Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


படகில் மோதல்: ஒருவர் கைது

Posted: 09 Jul 2016 08:56 PM PDT

k

kToronto Harbour பகுதியில் படகில் மோதல் ஏற்பட்ட சம்பவத்தை அடுத்து ஒருவரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ளனர்.

இன்று சனிக்கிழமை இரவு 7.30 மணியளவில் மோதல் சம்பவம் இடம்பெற்றதாக கூறப்படுகிறது.

படகில் மோதல் இடம்பெற்ற நிலையில், படகின் பாதுகாப்புப் பணியாளர்கள் அந்த மோதலை தடுத்து நிறுத்தியதுடன், படகையும் கிழக்கு Bayfront பகுயில் கரைசேர்த்தனர்.

தகவல் அறிந்து காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த போது ஒருவர் உணர்வற்ற நிலையில் காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவருக்கு உடனடியாக முதலுதவிகளை வழங்கியுள்ள அவசர மருத்தவப் பிரிவினர் பின்னர் அவரை மருத்துவமனைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்.

அதேவேளை அங்கு இருந்த ஒருவரைக் காவல்த்துறையினர் கைது செய்துள்ள போதிலும், அவர் மீது குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டமை தொடர்பிலான தகவல்கள் எவையும் வெளியிடப்படவில்லை.

The post படகில் மோதல்: ஒருவர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அமெரிக்கத் தாக்குதல் – கனடா கண்டனம்

Posted: 09 Jul 2016 07:04 AM PDT

j

jஅமெரிக்காவின் டலாஸ் பகுதியில் ஐந்து காவல்த்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டமைக்கு கனேடியப் பிரதமர் ஐஸ்ரின் ரூடோ இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமது டுவிட்டர் பக்கத்தில் இந்த இரங்கல் செய்தியை வெளியிட்டுள்ள அவர், இந்த தாக்குதல் சம்பவத்தினால் கனேடியர்கள் அதிர்ச்சிக்குள்ளாகியுள்ளனர் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த கோரச்சம்பவத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உறுதுணையாக கனடா இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் டலாஸ் பகுதியில் காவல்த்துறையினரை இலக்குவைத்து ஆயுதாரி ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட சினைப்பர் தாக்குதலில் ஐந்து காவல்த்துறை அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளதுடன், மேலும் 6 அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.

நேற்று முன்தினம் அந்த பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்ட பேரணி ஒன்றின் போது பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த காவல்த்துறையினரை இலக்குவைத்து இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

கறுப்பினத்தை சேர்ந்த இருவர் காவல்த்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட இரண்டு அண்மைச் சம்பவங்கள் அங்கு பதற்றத்தை தோற்றுவித்திருந்த நிலையில், காவல்த்துறையினரின் அந்த நடவடிக்கைகளைக் கண்டித்தே நேற்று முன்தினம் இரவு குறித்த பேரணி முன்னெடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post அமெரிக்கத் தாக்குதல் – கனடா கண்டனம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கியது தாய்வான்

Posted: 09 Jul 2016 06:58 AM PDT

hj

hjகனேடிய மாட்டிறைச்சிக்கான தற்காலிகத் தடையை தாய்வான் நீக்கியுள்ளது.

கடந்த 2015 ஆம் ஆண்டு அல்பேட்டாவில் மாடுகளுக்கு "mad cow" என்ற நோய் பரவியதை அடுத்து கனேடிய மாட்டிறைச்சி உற்பத்திகளுக்கு தாய்வான் தடைவிதித்திருந்த நிலையிலேயே தற்போது அந்த தடையை தளர்த்தியுள்ளது.

தாய்வானின் இந்த தடை நீக்கம் நேற்று வெள்ளிக்கிழமையில் இருந்து நடைமுறைக்கு வருவதாக கனடாவின் விவசாய அமைச்சர் மற்றும் வர்த்தக அமைச்சர் ஆகியோர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

தாய்வான் கடந்த ஆண்டு கனடாவின் மாட்டிறைச்சிக்கான இந்த தற்காலிகத் தடையை விதிப்பதற்கு முன்னர், கனடா ஆண்டுக்கு ஏற்றுமதி செய்யும் 2பில்லியன் டொலர் பெறுமதியான மாட்டிறைச்சி உற்பத்தியில், 12மில்லியன் டொலர் பெறுமதியான மாட்டிறைச்சி உற்பத்திகள் தாய்வானிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.hj

அத்துடன் கனடாவின் மாட்டிறைச்சியை விற்பனை செய்யும் 7ஆவது பெரிய சந்தையாக தாய்வான் காணப்பட்டிருந்தது.

