Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Canada Post பணியாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது

Posted: 11 Jul 2016 08:24 AM PDT

lk

lkவேலை நிறுத்தம் எவையும் இன்று இடம்பெறமாட்டாது என Canada Post தெரிவித்துள்ளது.

Canada Post பணியாளர்கள் இன்று திங்கட்கிழமையில் இருந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக முன்னர் அறிவித்திருதமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையிலேயே அந்த வேலைநிறுத்த திட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டதான அறிவிப்பினை Canada Post விடுத்துள்ளது.

Canada Postஇன் சுமார் 50,000 பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தொழிற்சங்கத்திற்கும் Canada Postற்கும் இடையே நடாத்தப்பட்ட பேச்சுக்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதை அடுத்தே தமது வேலைநிறுத்த முயற்சியைக் கைவிடுவதான முடிவினை பணியாளர் சங்கம் மேற்கொண்டுள்ளது.

அத்துடன் இந்த பேச்சுக்களின் போது குறித்த விவகாரம் தொடர்பில் காத்திரமான தீர்வினைக் காணும் வகையில் பேச்சுக்களை தொடர்வது என்றும் முடிவெடுக்கப்பட்டுள்ளது.lk

வேலை நிறுத்தம் கைவிடப்பட்டமையால் Canada Postஇன் சேவைகள் இன்று வழமை போல தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை இரு தரப்பினராலும் மேற்கொள்ளப்பட்ட இந்த முடிவு குறித்து பணியாளர் துறை அமைச்சர் மகிழ்ச்சி வெளியிட்டுள்ளார்

அத்துடன், ஏற்கனவே விதிக்கப்பட்ட கால எல்லைகளையும் தாண்டி ஆக்ககரமான பேச்சுக்களில் ஈடுபடுமாறு இருதரப்பினரிடமும் வலியுறுத்தியுள்ள அவர், இரண்டு தரப்புக்கும் இடையே சிறந்ததொரு இணக்கப்பாடு விரைவில் எட்டப்படும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

The post Canada Post பணியாளர்களின் வேலை நிறுத்தம் தற்காலிகமாக கைவிடப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு

Posted: 11 Jul 2016 07:36 AM PDT

m

mஉடல் எடையை குறைக்க விரும்புவர்கள் கருணைக்கிழங்கை சாப்பிடலாம். நோய்களில் குறிப்பாக மூலநோயை குணப்படுவதில் சிறந்தது.

சத்துக்கள்

விட்டமின் சி, விட்டமின் பி, மாங்கனீஸ், மினரல்ஸ், ரிபோபிளேவின், பொட்டாசியம், இரும்பு, போன்ற சத்துக்கள் உள்ளன.

மருத்துவ பயன்கள்

மாதவிடாய் காலங்களில் ஏற்படும் வலி மற்றும் மாதவிடாய் ஏற்படுவதில் பிரச்சனை போன்றவை சீராகும்.

பித்தப்பை பிரச்சனை, எலும்புகள் பலவீனம், கருத்தரித்தலில் ஏற்படும் பிரச்சனைகளை சரிசெய்கிறது.

கருணைக்கிழங்கு சாப்பிடுவதால் கபம், வாதம், ரத்த மூலம் ஆகியன குணப்படுகின்றன. மேலும் கருணைக்கிழங்கு பசியைத் தூண்டி இரைப்பைக்கு பலம் சேர்க்கும்.

மூல நோயை குணப்படுத்தும், ஒருமாதம் வரை வேறு உணவு ஒன்றையும் சாப்பிடாமல் கருணைக் கிழங்கை மாத்திரம் வேக வைத்து அப்படியே உணவாக சாப்பிடவும், நாக்கில் ஏற்படும் வறட்சி மாற மோர் மட்டுமே சாப்பிட்டு வர மூலம் பூரணமாகக் குணமாகிவிடும்.

உணவில் பெருமளவில் கருணைக் கிழங்கை புட்டவியலாக வேக வைத்து, எண்ணெய்யும் உப்பும் மட்டும் சேர்த்து வதக்கிச் சாப்பிட்டு வருவது நல்லது.

