Tamil News | Online Tamil News |
- கறுப்பு பணத்தை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு?
- வரும் 16ம் தேதி அனைத்து மாநில முதல்வர்களுடன் மோடி ஆலோசனை :10 ஆண்டுக்கு பின் நடக்கிறது மாநிலங்கள் கவுன்சில் கூட்டம்
- 'பயங்கரவாதத்தை வேரறுப்போம்!'பிரதமர் நரேந்திர மோடி உறுதி
- தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி
- அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்:2020ம் ஆண்டு வரை நீட்டித்து ஜெ., உத்தரவு
- பால் உற்பத்தியாளர்களை வஞ்சிப்பதா: கருணாநிதி
- முல்லை பெரியாறு அணை பலமாகவே உள்ளது ஆய்வு செய்த மூவர் குழு தலைவர் கருத்து
- மதங்கள் அன்பை மட்டுமே போதிப்பவை; அமீர் கான்
- சுவாதி கொலையாளிக்கு ஜாமின் கேட்ட வக்கீல் திடீர் விலகல்
- காந்த சக்தி மூலம் இயங்கும் இரண்டு அடுக்கு மோனோ ரயில் :சென்னையில் ஓட்ட ஜெர்மனி நிறுவனம் விருப்பம்;
- ஒரே நாளில் 2 விபத்துகள் : ராஜஸ்தானில் 26 பேர் பலி
- யூரோ கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ்
- மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று விரிவாக்கம்
- ரயில் கட்டண சலுகை பெற ஆதார் எண் கட்டாயமாகிறது: முன் பதிவுக்கும் அமல்படுத்த திட்டம்
| கறுப்பு பணத்தை தெரிவிக்க கால அவகாசம் நீட்டிப்பு? Posted: 07 Jul 2016 10:03 AM PDT புதுடில்லி: தாமாக முன்வந்து கறுப்புப் பணம் குறித்த தகவலை தெரிவிக்கும் திட்டத்தின் கீழ், வரி செலுத்துவதற்கான காலத்தை நீட்டிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. கறுப்புப் பண பதுக்கலை தடுக்கும் வகையில், கறுப்புப் பணம் குறித்த தகவலை தாமாக முன்வந்து தெரிவிக்கும் திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஜூன், 1ம் தேதி முதல், செப்டம்பர், 30ம் தேதி வரை, கறுப்புப் பணம் குறித்த தகவலை தெரிவிக்கலாம். அதற்கான வரி மற்றும் அபராதத்தை, நவம்பர் மாதத்துக்குள் செலுத்தலாம் என, அறிவிக்கப் பட்டிருந்தது. இந்த நிலையில், வரி மற்றும் அபராதம் செலுத்து வதற்கான காலத்தை ... |
| Posted: 07 Jul 2016 10:59 AM PDT புதுடில்லி : மாநிலங்களுக்கு இடையேயான கவுன்சிலின் கூட்டம், 10 ஆண்டுகளுக்குப் பின், வரும், 16ம் தேதி நடக்கிறது. அன்று, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் முதல்வர்களுடன் பல்வேறு பிரச்னைகள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த உள்ளார். மத்திய அரசுடன் மாநிலங்களுக்கும் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பிரச்னைகள் குறித்தும் விவாதிக்க, 1990ல் உருவாக்கப் பட்டது, 'இன்டர் ஸ்டேட் கவுன்சில்' என, அழைக்கப் படும், மாநிலங்களுக்கு இடையே யான கவுன் சில். இந்த கவுன்சிலின் கூட்டம், காங்கிரஸ் தலைமையிலான, முந்தைய ஐ.மு.கூட்டணி அரசின், 10 ஆண்டு பதவிக் ... |
| 'பயங்கரவாதத்தை வேரறுப்போம்!'பிரதமர் நரேந்திர மோடி உறுதி Posted: 07 Jul 2016 11:44 AM PDT மபுடோ:''உலகின் மிக மோசமான அச்சுறுத்தல் பயங்கரவாதமே; அதை வேரறுக்கும் பணியில், இந்தியாவும், மொசாம்பிக்கும் இணைந்து செயல்படும். இரு நாடுகளின் பாதுகாப்பை வலுப்படுத்த, கூட்டு ஒப்பந்தம் செயல்படுத்தப் படும்,'' என, மொசாம்பிக் நாட்டில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். ஆப்ரிக்க நாடுகளில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று, மொசாம்பிக் நாட்டிற்கு சென்றார். அவருக்கு, அந்நாட்டு அரசு அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். பின், அந்நாட்டு அதிபர் பிலிப் நியூசியை, மோடி சந்தித்து பேசினார். இந்த ... |
| தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார் பிரதமர் மோடி Posted: 07 Jul 2016 12:05 PM PDT
பிரிட்டோரியா : தனது மொசாம்பிக் சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்ட பிரதமர் மோடி, தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். அவருக்கு துாதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். 5 நாள் அரசு முறைப் பயணமாக மொசாம்பிக், தென்னாப்பிரிக்கா, டான்சானியா, கென்யா, ஆகிய 4 ஆப்ரிக்க நாடுகளுக்கு சென்றுள்ள பிரதமர் மோடி, தனது மொசாம்பிக் பயணத்தை முடித்துக் கொண்டு தென்னாப்பிரிக்கா சென்றடைந்தார். பிரிட்டோரியா விமான நிலையத்தில், துாதரக அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். இன்று அவர் அந்நாட்டு அதிபர் ஜேக்கப் ஜூமாவை சந்திக்கிறார். பின்னர் பிரிட்டோரியாவில் ... |
| அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டம்:2020ம் ஆண்டு வரை நீட்டித்து ஜெ., உத்தரவு Posted: 07 Jul 2016 12:09 PM PDT சென்னை:அரசு பணியாளர்களுக்கான மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, 2020ம் ஆண்டு வரை நீட்டித்து முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார். கடந்த, 2012ல் இருந்து, நான்கு ஆண்டு காலத் திற்கு, யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் மூலம், அரசு பணியாளர்களுக்காக செயல்பட்டு வந்த மருத்துவ காப்பீட்டு திட்டம், ஜூன், 30ம் தேதி முடிவடைந்தது. கூடுதல் பயன்எனவே, ஜூலை, 1ம் தேதி முதல், நான்கு ஆண்டுகளுக்கு, அரசு பணியாளர் மருத்துவ காப்பீட்டு திட்டத்தை, சில கூடுதல் பயன் களுடன் செயல்படுத்த, முதல்வர் உத்தர விட்டுள்ளார்.அதன் அடிப்படையில், திறந்த ஒப்பந்தப்புள்ளி முறையை பின்பற்றி, ... |
| பால் உற்பத்தியாளர்களை வஞ்சிப்பதா: கருணாநிதி Posted: 07 Jul 2016 12:18 PM PDT சென்னை:'உற்பத்தியாகும் பால் முழுவதும் கொள்முதல் செய்வோம் என அறிவித்து விட்டு, பால் உற்பத்தியாளர்களை வஞ்சிப்பது நியாயமே அல்ல' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். அவரது அறிக்கை: அ.தி.மு.க., அரசு, விவசாயிகளின் கடன்களை பற்றி பரிசீலிக் காமல், சிறு, குறு விவசாயிகளின் கடன்களை மட்டும் தள்ளுபடி செய்வதாக அரசாணை பிறப்பித்துள்ளது. அ.தி.மு.க., அமைச்சர் ஒருவர், தலைமைச் செயலகத்தில், கட்சிக்காரர்களை அழைத்து கட்சிக் கூட்டம் நடத்தியிருக்கிறார். இது, ஆட்சிக்கும், கட்சிக்கும் இடையே உள்ள மெல்லிய எல்லைக்கோட்டை அழித்து துடைத் திடுவது தான்; ... |
