Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

ஜனநாயக விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் இலங்கை வருகை!

Posted:

ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவிச் செயலாளர் டொம் மலினொவ்ஸ்கி இலங்கைக்கான விஜயமொன்றை மேற்கொண்டு சற்றுமுன்னர் (இன்று திங்கட்கிழமை) வந்தடைந்தார். 


Read more ...

கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அரைவாசியாக குறைப்பு!

Posted:

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டிருந்த இராணுவப் பாதுகாப்பு அரைவாசியாக குறைக்கப்பட்டு, அதற்கு மாற்றீடா விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். 


Read more ...

நாமல் ராஜபக்ஷவின் கைது அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை: மஹிந்த ராஜபக்ஷ

Posted:

ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ கைது செய்யப்பட்டமை அரசியல் பழிவாங்கல் என்று முன்னாள் ஜனாதிபதியும், நாமல் ராஜபக்ஷவின் தந்தையுமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 


Read more ...

இந்திய இழுவைப் படகுகளின் அத்துமீறலைக் கண்டித்து வடக்கு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்!

Posted:

இந்திய இழுவைப் படகுகள் இலங்கையின் வடக்கு கடற்பகுதியில் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபடுவதைக் கண்டித்து வடக்கு மாகாண மீனவர் சங்கங்கள் ஒன்றிணைந்து வடக்கு மாகாண சபையின் முன்னால் இன்று செவ்வாய்க்கிழமை காலை ஆர்ப்பாட்டப் போராட்டமொன்றை முன்னெடுத்தன. 


Read more ...

கபாலிக்கு யு கிடைப்பதற்குள்?....

Posted:

22 ந் தேதி ரிலீஸ் என்று சிங்கப்பூர் மலேசியாவில் அறிவித்தாகிவிட்டது.


Read more ...

ஹிந்துத்வாவை பாஜக தலைவர்கள் இன்னமும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் - ஹெச்.ராஜா

Posted:

தமிழக பாஜகவில் முக்கிய தலைவர்கள் என்று சொன்னால் முதலில் நினைவுக்கு வருபவர் காரைக்குடியைச் சேர்ந்த ஹெச்.ராஜாதான். எந்தவித ஊழல் குற்றச்சாட்டுக்களும் கிடையாத கறைபடாத கரங்களுக்குச் சொந்தமானவர் எனக் கருதப்படும் இவர், மனதில் பட்டதை அப்படியே கூறிவிடுவார். அதனால் உண்டாகும் சர்ச்சைகள் குறித்தெல்லாம் இவர் கவலைக்கொள்வதில்லை.

மத்தியில் ஆளும் காட்சியைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதி என்ற  வகையில் அவரைச் சந்தித்த போது;

தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சி எப்படி உள்ளது?

தமிழகத்தில் பாஜக வளர்ச்சி என்று கேட்டால், சொல்ல முடியாத நிலையில்தான் உள்ளது. மத்தியில் செல்வாக்கு உள்ளதை வைத்துதான் பாஜகவை பார்க்க வேண்டும். காரணம் என்ன என்றால் தமிழக மக்கள் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். தமிழகத்தில் கருணாநிதி ஆட்சி வேண்டுமா, வேண்டாமா என்பதுதான் அது. கருணாநிதி ஆட்சி வேண்டும் என்றால் அவருக்கு வாக்களிக்கிறார்கள். வேண்டாம் என்று முடிவெடுத்தால், அதிமுகவுக்கு வாக்களிக்கிறார். இதுதான் தமிழக மக்களின் நிலைப்பாடு.

பாஜக ஹிந்துத்வாவை வலியுறுத்துகிறது என்று பலத்த குற்றச்சாட்டுக்கள் உள்ளன. பல்வேறு சர்ச்சைகளும் எழுந்த வண்ணம் உள்ளனவே. இதுக் குறித்து?

என்னைப் பொறுத்தவரை பாஜக தலைவர்கள் ஹிந்துத்வாவை இன்னமும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும் என்பதுதான். எந்தவிதமான சர்ச்சைகள் குறித்தும் கவலைப்படக் கூடாது. தமிழகத்தில் திமுகவும்,அதிமுகவும் வாக்குகளுக்காக கொள்கைகளை விட்டுக்கொடுக்கிறார்கள். என்னைப் பொறுத்தவரை பெரியார் சிலைக்கு மாலை போடும் அதிமுகவும், திமுகவின் கொள்கையுடைய கட்சிதான் என்று சொல்வேன். என்ன, திமுகவினர் கோயிலுக்குச் செல்ல மாட்டார்கள், அதிமுகவினர் கோயிலுக்குச் செல்வார்கள். ஆனால், இருவருமே பெரியார் சிலைக்கு மாலையிடுகிறார்கள் என்றால், இதில் என்ன வேறுபாடு இருக்கிறது.மக்களிடம் ஹிந்துவா கொள்கையை சீரழிக்க வந்தவர்கள் இவர்கள் கருணாநிதியும், ஜெயலலிதாவும்..ஒரு பாரம்பரிய கோயில் சீரமைக்கப்பட வேண்டும் என்கிற நிலையில்தான் அரசு அந்த கோயிலை எடுத்து மூன்று வருடங்கள் பராமரித்து சீரமைத்து உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சட்டம் இருக்கிறது. ஆனால், இங்கு அப்படியா நடக்கிறது. அனைத்துக் கோயில்களையும் அரசே எடுத்துக்கொண்டு, கோயில் நிலங்களை ஆக்கிரமிப்பு என்கிற பெயரில் பல்வேறு சூழல்களையும் உருவாக்கி, கோயிலுக்கு நிலமில்லை என்கிற ரீதியில் இப்போதான சூழல் என்றாகி உள்ளது. ஒரு இஸ்லாம் வழிப்பாட்டுத் தலம் இஸ்லாம் மக்களிடம் உள்ளது. ஒரு கிறிஸ்தவ வழிப்பாட்டுத் தலம் என்பது அந்த கிறிஸ்தவ மக்களிடம் உள்ளது. ஆனால்,ஹிந்து கோயில் மட்டும், அரசிடம் உள்ளது. இந்தநிலை எதற்காக? ஒரு இஸ்லாம் தலைவர் இறந்தால் உடனடியாக அரசு இழப்பீடு வழங்குகிறது. இதே ஒரு ஹிந்து தலைவர் இறந்துவிட்டால் கண்டு கொள்வதில்லை. இதெற்கெல்லாம் என்ன காரணம்?  இவர்களின் வாக்குகள் சிந்தாமல் சிதறாமல்கி இவர்களுக்கு கிடைக்க வேண்டும் என்பதால்தான். இதைத்தான் ஹிந்து துரோகம் என்று சொல்கிறேன்.

பாஜக இப்போது இதை மாற்றும் முயற்சியில்தான் அனைவருக்கும் பொதுவான சிவில் சட்டம் என்பதை நிறைவேற்றி உள்ளது. இரண்டாவதாக மதமாற்றுத் தடைச் சட்டம் அமல்படுத்தி உள்ளது.எனவே, ஹிந்துத்வாவை பாஜக தலைவர்கள் இன்னமும்
அழுத்தமாகச் சொல்ல வேண்டும். இதைக் கொண்டு சேர்க்கத் தொண்டர்கள் வேண்டும், இந்த தொண்டர்கள் மூலமாகத்தான் ஹிந்து என்கிற அடையாளம் விரிவடையும்.இந்த அடையாளம் தேவைப்படுகிற காலக்கட்டம் என்பதால், ஹிந்துவாவை தலைவர்கள் இன்னமும் அழுத்தமாகச் சொல்ல வேண்டும்.

1989ம் ஆண்டு அத்வானி அவர்கள் சென்னை மெரீனா கடகரையில் உரை நிகழ்த்தியது இன்னும் என் நினைவில் உள்ளது. அதாவது ராம ஜென்ம பூமி என்கிற இயக்கத்தைத் துவக்க உள்ளேன். இதில் ராமர் கோயில் காட்டியேத் தீர வேண்டும் என்பது முடிவு. இதை ஆதரிக்கிறேன் என்றோ, அல்லது ஆதரிக்க மாட்டேன் என்றோ, அல்லது நடுநிலை வகிக்கிறோம் என்றோ எந்த ஒரு ஹிந்துவும் சொல்லக் கூடாது. இந்த இயக்கத்தை ஒப்புக் கொள்கிறேன் என்று சொல்ல வைக்க என்னால் முடியும் என்று கூறினார். ஹிந்துத்வா எனப் பிதற்றுபவர்களுக்கு இதுதான் பதில்.

சமஸ்கிருதத்தைத் திணித்தால் இந்தித் திணிப்பை எதிர்த்து மாபெரும் போராட்டம் நடத்தியதை போல, சமஸ்கிருத மொழிக்கு எதிராகவும் மாபெரும் போராட்டம் நடத்துவோம் என்று திமுக தலைவர் திரு.மு.கருணாநிதி கூறியுள்ளாரே. இதற்கு தங்கள் பதில் என்ன?

கருணாநிதி தமிழுக்கு என்ன கிழித்தார்? தேவாரம், திருவாசகம் போன்று பெரும் காப்பியங்கள் எதுவும் படைத்தாரா? தொல்காப்பிய பூங்கா, வேலைக்காரி என்று ஏதோ எழுதி சமூகத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தினார். பெண்களை இழிவுப் படுத்தினார்.பாலியல் உணர்வுகளை எழுத்தின் மூலம் தூண்டிவிட்டவர் கருணாநிதி.

இவரது மகள் ஹிந்தி படித்துள்ளார். பேத்திகள் ஹிந்தி படித்துள்ளனர்.பேரன்கள் ஹிந்தி படித்துள்ளனர்.ஆனால்,மக்களுக்கு என்று
பொதுவாக கொடுக்க நினைத்தால் அது திணிப்பா? இவரது மகன் ஸ்டாலின் மகள் நடத்தும் பள்ளியில் தமிழ் ஒரு பாடமாக்க கூட இல்லை. இவர் சமஸ்கிருதத்துக்கு எதிராகப் போராட்டம் நடத்தினால், நான் இவரது பேத்தி நடத்தும் பள்ளியின் முன் மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவேன்.


Read more ...

இலங்கை- இந்திய ஒப்பந்தம் தமிழ் ஆயுதப் போராட்ட இயக்கங்களை ஜனநாயகப் பாதைக்கு திருப்பியது: மனோ கணேசன்

Posted:

இலங்கை- இந்திய ஒப்பந்தம், இலங்கை அரசியலமைப்பில் 13வது திருத்தத்தை மாத்திரம் அறிமுகப்படுத்தவில்லை. அது, தமிழ்த் தேசிய விடுதலை முன்னிறுத்தி ஆயுதமேந்தி போராடிய நான்கு இயக்கங்களை ஜனநாயகப் பாதைக்கு திருப்பி விட்டது என்று தமிழ் முற்போக்குக் கூட்டணி தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வரி அதிகரிப்புக்கு எதிரான உயர்நீதிமன்ற உத்தரவு அரச வருமானத்தைப் பாதிக்காது: பிரதமர் அலுவலகம்

Posted:

பெறுமதி சேர் வரி (VAT) மற்றும் தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி (NBT) ஆகியவற்றின் அதிகரிப்புக்கு எதிராக உயர்நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடை அரச வருமானத்தில் பாதிப்பை ஏற்படுத்தாது என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் அலுவகம் தெரிவித்துள்ளது. 


Read more ...

வடக்கிலிருந்து இராணுவம் விகாரைகளுடன் வெளியேற வேண்டும்: துரைராசா ரவிகரன்

Posted:

வடக்கிலிருந்து இராணுவம் வெளியேறும் போது விகாரகைளையும் கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு மாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

போர்க்குற்ற விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் மாற்றமில்லை: இரா. ...

Posted:

இலங்கையின் இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளில் சர்வதேச நீதிபதிகள் உள்ளடக்கப்பட வேண்டும் என்கிற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாட்டில் மாற்றமில்லை என்று அந்தக் கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். 


Read more ...

வலிகாமம் வடக்கில் மீளக்குடியேறவுள்ள 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைக்க இராணுவம் முடிவு!

Posted:

யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் மீளக்குடியமர்வதற்காக காணிகள் வழங்கப்பட்டுள்ளவர்களுள் 100 குடும்பங்களுக்கு வீடுகளை அமைத்துக் கொடுப்பதற்கு இராணுவம் தீர்மானித்துள்ளது. 


Read more ...

இலங்கையில் சிகரெட் புகைப்போரில் மூன்று வீதமானவர்கள் பள்ளி மாணவர்கள்: மைத்திரிபால சிறிசேன

Posted:

கடந்த ஆண்டு சுகாதார அமைச்சு மேற்கொண்ட கணக்கெடுப்பொன்றின் பிரகாரம், இலங்கையில் சிகரெட் புகைப்போரில் நூற்றுக்கு மூன்று வீதமானவர்கள் பாடசாலை மாணவர்கள் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரிட்டன் பிரதமர் கேமரூன் பதவி விலகல்!: புதிய பிரதமராக தெரசா அறிவிப்பு

Posted:

ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் வெளியேறுவதாக பெரும்பான்மை மக்கள் வாக்களித்ததை அடுத்து பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் எதிர்வரும் 13 ஆம் திகதி பதவி விலகப் போவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.


Read more ...

சீனாவின் நேபர்டக் புயலில் கடும் சேதம்!:எக்குவடோரில் மறுபடி இரு வலிமையான நில நடுக்கங்கள்

Posted:

சீனாவில் கடந்த சில நாட்களாகத் தாக்கி வரும் நேபர்டக் என்ற புயல் அங்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. புயலில் சிக்கி இருவர் மட்டுமே உயிரிழந்ததாகத் தகவல் உள்ள போதும் சுமார் 4 இலட்சம் பேர் இடம்பெயர்ந்துள்ளனர்.


Read more ...

அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவை முடிவுக்குக் கொண்டு வர வடகொரியா திட்டம்!

Posted:

THAAD System எனப்படும் ஏவுகணைகளுக்கு எதிரான தென்கொரியாவினதும் அமெரிக்காவினதும் கூட்டு எதிர்ப்பு கேடயத்தைத் தாக்கி அழிப்போம் எனவும் இதை நிறுவ முனையும் தென்கொரியா மோசமான அழிவை விரைவில் சந்திக்கும் எனவும் வடகொரியா அண்மையில் தான் எச்சரித்திருந்தது. இந்நிலையில் வடகொரியா அமெரிக்காவுடனான இராஜதந்திர உறவை முடிவுக்குக் கொண்டு வரப் போவதாக திங்கட்கிழமை அறிவித்துள்ளது.


Read more ...

மொகஞ்சதாரோ

Posted:

தொன்மை மிகு நதிக்கரை நாகரீகங்களின் அடையாள நகரங்களாக, தொல்துறை ஆராய்ச்சியாளர்களினால் குறிப்பிடப்படுபவை, மொகஞ்சதாரோ ஹரப்பா.


Read more ...

இராமேஸ்வரம் மீனவர்கள் வேலை நிறுத்தப் போராட்டம்!

Posted:

இலங்கை சிறையில் உள்ள தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையறையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை இன்று முதல் துவங்கி உள்ளனர். 


Read more ...

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் உயர் நீதிமன்றத்தில் பணிகள் பாதிப்பு இல்லை: தலைமை நீதிபதி

Posted:

வழக்கறிஞர்கள் போராட்டத்தால் உயர் நீதிமன்றத்தில் பணிகள் பாதிப்பு இல்லை என்று சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல் கூறியுள்ளார். 


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™