Tamil Star |
- டவுண்ரவுனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பெண் படுகாயம்
- துருக்கியில் அவசரகால நிலை பிரகடனம்: கனடா அதிருப்தி
- வர்த்தக உடன்பாட்டுக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தியத்திற்கு கனடா அழைப்பு
| டவுண்ரவுனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பெண் படுகாயம் Posted: 22 Jul 2016 08:20 AM PDT
அந்த பெண் கழுத்துப் பகுதியில் கத்திக்குத்துக்கு இலக்கான நிலையில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. Esplanadeஇற்கு அருகில் Princess வீதிப்பகுதியில் டவுண்ரவுனில் அமைந்துள்ளவீடு ஒன்றின் வளவினுள் இந்த கத்திக்குத்துச் சம்பவம் இடம்பெற்றதாக அதிகாலை 5.30 மணியளவில் காவல்த்துறையினருக்கு முறைப்பாடு செய்யப்பட்டு காவல்த்துறையினர் அங்கு வரவழைக்கப்பட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அங்கு வரவழைக்கப்பட்ட காவல்த்துறையினர் இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். The post டவுண்ரவுனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவத்தில் பெண் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| துருக்கியில் அவசரகால நிலை பிரகடனம்: கனடா அதிருப்தி Posted: 22 Jul 2016 08:18 AM PDT
கடந்த வாரம் துருக்கியில் இராணுவத்தின் ஒரு தரப்பினர் மேற்கொண்டிருந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி முறியடிக்கப்பட்டதை அடுத்து அங்கு குழப்பநிலை உருவாகியுள்ளது. கைதுகளும் அரசாங்கப் பணியாளர்களை பதவி நீக்கும் நடவடிக்கைகளும் அங்கு தொடரப்பட்டு வருவதுடன், ஆட்சிக் கவிழ்ப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த பயங்கரவாத அமைப்புகள் தொடர்பான அனைத்து அம்சங்களையும் அகற்றுவதற்கு தேவைப்படுவதாக கூறி அவசரகால நிலையை துருக்கியின் அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் பிரகடனப்படுத்தியுள்ளார். துருக்கியில் இந்த அவசரகால பிரகடனம் வெளியிடப்பட்ட சிறிது நேரத்திலேயே அது தொடர்பிலான கனடாவின் அதிருப்தியினை தெரிவித்து கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் சனநாயகத்துடன் கூடிய துருக்கியையே கனடா ஆதரிப்பதாகவும், அண்மைய ஆட்சிக் கவிழ்ப்பு தொடர்பில் முழுமையான விசாரணைகளை மேற்கொண்டு உரிய தண்டனைகள் வழங்குவதனை கனடா மதிப்பதாகவும் தெரிவித்துள்ளார். எனினும் அவ்வாறான நடவடிக்கைகள் அனைத்தும் துருக்கி மற்றும் அனைத்துலக சட்டதிட்டங்களுக்கு அமையவே முன்னெடுக்கப்பட வேண்டியது மிகவும் அவசியம் என அவர் வலியுறுத்தியுள்ளார். அதேவேளை துருக்கியின் சனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள அவசரகால நிலை தொடர்பில் கனடா கவலை கொண்டுள்ளதாகவும், துருக்கியில் இடம்பெற்றுவரும் சம்பவங்கள் குழப்பகரமானதாக உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். குறிப்பாக துருக்கியில் நீதித்துறையினர், அரசாங்க பணியாளர்கள், ஆசிரியர்கள், கல்வியலாளர்கள், சமூக அமைப்புக்கள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் என பல ஆயிரக்கணக்காணோர் ஏற்கனவே அங்கு கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக வெளிவந்துகொண்டிருக்கும் தகவல்களையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இவ்வாறான நிலையில், 12 ஆண்டுகளின் முன்னர் துருக்கியில் நீக்கப்பட்ட மரண தண்டனை மீண்டும் நடைமுறைக்கு கொண்டுவரப்படக் கூடும் என வெளிவரும் தகவல்கள் குறித்தே கனடா அதிகம் கவலை கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மரண தண்டனை என்பது பொதுவாகவே மனித மான்பினை கீழறுக்கிறது என்பதுடன், அதனை மீண்டும் நடைமுறைக்கு கெண்டுவருவதானது, துருக்கி அனைத்துலக நாடுகளுடன் செய்துகொண்டுள்ள கடப்பாடுகளுக்கு முரணானது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். அந்த வகையில் அனைத்துலக மனித உரிமைகள் சட்டங்களையும், அனைத்துலக சமூகத்திற்கு வழங்கியுள்ள கடப்பாடுகளையும் கருத்தில் கொண்டு, அவற்றினை மதித்து செயற்பட வேண்டும் என துருக்கியை கனடா வலியுறுத்துவதாகவும் வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் மேலும் தெரிவித்துள்ளார். The post துருக்கியில் அவசரகால நிலை பிரகடனம்: கனடா அதிருப்தி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வர்த்தக உடன்பாட்டுக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தியத்திற்கு கனடா அழைப்பு Posted: 22 Jul 2016 08:12 AM PDT
இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன், ஐரோப்பிய ஒன்றியத்துடனான கனடாவின் வர்த்தக இணக்கப்பாட்டினை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கான அனைத்துவித நடவடிக்கைகளையும் கனேடிய அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பில் ஐரோப்பிய நாடுகளின் அரசாங்கங்களுடனும், எதிர்க்கட்சிகளுடனும் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணிவரும் கனடா, இந்த இணக்கப்பாட்டுக்கான ஆதரவினை வழங்குமாறு அவர்களிடம் கோரி வருவதாகவும் அவர் கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறும் முடிவு பிரித்தானியாவினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் கனடாவுக்கும் இடையேயான வர்த்தக இணக்கப்பாட்டினை ஒன்றியத்தின் பங்காளர்கள் அங்கீகரிக்க வேண்டும் என்ற வேண்டுகோளையும் அவர் விடுத்துள்ளார். கனடாவுடனான இந்த வர்த்தக உடன்பாட்டினை முன்னெடுத்துச் செல்வதன் ஊடாக, அண்மைய பிரித்தானிய வெளியேற்றத்தினால் தாம் பாதிக்கப்படவில்லை என்பதனை ஐரோப்பிய ஒன்றியத்தினால் வெளிக்காட்ட முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். பிரித்தானியாவின் வெளியேற்ற முடிவானது ஐரோப்பிய ஒன்றியத்திற்கு பின்னடைவை ஏற்படுத்தவில்லை என்பதனையும், தம்மால் தொடர்ந்து முன்னோக்கி பயணிக்க முடியும் என்பதனையும் நிரூபிப்பதற்கான வாய்ப்பாக ஐரோப்பிய ஒன்றியம் இதனைப் பயன்படுத்த முடியும் எனவும் அவர் யோசனை வெளியிட்டுள்ளார். The post வர்த்தக உடன்பாட்டுக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தியத்திற்கு கனடா அழைப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

இன்று வெள்ளிக்கிழமை காலை டவுண்ரவுனில் இடம்பெற்ற கத்திக்குத்துச் சம்பவம் ஒன்றில் 20 வயதான பெண் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.
துருக்கியில் மூன்றுமாத காலத்திற்கு அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பில் கனடா தனது அதிருப்தியினை வெளியிட்டுள்ளது.
மீண்டும் வர்த்தக உடன்பாட்டுக்கு வருமாறு ஐரோப்பிய ஒன்றியத்தியத்திற்கு கனடா அழைப்பு விடுத்துள்ளது.