Tamil Star |
- ரஷ்யாவுடனான கிழக்கு ஐரோப்பிய எல்லை பகுதிக்கு துருப்புக்களை அனுப்பும் கனடா
- விபத்தில் பெண் படுகாயம்
- மேலும் 550 குடும்பங்களுக்கு மாதாந்த வீட்டு மானிய நிதி – யோன் ரொரி
- செனற் பதவிக்கு கனேடியர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும்
| ரஷ்யாவுடனான கிழக்கு ஐரோப்பிய எல்லை பகுதிக்கு துருப்புக்களை அனுப்பும் கனடா Posted: 08 Jul 2016 07:42 AM PDT
இரண்டு ஆண்டுகளின் முன்னர் உக்ரெய்னில் இருந்து கிரைமியாவை பிரித்து எடுத்துக்கொண்ட ரஷ்யா, தொடர்ச்சியாக அந்த பிராந்திய பிரிவினைவாதிகளுக்கு உதவிகளை வழங்கிவருகிறது. அதனால் கிழக்கு ஐரோப்பிய பிராந்தியங்களில் நோட்டோ படைகளின் பிரசன்னத்தினை அதிகரிக்குமாறான கோரிக்கைகளும் வலுத்துள்ளன. ஆனால் குறித்த அந்த எல்லைப் பகுதிகளில் மேற்கொள்ளப்படும் எந்தவிதமான இராணுவ அதிகரிப்புகளும், புதியதொரு பனிபோரையோ அல்லது அதனிலும் மோசமான நிலையினையோ தோற்றுவிக்கக்கூடும் என ரஷ்யா எச்சரித்துள்ளது. இவ்வாறான நிலையிலேயே கிழக்கு ஐரோப்பிய பகுதிகளில், ரஸ்யாவை நீண்டகால நோக்கில் எதிர்கொள்ளும் வகையில் தமது துருப்புக்களையும், இராணுவ உதவிகளையும் அனுப்பி வைப்பதான அறிவிப்பை கனடா வெளியிட்டுள்ளது. வார்சோவில் இன்றும் நாளையும் நடைபெறவுள்ள நேட்டோ உறுப்பு நாடுகளின் மாநாட்டில் கலந்துகொள்வதற்காக போலாந்துக்கு பயணம் மேற்கொண்டுள கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ, அங்கு ஊடகவியலாளர் மத்தியில் இந்த அறிவிப்பை இன்று வெளியிட்டுள்ளார். ரஷ்யாவுடனான கிழக்கு ஐரோப்பிய எல்லைப் பகுதியான லட்வியாவுக்கு நூற்றுக்கணக்கான படை வீரர்களை கனடா அனுப்பி வைக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அத்துடன் ஏனைய ஐரோப்பிய பிராந்தியங்களுக்கு கனேடிய போர்க் கப்பல்கள் மற்றும் ஆறு தாக்குதல் விமானங்கள் அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். The post ரஷ்யாவுடனான கிழக்கு ஐரோப்பிய எல்லை பகுதிக்கு துருப்புக்களை அனுப்பும் கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 08 Jul 2016 07:09 AM PDT
இன்று அதிகாலை 2.30 அளவில் எக்ளிங்டன் அவனியூ மற்றும் கிறடிட் யூனியன் ட்ரைவ் பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த அந்த பெண் பாதசாரி மீது வாகனம் ஒன்று மோதியதில் அவர் மோசமான காயங்களுக்கு உள்ளானதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய வாகனத்தின் சாரதி சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும், விபத்து இடம்பெற்றமைக்கான காரணங்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீவிர சிகிச்சைப் பிரிவில் உயிராபத்ததான நிலையில் அனுமதிக்கப்பட்ட பெண் தொடர்ச்சினா சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும், அவருக்கு சுமார் 40 வயது இருக்கும் எனவும் அவசர மருத்துவப் பிரிவினர் தகவல் வெளியிட்டுள்ளனர். The post விபத்தில் பெண் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மேலும் 550 குடும்பங்களுக்கு மாதாந்த வீட்டு மானிய நிதி – யோன் ரொரி Posted: 08 Jul 2016 06:20 AM PDT
நேற்று வியாழக்கிழமை காலை Regent Parkஇல் ஊடகவியலாளர்களைச் சந்தித்த ரெரன்ரோ நகரபிதா யோன் ரொரி இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அரசாங்க வீடுகளுக்காக காத்திருப்போர் பட்டியலில் உள்ள இவர்கள் தமது வாடகைக்காக மாதாந்தம் 250 டெலர்களை பெற்றுக்கொள்வர் என்றும் அவர் கூறியுள்ளார். 