| முல்லை பெரியாறு அணை பலமாகவே உள்ளது ஆய்வு செய்த மூவர் குழு தலைவர் கருத்து Posted: 07 Jul 2016 12:35 PM PDT கூடலுார்: ''முல்லைப் பெரியாறு அணை பலமாகவே உள்ளது. எனவே, கேரள மக்கள் பயப்படத் தேவையில்லை,'' என, மூவர் குழுத் தலைவர், பி.ஆர்.கே.பிள்ளை தெரிவித்தார். முல்லைப் பெரியாறு அணையில் நடைபெறும் பராமரிப்பு பணிகளை கண்காணிக்க, உச்ச நீதிமன்ற பரிந்துரையின்படி மூவர் குழு அமைக்கப்பட்டது. இதன் தலைவராக இருந்த நாதன், ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, புதிய தலைவராக மத்திய அணைப்பாதுகாப்பு முதன்மை பொறியாளர், பி.ஆர்.கே.பிள்ளை நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு சார்பில் பொதுப்பணித் துறை தலைமைச்செயலர் பிரபாகர், கேரள அரசு சார்பில் நீர்ப்பாசனத்துறை தலைமைச் செயலர் குரியன் ஆகியோர் ... |
| மதங்கள் அன்பை மட்டுமே போதிப்பவை; அமீர் கான் Posted: 07 Jul 2016 12:37 PM PDT
மும்பை : மதத்தின் பெயரை கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், குறிப்பிட்ட மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல என பாலிவுட் நடிகர் அமீர் கான் தெரிவித்துள்ளார். தனது தாய் மற்றும் குடும்பத்தினருடன் ரம்ஜான் பண்டிகையை கொண்டாடிய பாலிவுட் நடிகர் அமீர் கான், மும்பையில் செய்தியாளர்களை சந்தித்த போது கூறியதாவது: பயங்கரவாதத்திற்கு மதம் கிடையாது; மதத்தின் பெயரை கூறிக்கொண்டு பயங்கரவாதத்தை பரப்புபவர்கள், குறிப்பிட்ட மதத்தை உண்மையாக பின்பற்றுபவர்கள் அல்ல. அவர்களுக்கும் இந்து, முஸ்லீம், கிறிஸ்துவம் போன்ற மதங்களுக்கும் எவ்வித ... |
| சுவாதி கொலையாளிக்கு ஜாமின் கேட்ட வக்கீல் திடீர் விலகல் Posted: 07 Jul 2016 12:40 PM PDT சென்னை:சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, ராம்குமார் தரப்பில், ஜாமின் மனு தாக்கல் செய்த வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வழக்கில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். சென்னை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் மென்பொறியாளர் சுவாதியை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், ராம்குமார் என்பவன் கைது செய்யப்பட்டான். அவனது தரப்பில், வழக்கறிஞர் மகேந்திரன், சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், ஜாமின் கோரி மனு தாக்கல் செய்தார். ஆட்சேபம்இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு வந்தபோது, ராம்குமார் சார்பில் வழக்கறிஞர் கிருஷ்ணமூர்த்தி ... |
| காந்த சக்தி மூலம் இயங்கும் இரண்டு அடுக்கு மோனோ ரயில் :சென்னையில் ஓட்ட ஜெர்மனி நிறுவனம் விருப்பம்; Posted: 07 Jul 2016 01:04 PM PDT உயர்த்தப்பட்ட வழித்தடத்தின் மேல் பகுதி; கீழ் பகுதி, என, காந்த சக்தி மூலம் இயங்கும் தொழில் நுட்பத்துடன் கூடிய, இரண்டு அடுக்கு மோனோ ரயில் சேவையை, சென்னையில் துவக்க, ஜெர்மனி நிறுவனம் விருப்பம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், 2011ல் அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்ற பின், சென்னை போக்குவரத்து நெருக்கடிக்கு தீர்வாக, மோனோ ரயில் திட்டம் அறிவிக்கப்பட்டது. இருப்பினும், மெட்ரோ ரயில் திட்டத்துக்கு மக்கள் மத்தியில் ஏற்பட்ட ஆதரவை அடுத்து, மோனோ ரயில் திட்டத்தின் மீது அரசின் கவனம் குறைந்தது.இருப்பினும், பூந்தமல்லி - வடபழனி; பூந்த மல்லி - கிண்டி கத்திப்பாரா இடையே, இரு ... |
| ஒரே நாளில் 2 விபத்துகள் : ராஜஸ்தானில் 26 பேர் பலி Posted: 07 Jul 2016 01:29 PM PDT ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில், இரு வேறு இடங்களில் நிகழ்ந்த சாலை விபத்துகளில், 26 பேர் உயிரிழந்தனர். ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த, வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இமமாநிலத்தில், சிரோகி மாவட்டத்தில் நேற்று காலை, நாசிக் நகரிலிருந்து சென்ற பஸ், டிரக் ஒன்றை முந்திச் செல்ல முற்பட்டபோது, அதன் மீது உரசியது. இதையடுத்து, இரு வாகனங்களின் டிரைவர்களும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால், பஸ்சில் இருந்த பயணிகள் கீழிறங்கி வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர். அப்போது, அசுர வேகத்தில் வந்த மற்றொரு டிரக் வண்டி, ஏற்கனவே விபத்துக்குள்ளான டிரக் மீது ... |
| யூரோ கால்பந்து: பைனலுக்கு முன்னேறியது பிரான்ஸ் Posted: 07 Jul 2016 02:06 PM PDT மார்செல்லி : யூரோ கோப்பை கால்பந்து தொடரின் இரண்டாவது அரையிறுதியில், ஜெர்மனை 2-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய பிரான்ஸ் அணி பைனலுக்கு முன்னேறியது. பிரான்சில் யூரோ கோப்பை கால்பந்து தொடர் நடக்கிறது. மார்செல்லியில் நடந்த 2வது அரையிறுதிப் போட்டியில், ‛உலக சாம்பியன்' ஜெர்மன் அணியுடன், பிரான்ஸ் அணி மோதியது. பெனால்டி: உள்ளூர் ரசிகர்களின் ஆதரவுடன் சொந்த மண்ணில் களமிறங்கிய பிரான்ஸ் அணி வீரர்கள், ஆட்டம் துவங்கியது முதல் கோல் அடிக்கும் முனைப்பில் ஈடுபட்டனர். ஆட்டத்தின் 45வது நிமிடத்தில், கோல் ஏரியாவில் வைத்து, ஜெர்மன் வீரர் ... |
| மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று விரிவாக்கம் Posted: 07 Jul 2016 03:13 PM PDT மும்பை : மகாராஷ்டிரா அமைச்சரவை இன்று(08-07-16) விரிவாக்கம் செய்யப்படுகிறது. இதில் தனது கூட்டணிக் கட்சியான சிவசேனாவுக்கு பா.ஜ., வாய்ப்பு வழங்காது எனத் தெரியவருகிறது. மகாராஷ்டிராவில் முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பா.ஜ., அரசு ஆட்சி புரிந்து வருகிறது. ஊழல் புகாரில் சிக்கிய மூத்த அமைச்சர் ஏக்நாத் கட்சே அண்மையில் பதவி விலகினார். இதனையடுத்து அவர் வகித்து வந்த 10க்கும் மேற்பட்ட பதவிகளை முதல்வர் பட்னாவிஸ் தற்காலிகளாக கவனித்து வருகிறார். இந்நிலையில், இன்று அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படுகிறது. பா.ஜ., கட்சி தனது கூட்டணிக்கட்சியானன ... |
| ரயில் கட்டண சலுகை பெற ஆதார் எண் கட்டாயமாகிறது: முன் பதிவுக்கும் அமல்படுத்த திட்டம் Posted: 07 Jul 2016 03:55 PM PDT புதுடில்லி: ரயில் டிக்கெட்டுகள் வாங்கு வதற்கும், கட்டண சலுகை உள்ளிட்ட சலுகைகளைப் பெறவும் ஆதார் எண்ணை கட்டாயமாக்க, ரயில்வே அமைச்சகம் திட்டமிட்டுள்ளது. மிக விரைவில், இது அமலுக்கு வரும் என, எதிர்பார்க்கப்படுகிறது. நாடு முழுவதும், நுாறு கோடிக்கு மேற்பட்ட மக்களுக்கு ஆதார் எண் அளிக்கப்பட்டுள்ளது. ஆதார் எண்ணுடன் வங்கிக் கணக்கும் இணைக்கப்பட்டுள்ளது. சமையல் காஸ், ரேஷன் உள்ளிட்டவற்றுக்கான மானியத் தொகை பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இதனால், பல கோடி ரூபாய் இழப்பு தடுக்கப்பட்டுள்ளதாக, மத்திய அரசு தெரிவித்துள்ளது.பல்வேறு ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 08,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |