Tamil Star |
- நோர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்
- முதுமைக் கால சேமிப்பில் கனேடியர்களின் நிலை
- ஐ.நாவின் அமைதிகாப்பு நடைவடிக்கைகளில் கனடா
- முகச் சுருக்கமின்றி இளமையை தக்கவைக்க சூப்பரான வழிகள்!
| நோர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் Posted: 13 Jul 2016 08:29 PM PDT
இரண்டு வாகனங்களில் இருந்து ஒன்றை ஒன்று நோக்கி துப்பாக்கிப் பிரயோகங்கள் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, சம்பவம் இடம்பெற்ற Laura வீதி மற்றும் Sheppard Avenue பகுதிக்கு பிற்பகல் 5 மணியளவில் தாம் வரவழைக்கப்பட்டதாக ரொரன்ரோ காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். ஒரு கறுப்பு நிற வாகனம் Laura வீதியின் தெற்கு நோக்கிய தடத்தில் சென்று கொண்டிருக்கையில், அதன் இடது புறமாக மற்றொரு கறுப்பு நிற வாகனம் முந்திச் சென்ற போது இரு வாகனங்களிற்கும் இடையில் துப்பாக்கிக்ப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது. இதேவேளை காவல்த்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்ற போது முதலாவது வாகனம் அந்த இடத்திலேயே நின்றதுடன், அதில் இருந்த இருவர் காயமடைந்த நிலையில் காணப்பட்டனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இரண்டாவது வாகனம் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் கூறப்படும் நிலையில், காவல்த்துறையினர் அதனைத் தேடி வருகின்றனர். காயமடைந்த இருவரும் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்ற போதிலும், ஒருவர் உயிரிழந்து விட்டதாக இரவு 7 மணியளவில் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். முதலாவது வாகனத்தின் சாரதியான 21 வயது நபரே உயிரிழந்துள்ளதாக கூறப்பட்ட போதிலும், அவரின் பெயரை காவல்த்துறையினர் வெளியிடவில்லை. அதேவேளை காயமடைந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 21 வயதான மற்றைய நபர் காவல்த்துறையினரின் விசாரணைகளுக்கு ஒத்துழைத்து வருவதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post நோர்த் யோர்க்கில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முதுமைக் கால சேமிப்பில் கனேடியர்களின் நிலை Posted: 13 Jul 2016 06:25 AM PDT
பிரபல அனைத்துலக வங்கியான HSBC வெளியிட்டுள்ள அந்த ஆய்வு முடிவில், வேலை செய்யும் வயதில் உள்ள கனேடியர்களில் சுமார் அரைப்பங்கினர், தமது முதுமைக் காலத்திற்கு தேவையான சேமிப்புக்களை மேற்கொள்வதில்லை என தெரிக்கப்பட்டுள்ளது. 48சதவீதமான வேலைசெய்யும் கனேடியர்கள் இதுவரை தமது ஓய்வுகால சேமிப்பை ஆரம்பிக்கவில்ல என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. வேலைக்கு செல்லும் கனேடியர்களில் ஐந்தில் ஒரு பங்கினர், தமது செலவுகளை குறைப்பதன் மூலம் அல்லது தமது வீட்டினையோ, வேறு சொத்துக்களையோ விற்பதன் மூலம் தமது ஓய்வுகாலத்திற்கான நிதியினைப் பெற்றுக்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது. அதேவேளை ஓய்வுபெறும் வயதினை எட்டும் கனேடியர்களில் பெரும்பாலானோர், மகிழ்ச்சியான முறையிலேயே அதனை எதிர்கொள்வதாகவும் அந்த ஆய்வு தெரிவித்துள்ளது. உலக அளவில் ஒப்பிடும் போது,கனடாவில் ஓய்வு பெறுவோரில் 72 சதவீதம் பேர் மகிழ்ச்சியாக இருப்பதாக தெரிவிக்கப்படுகிறது. மகிழச்சியாக ஓய்வு பொறுவோரின் நாடுகள் பட்டியலில் முதலாவது நிலையில் மெக்சிக்கோ உள்ள நிலையில் இரண்டாவது இடத்தை கனடா பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. மெக்சிக்கோவில் ஓய்வு பெறுவோரில் 80 சதவீதமானோர் மகிழ்ச்சியான ஓய்வினை அனுபவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. The post முதுமைக் கால சேமிப்பில் கனேடியர்களின் நிலை appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐ.நாவின் அமைதிகாப்பு நடைவடிக்கைகளில் கனடா Posted: 13 Jul 2016 06:20 AM PDT
ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் அமைதிகாப்பு நடவடிக்கைகளில் கனேடிய இராணுவத்தினையும் இணைத்துக் கொள்வதற்கான தயார்படுத்தல்களில் கனேடிய அரசாங்கம் ஈடுபட்டு வருவதாக கூறப்படும் நிலையில் இந்த எதிர்பார்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோனின் பேச்சாளர் இது தொடர்பில் நேற்று வெளியிட்ட தகவலில், பல்வேறு முனைப்புக்களில் கனடாவின் தலைமைத்துவத்தினை நிலைநாட்டுவதை மீள ஒழுங்குபடுத்தும் முனைப்புக்களில் தற்போதய லிபரல் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். இதன் வாயிலாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் அமைதி காப்பு நடவடிக்கைகளில் கனடாவின் பங்களிப்பினை நீட்டிப்பதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபடும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அமைதிகாப்பு படை நடவடிக்கைகள் மட்டுமின்றி, பாதிப்புக்குள்ளான நாடுகளில் மோதல் தவிர்ப்பு, நடுநிலைமை வகித்தல், சமாதான ஏற்பாடுகள் போன்ற நடவடிக்கைகளையும் மேற்கொள்ள கனடா ஆர்வம் கொண்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோனின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார். The post ஐ.நாவின் அமைதிகாப்பு நடைவடிக்கைகளில் கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| முகச் சுருக்கமின்றி இளமையை தக்கவைக்க சூப்பரான வழிகள்! Posted: 13 Jul 2016 04:43 AM PDT
அதைப் பார்த்து பலரும் ஏக்கப் பெருமூச்சு விடுவதுண்டு. இளமையை தக்க வைத்துக் கொள்ள என்ன தான் சாப்பிடுகிறாரோ? என்று நினைப்பதும் உண்டு. அவ்வாறு ஏங்கும் பெண்களுக்கு இளமையை தக்கவைக்க எளிய டிப்ஸ். உருளைக்கிழங்கு உருளைக்கிழங்கை ஒரு பேஸ்ட் போல செய்து உறங்குவதற்கு முன்பு முகத்தில் தடவி, 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இது ஆரோக்கியமான தோலை தருகிறது பால் காய்ச்சாத பாலை முகத்தில் தடவி வர (தினமும் அல்லது 2 நாட்களுக்கு ஒருமுறை) சுருக்கங்கள் மறையும். ரோஸ் வாட்டர் ரோஸ் வாட்டர்- ஒரு தேக்கரண்டி, தேன்- ஒரு தேக்கரண்டி, கஸ்தூரி மஞ்சள் தூள்- ஒரு தேக்கரண்டி மூன்றையும் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவவும். இந்த பேஸ்ட் ஒரு சிறந்த ஆன்டி- ஏஜிங்காக செயல்படுகிறது. முட்டையின் வெள்ளைக்கரு முட்டையின் வெள்ளைக்கருவுடன் ஒரு முழு தேக்கரண்டி பாதாம் ஆயிலை நன்கு கலக்க வேண்டும். இந்த கலவையை முகச்சுருக்கம் உள்ள இடத்தில் தடவி 30 நிமிடங்கள் கழித்து குளிர்ந்த நீரில் கழுவ, முகத்தில் உள்ள இறந்த செல்கள் நீங்கி, சருமத்திற்கு தேவையான புரோட்டீன்கள் கிடைக்கும். பாதாம் ஆயில் தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்கள் முன்பு பாதாம் ஆயிலை முகத்தில் தடவி குழித்து வர, நாளைடைவில் முகம் பொலிவு பெறும். The post முகச் சுருக்கமின்றி இளமையை தக்கவைக்க சூப்பரான வழிகள்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

நோர்த் யோர்க்கில் இன்று புதன்கிழமை பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது முதுமைக் காலத்திற்கு தேவையான சேமிப்புக்களை மேற்கொள்வது தொடர்பில் நடாத்தப்பட்ட ஆய்வு முடிவு ஒன்று வெளியாகியுள்ளது.
ஐ.நாவின் புதிய அமைதிகாப்பு நடைவடிக்கைகளுக்காக தனது துருப்புக்களையும் அனுப்பி வைக்கும் அறிவிப்பினை கனடா விரைவில் வெளியிடக்கூடும் என எதிர்பார்ப்புக்கள் வெளியாகியுள்ளன.
ஐம்பது வயதிற்கு மேல் ஆனாலும் பெண்களில் சிலர் ஜம் மென்று அழகாக காட்சியளிப்பர்.