500 பேருக்கான வீட்டு மானியத் தொகையை மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தால் முதலீடு மேற்கொள்ளப்பட்டுள்ள Affordable Housing திட்டம் வழங்குவதாகவும், வீட்டுக்காக சுமார் 10 அல்லது அதற்கு மேலான ஆண்டுகளாக காத்திருக்கும் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட குடும்பங்கள் அவற்றை பெற்றுக்கொள்ளவுள்ளன என்றும் அவர் தெரிவித்துள்ளார். அவ்வாறே சர்க்கர நாற்காலி சென்று வரக்கூடிய வசதிகளுடன்கூடிய வீடுகளுக்காக எட்டு அதற்கு மேற்பட்ட ஆண்டுகளாக காத்திருக்கும் 50 குடும்பங்களுக்கும் இந்த நிதி உதவி வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தற்போது இந்த 550 குடும்பங்களுக்கு மாதாந்தம் வழங்கப்படவுள்ள 250டொலர், அந்த குடும்பங்களின் நாளாந்த வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார். The post மேலும் 550 குடும்பங்களுக்கு மாதாந்த வீட்டு மானிய நிதி – யோன் ரொரி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| செனற் பதவிக்கு கனேடியர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும் Posted: 08 Jul 2016 06:16 AM PDT
புதிய மாற்றங்களை உள்ளடக்கிய இந்த அறிவிப்பை லிபரல் அரசாங்கம் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது. கடந்த டிசம்பர் மாதம் வெளியிட்ட இடைக்காலச் செயன்முறை அறிவிப்பில் சமூக அமைப்பு ஒன்றினாலேயே செனற்றர் பதவிக்கு பொருத்தமானவர்கள் பரிந்துரைக்கப்படுவார்கள் என லிபரல் தெரிவித்திருந்தது. ஆனால் தற்போது செனற்றர்களுக்கான வெற்றிடங்களுக்கு தகுதியான கனேடியர்கள் நேரடியாகவே விண்ணப்பிக்க முடியும் என்ற அறிவிப்பு நேற்று வெளியிடப்பட்டுள்ளதுடன், அதற்கான தகமைகள் தொடர்பான விபரங்களும் வெளியிடப்பட்டுள்ளன. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள சனநாயக நிறுவனங்களுக்கான அமைச்சர் Maryam Monsef, இந்த பதவி நிலைக்கு அனைத்து கனேடியர்களும் விண்ணப்பிக்க முடியும் என்ற இந்த புதிய நடைமுறையானது, கனேடிய நாடாளுமன்ற சனநாயகத்தில் கனேடியர்களின் சிறப்பான பங்களிப்பை ஏற்படுத்துவதுடன், வெளிப்படைத் தன்மையையும் மேம்படச்செய்யும் முக்கிய படிநிலை என தெரிவித்துள்ளார். அத்துடன் சுயாதீன ஆலோசனைச் சபைக்கு புதிதாக எட்டு உறுப்பினர்களின் பெயர்களையும் லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளதாகவும், பிரிட்டிஸ் கொலம்பியா, நியூபிரவுண்ஸ்விக், நோவா ஸ்கோஷியா, பிரின்ஸ் எட்வேட் ஐலண்ட் ஆகிய மாநிலங்களில் இருந்து தலா இரண்டு நபர்கள் வீதம் அந்த எட்டுப்பேரும் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். ஏற்கனவே பெயர் அறிவிக்கப்பட்ட ஒன்ராறியோ, மனிற்ரோபா, கியூபெக் ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்களுடன் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இந்த 8 உறுப்பினர்களும் இணைந்துகொண்டு பணியாற்றுவார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். குறித்த இந்த ஆலோசனைச் சபையே விண்ணப்பதாரிகளில் தகுதியானவர்களை பட்டியலிட்டு, அதனை பிரதமரின் முடிவுக்காக சமர்ப்பிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது செனற்றர் பதவிக்கு 19 வெற்றிடங்கள் உள்ளதுடன், எதிர்வரும் ஓகஸ்ட் மாதத்தில் மேலும் ஒரு வெற்றிடம் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், செனற்றர் பதவிக்கு விண்ணப்பிப்பதற்கான கால எல்லை ஓகஸ்ட் மாதம் நான்காம் திகதி எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. The post செனற் பதவிக்கு கனேடியர்கள் நேரடியாக விண்ணப்பிக்க முடியும் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ரஷ்யாவுடனான கிழக்கு ஐரோப்பிய எல்லை பகுதிக்கு துருப்புக்களை அனுப்பி வைக்க உள்ளதாக கனடா அறிவித்துள்ளது.
நோர்த் யோர்க் பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் படுகாயமடைந்த பெண் ஒருவர் உயிராபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ரொரன்ரோவில் மேலும் 550 குடும்பங்கள் மாதாந்த வீட்டு மானிய நிதியைப் பெற்றுக்கொள்ள இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
செனற் உறுப்பினராக தகுதி உடைய கனேடியர்கள் தங்களின் பெயர்களை நேரடியாகவே சமர்ப்பிக்க முடியும் என்று லிபரல் அரசாங்கம் அறிவித்துள்ளது.