Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News

Tamil Star

Tamil Star


பிரம்டனில் இருவேறு விபத்துக்களில் இருவர் பலி

Posted: 18 Jul 2016 06:33 AM PDT

o

oபிரம்டனில் இருவேறு இடங்களில் சம்பவித்த விபத்துக்களில் இருவர் பலியாகியுள்ளனர்.

நேற்று இடம்பெற்ற இந்த இரண்டு விபத்துக்களில் ஒன்றில் பாதசாரி ஒருவரும், மற்றையதில் உந்துருளி ஓட்டுநர் ஒருவரும் உயிரிழந்துள்ளனர்

Queen Street மற்றும் Chrysler Drive பகுதியில் இடம்பெற்ற விபத்திலேயே பாதசாரி ஒருவர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

அவர் படுகாயங்களுக்கு உள்ளானதுடன் உயிராபத்தாக இருந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக பீல் பிராந்திய அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்திருந்தனர்.

எனினும் பின்னர் அவர் உயிரிழந்து விட்டதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் இன்று அதிகாலை தகவல் வெளியிட்டுள்ளனர்.o

உயிரிழந்தவர் தொடர்பிலான மேலதிக விபரங்களை காவல்த்துறையினர் இன்னமும் வெளியிடவில்லை.

எனினும் இன்று காலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விபரங்களை காவல்த்துறையினர் வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறே பிரம்டன் பகுதியில் நேற்று மாலை இடம்பெற்ற பிறிதொரு விபத்தில் உந்துருளி ஓட்டுனர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்று மாலை ஆறு மணியளவில் Rutherford வீதி மற்றும் Madoc Drive பகுதியில் கார் ஒன்றுடன் இந்த உந்துருளி மோதியதாகவும், உந்துருளி ஓட்டுனர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர் பிரம்டன் பகுதியைச் சேர்ந்த 51 வயது ஆண் என தெரிவிக்கப்படுகின்ற போதிலும், அவர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

The post பிரம்டனில் இருவேறு விபத்துக்களில் இருவர் பலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சாகசத்தின்போது விபத்துக்குள்ளான விமானம்: விமானி உயிரிழப்பு

Posted: 18 Jul 2016 06:28 AM PDT

j

jகல்கரியைச் சேர்ந்த விமானி ஒருவர் விமான சாகச நிகழ்வின் போது உயிரிழந்துள்ளார்.

விமான சாகச கண்காட்சி ஒன்று அல்பேர்ட்டாவில் நேற்று இடம்பெற்ற போது, சாகசத்தை நிகழ்த்திக்கொண்டிருந்த விமானம் ஒன்று வீழ்ந்து விபத்துக்குள்ளாதாக தெரிவிக்க்படுகிறது.

சாகசத்தில் ஈடுபட்டுக்கொண்டிருந்த T-28 Trojan(ட்ரோஜன்) ரக விமானமே அவ்வாறு வீழ்ந்து நொருங்கியதாக கூறப்படுகிறது.

முக்கியஸ்தர்கள் உட்பட பல்வேறு மக்கள் பார்த்துக் கொண்டிருந்த வேளையில், ஆகாயத்தில் பல்வேறு கரணங்களை அடித்து சாகசத்தில் ஈடுபட்டுக் கொண்டிருந்த குறித்த அந்த விமானம், திடீரென முகப்பு பக்கம் தரையில் மோதும் வண்ணம் வீழ்ந்து நொருங்கியதாக கூறப்படுகிறது.j

அப்போது குறித்த அந்த விமானத்தினை கல்கரியைச் சேர்ந்த புரூஸ் ஈவன்ஸ் என்ற விமானி செலுத்திச் சென்ற நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

புரூஸ் ஈவன்ஸ் என்ற விமானி உயிரிழந்த இந்த விபத்து தொடர்பில் கவலை வெளியிட்டுள்ள பாதுகாப்பு அமைச்சர் ஹர்ஜித் சஜான், உயிரிழந்த விமானியின் குடும்பத்தாருக்கும் நண்பர்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களையும் தெரிவித்துக்கொண்டுள்ளார்.

உயிரிந்த விமானியான புரூஸ் ஈவன்ஸ் என்பவரின் தந்தையும் விமானப் படையில் விமான பராமரிப்பு பொறியியலாளராக பணியாற்றி வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

The post சாகசத்தின்போது விபத்துக்குள்ளான விமானம்: விமானி உயிரிழப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உடல் எடையை குறைக்க உதவும் தண்ணீர்!

Posted: 18 Jul 2016 06:18 AM PDT

download

downloadநாம் குடிக்கும் தண்ணீருக்கு உடல் எடை அதிகரிப்புடன் போராடும் ஆற்றல் உள்ளதென ஆய்வுகள் மூலம் தெரிய வருகிறது.

ஆய்வின்படி குடி தண்ணீர் மாப்பொருளை கொண்டிருப்பதில்லை, அத்துடன் இலிப்பிட்டு, புரதங்களையும் கொண்டிருப்பதில்லை.

இவ்வகை மாப்பொருள், இலிப்பிட்டு, புரதங்களே உடல் எடை அதிகரிப்புக்கு காரணமாகின்றது.

ஆகையால் தண்ணீரை அருந்துவதன் மூலம் உட்கொள்ளும் உணவின் அளவை குறைத்து ஆரோக்கியமாக எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க முடியும் என சொல்லப்படுகிறது.

மேற்படி ஆய்வில் அதிக BMI, எடையுள்ளவர்களில் நீரேற்ற அளவு குறைவாக இருந்தமை அவதானிக்கப்பட்டது.

அதேபோல் குறைந்தளவு நீரருந்துபவர்களில் அதிக BMI, எடை அவதானிக்கப்பட்டது.

இதிலிருந்து அதிகம் நீரருந்துதல், நீர்த்தன்மையான பழங்கள், காய்கறிகளை உள்ளெடுத்தல் போன்றன உடல் எடையை கட்டுக்கோப்புக்குள் வைத்திருக்க உதவும் எனப்படுகிறது.

ஆனாலும் அதிக எடையுள்ளவர்களும் நீரை அதிகம் வேண்டுகிறார்கள். இது அவர்களில் நீரேற்றத்தின் அளவு குறைவாக இருப்பதால் தான் என மேற்படி ஆய்வுகள் சொல்கின்றன.

The post உடல் எடையை குறைக்க உதவும் தண்ணீர்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download NowPost Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™