Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


கர்ப்ப காலத்தில் உண்டாகும் நோய்களிலிருந்து விடுபட இதோ புதிய டிப்ஸ்!

Posted: 16 Jul 2016 05:36 PM PDT

fh

fhகர்ப்பமானது பல வகையான அனுபவங்களையும், மாற்றங்களையும் தருகிறது.

இம் மாற்றங்கள் உடல் சார்ந்த, மனநிலை சார்ந்த, உணர்ச்சி சார்ந்த மாற்றங்களாக இருக்கலாம்.

பெரும்பாலான கர்ப்பிணிப் பெண்கள் இவ்வகையான மாற்றங்களை காலையில் அனுபவிக்க நேரிடுகிறது.

சிலர் இது பற்றி கூறுகையில் வாந்தி, குமட்டல், மயக்கம் போன்றன கையாளக்கூடியதாக இருப்பதாக சொல்கிறார்கள்.

எனினும் சில வகையான உணவுப் பொருட்கள் இவ் வகையான தாக்கத்திலிருந்து பாதுகாக்கின்றன.

தேசிக்காய்

சில துளி தேசிக்காயை நீருடன் கலந்து பருகுவதாலோ அல்லது சிறு துண்டை கடிப்பதாலோ குமட்டலிலிருந்து விடுபட முடியும்.

பால்

அதிகளவான கால்சியத்தை கொண்டது. இது வயிற்றை நல்ல நிலையில் பேண உதவுகின்றது.

இஞ்சி

இதை தேநீருடன் பருக முடியும். இது வீக்கங்கள், குமட்டல்களிலிருந்து பாதுகாக்கின்றது.

மிளகுக்கீரை தேநீர்

வயிற்றை நல்ல நிலையில் பேணி வைத்திருக்க உதவுகிறது.

தானியங்கள்

இவை பொதுவான காலை நோய்களிலிருந்து பாதுகாப்பு தருகின்றது.

The post கர்ப்ப காலத்தில் உண்டாகும் நோய்களிலிருந்து விடுபட இதோ புதிய டிப்ஸ்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Cayuga பகுதியில் உந்துருளி விபத்து

Posted: 16 Jul 2016 01:25 PM PDT

ty

tyஒன்ராறியோவின் Cayuga பகுதியில் உள்ள பந்தயத் தடத்தில் உந்துருளி ஒன்று விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் படுகாயமடைந்துள்ளார்.

நேற்று வெள்ளிக்கிழமை இரவு 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் அவசர உலங்கு வானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்றும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

காயமடைந்தவர் Whitbyஐக் சேர்ந்த 27 வயது நபர் என்றும், அவரை Hamilton பகுதி மருத்துவமனையில் சேர்த்துள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

The post Cayuga பகுதியில் உந்துருளி விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

துருக்கியில் அமைதி திரும்ப வேண்டும்! – கனடா

Posted: 16 Jul 2016 12:20 PM PDT

o

oதுருக்கியில் மீண்டும் அமைதி திரும்ப வேண்டும் என்று கனேடிய அரசாங்கம் வலியுறுத்தியுள்ளது.

துருக்கியில் இராணுவ ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி ஒன்று இடம்பெற்றுள்ளதை அடுத்து அங்கு பதற்றம் நிலவிவரும் நிலையிலேயே, கனேடிய அரசாங்கம் அங்கு அமைதி நிலவ வேண்டும் என்ற வலியுறுத்தலை விடுத்துள்ளது.

அங்குள்ள கனேடியர்களின் பாதுகாப்புத் தொடர்பிலும் கரிசனை வெளியிட்டுள்ளதுடன், துருக்கிக்கான பயணங்களை தவிர்த்துக் கொள்ளுமாறும் கனேடிய மக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.

துருக்கியில் இடம்பெற்ற இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பான தகவலை அடுத்து கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ உடனடியாக அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.

அந்த அறிக்கையில், துருக்கியில் ஏற்பட்டுள்ள நிலைமை கவலை அளிக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், துருக்கியின் அனைத்து தரப்பினரையும் அமைதி காக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.o

அதேவேளை துருக்கியின் சனநாயக கட்டமைப்பினை ஆயுத பலம் மூலம் கவிழ்க்க மேற்கொள்ளப்பட்ட அந்த ஆட்சிக்கவிழ்ப்பு முயற்சிக்கு அவர் தமது கண்டனத்தையும் வெளியிட்டுள்ளார்.

துருக்கியின் சனநாயகத்தினை பாதுகாப்பதற்கு தேவையான உதவிகளை கனடா வழங்கும் எனவும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ உறுதியளித்துள்ளார்.

இதேவேளை துருக்கியில் இடம்பெற்றுவரும் சம்பவங்களை கனேடிய அரசாங்கம் அணுக்கமாக கண்காணித்து வருவதாகவும், துருக்கியில் உள்ள கனேடியர்களின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்கு முடிந்த அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் கனேடியப் பிரதமர் மேலும் தெரிவித்துள்ளார்.

தற்போதைக்கு துருகிக்கு பயணிப்பதை தவிர்க்குமாறு கனடாவின் வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் கனேடிய மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அத்துடன் ஏற்கனவே துருக்கியில் இருக்கும் கனேடியர்கள், பாதுகாப்பாக வதிவிடங்களின் உள்ளேயே இருக்குமாறும், பெருமளவானோர் கூடும் இடங்களுக்கு செல்வதனை தவிர்க்குமாறும், உள்ளூர் அதிகாரிகளின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.

The post துருக்கியில் அமைதி திரும்ப வேண்டும்! – கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™