சுமார் 10 ஆண்டுகளாக இருந்து வந்த சில மாட்டிறைச்சி உற்பத்திகளின் இறக்குமதிக்கான தடையை மெக்சிக்கோ நீக்கிய ஒருவாரத்தில் தாய்வானும் கனேடிய மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கியுள்ள நிலையில், இந்த வர்த்தகம் சுமார் 250 மில்லியன் டொலர் பெறுமதிக்கு நகரும் என கனடாவின் மாட்டிறைச்சி உற்பத்தியாளர்கள் எதிர்பாக்கின்றனர்.

The post கனேடிய மாட்டிறைச்சிக்கான தடையை நீக்கியது தாய்வான் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சூரை மீன் கொண்டு செய்யப்பட்ட Sgomero Recipe: வாங்க ருசிக்கலாம்

Posted: 09 Jul 2016 06:53 AM PDT

gh

ghசூரை மீனில் அதிகப்படியான ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருப்பதால், இது கண்களுக்கும், மார்பக புற்றுநோயை தடுப்பது மட்டுமின்றி ஆரோக்கிம் தரும்.

சூரை மீனில் புரோட்டீன் காணப்படுகிறது. உடலுக்கு தேவையான ஒமேகா3 கொழுப்பு அமிலங்களை பெற விரும்பினால் இந்த மீன் சரியான தேர்வாக இருக்கும்.

மற்ற உணவுகளை விட சூரை மீனில் உள்ள கொழுப்பு அமிலங்கள் இதயத்திற்கு நல்லது. சூரை மீனை வாரத்தில் இரண்டு நாட்கள் சாப்பிடால் கூடுதல் சுகாதார நலன்களை பெறலாம்.

இத்தகைய சூரை மீனை வைத்து Sgomero Recipe செய்து சாப்பிடலாம்.

தேவையான பொருட்கள்

Sgomero சூரை மீன் Limone - தேசிக்காய் 1 Sale-உப்பு தேவையான அளவு Gitiodi di Garofono - கராம்பு தேவையான அளவு Sedano என்னும் மரக்கறி (சிவளிக்கீரை) Alloro - என்னும் இலை

செய்முறை

Sgomero (சூரை)மீனை தலை முள்ளு இல்லாதவாறு துப்பரவு செய்தல் வேண்டும். பின்பு ஓர் பானையில் தண்ணீர், உப்பு, தேசிக்காய்,Alloro இலை, Bacche போட்டு கொதிக்க விடுதல் வேண்டும்.

கொதிக்கும் தருணத்தில் துப்பரவு செய்யப்பட்ட மீனை போட்டு கொதிக்க விடுதல் வேண்டும். எப்போது தண்ணீர் கொதிக்க தொடங்கிறதோ அதில் இருந்து சில நிமிடத்தின் பின்பு அடுப்பை நிப்பாட்டி விட்டு பானையில் இருந்து சூரை மீனை எடுத்து முள்ளு இல்லாதவாறு துப்பரவு செய்தல் வேண்டும்.

பின்பு மரக்கறிகளையும் Anoahe , Sedano , சிவப்பு வெங்காயம் ஆகியவற்றை சிறிய துண்டுகளாக வெட்டி பின்பு வேண்டிய முறையில் பரிமாறிக்கொள்ளலாம்.

குறிப்பு

5 நிமிடங்களின் பின்பு கெளுத்தி மீன் எடுத்து விடுதல் வேண்டும். இல்லையெனின் மீன் கரைந்துவிடும்.

The post சூரை மீன் கொண்டு செய்யப்பட்ட Sgomero Recipe: வாங்க ருசிக்கலாம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™