Tamil News | Online Tamil News |
- 'சுவாதி கொலையாளி நான் இல்லை!' : ஜாமின் கேட்டு ராம்குமார் மனு
- கரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம்
- 'கெஜ்ரிவாலின் செயலர் தப்பு செஞ்சிருக்கலாம்!' : டில்லி 'மாஜி' முதல்வர் ஷீலா 'சேம்சைட் கோல்'
- தமிழகம் முழுவதும் 'கஞ்சா சாக்லேட்' வேட்டை
- குளச்சல் அருகே துறைமுகம் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்:ரூ.25 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டத்திற்கு அனுமதி
- பண மோசடி வழக்கில் கார்த்திக்கு 'சம்மன்'
- மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம்
- மொத்த உள்ளாட்சி பதவிகளில் பாதி பெண்களுக்கு ஒதுக்கும் பணி ஜரூர்
- 'தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்':மா.செ.,க்களுக்கு தி.மு.க., தலைமை உத்தரவு
- அதிரடிக்கு தயாராகிறது அ.தி.மு.க., தலைமை * எந்த நேரத்திலும் மா.செ.,க்கள் தலை உருளும
- உள்ளே - 19, வெளியே - 5 : 2வது முறையாக அமைச்சரவையை மாற்றியமைத்தார் மோடி :உ.பி., உட்பட 10 மாநிலத்தவர்களுக்கு அதிக பிரதிநிதித்துவம்
- 'சட்டசபை, லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்'
- கர்நாடகா சபாநாயகராக கோலிவாட் தேர்வு
- ரயிலில் பயணித்த பயங்கரவாதி மேற்கு வங்கத்தில் அதிரடி கைது
| 'சுவாதி கொலையாளி நான் இல்லை!' : ஜாமின் கேட்டு ராம்குமார் மனு Posted: 05 Jul 2016 09:40 AM PDT சென்னை: மென்பொறியாளர் சுவாதி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, ராம்குமார், ஜாமின் கோரி, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். மனுவில் கூறியுள்ளதாவது: நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், ஜூன், 24ல், மர்ம நபர் ஒருவன், சுவாதியை தாக்கியுள்ளான். இச் சம்பவம் தொடர்பாக, சந்தேகத்தின் அடிப்படை யில் போலீசார், ஜூலை, 1ல் என்னை கைது செய்தனர். கைது செய்த போது, நுங்கம்பாக்கம் போலீசாருடன் வந்த சிலர், நான் தற் கொலைக்கு முயற்சித்தது போல, என்னை பிளேடால் தாக்கினர். நான் அப்பாவி : மாஜிஸ்திரேட், என்னை நீதிமன்ற காவலில் வைக்க, ஜூலை, 4ல் ... |
| கரு பாலின விளம்பரங்கள் : கூகுள், யாகூக்கு கண்டனம் Posted: 05 Jul 2016 09:51 AM PDT
புதுடில்லி: 'கருவில் இருக்கும் குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பதாக கூறும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது' என, 'கூகுள், யாகூ, மைக்ரோசாப்ட்' போன்ற இணைய நிறுவனங்களுக்கு, சுப்ரீம் கோர்ட் கண்டிப்புடன் உத்தரவிட்டுள்ளது. சமூக ஆர்வலரான சாபு மேத்யூ ஜார்ஜ் என்பவர் தொடர்ந்த பொதுநல வழக்கில், 'கருவில் இருக்கும் பாலினத்தை தெரிவிப்பதாக கூறும் விளம்பரங்களை வெளியிடக் கூடாது' என, சுப்ரீம் கோர்ட், கடந்த ஜனவரியில் உத்தரவு பிறப்பித்திருந்தது. 'இந்த உத்தரவை நிறைவேற்றாத இந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, சாபு மேத்யூ ஜார்ஜ், ... |
