Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


College Streetஇல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 01 Jul 2016 08:45 AM PDT

n

nCollege Street மற்றும் Augusta Avenue பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்றில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அதிகாலை 5.30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவர்களுள் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்டதாகவும், மற்றொருவர் மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.

மூன்றாவது நபர் மோசமான காயங்களுக்கு ஆளான போதிலும், அவருக்கு உயிராபத்து இல்லை என அவசர மருத்தவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர். எனினும் அவர் துப்பாக்கிச் சூட்டினால்தான் காயமடைந்தாரா என்பது தொடர்பில் தகவல் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவத்தை அடுத்து Augusta இற்கும் Brunswick avenues இற்கும் இடைப்பட்ட College Street போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் காவல்த்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

The post College Streetஇல் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

149ஆவது பிறந்தநான் கொண்டாங்களில் கனடா

Posted: 01 Jul 2016 07:35 AM PDT

hg

hgகனடா இன்று தனது 149ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் முதலாம் நாள் கொண்டாடப்படும் "Canada Day" ஐ ஒட்டி இன்று நாட்டின் பல பாகங்களிலும் பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

இன்று பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள், கேளிக்கை நிகழ்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதுடன், இன்று இரவு பல்வேறு இடங்களிலும் பிரமாண்டமான வான வேடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

அதேவேளை TTCயின் பெரும்பாலான நகர போக்குவரத்துகள் ஞாயிற்றுக்கிழமை நேர அட்டவணையின் படி இயங்கும் எனவும், GO போக்குவரத்து சேவைகள் சனிக்கிழமை நேர அட்டவணையின் பிரகாரம் சேவைகளை வழங்கும் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

இன்று திறந்திருக்கும் இடங்கள்:

City-run parks, beaches, golf courses, outdoor pools, wading pools, and splash pads

Movie theatres

Tourist attractions, like the CN Tower, Toronto Zoo, The Ontario Science Centre, Ripley's Aquarium, the Harbourfront Centre, The Art Gallery of Ontario, and the Royal Ontario Museum.

The TTC and most other municipal transit authorities will run on a Sunday schedule.

GO Transit will be operating on Saturday hours and schedules

The CF-Eaton Centre, Square One, Vaughan Mills, Promenade Mall are all running on reduced hours. Pacific Mall will be open regular Friday hours.

Toronto Premium Outlets in Halton Hills between 9:30 a.m. and 7 p.m.

All RABBA Fine Foods will be open their regular 24-hour schedule

Bloor Street Market grocery store at the Manulife Centre will be open 11 a.m. to 6 p.m.

இன்று மூடியிருக்கும் இடங்கள்:

All government offices, including most services

Indoor pools and community centres

Libraries

Banks

Post offices (as well as no mail delivery)

All LCBO and The Beer Store locations

Most Loblaws (Maple Leaf Gardens location will be open 10 a.m. to 6 p.m.)

No Frills, Valu-mart, Costco, Walmart, Highland Farms

Most malls and shopping centres, including Yorkdale, Dufferin, East York Town Centre, Scarborough Town Centre, Sherway Gardens, and Fairview Mall

இன்று இரவு வானவேடிக்கை நிகழ்வுகள் இடம்பெறும் இடங்கள்:

ரொரன்ரோவில்:

Downtown - Harbourfront Centre – 10:40 p.m.

Etobicoke - Centennial Park

North York - Downsview Park

North York - Mel Lastman Square – 10:15 p.m.

North York - Amesbury Park – 9:45 p.m.

Scarborough – Milliken Park

East York - Stan Wadlow Park – 10:15 p.m.;Leslieville/The Beaches - Ashbridges Bay – 9:30 p.m.

பீல் பிராந்தியத்தில்:

Mississauga – Port Credit Memorial Park – 10:10 p.m.

Streetsville – Village Square

Malton – Westwood Square

Brampton – Chinguacousy Park

Caledon – Albion Hills Conservation Area

யோர்க் பிராந்தியத்தில்:

Richmond Hill – Richmond Green Park

Vaughan – Canada's Wonderland

Newmarket – George Richardson Park

Aurora – Lambert Willson Park

Markham – Milne Dam Conservation Park

Georgina – The ROC

East Gwillimbury – Mount Albert Lions Club

Stouffville – Memorial Park

டூர்ஹாம் பிராந்தியத்தில்:
Pickering – Kinsmen Park

Oshawa – Lakeview Park

Port Perry – Palmer Park

Uxbridge – Elgin Park

ஹல்ட்டன் பிராந்தியத்தில்:

Oakville – Bronte Heritage Park – 10:15 p.m.

Burlington – Spencer Smith Park

Milton – Milton Fairgrounds

1868ஆம் ஆண்டில் இருந்து இந்த யூலை மாதம் முதலாம் திகதி "டொமினியன் தினம்" என அழைக்கப்பட்டு வந்ததுடன் 1982ஆம் ஆண்டு முதல் இந்த நாள் "Canada Day" என சட்டபூர்வமான மாற்றம் பெற்றது.

அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு ஆண்டும் யூலை மாதம் முதலாம் திகதி "Canada Day" கொண்டாடப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post 149ஆவது பிறந்தநான் கொண்டாங்களில் கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா?

Posted: 01 Jul 2016 02:56 AM PDT

download (2)

download (2)மாங்காயின் இலை, வேறு, பூ பட்டை என அனைத்துமே மருத்துவ குணங்களை பெற்றுள்ளது.

சுவாசம் சம்பந்தப்பட்ட நோய்கள் இருந்தால் அது மற்றவர்களுக்கு பரவாமல் தடுக்கும் தன்மை மாவிலைக்கு உண்டு.

அதன் இலையை தேன் விட்டு வதக்கி குடிநீரில் போட்டு ஊறவைத்து அந்த நீரை அருந்தினால், குரல் கம்மல், தொண்டைக்கட்டு போன்றவை நீங்கும்.

நீரிழிவு உள்ளவர்கள், மா கொழுந்து இலையை எடுத்து உலர்த்தி பொடி செய்து, தினமும் காலை மாலை 2 ஸ்பூன் அளவு அருந்தினால் நீரிழிவு கட்டுப்படும்.

தீக்காயம் பட்டவர்கள் மா இலையைச் சுட்டு சாம்பலாக்கி, வெண்ணெயில் குழைத்து பூசி வந்தால் தீப்புண் விரைவில் குணமாகும்.

மாம்பூவை நிழலில் உலர்த்தி எடுத்து பொடித்து நீர்விட்டு கொதிக்க வைத்து குடிநீராக அருந்தினால் வயிற்றுப்போக்கு நீங்கும்.

கால் பித்தவெடிப்பு உள்ள பகுதியில் மாம்பிசினைத் தடவி வந்தால் பித்த வெடிப்பு குணமாகும்.

மாங்காய் குழம்பு செய்யும் முறை

முதலில், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, காய்ந்த மிளகாய், கசகசா, கடுகு உள்ளிட்ட பொருள்களை லேசாக வதக்கி, அரைக்க வேண்டும்.

மாங்காயை சின்னத் துண்டுகளாக வெட்ட வேண்டும். பின்னர், வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு, கடுகு, கறிவேப்பிலை தாளித்து, சின்ன வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.

பிறகு மாங்காய் துண்டுகள் சேர்த்து வதக்கி, அரைத்த விழுது, மஞ்சள் தூள், உப்பு, தேவையான அளவு தண்ணீர் எல்லாம் சேர்த்து, மிதமான தீயில் கொதிக்க விடவும்.

மாங்காய் ரொம்பவும் குழையாமல் பதமாக வெந்ததும், இறக்கி, கொத்தமல்லி தூவினால் மாங்காய் குழம்பு தயார்.

மாங்காய் குழம்பின் பயன்கள்

மலச்சிக்கலைப் போக்கும், சீரண சக்தியை அதிகரிக்கும், வயிற்றுப்புண், வாய்ப்புண்ணை குணப்படுத்தும். மூல நோயின் பாதிப்பைக் குறைக்க உதவுவதோடு புற்றுநோய் தாக்கமால் இருக்கவும் உதவுகிறது.

மாங்கொட்டை கஷாயம் செய்யும் முறை

முதலில் மாங்கொட்டை பருப்பை எடுத்து நன்கு காயவைத்து கொள்ள வேண்டும்.

பிறகு அதனை நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

இறுதியில் வாணலியில் நீர் வைத்து, அதை கொதிக்கவிட்டு அந்த பொடியை அதில் போட்டு கலக்கினால் மாங்கொட்டை கஷாயம் தயார்.

மாங்கொட்டை கஷாயத்தின் பயன்கள்

அந்தக் கஷாயத்தை சாப்பிடுவதால், நம்முடைய வயிற்றில் உள்ள புழுக்கள் மற்றும் கிருமிகள் நீங்கும். அதோடு, சர்ம எரிச்சலை கட்டுப்படுத்தும் ஒரு சிறந்த மருந்தும் ஆகும்.

The post மாங்காய் சாப்பிட்டால் இவ்வளவு ஆரோக்கியமா? appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனடாவில் உயர் விருது பெற்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள்!

Posted: 01 Jul 2016 02:49 AM PDT

78jhu

78jhuகனடவுக்கு குடிபெயர்ந்தவர்கள் மத்தியில் திறமை அடிப்படையில் வழங்கப்படும் ஆர்பிசி25 உயர் விருதுகளில் இலங்கை வம்சாவளி தமிழர்கள் இருவர் உள்ளடங்கியுள்ளனர்.

இவர்களுக்கான விருதுகள் அண்மையில் வழங்கப்பட்டன.

தமது துறைகளில் சிறப்புக்களை பெற்றவர்கள் என்ற அடிப்படையில் இவர்கள் இந்த உயர்விருதுக்கு தெரிவாகியுள்ளார்கள்.

பிரபல "ரூம்" என்ற நாவலின் ஆசிரியையான டப்ளினில் பிறந்த எமா டொனொக்கும் இந்தவிருதைப் பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

இந்த 25 விருது பெறுபவர்கள், இணையம் மூலம் வாக்குகளால் தெரிவு செய்யப்படுகின்றனர்.

இதில், நிலம் மனை விற்பனையில் ஈடுபட்டு வரும் சந்திரன் பெர்னாண்டோ என்பவரும்தொழில்நுட்ப திட்டம் ஒன்றின் உரிமையாளரான குமரன் தில்லைநடராஜா என்பவருமே இந்தவருடத்துக்கான உயர் விருதைப் பெற்றுள்ளார்கள்.

The post கனடாவில் உயர் விருது பெற்ற இரண்டு இலங்கைத் தமிழர்கள்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™