Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


தினமும் 2 அத்திபழம் சாப்பிடுங்கள்!

Posted: 19 Jul 2016 07:10 PM PDT

download (2)

download (2)உணவு உண்ட பின் அத்திபழம் சாப்பிட்டு வந்தால் விரைவில் ஜீரணமடைய செய்து உடலுக்கு சுறுசுறுப்பை தருகிறது.

மேலும் 100 கிராம் அத்திபழத்தில் 107 கலோரிகள் உள்ளன, குறிப்பாக கொழுப்பு சத்து (0.1கிராம்) உள்ளது. இதில் கால்சியம்,இரும்புசத்து,மெக்னீசியம்,விட்டமின் B-12 ஆகியவை அதிக அளவில் கிடைகின்றன.

உடம்பில் ஏற்படும் கரும் பித்தம்,ஈரல், நுரையீரல் பிரச்சனை, மற்றும் வாய் துர்நாற்றத்தை நீக்குகிறது.

தினமும் இரண்டு பழம் சாப்பிட்டால் ஏற்படும் நன்மைகள்

தினசரி இரண்டு பழங்கள் சாப்பிட்டு வந்தால் இரத்த உற்பத்தி அதிகரிக்கும்.
மலச்சிக்கலை போக்க உணவு உண்ட பின் சிறிதளவு அத்திபழங்களை சாப்பிட்டால் விரைவில் மலசிக்கல் தீரும்.

கல்லீரல் வீக்கத்தை போக்க ஒரு வாரம் வினிகரில் ஊறவைத்து, அதன் பின் தினமும் இரண்டு சாப்பிட்டு வர வீக்கம் விரைவில் குணமடையும்.

தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் உடல் கவர்ச்சிகரமாக மற்றும் முழு அளவு ஊட்டச்சத்தையும் பெற முடியும்.

இரண்டு பழங்கள் தொடர்ந்து சாப்பிடுவதால் கால்சியம் சத்து அதிகம் கிடைக்கிறது, இதனால் எலும்புகள் பலம் பெறுகின்றன.

சீமை அத்திபழம்

பதப்படுத்தபட்ட அத்தி பழங்களை தான் சீமை அத்திபழம் என்பர்.

தினமும் அரைகிராம் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் வெண்புள்ளிகள் மற்றும் வெண்குஷ்டம் குணமாகும்.

தோலில் ஏற்படும் நிறமாற்றங்கள் விரைவில் குணமடையும்.

மேலும் ஒருவர் தொடந்து 40 நாட்கள் அத்தி பழம் சாப்பிட்டு வந்தால் அவரது உடல் பலம் பெறும்.

குழந்தை இல்லாதவர்கள் அத்தி பழத்தை காயவைத்து பொடி செய்து சூரணமாக பாலில் கலந்து சாப்பிட்டு வந்தால் குழ்ந்தையினமை நீங்கும்.

மற்ற பழங்களில் கிடைக்கும் சத்துக்கள் அத்தி பழங்களில் நான்கு மடங்கு கிடைக்கின்றன.

The post தினமும் 2 அத்திபழம் சாப்பிடுங்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கியூபெக்கில் வீசிய சூறைக் காற்றால் மின் தடை

Posted: 19 Jul 2016 06:47 AM PDT

y

yகியூபெக் மாநிலத்தை பலமான சூறைக் காற்று நேற்று திங்கட்கிழமை காலை தாக்கியுள்ள நிலையில், பல வாடிக்கையாளர்கள் மின் விநியோகத்தை இழந்துள்ளனர்.

இது தொடர்பில் நேற்று இரவு தகவல் வெளியிட்டுள்ள ஹைட்ரோ கியூபெக் நிர்வாகம், சுமார் 13,000 வாடிக்கையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டு போயுள்ளதாக தெரிவித்துள்ளது.

குறிப்பாக கியூபெக் நகரப் பகுதிகளிலேயே பெருமளவானோர் மின் விநியோக தடையினை எதிர்கொண்டுள்ளதாகவும், அங்கு மட்டும் சுமார் 4,000 வாடிக்கையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டு போயுள்ளதாகவும் கூறியுள்ளது.

அதேபோல மொன்றியலின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களிலும் சுமார் 3,300 வாடிக்கையாளர்களுக்கான மின் விநியோகம் தடைப்பட்டு போயுள்ளதாகவும் ஹைட்ரோ கியூபெக் தெரிவித்துள்ளது.y

இதேவேளை மொன்றியலுக்கு கிழக்கே உள்ள ரொக்ஸ்டன் பகுதியே இந்த சூறைக் காற்றினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அங்கு பெருமளவான மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்து வீழ்ந்துள்ளதாகவும், குறைந்தது ஒரு கட்டிடத்தின் கூரை காற்றினால் தூக்கி வீசப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த சூறைக் காற்றின் தாக்கம் குறித்து ஆராய்வதற்காக இன்று காலையில் தமது அதிகாரிகள் அந்த பகுதிக்கு செல்லவுள்ளதாக கனேடிய சுற்றுச்சூழல் திணைக்கம் அறிவித்துள்ளது.

The post கியூபெக்கில் வீசிய சூறைக் காற்றால் மின் தடை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பாலியல் தாக்குதல் சந்தேக நபர்: தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறை

Posted: 19 Jul 2016 06:42 AM PDT

ui

uiநோர்த் யோர்க் பகுதியில் கடந்த ஆண்டு இடம்பெற்ற பாலியல் தாக்குதல் சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரைக் காவல்த்துறையினர் அடையாளம் கண்டுள்ளனர்.

இது தொடர்பில் காவல்த்துறயினர் வெளியிட்டுள்ள தகவலில், 54 வயதான பெண் ஒருவர் தமது வீட்டில் வைத்து நபர் ஒருவரினால் பாலியல் தாக்குதலுக்கு உள்ளதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2015ஆண்டின் ஆரம்பத்தில் Bayview மற்றும் Finch அவனியூ பகுதியில் அமைந்துள்ள அந்த பெண்ணின் வீட்டில் வைத்தே அந்த பெண் தாக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த நிலையில் குறித்த பெண்ணின் மீது பாலியல் தாக்குதல் நடாத்தி தப்பிச் சென்ற சந்தேக நபரை அடையாளம் கண்டுள்ளதாக காவல்த்துறையினர் நேற்று திங்கட்கிழமை காலை அறிவித்துள்ளனர்.

அதேவேளை குறித்த நபரின் விபரத்தை வெளியிட்டுள்ள விசாரணையாளார்கள், அவரை தமது சட்டத் தரணியின் உதவியுடன் காவல்த்துறையினரிடம் சரணடையுமாறு அறிவுறுத்தியுள்ளனர்.

இது தொடர்பில் தேடப்பட்டு வரும் சந்தேக நபர் 31 வயதான குலதீபன் நந்தகுமார் (Kulathiban Nanthakumar) என்றும் தகவல் வெளியிட்டுள்ள அவர்கள், குறித்த சந்தேக நபர் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் 416-808-3300 என்ற எண்ணில் காவல்த்துறையினரை அல்லது 416-222-TIPS (8477) என்ற எண்ணில் குற்றத் தடுப்புப் பிரிவினரைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளனர்.

The post பாலியல் தாக்குதல் சந்தேக நபர்: தகவல் வெளியிட்டுள்ள காவல்த்துறை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™