| 'கெஜ்ரிவாலின் செயலர் தப்பு செஞ்சிருக்கலாம்!' : டில்லி 'மாஜி' முதல்வர் ஷீலா 'சேம்சைட் கோல்' Posted: 05 Jul 2016 09:55 AM PDT புதுடில்லி: ''டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் முதன்மைச் செயலர் ராஜேந்திர குமார் கைது செய்யப்பட்டதற்கு, அரசியல் உள்நோக்கம் கிடையாது,'' என, காங்., கட்சியை சேர்ந்த, டில்லி முன்னாள் முதல்வர் ஷீலா தீட்சித் கூறியுள்ளார். டில்லியில், ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். அவருக்கு நெருங்கிய உதவியாளராகவும், முதன்மைச் செயலராகவும் செயல்பட்ட ராஜேந்திர குமார், சமீபத்தில், சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார். இதற்கு, கடும் கண்டனம் தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், 'பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு,பழிவாங்கும் ... |
| தமிழகம் முழுவதும் 'கஞ்சா சாக்லேட்' வேட்டை Posted: 05 Jul 2016 10:47 AM PDT 'கஞ்சா சாக்லேட்' விபரீதத்தை உணர்ந்த தமிழக அரசு, மாநிலம் முழுவதும், உணவு பாதுகாப்புத்துறை மூலம் அதிரடி நடவடிக்கையை துவக்கி உள்ளது. பள்ளிகள் அருகே உள்ள கடைகளில் சோதனை நடத்தி, போதை சாக்லேட், 'குட்கா, ஜர்தா' உள்ளிட்ட புகையிலை பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன.சென்னை மாநகராட்சி பள்ளி அருகே, பெட்டிக் கடையில் விற்கப்பட்ட கஞ்சா சாக்லேட் வாங்கிச் சாப்பிட்ட, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த பரத், 13, என்ற மாணவன், உயிருக்கு ஆபத்தான நிலையில், எழும்பூர் குழந்தைகள் நல அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்; அவனைக் காப்பாற்ற டாக்டர்கள் ... |
| Posted: 05 Jul 2016 11:21 AM PDT சர்வதேச நாடுகளுடன் போட்டியிடும் வகையில், குளச்சல் அருகே இனயத்தில், 25 ஆயிரம் கோடி ரூபாயில், வர்த்தக துறைமுகம் அமைக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. துறைமுகத்தை வரவிடாமல் தடுக்க, திட்டமிட்டு நடத்தப்பட்ட முயற்சிகளை பொருட்படுத் தாமல், மத்திய அரசு உறுதியாக முடிவு எடுத்துள்ளது, தொழில்துறையினரிடையே வரவேற்பை பெற்றுள்ளது.தமிழகத்தில், சென்னை, துாத்துக்குடி, எண்ணுார் என, மூன்று பெரிய துறைமுகங்கள் உள்ளன; இதில், சென்னை, துாத்துக்குடியில் மட்டுமே, சரக்குகள் கையாளப்படுகின்றன. இந்த மூன்று துறைமுகங்களிலும், அதிநவீன கப்பல்கள் வந்து செல்லும் ... |
| பண மோசடி வழக்கில் கார்த்திக்கு 'சம்மன்' Posted: 05 Jul 2016 11:31 AM PDT புதுடில்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில், ஏர்செல் - மேக்சிஸ் ஒப்பந்தத்தில் நடந்த பண மோசடி தொடர்பான விசாரணைக்கு ஆஜராகும்படி, காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரத்தின் மகன், கார்த்திக்கு, அமலாக்கத் துறை சம்மன் அனுப்பியுள்ளது. முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணியின் ஆட்சியின்போது, '2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில், 1.76 லட்சம் கோடி ரூபாய் ஊழல் நடந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. இதில், ஏர்செல் - மேக்சிஸ் பண மோசடி தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., மற்றும் அமலாக்க துறைகள் விசாரித்து வருகின்றன. இந்நிலையில், முன்னாள்மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ... |
| மத்திய அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றம் Posted: 05 Jul 2016 11:33 AM PDT
