Tamil Star |
| கனடாவுக்கான அரசமுறை உறவு அலுலகம் லாவோஸில் திறப்பு Posted: 27 Jul 2016 07:23 AM PDT
லாவோஸ் சென்றிருந்த கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் இந்த அலுவலகத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார். இந்த அலுவலகம் திறந்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சரின் பேச்சாளர், லாவோஸ் தலைநகரில் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், தூதரகம் என்ற நிலையினை இன்னமும் ஏற்படுத்திக் கொள்ளாத போதிலும், அரசதந்திர உறவுகளை மேற்கொள்வதற்கான அலுவலகமாக செயற்படும் எனக் கூறியுள்ளார். அத்துடன் லாவோசுக்கான கனடாவின் தூதுவராக, அண்டை நாடான தாய்லாந்தில் உள்ள கனேடிய தூதுவரே செயற்படுவார் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார். தென்கிழக்காசிய வலையமைப்பான ஆசியானை உள்ளடக்கிய பிராந்தியமானது உலகில் மிக முக்கிய மையமாக உள்ளது எனவும், அங்கு பெருமளவான பொருளாதார வாய்ப்புகள் காணப்படுவதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் குறித்த அந்த பிராந்தியங்களில் தனது நிலையினை வலுப்படுத்த வேண்டியது கனடாவுக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். லாவோசில் திறந்து வைக்கப்பட்டுளது போன்றதான அலுவலகம் ஒன்று கம்போடியாவிலும் திறந்து வைக்கப்பட இருப்பதாகவும், அந்த வகையில் அனைத்து பத்து ஆசியான் நாடுகளிலும் கனடாவின் அரசதந்திர பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சரின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். The post கனடாவுக்கான அரசமுறை உறவு அலுலகம் லாவோஸில் திறப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| றியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் 313 கனேடிய வீரர்கள் Posted: 27 Jul 2016 07:17 AM PDT
பிரேசிலின் றியோ டீ ஜெனிரோவில் நடைபெறும் 2016 ஒலிம்பிக் போட்டிகளி்ல் கலந்து கொள்வதற்காக இந்த வீரர்கள் அனுப்பிவைக்கப்படுவது தொடர்பான அறிவிப்பை கனேடிய ஒலிம்பிக் குழு வெளியிட்டுள்ளது. 313 கனேடிய விளையாட்டு வீரர்களுடன், அவர்களுக்கான 98 பயிற்சியாளர்களும், 107 உதவி அலுவலர்களும் செல்லவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. றியோ செல்லும் கனடாவின் விளையாட்டு வீரர்கள் குழுவில் 126 வீரர்களும், 187 வீராங்கனைகளும் இடம்பெற்றுள்ளதாகவும், அனைவரும் 16 வயதுக்கும் 56 வயதுக்கும் இடைப்பட்டவர்கள் என்றும் அது தகவல் வெளியிட்டுள்ளது. அதிகளவான வீரர்கள் ஒன்ராறியோவில் இருந்தே கலந்துகொள்வதாகவும், குறிப்பாக ஒன்ராறியோவில் இருந்து 132 வீரர்களும், அதற்கு அடுத்த படியாக பிரிட்டிஸ் கொலம்பியாவில் இருந்து 68 வீரர்களும், அடுத்து கியூபெக்கில் இருந்து 54 வீரர்களும் கலந்துகொள்வதாகவும் அது விபரம் வெளியிடப்பட்டுள்ளது. இதேவேளை பெண்களுக்கான படகு போட்டியில் கலந்துகொள்ளும் லெஸ்லி தோம்சன் எட்டாவது தடவையாக ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 56 வயதான லெஸ்லி தோம்சன் என்பவரே, கனடாவில் இருந்து றியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துகொள்பவர்களில் கூடிய வயதான நபர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. The post றியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளும் 313 கனேடிய வீரர்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

கனடாவுக்கான அரசமுறை உறவு அலுலகம் ஒன்று லாவோஸ் நாட்டின் தலைநகர் வியஞ்சியானில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
றியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்வதற்காக கனடாவில் இருந்து 313 விளையாட்டு வீரர், வீராங்கனைகள் அனுப்பி வைக்கப்படவுள்ளனர் என்றும், அவர்கள் 37 விளையாட்டுக்களில் பங்பற்றவுள்ளனர் எனவும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.