இதன் சுவை வீரியமுள்ளது, அதில் துவர்ப்புச் சுவையுமுள்ளதால் ரத்தக் குழாய்களைச் சுருங்க வைக்கும்.

கருணைக்கிழங்கு ப்ரை

கருணைக்கிழங்கை வேகவைத்து தோலுரித்துக் கொள்ளவும். சிறு துண்டுகளாக நறுக்கி அதை உப்பு, கரம் மசாலாவில் புரட்டி எடுத்து, 10 நிமிடம் வைக்கவும்.

பிறகு அந்த கருணைக்கிழங்கு துண்டுகளை நன்றாக காய்ந்த எண்ணெய்யில் போட்டு, பொன்னிறம் வரும் வரை விட்டு பிறகு எடுக்கவும்.

இப்போது சுவையான கருணைக்கிழங்கு ப்ரை ரெடி.

குறிப்பு: மார்பக புற்றுநோய், கருப்பை புற்றுநோய் போன்றவற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இதனை தவிர்ப்பது நல்லது, ஏனெனில் இந்த நோயின் தாக்கத்தை ஏற்படுத்து ஈஸ்ட்ரோஜன் ஹார்மோனின் வெளிப்பாடு மோசமாக இருக்கும்.

The post ஒரு மாதம் கருணைக்கிழங்கு சாப்பிட்டால் கிடைக்கும் தீர்வு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்!

Posted: 11 Jul 2016 07:33 AM PDT

download (1)

download (1)காலை உணவு அனைவருக்கும் முக்கியமான ஒன்று எனினும், நாம் என்ன சாப்பிட வேண்டும் என்பது முக்கியமான ஒன்றே. சிலர் காலை உணவை தவிர்ப்பதற்காக சாக்லேட், ஸ்வீட் டிரிங்க்ஸ் போன்றவற்றை உட்கொள்வார்கள். அது தவறான ஒன்று.

பழச்சாறு

காலையில் வெறும் வயிற்றில் பழச்சாறு குடிக்கக்கூடாது ஏனெனில் அதில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகமாக இருக்கும். நீங்கள் பழச்சாறு குடிக்க வேண்டுமெனில் ஒரு டம்ளர் தண்ணீர் குடித்து விட்டு பிறகு பழச்சாறு குடிக்கவும்.

வாழைப்பழம்

வாழைப்பழத்தில் அதிக அளவில் மெக்னீசியம் உள்ளதால், உடலில் கால்சியம் மற்றும் மெக்னீசியத்தில் ஏற்றத்தாழ்வுகள் ஏற்படக்கூடும்.

தயிர்

தயிர் நிறைய நல்ல பாக்டீரியாக்கள் இருந்தாலும் அதை வெறும் வயிற்றில் குடிப்பதை தவிர்க்கவும். ஏனெனில் இந்த நல்ல பாக்டீரியாக்கள் வயிற்று படலத்துடன் சேர்ந்து வயிற்றில் உப்புசத்தை ஏற்படுத்தி விடும்.

காரமான உணவுகள்

காரமான உணவுகளை காலை வேளையில் உட்கொண்டால் அவை வயிற்றில் உள்ள அமிலத்துடன் சேர்ந்து வயிற்று வலியை ஏற்படுத்தி விடும்.

காபி மற்றும் டீ

காலையில் வெறும் வயிற்றில் காபி டீ குடிப்பதற்கு பதிலாக ஒரு தம்ளர் தண்ணீர் குடித்து விட்டு, குடித்தால் வயிறு சம்பந்தமான பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

சர்க்கரை வள்ளிக்கிழங்கு

இதில் உள்ள டானின் மற்றும் பெக்டின் குடல் வாலைத்தூண்டு அதிகப்படியான செரிமான அமிலத்தை சுரக்கச்செய்து, நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும்.

The post வெறும் வயிற்றில் இந்த உணவுகளை சாப்பிட வேண்டாம்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கண் பார்வை குறைபாட்டை போக்கும் பேரீச்சை

Posted: 11 Jul 2016 07:29 AM PDT

download

downloadசத்துப் பொருட்களை எளிதில் பெற இயற்கை சில பல பொருட்களை நம்மிடத்தில் தந்துள்ளது. அதில் பேரிச்சை மிகவும் அற்புதமான ஒன்று. வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் சத்துப் பொருட்கள் இதில் நிறைந்துள்ளன. சீரான உடல் வளர்ச்சிக்கும், நலமாக இருப்பதற்கும் ஒவ்வொருவரும் அவசியம் பேரீச்சை உண்ண வேண்டும்.

புற்றுநோய்

சிறந்த நோய் எதிர்ப் பொருள்களான லுடின், ஸி-சாந்தின் மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. இவை குடல், தொண்டை, மார்பகம், நுரையீரல், இரைப்பை ஆகிய உறுப்புகளைத் தாக்கும் புற்றுநோய்களுக்கு எதிராக செயல்படக் கூடியது.

கண்பார்வை

டேனின்ஸ் எனும் ஆன்டி ஆக்ஸிடென்ட் பே‌ரிச்சையில் உள்ளது. இது நோய்த் தொற்று, ரத்தம் வெளியேறுதல், உடல் உஷ்ணமாதல் ஆகியவற்றுக்கு எதிராக செயல்படக்கூடியது.

'வைட்டமின் ஏ', பே‌ரிச்சையில் ஏராளமான அளவில் உள்ளது. இது கண் பார்வைக்கும், குடல் ஆரோக்கியத்திற்கும், சருமத்திற்கும் அவசியமானது.

இரும்பு சத்து

பே‌ரிச்சை இரும்புச் சத்தை ஏராளமாக அள்ளி வழங்கும். 100 கிராம் பே‌ரிச்சையில் 0.90 மில்லிகிராம் இரும்பு‌ச் ச‌த்து உள்ளது. இரும்புத் தாது, ரத்தத்திற்கு சிவப்பு நிறம் வழங்கும் ஹ‌ீமோகுளோபின் உருவாக்கத்தில் பங்கு வகிப்பதாகும். இது ரத்தத்தில் ஆக்சிஜனை சுமந்து செல்லும் ப்ளேட்ளெட்ஸ் அளவை தீர்மானிப்பதிலும் பங்கெடுக்கிறது.

நார்சத்து

பேரிச்சையில் உள்ள நார்ச்சத்துக்கள் எளிதாக ஜீரணமாகும். உண்டதும் புத்துணர்ச்சியும், சக்தியும் உடலுக்கு கிடைக்கிறது.

கெட்ட கொழுப்புகளை உறிஞ்சி அகற்றும் ஆற்றல் பே‌ரிச்சைக்கு உண்டு. பெருங்குடற் பகுதியில் புற்றுநோயை உருவாக்கும் ரசாயனங்களை நீக்குவதிலும் பே‌ரிச்சைக்கு ஈடு இல்லை.

கால்சியம்

இதில் உள்ள கால்சியம், எலும்புகள் மற்றும் பற்களின் பலத்திற்கு அவசியம். நாடித் துடிப்பை சீராக்குதல் மற்றும் ரத்தக் கட்டி ஏற்படுவதை தடுத்தல் ஆகியவற்றிலும் பங்கு வகிக்கிறது.

பொட்டாசியம்

பொட்டாசியம் தாது குறிப்பிட்ட அளவில் உள்ளது. இது இதயத்துடிப்பு மற்றும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கட்டுப்படுத்துவதிலும் பங்கு வகிக்கிறது. இதனால் ஏற்படும் பக்கவாதம், இதய வியாதிகள் ஏற்படாமலும் காக்கிறது.

The post கண் பார்வை குறைபாட்டை போக்கும் பேரீச்சை appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

உக்ரேனைச் சென்றடைந்துள்ள கனேடியப் பிரதமர்

Posted: 11 Jul 2016 07:22 AM PDT

nb

nbபோலந்தில் ஆர்ஸவிட் பேர்கினோ தடுப்புமுகாமிற்கு சென்று அதனை பார்வையிட்ட நெகிழ்சியான நிகழ்வைத் தொடர்ந்து கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ உக்ரெய்ன் நாட்டைச் சென்றடைந்துள்ளார்.

கனேடியப் பிரதமரின் இந்த உக்ரெய்ன் பயணத்தின் போது அந்த நாட்டு பாதுகாப்பு துறையினை மேம்படுத்துவதற்கான ஆயுத தளபாட உதவிகளை கனடா வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதனிடையே உக்ரெய்ன் கனடாவிடமிருந்து ஆயுத தளபாடங்களை கொள்வனவு செய்யவுள்ளதாகவும், அது தொடர்பிலான பாதுகாப்பு தரப்பு ஒப்பந்தம் உக்ரெய்னுக்கும் கனடாவுக்கும் இடையே செய்துகொள்ளப்படவுள்ளதாகவும், ஒட்டாவில் உள்ள உக்ரெய்ன் உயர்ஸ்தானிகரை மேற்கோள் காட்டி உக்ரெய்ன் ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.nb

அத்துடன் வார்சோவில் நடந்து முடிந்த நேட்டோ மாநாட்டின் அடிப்படையில் இந்த உடன்பாடு செய்துகொள்ளப்படக்கூடிய சாத்தியப்பாடுகளையும் உக்ரெய்ன் உயர்ஸ்தானிகர் நிராகரிக்கவில்லை என கூறப்படுகிறது.

அந்த வகையில் கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோவின் இந்த உக்ரெய்ன் பயணத்தின் போது இருநாட்டு தலைவர்களுக்கும் இடையே குறித்த இந்த உடன்பாடு கையெழுத்தாகலாம் என்றும் நம்பப்படுகிறது.

போலந்தின் தலைநகரான வார்சோவில் நடைபெற்ற நேட்டோ உச்சிமாநாட்டில் கலந்துகொண்ட கனேடியப் பிரதமர், மாநாட்டின் பின்னர் போலந்தில் ஆர்ஸவிட் பேர்கினோ தடுப்புமுகாமினையும் சென்று பார்வையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து தற்போது உக்ரேனைச் சென்றடைந்துள்ள கனேடியப் பிரதமர் தமது இந்த ஆறுநாள் தொடர் பயணத்தை நிறைவுசெய்துகொண்டு நாளை செவ்வாய்கிழமை கனடா திரும்புகிறார்.

The post உக்ரேனைச் சென்றடைந்துள்ள கனேடியப் பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் தெற்கு ஒன்ராறியோ

Posted: 11 Jul 2016 07:16 AM PDT

v

vரொரன்ரோ பெரும்பாகத்தை உள்ளடக்கிய ஒன்ராறியோவின் தென்பிராந்தியத்தின் பெரும்பாலான பாகங்களுக்கு சிறப்பு வானிலை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

கனடா சுற்றுச்சூழல் அமைப்பு வெளியிட்டுள்ள அந்த சிறப்பு வானிலை அறிக்கையில், இந்த வாரத்தில் அந்த பிராந்தியத்தில் வெப்பமான மற்றும் ஈரப்பதன் கொண்டதான காலநிலை நிலவக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மெக்சிக்கோ வளைகுடாவில் இருந்து வீசும் சூடான, ஈரப்பதனை சுமந்து வரும் இந்த காற்று, ஒன்ராறியோவின் தென்பிராந்தியங்களில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என கனடா சுற்றுச் சூழல் மையம் நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுத்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.v

ஒன்ராறியோவின் தென்பிராந்தியங்களின் பெரும்பாலான இடங்களில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமையில் இருந்து வியாழக்கிழமை வரையான நாட்களில் வெப்பநிலை 30பாகை செல்சியசுக்கும் 33பாகை செல்சியசுக்கும் இடைப்பட்டதாக இருக்கம் என்றும், இரவில் அது 20 இலிருந்து 23 பாகை செல்சியசுக்கு குறைவடையும் என்றும் கூறியுள்ளது.

இந்த வெப்பநிலை காரணமாக தற்காலிகமாக மழைத் தூறல் அல்லது இடியுடன் கூடிய மழையை சில இடங்களில் இந்த வாரம் எதிர்பார்க்கலாம் என்றும் கனடா சுற்றுச் சூழல் அமைப்பு தெரிவித்துள்ளது.

The post அதிக வெப்பத்தை எதிர்கொள்ளும் தெற்கு ஒன்ராறியோ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™