Tamil Star |
| 48 மணித்தியாள தாமதத்தின் பின் ரொரன்ரோவை வந்தடைந்த எயர்கனடா Posted: 25 Jul 2016 07:10 AM PDT
இங்கிலாந்தின் மென்செஸ்டரில் இருந்து புறப்படவேண்டிய குறித்த அந்த விமானம், சுமார் இரண்டு நாட்களுக்கு பயணிகளை காக்க வைத்ததாக கூறப்படுகிறது. குறித்த அந்த விமானம் கடந்த வெள்ளிக்கிழமை மென்செஸ்டரில் இருந்து கனடாவுக்கு புறப்படவேண்டி இருந்த போதிலும், அது ஞாயிற்றுக்கிழமையே அங்கிருந்து புறப்பட்ட நிலையில், 197 பயணிகளும் சுமார் 48 மணிநேரம் காத்திருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. இரண்டு நாட்களாக மென்செஸ்டரில் சிக்குண்டு போயிருந்ததை மிகவும் மோசமான அனுபவம் என்று தெரிவித்துள்ள பயணி ஒருவர், எதற்காக இந்த தாமதம் ஏற்படுகிறது என்பதனை எவரும் தங்களுடன் தொடர்புகொண்டு தெரிவிக்கவில்லை எனவும் அதிருப்தி வெளியிட்டுள்ளார். இரண்டு இரவுகளாக தாம் இவ்வாறு தவிக்க விடப்பட்டதாக தெரிவித்துள்ள அவர்கள், இதுவா எயர்கனடா தனது பயணிகளை நடாத்தும் முறை எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதேவேளை இது ஒரு துரதிஸ்டவசமான சம்பவம் என்று தெரிவித்துள்ள எயர் கனடாவின் பேச்சளார், தொழில்நுட்ப கோளாறு காரணமாகவும், பணியாளர்களின் சில கட்டுப்பாடுகள் காரணமாகவும் இந்த காலதாமதம் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் பாதிக்ப்பட்ட பயணிகளை தமது நிர்வாகம் நேரடியாக தொடர்பு கொண்டு, இந்த பயணத் தாமத்தினால் ஏற்பட்ட இழப்புகளை ஈடுசெய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். The post 48 மணித்தியாள தாமதத்தின் பின் ரொரன்ரோவை வந்தடைந்த எயர்கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டன் நெடுஞ்சாலை 407இல் தீப்பற்றிய வாகனம் – மூவர் பலி Posted: 25 Jul 2016 06:52 AM PDT
பிரம்டனில் நெடுஞ்சாலை 407இன் மேற்கு நோக்கிய வழித்தடத்தில், மிசிசாகாவுக்கு அருகே நேற்று பிற்பகல் மூன்று மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. குறித்த அந்த வாகனத்தின் வலதுபுற முன் சக்கரத் தொகுதியில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக கட்டுப்பாட்டினை இழந்த வாகனம், நெடுஞ்சாலையின் வலதுபுற வழித்தடத்தினுள் நுளைந்துள்ளதாக தோன்றுகிறது என ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். அப்போது நெடுஞ்சாலை வழியே மேற்கு நோக்கி பயணித்துக் கொண்டிருந்த பேரூந்து ஒன்று, அந்த வாகனத்துடன் மோதுண்டதாகவும், மோதலைத் தொடர்ந்து வாகனம் தீப்பிடித்து எரிந்ததாகவும் கூறப்படுகிறது. எரிந்தவாறே கவிழ்ந்த வாகனம், உருண்டு சென்று நெடுஞ்சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளம் ஒன்றில் வீழந்ததாகவும், அந்த வழியே சென்ற இருவர் அதனைக் கண்டு உதவிக்கு விரைந்ததாகவும் தெரியவருகிறது. எரிந்து கொண்டிருந்த வாகனத்தினுள் இருந்து இரண்டு ஆண்கள் வெளியே இழுத்தெடுக்கப்பட்ட போதிலும், மூன்றாவது நபரை அவர்களால் வெளியே கொண்டுவர முடியவில்லை எனவும் கூறப்படுகிறது. இதேவேளை விபத்தில் காயமடைந்தவர்களில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், ஒருவர் படுகாயமடைந்ததாகவும் தெரிவித்த பீல் பிராந்திய அவசர மருத்துவ பிரிவினர், பின்னர் மூவரும் உயிரிழந்துவிட்டதாக அறிவித்துள்ளனர். விபத்துடன் தொடர்புடைய பேரூந்தின் சாரதியோ, அதில் பயணித்த 49 பயணிகளோ காயங்கள் ஏதும் இன்றி தப்பித்துள்ளதாகவும், பேரூந்து சிறு சேதத்திற்கு உள்ளானதாகவும் தெரிவிக்கப்படுகிறது. The post பிரம்டன் நெடுஞ்சாலை 407இல் தீப்பற்றிய வாகனம் – மூவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரித்தானியாவில் இருந்து ரொரன்ரோவுக்க பயணிக்க வேண்டிய எயர்கனடா விமானம் ஒன்று சுமார் 48 மணித்தியாள தாமதத்தின் பின்னர் நேற்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் அளவில் ரொரன்ரோவை வந்தடைந்துள்ளது.
பயணித்துக் கொண்டிருந்த வாகனம் ஒன்று பேரூந்து ஒன்றுடன் மோதி தீப்பற்றி எரிந்த விபத்துச் சம்பவம் ஒன்று பிரம்டன் பகுதியில் நேற்று இடம்பெற்றுள்ளது.