Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பிரம்டனில் விபத்து: உந்துருளி ஓட்டுநர் படுகாயம்

Posted: 10 Jul 2016 06:18 PM PDT

ui

uiபிரம்டனில் இடம்பெற்ற விபத்தில் காயமடைந்த உந்துருளி ஓட்டுநர் உயிராபத்தான நிலையில் அவசர உலங்குவானூர்தி மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Bovaird Drive மற்றும் Great Lakes Drive பகுதியில் மாலை 7 மணிக்கு சற்று முன்னராக இந்த விபத்து இடம்பெற்றதாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

விபத்தில் மோசமான காயங்களுக்கு ஆளான அந்த நபர் 20வயது மதிக்கத்தக்கவர் என தெரிவிக்கப்படுகிறது.ui

விபத்தை அடுத்து Dixie வீதி மற்றும் நெடுஞ்சாலை 410 ஆகியவற்றிற்கு இடையிலான Bovaird Drive பகுதி போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளதுடன், காவல்த்துறையினர் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

The post பிரம்டனில் விபத்து: உந்துருளி ஓட்டுநர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வெற்றிலையின் மகத்துவங்கள்

Posted: 10 Jul 2016 06:12 AM PDT

download (2)

download (2)மகத்துவ மூலிகையான வெற்றிலை பல்வேறு மருத்துவ பயன்களை வழங்குகிறது.

வெற்றிலையில் 84.4% நீர்ச்சத்தும், 3.1% புரதச் சத்தும், 0.8% கொழுப்புச் சத்தும் நிறைந்துள்ளது. இதில் கால்சியம், கரோட்டின், தயமின், ரிபோபிளேவின் மற்றும் வைட்டமின் சி உள்ளது.

வெற்றிலையில் மிகவும் வீரியமிக்க நோய் எதிர்ப்புத் திறன் கொண்ட சவிக்கால்(Chavicol) என்னும் பொருள் உள்ளது.

அரைடம்ளர் தேங்காய் எண்ணெயில் 5 வெற்றிலையை போட்டு கொதிக்க விடவும். இலை நன்கு சிவந்ததும் வடிகட்டி பாட்டிலில் அடைத்து வைத்துக் கொண்டு சொரி, சிரங்கு, படைக்கு தடவி வந்தால் குணமாகும்.

உமிழ்நீர் பெருக்கும், பசி உண்டாக்கும், பால் சுரக்க வைக்கும், காமத்தைத் தூண்டும், நாடி நரம்பை உரமாக்கும், வாய் நாற்றம் போக்கும்.

வெற்றிலைச் சாறு சிறுநீரைப் பெருக்குவதற்கும் பயன்படுகிறது. வெற்றிலைச்சாற்றுடன் நீர் கலந்த பாலையும், தேவையான அளவு கலந்து பருகி வர சிறுநீர் நன்கு பிரியும்.

வெற்றிலையை கடுகு எண்ணெயில் போட்டு லேசாக சூடு செய்து மார்பில் வைத்துக் கட்டிவர மூச்சுத் திணறல் மற்றும் இருமலுக்கு சுகம் தரும்.

வெற்றிலையை அனலில் வாட்டி அதனுள் ஐந்து துளசி இலையை வைத்துக் கசக்கிப் பிழிந்து சாறு எடுத்து 10 மாத குழந்தைக்கு 10 துளிகள் காலை, மாலை கொடுக்க சளி, இருமல் குணமாகும்.

அனலில் வாட்டிய வெற்றிலையை மார்பிலும் பற்றாகப் போட சளி குறையும்.

குழந்தைகளுக்கு மலச்சிக்கல் ஏற்பட்டால் வெற்றிலைக் காம்பை ஆமணக்கு எண்ணையில் தோய்த்து ஆசன வாயில் செலுத்த உடனடியாக மலம் கழியும்.

வெற்றிலையை அரைத்து கீல்வாத வலிகளுக்கும், விதைப்பையில் ஏற்படும் வலி, வீக்கம் முதலியவைகளுக்கு வைத்துக் கட்ட நல்ல பலன் தரும்.

வெற்றிலையில் சிறிது ஆமணக்கு எண்ணெய் தடவி லேசாக வாட்டி கட்டிகளின் மேல் வைத்துக்கட்டி வர கட்டிகள் உடைந்து சீழ் வெளிப்படும். சிறப்பாக இதை இரவில் கட்டுவது நல்லது.

குழந்தை பெற்ற பின்னர் தாய்க்கு அதிகமாக பால் சுரக்க வெற்றிலையுடன் சிறிது ஆமணக்கு எண்ணெய் விட்டு வதக்கி மார்பில் வைத்துக் கட்டி வர தாய்ப்பால் அதிகமாகச்சுரக்கும்.

வயிற்றுக் கோளாறு நீங்க, ஜீரண சக்தி அதிகரிக்க வெற்றிலை பயன்படுகிறது. வெற்றிலையை மென்று சாப்பிடுவதால் மலச்சிக்கல் நீங்கும். நன்கு பசி உண்டாகும். வாய்ப்புண், வயிற்றுப் புண் நீங்கும்.

The post வெற்றிலையின் மகத்துவங்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆர்ஸவிட் பேர்கினோ தடுப்பு முகாமில் கனேடியப் பிரதமர்

Posted: 10 Jul 2016 06:08 AM PDT

hj

hjபோலந்து நாட்டில் உள்ள ஆர்ஸவிட் பேர்கினோ(Auschwitz-Birkenau) தடுப்பு முகாமை கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இன்று பார்வையிடவுள்ளார்.

ஆர்ஸவிட் பேர்கினோ(Auschwitz-Birkenau) தடுப்பு முகாம் இரண்டாம் உலகப் போர் இடம்பெற்ற காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்தமை குறிப்பிடத்தக்கது

இந்த தடுப்பு முகாமில் யோர்மனிய நாசிப் படைகளால், பெரும்பாலும் யூதர்கள் உள்ளிட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் அடைத்து வைக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

குறித்த முகாம் உலக அளவில் பேசப்படும் ஒரு வரலாற்று பதிவாக இருக்கும் நிலையில், கனேடியப் பிரதமரும் தமது தனிப்பட்ட விருப்பிற்கு அமைவாக இன்று அதனை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.hj

அந்த முகாமில் இருந்து தப்பிய ஒருவருடன் சென்றே அந்த முகாமை கனேடியப் பிரதமர் இன்று பார்வையிடவுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

கனடாவின் முன்னாள் பிரதமர்களும் குறித்த இந்த தடுப்பு முகாம்களை சென்று பார்வையிட்டுள்ளனர் என்றும் கூறப்படுகிறது.

The post ஆர்ஸவிட் பேர்கினோ தடுப்பு முகாமில் கனேடியப் பிரதமர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆப்கானிஸ்தானிற்கு தொடர்ந்து உதவுவதாக கனடா உறுதி

Posted: 10 Jul 2016 05:27 AM PDT

jk

jkஆப்கானிஸ்தான் நாட்டுக்கான நிதி உதவியை குறைந்தது 2020ஆம் ஆண்டு வரைக்கும் தொடர்ந்து வழங்குவதாக கனடா உறுதியளித்துள்ளது.

ஆப்கானிஸ்தானிற்கும், அந்த நாட்டு படையினருக்கும் உதவும் வகையில் ஆண்டுக்கு 150மில்லியன் டொலருக்கும் அதிகமான நிதியை கனடா ஏற்கனவே வழங்கி வந்துள்ள நிலையிலேயே, குறித்த அந்த திட்டத்தை தற்போதைய லிபரல் அரசாங்கம் கால நீடிப்பு செய்து புதுப்பித்துள்ளது.

முன்னைய பழமைவாதக் கட்சி தலைமையிலான அரசாங்கம் கடந்த 2012ஆம் ஆண்டு இந்த உதவியை ஆண்டுதோறும் வழங்குவதாக உறுதியளித்திருந்த நிலையில், ஆப்பானிஸ்தானிற்கு அந்த உதவியை வழக்கும் காலம் அடுத்த ஆண்டுடன் முடிவடைகின்றது.

இந்த நிலையிலேயே தற்போதைய லிபரல் அரசாங்கம் அந்த உதவித் திட்டத்தை குறைந்தது 2020ஆம் ஆண்டுவரையில் தொடர்வதாக உறுதியளித்துள்ளது.

போலந்தில் சனிக்கிழமை நடைபெற்ற நேட்டோ அமைப்பு நாடுகளின் உச்சிமாநாட்டில் ஆப்கானிஸ்தான் விவகாரம் தொடர்பாக நடாத்தப்பட்ட சிறப்பு அமர்வின் போது கனேடியப் பிரதமர் ஜஸ்ரின் ரூடோ இதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளார்.

கனேடியப் பிரதமர் முதல்நாள் வெள்ளிக்கிழமை வோர்சோவில் (Warsaw) வைத்து ஆப்பானிஸ்தான் அதிபர் Ashraf Ghani ஐச் சந்தித்து பேச்சு நடாத்திய நிலையிலேயே சனிக்கிழமை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இதன்போது கருத்து வெளியிட்ட கனேடியப் பிரதமர், கடந்த 15 வருடங்களாக ஆப்கானிஸ்தானில் மிகப்பெரிய முன்னேற்றங்களை ஏற்படுத்தியுள்ள போதிலும், அங்கு செய்வதற்கு இன்னமும் உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

நிலைத்தன்மையான, வெற்றிகரமான ஆப்கானிஸ்தான் அந்த நாட்டு மக்களுக்கு மாத்திரம் அல்லாது, அந்த பிராந்தியத்திற்கே நன்மை பயக்கும் என்பதனால், இதே பாதையில் கனடாவின் ஆதரவு தொடரும் என்றும் பிரதமர் ஜஸ்டின் ரூடோ கூறியுள்ளார்.

The post ஆப்கானிஸ்தானிற்கு தொடர்ந்து உதவுவதாக கனடா உறுதி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™