Tamil Star |
- Vaughan பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து
- மிசிசாகா வெடிப்புச் சம்பவம்: வீடுகளுக்கு திரும்பமுடியாத நிலையில் பலர்
- 7 கற்பிணி பெண்களுக்கு சீக்கா நோய்த்தொற்று
| Vaughan பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து Posted: 06 Jul 2016 01:06 PM PDT
காயமடைந்த அந்த நால்வரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் இருவர் மோசமான காயங்களுக்கு ஆளானதாக யோர்க் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். காலை 6.30 மணியளவில் Pine Valley Drive மற்றும் King Vaughan Townline பகுதியில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தை அடுத்து குறித்த பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டு பின்னர் மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது. எனினும் விபத்துக்கான காரணத்தைக் கண்டறிவது தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர். The post Vaughan பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்து appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| மிசிசாகா வெடிப்புச் சம்பவம்: வீடுகளுக்கு திரும்பமுடியாத நிலையில் பலர் Posted: 06 Jul 2016 12:56 PM PDT மிசிசாகா வெடிப்புச் சம்பவம் காரணமாக இடம்பெயர்ந்தவர்களில் அதிகமானவர்கள் இன்னமும் தங்களின் வீடுகளுக்கு திரும்ப முடியாத நிலையிலேயே உள்ளனர். கடந்தவாரம் வீடு ஒன்றில் இடம்பெற்ற இந்த வெடிப்புச் சம்பவத்தில் இரண்டு பேர் பலியானதுடன், ஒன்பது பேர் வரையில் காயமடைந்தனர். அத்துடன் அந்த பகுதியில் இருந்த பல வீடுகள் சேதமாகியிருந்த நிலையில், பலர் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டிருந்தனர். பின்னர் அந்த பகுதியில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதை அடுத்து குறிப்பிட்ட எண்ணிக்கையானவர்கள் தங்களின்வீடுகளுக்கு திரும்பியுள்ள போதிலும், அங்கிருந்து இடம்பெயர்தவர்களில் பெரும்பாலானவர்கள் தங்களின் […] The post மிசிசாகா வெடிப்புச் சம்பவம்: வீடுகளுக்கு திரும்பமுடியாத நிலையில் பலர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| 7 கற்பிணி பெண்களுக்கு சீக்கா நோய்த்தொற்று Posted: 06 Jul 2016 12:00 PM PDT
எனினும் குறித்த வைரஸ் தொற்றுக்குள்ளான கற்பிணிகளின் வயிற்றில் வளரும் சிசுவின் தலைப் பகுதியில், குறித்த இந்த கிருமித் தொற்றினால் ஏற்படும் பாதிப்பு குறித்த விபரங்களைக் கண்டறிவதற்கு அதிக வாரங்கள் அல்லது மாதங்கள் தேவைப்படுவதாக நிபுணர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர். அத்துடன் இவ்வாறு சீக்கா வைரசின் தாக்கத்திற்கு ஆளான குழந்தைப் பேறுகள் கனடாவில் இடம்பெற்றமைக்கான பதிவுகள் இதுவரை இல்லை என்றும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை கனடாவில் இந்த நோய்த்தொற்று ஏற்பட்ட கற்பிணிகளின் உண்மையான எண்ணிக்கை இந்த ஏழுபேரை விட அதிகமாக இருக்கக்கூடும் என மத்திய சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த யூன் மாதம் 30ஆம் திகதி வரையில் 137 பேர் சீக்கா வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளதாகவும், அவர்களில் குறைந்தது 79 பேர் பெண்கள் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அவ்வாறு தொற்றுக்கு இலக்கான பெண்களின் விபரங்களில், அவர்கள் கற்பமாக இருக்கின்றனரா என்ற விபரம் உள்ளடக்கப்படவில்லை என்றும் கூறப்படுகிறது. இதற்கிடையே கற்பிணி பெண்கள், அல்லது கற்பமுறும் திட்டங்களை கொண்டுள்ளோருக்கு அதிகாரிகள் பயண அறிவுறுத்தலையும் விடுத்துள்ளனர். அவ்வாறானவர்கள் சீக்கா வைரஸ் தாக்கம் தீவிரமடைந்துள்ள கோடைகால ஒலிம்பிக் நடைபெறவுள்ள றியோ டீ ஜனீரோ, பிரேசில் உள்ளிட்ட லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு அவர்கள் விடுத்துள்ள அந்த பயண அறிவுறுத்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நோய் தீவிரமாக பரவிவரும் தென் அமெரிக்க நாடுகளுக்கு சென்று வருவோர் மூலமே இந்த நோய்க் கிருமி கனடாவுக்குள்ளும் பரவியுள்ள நிலையிலேயே இந்த அறிவுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post 7 கற்பிணி பெண்களுக்கு சீக்கா நோய்த்தொற்று appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று அதிகாலையில் Vaughan பகுதியில் மூன்று வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதில் நால்வர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கனடாவில் இதுவரையில் 7 கற்பிணி பெண்கள் சீக்கா வைரஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகியுள்ளதாக தெரியவந்துள்ளதுடன், அந்த ஏழு பேரும் தொடர்ச்சியான கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.