Tamil News | Online Tamil News |
- எட்டு மாநில இன்ஜி., கல்லூரிகளில் 9,000 போலி பேராசிரியர்கள் தில்லுமுல்லு: தமிழகத்தில் 520 பேர் இருப்பதாக அண்ணா பல்கலை எச்சரிக்கை-
- ஆய்வுகளில் ஈடுபடும்படி இளைஞர்களுக்கு மோடி... அழைப்பு: தொழில்நுட்ப ரீதியில் பிரச்னைக்கு தீர்வு காண யோசனை
- கடன் பாக்கிக்காக மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துக்கள் ஏலம்
- பரீக்கர் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம்
- சவுதியில் 10,000 தொழிலாளர்கள் தவிப்பு: இந்தியா அழைத்து வர அரசு நடவடிக்கை
- குடும்பத்தார் சொத்து விபரம் லோக்பால் சட்டத்தில் விலக்கு
- திருச்சி சிவாவை தாக்கியது ஏன்?:சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை
- நகரம் முழுவதும் குப்பை கூளங்கள் புறக்கணிக்கப்படும் கருணாநிதி தொகுதி?
- தே.மு.தி.க.,வினர் இழுப்பு 'ஆப்பரேஷன்' களத்தில் அ.தி.மு.க., சுறுசுறுப்பு
- பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா
- 'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவிக்க ஆசிரியர்களுக்கு தடை?
- ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள்
| Posted: 31 Jul 2016 10:48 AM PDT எட்டு மாநிலங்களில் உள்ள இன்ஜினியரிங் கல்லுாரிகளில், 9,060 போலி பேராசிரியர்கள் பணியாற்றுவதாககண்டறியப்பட்டு உள்ளது. இதில், தமிழகத்தில், 520 பேர் இருப்பதாக அண்ணா பல்கலை எச்சரித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள இன்ஜி., கல்லுாரி களுக்கு, அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் வழங்கு கிறது. மாநில பல்கலைகள், அங்கீகாரம் பெற்ற கல்லுாரிகளுக்கு பாடத்திட்டம் குறித்த இணைப்பு அந்தஸ்தை வழங்கும். தமிழகத்தில், அண்ணா பல்கலை மூலம் இணைப்பு அந்தஸ்து வழங்கப்படுகிறது.பல்கலை அதிகாரிகள், இணைப்பு அந்தஸ்து வழங்கும் முன் கல்லுாரிகளுக்கு நேரில் ... |
| Posted: 31 Jul 2016 10:58 AM PDT புதுடில்லி:''மழை, வெள்ளம் முதல் நாம் அன்றாடம் சந்திக்கும் பல்வேறு பிரச்னைகளுக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காண வேண்டும்; இதற்கான ஆய்வுகளில் இளைஞர்கள் ஈடுபட வேண்டும்,'' என, பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தினார். 'மன் கி பாத்' எனும், ரேடியோ உரையில், ஒலிம்பிக் போட்டி, சுதந்திர தின உரை, காடுகள் வளர்ப்பு என, பல்வேறு விஷயங்கள் குறித்து, பிரதமர் மோடி நேற்று பேசினார். சுமார், 35 நிமிடங்கள் ஆற்றிய உரையில் மோடி கூறியதாவது:மழைக்காலம் தொடங்கியுள்ளதால், பல்வேறு நோய்கள் ஏற்படலாம். அதனால் மக்கள் தங்களுடைய உடல் நலத்தை முறையாக கவனித்துக் கொள்ள வேண்டும். ... |
| கடன் பாக்கிக்காக மல்லையாவின் ரூ.700 கோடி சொத்துக்கள் ஏலம் Posted: 31 Jul 2016 11:07 AM PDT மும்பை:வங்கிகளுக்கான கடன் பாக்கி உள்ளிட்ட வழக்குகளில் சிக்கியுள்ள, பிரபல தொழிலதிபர் விஜய் மல்லையாவின், 700 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்கள், இந்த மாதத்தில் ஏலம் விடப்படுகிறது. எஸ்.பி.ஐ., எனப்படும் பாரத ஸ்டேட் வங்கி உட்பட, 17 வங்கிகளுக்கு, 9,000 கோடி ரூபாய் கடன் பாக்கி வைத்துள்ளதாக மல்லையா மீது வழக்கு தொடரப்பட்டது. இதனிடையில், லண்டன் நகருக்கு அவர் தப்பிச் சென்றார்.'பிடிவாரன்ட்': இதைத் தவிர சேவை வரி தொடர்பான வழக்கில், அவருக்கு 'பிடிவாரன்ட்' பிறப்பிக்கப் பட்டது. கடன் பாக்கிக்காக வங்கிகளும், சேவை வரி நிலுவைக்காக சேவை வரித் துறையும், மல்லையாவுக்கு ... |
