Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


அமிர்தமாகும் பழைய சோறு!

Posted: 07 Jul 2016 07:02 PM PDT

jh

jhஅந்த காலத்தில் கிராமங்களில் காலை உணவாக பழைய சோறு சாப்பிடுவது வழக்கம். அந்த வழக்கம் தற்ப்போது கிராமங்களில் கூட கான முடிவதில்லை. நாம் சிறு வயதில் சாப்பிட்டிருப்போம். இப்போது பழைய சோறு சாப்பிடுவது தகுதி குறைவாக பார்க்கப்ப்டுகிறது. பிச்சைக்காரன் கூட வாங்க மாட்டேன் என்கிறான்.

பழைய சோறு என்றாலே தூரம் ஓடுகிறோம். ஆனால் அதில் தான் வைட்டமீன் பி6 மற்றும் பி12 அதிகமாக உள்ளது. தவிரவும் சிறு குடலுக்கு நன்மை செய்யும் பாக்டிரியாக்கள் ட்ரில்லியன் கணக்கில் இருக்கிறதாம். இது நமது உணவுப்பாதையை ஆரோகியமாக வைத்திருகிறதாம்.

உணவுப்பாதை சீராக இருந்தால் காலையில் கழிவறையில் மல்லு கட்ட வேண்டாம். இதனுடன் இரண்டு சிறிய வெங்காயம் சேர்த்து உண்டால் அபரிமிதமான நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கிறதாம். காய்ச்சல் போன்ற நோய்களிடம் இருந்து காக்கிறது பன்றி காய்ச்சல் உட்பட.

காலை உணவாக பழைய சாதத்தை உண்டால் உடல் லேசாகவும் சுறு சுறுப்பாகவும் இருக்கும். இரவிலே தண்ணீர் ஊற்றி வைப்பதால் லட்சக்கணக்கான நல்ல பாக்டிரியாக்கள் உருவாகிறது. மறு நாள் இதை குடிப்பதால் உடல் சூட்டை தனிப்பதோடு குடல் புண், வயிற்று வலி போன்றவற்றை குணப்படுதும்.

இதனை தொடர்ந்து சாப்பிட்டால் ரத்த அழுத்தம் கட்டுக்குள் வந்து உடல் எடையும் குறையும். உடலுக்கு அதிகமான சக்தியை தந்து உடலை சோர்வின்றி வைக்க உதவுகிறது. அலர்ஜி, அரிப்பு போன்றவை கூட சரியாகிவிடுகிறது.

அல்சர் உள்ளவர்கள் இதை சாப்பிட்டு வந்தால் மிக விரைவில் குணமாகிவிடும். எல்லாவற்றிர்கும் மேலாக நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பதால் எந்த நோயும் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இளமையாகவும் இருக்கும்.

The post அமிர்தமாகும் பழைய சோறு! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை

Posted: 07 Jul 2016 01:45 PM PDT

i

iகனடாவிற்கும் உக்ரேனுக்கம் இடையில் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை விரைவில் கைச்சாத்தாக உள்ளது.

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் இதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த மாதத்தின் நடுப்பகுதியில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ உக்ரெய்னுக்கு பயணம் மேற்கொள்ளும் போது குறித்த இந்த ஒப்பந்தம் கைச்சாத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

கனடாவுடனான தடையற்ற வர்த்தக வலயம் ஒன்றினை அமைப்பது தொடர்பில் இரு நாடுகளுக்கும் இடையில் நீண்ட காலமாக பேச்சுக்கள் இடம்பெற்று வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் கனடாவுடனான தடையற்ற வர்த்தக வலயத்தை அமைப்பதில் காணப்பட்ட அனைத்துவித தடைகளையும் உக்ரெய்ன் அரசாங்கம் தற்போது நீக்கியுள்ளதாக கூறப்படுகிறது.

இது தொடாபில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ள உக்ரெய்ன் பிரதமர் வொலோடமீர் குரொய்ஸ்மன், அதில் கனடாவுடனான தடையற்ற வர்த்தக வலயத்தினை அமைப்பதற்கான அனுமதியை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அதுகுறித்த ஒப்பந்தத்தின கைச்சாத்திடுவதற்கான அதிகாரம் உக்ரெய்னின் பொருளாதார அமைச்சர் ஸ்டீஃபன் குபீவுக்கு வழங்கப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post கனடாவிற்கும் உக்ரேனுக்கும் இடையில் தடையற்ற வர்த்தக உடன்படிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோவிற்கு தீவிர வெப்ப எச்சரிக்கை

Posted: 07 Jul 2016 01:40 PM PDT

g

gரொரன்ரோவிற்கு இன்றைய நாளுக்கான தீவிர வெப்ப எச்சரிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகளவு வெப்பநிலையாக 33பாகை செல்சியஸ் காணப்படும் என்றும், அது 38 பாகையாக உணரப்படும் எனவும் கனடா சுற்றுச்சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் ரொரன்ரோ நகரின் அனைத்து குளிரூட்டல் மையங்களும் திறந்து இருக்கும் எனவும், அவை ஒவ்வொன்றும் காலை 11மணியில் இருந்த இரவு 7 மணிவரையில் திறந்திருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பின்வரும் இடங்களில் அவை திறந்திருக்கும் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

• Metro Hall – 55 John St. (This cooling centre remains open 24 hours a day for the duration of the extreme heat warning)

• East York Civic Centre – 850 Coxwell Ave.

• North York Civic Centre – 5100 Yonge St.

• Driftwood Community Centre – 4401 Jane St.

• Etobicoke Civic Centre – 399 The West Mall

• McGregor Community Centre – 2231 Lawrence Ave. E.

• Centennial Park Community Centre – 1967 Ellesmere Rd.

இதேவேளை நாட்பட்ட நோயாளர்கள், குழந்தைகள், முதியவர்கள், சுவாசக்கோளாறு உள்ளவர்கள், நகர்ந்துசெல்லச் சிரமப்படுவோர் போன்றோர் இந்த அதிவெப்ப நிலைமையால் அவதியுற நேரிடும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை மக்கள் இந்த அதிக வெப்பமான காலத்தில் அதிகளவான நீரைப் பருகுமாறும், மெல்லிய நிறத்திலான தளர்ந்த ஆடைகளை அணியுமாறும், வெளியிட நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். தீவிர வெப்ப நிலைமை சனிக்கிழமை தணியக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

The post ரொரன்ரோவிற்கு தீவிர வெப்ப எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™