புதுடில்லி : மத்திய அமைச்சரவையில் பல அமைச்சர்களின் இலாகாக்கள் நேற்று மாற்றப் பட்டது. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சராக இருந்த, ஸ்மிருதி இரானி, ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டார்.சட்ட அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். ரவிசங்கர் பிரசாத்திடம் சட்டத்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. நேற்று வெளியிடப்பட்ட அமைச்சர்கள் மற்றும் அவர்களின் இலாகாக்கள் விவரம்: கேபினட் அமைச்சர்கள்: 1) நரேந்திர மோடி - பிரதமர், பென்சன், அணுசக்தி, ... |
| மொத்த உள்ளாட்சி பதவிகளில் பாதி பெண்களுக்கு ஒதுக்கும் பணி ஜரூர் Posted: 05 Jul 2016 12:12 PM PDT தமிழக உள்ளாட்சி அமைப்புகள் நகர்புறம், ஊரகம் என, இரண்டு பிரிவாக உள்ளது. இதில், நகர்புற உள்ளாட்சி அமைப்புகளில், 12 மாநக ராட்சி மேயர்கள், 919 மாநகராட்சி கவுன்சிலர் கள், 123 நகராட்சி தலைவர்கள், 3,598 நகராட்சி கவுன்சிலர்கள், 529 பேரூராட்சி தலைவர்கள், 8,303 பேரூராட்சி கவுன்சிலர்கள் பதவிகள் உள்ளன. ஊரக உள்ளாட்சிகளில், 655 மாவட்ட கவுன் சிலர்கள், 6,471 ஒன்றிய கவுன்சிலர்கள், 12,524 ஊராட்சி தலைவர்கள், 99,324 வார்டு உறுப்பினர் பதவிகள் உள்ளன. இதுமட்டுமின்றி துணைத் தலைவர், நிலைக்குழு, மண்டலக்குழு தலைவர்கள் உள்ளிட்ட பதவிகளும் உள்ளன. மொத்த பதவிகளில், மூன்றில் ஒரு பங்கு, பெண்களுக்கான ... |
| 'தேர்தல் செலவு கணக்கை தாக்கல் செய்':மா.செ.,க்களுக்கு தி.மு.க., தலைமை உத்தரவு Posted: 05 Jul 2016 12:29 PM PDT 'தேர்தலில் செலவழிப்பதற்காக, கொடுக்கப்பட்ட பணம், முறையாக செலவிடப்படாததாலேயே, கட்சி, பல இடங்களில் தோல்வி அடைந்தது' என, கட்சித் தலைமைக்கு கிடைத்த தகவலை அடுத்து, கட்சியின் மாவட்ட செயலர்களுக்கு, கணக்குகளை தாக்கல் செய்ய தி.மு.க., தலைமை திடீர் உத்தரவு பிறப்பித்துள்ளது. நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில், காங்கிரஸ், மனித நேய மக்கள் கட்சி மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிகளுடன் இணைந்து, தி.மு.க., தேர்தலை சந்தித்தது.தி.மு.க., தரப்பில், ஒவ்வொரு வேட்பாளருக்கும் ஒன்றரை கோடி ரூபாயிலிருந்து, இரண்டரை கோடி ரூபாய் வரையில் தேர்தல் செலவுக்காக பணம் ... |
| அதிரடிக்கு தயாராகிறது அ.தி.மு.க., தலைமை * எந்த நேரத்திலும் மா.செ.,க்கள் தலை உருளும Posted: 05 Jul 2016 12:35 PM PDT சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., வேட்பாளர் களை தோற்கடிக்க, உள்ளடி வேலை பார்த்த நிர்வாகிகள் பட்டியல் தயாராகிறது. விரைவில், அதிரடி மாற்றங்கள் ஏற்படும் என்ற தகவல், ஆளும் கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கடந்த, 2014 லோக்சபா தேர்தலில், தனித்து போட்டியிட்டு, 37 இடங்களில், அ.தி.மு.க., வெற்றி பெற்றது. அந்த தேர்தலில், சட்டசபை தொகுதி வாரியாக பெற்ற ஓட்டுக்களின்படி, 217 இடங்களில் முதலிடத்தை பிடித்திருந்தது.எனவே, சட்டசபை தேர்தலில், 200 தொகுதி களில் வெற்றி பெற்று விடலாம் என்ற நம்பிக்கை யில், தனித்து போட்டியிட்டது. ஆனால், 134 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது. ... |