| பரீக்கர் பேச்சுக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் Posted: 31 Jul 2016 11:11 AM PDT புதுடில்லி : 'நாட்டை விமர்சித்து பேசியவர்களுக்கு நல்ல பாடம் கற்பிக்கப்பட்டது' என, பாலிவுட் நடிகர் அமீர் கான் குறித்து, ராணுவ அமைச்சர் மனோகர் பரீக்கர் கூறியதற்கு, காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு நவம்பர் மாதத்தில், சகிப்பின்மை குறித்து பெரும் விவாதம் நடந்தது. அப்போது, 'இந்தியாவில் தொடர்ந்து இருப்பதற்கு பயமாக உள்ளது, வெளிநாடுகளுக்கு சென்றுவிடலாமா என்று என் மனைவி கேட்கிறார்' என்று, பாலிவுட் நடிகர் அமீர் கான் கருத்து தெரிவித்திருந்தார். இதற்கு கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், அமீர் கான் ... |
| சவுதியில் 10,000 தொழிலாளர்கள் தவிப்பு: இந்தியா அழைத்து வர அரசு நடவடிக்கை Posted: 31 Jul 2016 11:34 AM PDT புதுடில்லி:வளைகுடா நாடான சவுதி அரேபியா வில் வேலையிழந்து, உண்ண உணவின்றி தவித்து வந்த, 10 ஆயிரம் இந்தியர்களுக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப் பட்டுள் ளது. இவர்களை இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு எடுத்துள்ளது. வளைகுடா நாடுகளான சவுதி அரேபியா, குவைத் போன்ற நாடுகளில் உள்ள எண்ணெய் கிணறுகள் உள்ளிட்ட தொழில்களில், இந்தியத் தொழிலாளர்கள் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர்.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை குறைந்ததால் இந்த நாடுகளில் உள்ள எண் ணெய் நிறுவனங்கள் பல, பெரும் நஷ்டத்தை சந்தித்துள்ளன. இதனால், கட்டுமானம் உள்ளிட்ட ... |
| குடும்பத்தார் சொத்து விபரம் லோக்பால் சட்டத்தில் விலக்கு Posted: 31 Jul 2016 11:54 AM PDT புதுடில்லி:லோக்பால் சட்டத்தின் கீழ், தம் குடும்பத்தார் பெயரில் உள்ள சொத்து விபரங் களை தாக்கல் செய்வதில் இருந்து, மத்திய அரசு ஊழியர்களுக்கும், அரசு சாரா அமைப்பின் நிர்வாகிகளுக்கும் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கடந்த, 2013ல் கொண்டு வரப்பட்ட, லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தா சட்டங்களின் கீழ், அனைத்து பொது ஊழியர்களும், தங்களுடைய சொத்து விபரங்களையும், தம் மனைவி மற்றும் குழந்தைகள் பெயரில் உள்ள சொத்து விபரங் களை, ஒவ்வொரு ஆண்டும் அறிவிக்க வேண்டும்.ஒரு கோடி ரூபாய்க்கு மேல் அரசு மானியம் அல்லது, 10 லட்சம் ரூபாய் வெளிநாட்டு நன்கொடபெறும் அரசு சாரா ... |
| திருச்சி சிவாவை தாக்கியது ஏன்?:சசிகலா புஷ்பாவிடம் ஜெ., விசாரணை Posted: 31 Jul 2016 12:12 PM PDT டில்லி விமான நிலையத்தில், தி.மு.க., - எம்.பி., திருச்சி சிவாவை, அ.தி.மு.க., - எம்.பி., சசிகலா அடித்ததன் பின்னணியில், பண விவகாரம் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., திருச்சி சிவா மற்றும் அ.தி.மு.க., ராஜ்யசபா எம்.பி., சசிகலா புஷ்பா இடையே, நெருக்கமான நட்பு இருக்கிறது என, சில மாதங்களுக்கு முன் பரபரப்பாக தகவல் வெளியானது. அதை உறுதி செய்வது போல, இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களும், 'வாட்ஸ் ஆப்'பில் வெளியாகின.பின், 'அந்த படம் போலியானது; சசிகலா புஷ்பாவும், அவரது கணவர் லிங்கேஸ்வர திலகனும் இருக்கும் படத்தை, 'மார்பிங்' செய்து வெளியிட்டனர்' ... |
| நகரம் முழுவதும் குப்பை கூளங்கள் புறக்கணிக்கப்படும் கருணாநிதி தொகுதி? Posted: 31 Jul 2016 12:22 PM PDT 'தி.மு.க., தலைவர் கருணாநிதியின் தொகுதி என்பதால், ஆளுங்கட்சியாலும், அரசு அதிகாரி களாலும், திருவாரூர் புறக்கணிக்கப் படுகிறது' என குற்றம் சாட்டுகின்றனர், அத்தொகுதி மக்கள். சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில், தி.மு.க., தலைவர் கருணாநிதி, மீண்டும், திருவாரூர் தொகுதி எம்.எல்.ஏ.,வாக, அதிக ஓட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். கருணாநிதி வெற்றி பெற்ற தொகுதி என்பதாலேயே, அரசு தரப்பில் திருவாரூரை புறக்கணிப்பதாக, அத்தொகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.திருவாரூரை சேர்ந்த, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: தமிழகத்தில், 100வது ஆண்டு விழா கொண்டாடும் ... |
| தே.மு.தி.க.,வினர் இழுப்பு 'ஆப்பரேஷன்' களத்தில் அ.தி.மு.க., சுறுசுறுப்பு Posted: 31 Jul 2016 12:35 PM PDT தே.மு.தி.க.,வில் எஞ்சியுள்ள நிர்வாகிகளையும் இழுக்கும், 'ஆப்பரேஷனை' அ.தி.மு.க.,வினர் துவங்கி உள்ளனர். கடந்த சட்டசபை தேர்தலில், ஏற்பட்ட தோல்வியால், தே.மு.தி.க., கலகலத்து போய் உள்ளது. தேர்தலுக்கு முன்பாகவே, அக்கட்சி யின் முக்கிய நிர்வாகிகள் பலரும், தி.மு.க., பக்கம் சென்று விட்டனர். தேர்தலுக்கு பின்னும், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மட்டுமின்றி, கீழ்மட்ட நிர்வாகி களும், தி.மு.க.,விற்கு படையெடுத்தனர்.இதனால், தே.மு.தி.க.,வில், 90 சதவீத பதவிகள் காலியாக உள்ளன. அவ்வப்போது, தே.மு.தி.க., முக்கிய நிர்வாகிகளை மட்டும், அ.தி.மு.க., தங்கள் பக்கம் இழுத்து ... |
| பா.ஜ.,வில் வாரிசு அரசியல் இல்லை: அமித் ஷா Posted: 31 Jul 2016 12:39 PM PDT புதுடில்லி : பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை என அக்கட்சியின் தலைவர் அமித் ஷா தெரிவித்தார். டில்லியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பா.ஜ., தேசிய தலைவர் அமித் ஷா பேசியதாவது: காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதுபோலவே பல்வேறு கட்சிகளும் உள்ளன. ஆனால், பா.ஜ.,வில் எனக்கு பிறகு யார் தலைவராக வருவார் என்பது யாருக்குமே தெரியாது. பா.ஜ.,வில், 600க்கும் மேற்பட்ட தலைவர்களுக்கு குடும்பமே கிடையாது; அவர்களுடைய இறுதிச் சடங்கை கூட யார் செய்வார்கள் என்பது தெரியாது. பா.ஜ.,வில் மட்டுமே, வாரிசு அரசியல் இல்லை. ... |
| 'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவிக்க ஆசிரியர்களுக்கு தடை? Posted: 31 Jul 2016 12:50 PM PDT 'வாட்ஸ் ஆப்'பில் கருத்து தெரிவித்த, அரசு பள்ளி ஆசிரியர்கள் நான்கு பேருக்கு, பள்ளிக்கல்வித்துறை, 'நோட்டீஸ்' அளித்து விளக்கம் கேட்டுள்ளது. ராமநாதபுரம் மாவட்டத்தில், தினமும் காலையில் பள்ளி துவங்கும் ஒரு மணி நேரத்துக்கு முன், மாணவர்களை வரச்செய்து, தேர்வு நடத்த வேண்டும். விடைத்தாள்களை அன்றே திருத்தி, மதிப்பெண் அறிவிக்க வேண்டும். பருவத் தேர்வு விடைத்தாள்கள், வேறு பள்ளி ஆசிரியர்களால் திருத்தப்பட்டு, பணி மதிப்பீடு செய்யப்படும் என, புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.இதுகுறித்து ஆசிரியர் சங்கத்தினர் சிலர், 'டேம்ஸ்' என்ற தமிழ்நாடு ... |
| ரயில்வே ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள் Posted: 31 Jul 2016 01:40 PM PDT புதுடில்லி : இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகள் வழங்கப்பட உள்ளது. சீருடையை வடிவமைக்கும் பொறுப்பை பிரபல பேஷன் டிசைனர் ரிது பெர்ரி ஏற்றுள்ளார். நாட்டின் மிகப் பெரிய பொதுத்துறை நிறுவனமான இந்திய ரயில்வேயில் பணியாற்றும் ஊழியர்களுக்கு விரைவில் புதிய சீருடைகளை வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான டிசைனை வடிவமைக்கும் பொறுப்பை பிரபல பேஷன் டிசைனர் ரிது பெர்ரி ஏற்றுள்ளார். இந்திய கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில், நான்கு விதமான டிசைன்களை அவர் வடிவமைத்துள்ளார். விரைவில் ரயில்வே ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஆகஸ்ட் 01,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |