல்மானின் திருமணம் எப்போது? - லூலியா பதில்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகரான சல்மான், 50வயதை தாண்டியும் இன்னும் திருமணம் செய்யாமல் இருக்கிறார். சல்மான் உடன் பல நடிகைகள் காதல் கிசுகிசுவில் சிக்கினர். தற்போது அவர் ருமேனியாவை சேர்ந்த லூலியா வந்தூர் என்பவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. கடந்தவாரம் கூட சல்மான் கானுக்கும், லூலியாவிற்கும் திருமணம் ஆகிவிட்டதாக ருமேனியாவை ...

அஸ்வினி ஐயரின் அடுத்தப்படம்

Posted:

'நில் பத்தி சன்னாட்டா' என்ற சூப்பர் ஹிட் படத்தை கொடுத்த அஸ்வினி ஐயர் திவாரி, அடுத்தப்படியாக ‛பார்லி கி பார்பி' என்ற படத்தை இயக்க உள்ளார். இப்படத்தில் கிருத்தி சனோன், ஆயுஸ்மான் குரானா, ராஜ்குமார் ராவ் ஆகியோர் முக்கிய ரோலில் நடிக்கிறார்கள். உத்திர பிரதேசத்தை மையமாக வைத்து கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது. ...

பன்டி சச்தேவ் உடன் காதலா? - சோனாக்ஷி பதில்

Posted:

பாலிவுட்டின் முன்னணி நடிகையாக வலம் வருபவர் சோனாக்ஷி சின்ஹா. தற்போது இவர், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‛அகிரா' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இப்படம் வருகிற செப்., 2-ம் தேதி ரிலீஸாக இருக்கிறது. இதனால் அகிரா படத்தின் புரொமோஷனில் பம்பரமாய் சுழன்று கொண்டு இருக்கிறார் சோனாக்ஷி. இதனிடையே, சோனாக்ஷி சின்ஹா, தன் நண்பர் பன்டி சச்தேவ்வை ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™