| Posted: 05 Jul 2016 12:58 PM PDT புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில், நேற்று பெரியளவில் மாற்றம் செய்யப்பட்டது. எஸ்.எஸ்.அலுவாலியா,எம்.ஜே.அக்பர் உட்பட, 19 பேர் புதிய அமைச்சர்களாக பதவியேற்றனர். சிறப்பாக செயல்படாத, ஐந்து அமைச்சர்கள் வெளியேற்றப்பட்டனர். கடந்த, 2014ல் நடந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது; நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவி ஏற்றது. அதன் பின், ஒரு முறை சிறியளவில் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டது. அப்போது, ராணுவ அமைச்சராக மனோகர் பரீக்கரும், ரயில்வே அமைச்சராக சுரேஷ் பிரபுவும் ... |
| 'சட்டசபை, லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த தயார்' Posted: 05 Jul 2016 01:25 PM PDT மெல்போர்ன்: ''அரசியல் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை ஏற்பட்டால், சட்டசபை மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது,'' என, தலைமை தேர்தல் ஆணையர் நசீம் ஜைதி கூறினார்.ஆஸ்திரேலிய பார்லிமென்டுக்கு நடந்த தேர்தலைப் பார்வையிட, பல்வேறு நாடுகளின் தேர்தல் ஆணையர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது; அதன்படி, தேர்தலை பார்வையிட சென்றுள்ள நஜீம் ஜைதி கூறியதாவது: சட்டசபைகள் மற்றும் லோக்சபாவுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கு தேர்தல் ஆணையம் தயாராக உள்ளது. இது குறித்து, கட்சிகள் இடையே விவாதித்து, கருத்தொற்றுமை ... |
| கர்நாடகா சபாநாயகராக கோலிவாட் தேர்வு Posted: 05 Jul 2016 02:09 PM PDT பெங்களூரு: கர்நாடக மாநில சட்டசபை சபாநாயகராக, காங்., மூத்த எம்.எல்.ஏ., கோலிவாட், நேற்று ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்நாடகாவில், காங்., கட்சியைச் சேர்ந்த, சித்தராமையா முதல்வராக உள்ளார். இம்மாநில சட்டசபையில் சபாநாயகராக பதவி வகித்து வந்த காகோடு திம்மப்பா, சமீபத்திய அமைச்சரவை மாற்றத்தின் போது, வருவாய் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அடுத்த சபாநாயகர் பதவிக்கு, காங்., மூத்த எம்.எல்.ஏ., கோலிவாட், மனு தாக்கல் செய்தார். வேறு யாரும் போட்டியிடாததால், அவர், ஒருமனதாக நேற்று தேர்வு செய்யப்பட்டார். கர்நாடக மாநில ... |
| ரயிலில் பயணித்த பயங்கரவாதி மேற்கு வங்கத்தில் அதிரடி கைது Posted: 05 Jul 2016 03:10 PM PDT
கோல்கட்டா: மேற்கு வங்க மாநிலம், புர்த்வான் ரயில்வே ஸ்டேஷனில், பயங்கரவாதி என்ற சந்தேகத்தின் அடிப்படையில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கு வங்கத்தில், திரிணமுல் காங்., கட்சித் தலைவர் மம்தா பானர்ஜி முதல்வராக உள்ளார். இம்மாநிலத்தில், விஸ்வபாரதி விரைவு ரயிலில், பயங்கரவாதி பயணிப்பதாக, புலனாய்வுத் தகவல் கிடைத்தது. இதையடுத்து புர்த்வான் மாவட்ட போலீசாரும், ரயில்வே போலீசாரும் சேர்ந்து, புர்த்வான் ரயில்வே ஸ்டேஷனுக்கு வந்த ரயிலில் அதிரடி சோதனை நடத்தினர். அதில் இருந்த, சந்தேகத்திற்கிடமான நபரை கைது ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 06,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |