Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சிறுவர்களுக்கான புதிய சலுகை திட்டம் மாற்றதை ஏற்படுத்தும் – கனேடியப் பிதமர்

Posted: 21 Jul 2016 07:56 AM PDT

jh

jhலிபரல் அரசாங்கம் உறுதியளித்துள்ள சிறுவர்களுக்கான புதிய சலுகைகள் அவர்களின் வறுமையை  இல்லாதொழிக்கும் என கனேடியப் பிதமர் ஜஸ்ரன் ரூடோ தெரிவித்துள்ளார்.

அத்துடன் கனடாவில் இவ்வாறு வழங்கப்பட்டுவரும் சலுகைகளே வறுமையை குறைப்பதில் பெரும் பங்காற்றிவருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

குழந்தைகளுக்காக அறிவிக்கப்பட்ட இந்த புதிய சலுகை, சுமார் மூன்று இலட்சம் சிறுவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும் கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ மேலும் தெரிவித்துள்ளார்.

ஆண்டுக்கு 23பில்லியன் டொலர் நிதி ஒதுக்கப்பட்டுள்ள இந்த புதிய சலுகைத் திட்டம், உணவு, பாடசாலை நேரத்திற்கு பின்னரான நடவடிக்கைகள், புத்தாடை மற்றும் பாதணிகள் உள்ளிட்ட பொருட்கள் என பல்வேறு வகையில் சிறுவர்களுக்கு உதவியாக இருக்கும் என்றும், இந்த திட்டம் மக்களின் வாழ்வியலில் அர்த்தமான மாற்றத்தைக் கொண்டுவரும் எனவும் அவர் விபரித்துள்ளார்.

கனடாவில் வறுமைநிலையில் இருக்கும் ஏறக்குறைய 315,000 குழந்தைகளின் வறுமை நிலையை மாற்றுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதற்கான சலுகைகள் குறித்த பிள்ளைகளின் குடும்பங்களின் வருமானத்துடன் சேர்க்கப்படும் எனவும் கடந்த தேர்தலின் போது லிபரல் கட்சி உறுதியளித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

The post சிறுவர்களுக்கான புதிய சலுகை திட்டம் மாற்றதை ஏற்படுத்தும் – கனேடியப் பிதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ரொரன்ரோ பெரும் பாகம் மற்றும் தெற்கு ஒன்ராறியோவிற்கு வெப்ப எச்சரிக்கை

Posted: 21 Jul 2016 07:16 AM PDT

io

ioஅடுத்து வரும் சில நாட்களுக்கு ரொரன்ரோ பெரும் பாகம் மற்றும் தெற்கு ஒன்ராறியோ ஆகிய பகுதிகளுக்கான வெப்ப எச்சரிக்கையை கனடா சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ளது.

மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் எதிர்வரும் வியாழக்கிழமை சூடான மற்றும் ஈரப்பதனான காலநிலை நிலவும் என்றும், அது இந்த வார இறுதி நாட்களுக்கும் தொடரும் எனவும் எதிர்ப்பார்ப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நாட்களில் வெப்பமாகவும், புழுக்கமாகவும் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.io

இன்று வியாழக்கிழமையில் இருந்து எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை வரையில் ரொரன்ரோவில் அதிகூடிய வெப்பநிலை 30பாகை செல்சியசிற்கும் அதிகமாக இருக்கும் என்றும் எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளதுடன், வியாழக்கிழமை மழைத் தூறலுக்கான வாய்ப்பு 30 சதவீதம் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வெப்பநிலை தணிந்து எதிர்வரும் திங்கட்கிழமை மிதமான காலநிலை நிலவும் என்றும் முன்னுரைக்கப்பட்டுள்ளது.

The post ரொரன்ரோ பெரும் பாகம் மற்றும் தெற்கு ஒன்ராறியோவிற்கு வெப்ப எச்சரிக்கை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™