Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Cinema.tamil.com

Cinema.tamil.com


பஞ்சு அருணாசலம் உடல் தகனம் : இறுதி ஊர்வலத்தில் இளையராஜா பங்கேற்பு

Posted:

சினிமா துறையில் பல்துறை வித்தகரான பஞ்சு அருணாசலத்தின் உடல், திரையுலகினரின் கண்ணீர் அஞ்சலியுடன் தகனம் செய்யப்பட்டது. இறுதி ஊர்வலத்தில் இசையமைப்பாளர் இளையராஜா, கலைப்புலி எஸ்.தாணு, எஸ்.பி.முத்துராமன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என சகலகலா வித்தகர் ...

ஆகஸ்ட் 12 வெளியீட்டுப் படங்கள், எதிர்பார்ப்பு என்ன ?

Posted:

2016ம் ஆண்டின் ஆகஸ்ட் மாதத்தின் இரண்டாவது வெள்ளியான நாளை 11ம் தேதி "ஜோக்கர், வாகா, முடிஞ்சா இவன புடி' ஆகிய 3 படங்கள் வெளிவருவதாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் 'முடிஞ்சா இவன புடி' படத்தின் வெளியீட்டு விவகாரம் சிக்கலில் இருந்து வருகிறது. இந்தப் படத்தின் அனைத்து விளம்பரங்கள் மற்றும் டிரைலரில் 'ராக்லைன் ...

தெலுங்கு படத்தில் நடிக்கும் பூஜா குமார்

Posted:

மிக நீண்ட இடைவெளிக்கு பின்னர் விஸ்வரூபம் படத்தில் ரீஎன்ட்ரி கொடுத்த நடிகை பூஜா குமார் அப்படத்திற்கு பின்னர் கமலஹாசன் நடித்த, உத்தமவில்லன் படத்தில் நடித்தார். தமிழில் பெரிதாக படவாய்ப்புகள் இல்லாததால் பூஜா குமார் டோலிவுட் பக்கம் திரும்பியுள்ளார். தேசிய விருது வென்ற இயக்குனர் பிரவீன் இயக்கவிருக்கும் படத்தில் பிரபல நடிகர் ...

மகேஷ்பாபுவுடன் நடிக்க மறுத்த ஸ்ரீதேவிவின் மகள்

Posted:

தென்னிந்திய திரை உலகில் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் உச்ச நட்சத்திரமாக ஜொலித்தவர் நடிகை ஸ்ரீதேவி. இவரது மகள் ஜான்வியை வெள்ளித்திரைக்கு அழைத்து வர பலரும் முயற்சி செய்து வருகின்றனர். விரைவில் திரைப்படங்களில் நடிப்பதற்காக லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள லீ ஸ்டர்ஸ்பெர்க் அன்ட் பிலிம் தியேட்டர் நிறுவனத்தில் நடிப்பு பயிற்சி எடுத்துக் ...

சிரஞ்சீவிக்காக முடிவை மாற்றிய நடன புயல்

Posted:

நடன இயக்குனராக அறிமுகமாகி பின்னர் ஹீரோவாக வலம் வந்த நடன புயல் பிரபுதேவா, இயக்குனராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். நடிகராக இயக்குனராக தென்னிந்திய திரை உலகில் பிசியான பிரபுதேவா பிற படங்களில் நடன இயக்குனராக பணியாற்றுவதை குறைத்துக் கொண்டுள்ளார். மெகா ஸ்டார் சிரஞ்சீவிக்காக பிரபுதேவா தற்போது தனது முடிவை மாற்றிவிட்டார். ...

ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த சுனில்

Posted:

டோலிவுட்டில் முன்னணி நகைச்சுவை நடிகராக வெற்றி கண்ட சுனில், தற்போது நாயகனாகவும் வெற்றி வாகை சூடியுள்ளார். சுனில் நடித்த கிருஷ்ணாஷ்டமி திரைப்படம் தோல்வியைத் தழுவியதால் அடுத்த படத்தை மிகவும் கவனமாக தேர்வு செய்தார் சுனில். சுனிலின் இந்த முன்னெச்சரிக்கை மிகவும் கைகொடுத்துள்ளது. சுனில் நடிப்பில் அண்மையில் வெளிவந்த ஜக்கன்னா ...

அகில் கைவிட்ட படத்தில் நிதின்

Posted:

அகில் : தி பவர் ஆப் ஜூவா படத்தின் வாயிலாக டோலிவுட்டில் நாயகனாக அடியெடுத்துவைத்த அகிலுக்கு அப்படத்தின் படுதோல்வி மிகுந்த ஏமாற்றமாக அமைந்துவிட்டது. அதன்பின்னர் தனது அடுத்த படத்தை தேர்ந்தெடுக்க அதிக நாட்கள் எடுத்துக் கொண்ட அகில் ஒருவழியாக இயக்குனர் ஹனு ராகவ்புடி இயக்கும் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார். இத்தகவலை கடந்த சில ...

கபாலி படம் பார்த்து ‛மகிழ்ச்சி' என்ற மேத்யூவ் ஹெய்டன்

Posted:

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரர் மேத்யூவ் ஹெய்டன். கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்ட மேத்யூவ் ஹெய்டன், தற்போது தமிழ்நாட்டின் ஹாட் டாக்காக மாறியிருக்கிறார். தமிழ்நாட்டில் விரைவில் நடைபெற இருக்கும் 2016 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பிரீமியர் லீக் போட்டியின் விளம்பர தூதராக நியமிக்கப்பட்டிருக்கும் ஹெய்டனுக்கும், நம் ...

மங்காத்தா-2வுக்காக காயை நகர்த்தும் வெங்கட்பிரபு

Posted:

சினிமாவில் கிடைத்த வாய்ப்பையும் வாழ்க்கையையும் தவறவிட்டவர்கள் பலர். அவர்களில் இயக்குநர் வெங்கட்பிரபுவும் ஒருவர். கங்கை அமரனின் மகன் என்ற விசிட்டிங் கார்ட் உடன் படத்துறைக்கு வந்தவருக்கு 'சென்னை 28' படத்தின் வெற்றி சிவப்புக் கம்பளத்தை விரித்தது. தொடர்ந்து முன்னணி ஹீரோக்களை வைத்து படங்களை இயக்கிய அவருக்கு வெற்றி கை ...

ஹாப் கேர்ள்பிரண்ட் -ல் நடிக்காதது ஏன்? - எமி

Posted:

பாலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளில் எமி ஜாக்சனும் ஒருவர். இவர் லண்டனில் இருந்து வந்து தமிழ், ஹிந்தி, தெலுங்கு திரையுலகில் தனக்கு என்று ஒரு இடத்தை பிடித்துள்ளார். இயக்குநர் மோஹித் சூரி, தற்போது ஹாப் கேர்ள்பிரண்ட் என்ற படத்தை உருவாக்கி வருகிறார். இப்படத்தில் அர்ஜூன் கபூர், ஷ்ரத்தா கபூர் முக்கிய வேடத்தில் நடித்து ...

என் தயாரிப்பில் நானும், என் மனைவியும்... அஜய்

Posted:

பாலிவுட்டில் இருக்கும் காதல் ஜோடிகளில் அஜய் தேவ்கன், கஜோலும் முக்கியமானவர்கள். தற்போது அஜய் இயக்கி நடித்து வரும் படம் சிவாய். இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியானது. சிவாய் படத்தின் டிரைலர், ரசிகர்களிடத்தில் நல்ல வரவேற்பை பெற்றது. டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் அஜய்யிடம், பத்திரிக்கையாளர் நீங்களுக்கு உங்கள் மனைவியும் ...

மீண்டும் அலி அப்பாஸ் இயக்கத்தில் சல்மான்

Posted:

ஹிந்தி திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் அலி அப்பாஸ் ஜாபரும் ஒருவர். சமீபத்தில் இவரது இயக்கத்தில் சல்மான் நடிப்பில் வெளிவந்து வெற்றி படமாக ஒடிக் கொண்டுயிருக்கும் படம் சுல்தான். இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து டியூப் லைட் படத்தில் நடித்து வருகின்றார் சல்மான். இதை தொடர்ந்து மீண்டும் சல்மான் , அலி அப்பாஸ் ஜாபர் படத்தில் நடிக்க ...

கார்த்தி விஷால் மீண்டும் மோதல்

Posted:

நடிகர் சங்கம் தொடர்பான பணிகளில் செயலாளர் விஷாலும், பொருளாளர் கார்த்தியும் கை கோர்த்து செயல்பட்டு வருகிறார்கள். அதே நேரம் தொழில் என்று வந்துவிட்டால் இரண்டுபேருமே போட்டி போடவும் தயங்கவில்லை. விஷால் நடித்த 'சமர்' படமும், கார்த்தி நடித்த 'அலெக்ஸ் பாண்டியன்' படமும் மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரே நாளில் வெளியானது. அதாவது 2013 ஆம் ...

விநாயகர் சதுர்த்திக்கு ‛இருமுகன்' வேண்டாம் - விக்ரம் முட்டுக்கட்டை

Posted:

விநாயகர் சதுர்த்தி விடுமுறை தினத்தை முன்னிட்டு செப்டம்பர் முதல்வாரத்தில் தனுஷின் தொடரி மற்றும் விக்ரமின் இருமுகன் ஆகிய படங்கள் வெளியாக இருக்கின்றன. சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில், பிரபு சாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் தயாராகியுள்ள படம் தொடரி. இமான் இசையமைத்திருக்கும் இப்படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ...

நான் நடிகராக கோல்ப் விளையாட்டு உதவியது - மாதவன்

Posted:

தமிழ், ஹிந்தியை தாண்டி ஆங்கில படங்களிலும் நடித்தவர் மாதவன். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளிவந்த ‛இறுதிச்சுற்று' படம் சூப்பர், டூப்பர் ஹிட்டானது. தற்போது மாதவன் கனடாவில் நடைபெறும் சர்வதேச விழாவிற்காக சென்றுள்ளார். அவர் அங்கு ஓய்வு நேரத்தில் இருக்கும் போது கோல்ப் விளையாடி தன் பொழுதை கழிக்கிறார். அத்துடன் தான் சினிமாவுக்கு வர ...

‛ரங்கூன்' தள்ளிப்போனது ஏன்? - ஷாகித்கபூர்

Posted:

ஷாகித் கபூர், சைப் அலிகான், கங்கனா ரணாவத் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‛ரங்கூன்'. விஷால் பரத்வாஜ் இயக்கும் இப்படம், பிரமாண்டமாய் உருவாகி வருகிறது. ரங்கூன் படம் செப்டம்பர் 30ம் தேதி ரிலீஸாவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இப்போது படத்தின் ரிலீஸ் தேதி அடுத்தாண்டு பிப்ரவரி 24ம் தேதிக்கு தள்ளிபோய் இருக்கிறது. ...

35 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் ‛தோனி' பட டிரைலரை வெளியிட்ட தோனி

Posted:

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங்கின் தோனியின் வாழ்க்கை வரலாறு, பாலிவுட்டில் சினிமாவாக உருவாகி வருகிறது. தோனி தி அன்டோல்ட் ஸ்டோரி என்ற பெயரில் உருவாகி வரும் இப்படத்தில் தோனியாக சுசாந்த் சிங் ராஜ்புட் நடித்துள்ளார். நீரஜ் பாண்டே இயக்குகிறார். இப்படத்தின் டீசர் ஏற்கனவே வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், ...

காதலியை கூட விட்டுத்தரலாம்; நண்பனை விட்டுதரக்கூடாது - சிம்பு

Posted:

விரைவில் நடைபெற உள்ள 'தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் கலந்து கொள்ளும் 'மதுரை சூப்பர் ஜெயின்டஸ்' அணிக்காக புரொமோஷன் பாடலை உருவாக்கியுள்ளார்கள். இப்பாடலை சிம்பு பாடியிருக்கிறார்.

இந்த பாடலையும் அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சியில் சிம்பு பேசும்போது... ''புகழ் பெற்ற கிரிக்கெட் வீர்ர் வீரேந்தர் ...

அசத்தல் போட்டியில் அக்டோபர் மாதம்

Posted:

ஆகஸ்ட் மாதம் ஆரம்பமாகி பத்து நாட்கள் தான் ஆகிறது. அதற்குள் அக்டோபர் மாதம் வெளியாகும் படங்களுக்காக இப்போதே கோலிவுட் தயாராகிக் கொண்டிருக்கிறது. நாளை 12ம் தேதி இப்போதைக்கு 'வாகா, ஜோக்கர்' ஆகிய படங்கள் வெளிவருவது உறுதியாகியுள்ளது. 'முடிஞ்சா இவன புடி' படத்தின் பிரச்சனை முடிவடைந்ததாகச் சொல்லப்பட்டாலும் அவர்கள் எதிர்பார்க்கும் ...

பஞ்சு அருணாசலம் உடலுக்கு - பிரபலங்கள் அஞ்சலி

Posted:

திரைப்பட தயாரிப்பாளர், கதாசிரியர், இயக்குனர், பாடலாசிரியர் என சகலகலா வித்தகர் பஞ்சு அருணாசலம். இதயநோய் பாதிப்பினால் நேற்று முன்தினம் காலை மரணம் அடைந்தார். 100க்கும் மேற்பட்ட படங்களுக்கு, கதை வசனகர்த்தாவாகவும், 200க்கும் மேற்பட்ட படங்களில், பாடல் ஆசிரியராகவும் பணியாற்றி உள்ளார். பஞ்சு அருணாசலத்தின் மகன் மற்றும் மகள் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™