Tamil News | Online Tamil News |
- 'இந்தியா - அமெரிக்கா நட்புறவால் பாகிஸ்தானுக்கு கவலை இல்லை'
- வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யாவிட்டால் அபராதம் ரூ.10 லட்சம்!: அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு மத்திய அரசு கிடுக்கிப்பிடி
- மோடி வெளிநாடு செல்வதால் அமைச்சரவை மாற்றம் தள்ளிவைப்பு? :ஆப்ரிக்காவில் 4 நாடுகளுக்கு 5 நாள் சுற்றுப்பயணம்
- சுவிஸ் வங்கிகளில் முதலீடு 75வது இடத்தில் இந்தியா
- கேரளாவில் பெட்ரோலுக்கு கட்டுப்பாடு 'பங்க்' உரிமையாளர்கள் குமுறல்
- பிச்சைக்காரர்கள் இல்லா டில்லி ஆம் ஆத்மி அரசு புது திட்டம்
- பொய் வாக்குறுதிகளின் 'போஸ்டர் பாய்' மோடி கிண்டல் அடிக்கிறது காங்., இணையதளம்
- அரசுக்கு கோர்ட் கண்டனம்: கருணாநிதி கருத்து
- மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும் தமிழர்கள் 8 ஆயிரம் பேர் தவிப்பு
- 'தேவாங்கு போல இருக்கும் நீ, என்னை காதலிப்பதா?அவமானப்படுத்தியதால் சுவாதியை கொன்றேன்:ராம்குமார்
- நாளை மத்திய அமைச்சரவையில் மாற்றம்?
- இளங்கோவனுக்கு ஆதரவு: சோனியாவிடம் முறையீடு
- ஆஸ்திரேலியாவில் தொங்கு பார்லிமென்ட்?
- பேரிடரை சமாளிக்க சிறப்பு பயிற்சி
| 'இந்தியா - அமெரிக்கா நட்புறவால் பாகிஸ்தானுக்கு கவலை இல்லை' Posted: 03 Jul 2016 10:39 AM PDT லாகூர், :'அமெரிக்கா, தனிப்பட்ட ஒரு நாடு; விருப்பப்பட்டால் இந்தியாவுடன் அமெரிக்கா, பொருளாதாரம் உள்ளிட்ட உறவை மேம்படுத்திக் கொள்ளலாம்; அதைப் பற்றிய கவலை பாகிஸ்தானுக்கு இல்லை' என, பாக்., பிரதமரின் ஆலோசகர் சர்தாஜ் அஸிஸ் கூறியுள்ளார். பாக்., பிரதமர் நவாஸ் ஷெரீபின், வெளியுறவு விவகாரங்களுக்கான ஆலோசகர் சர்தாஜ் அஸிஸ், லாகூரில் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவும், பாகிஸ்தானும் சம அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக, அமெரிக்கா பலமுறை கூறி வருகிறது. பாகிஸ்தானின் நட்பை பலி கொடுத்து, இந்தியாவுடனான உறவை பலப்படுத்திக் கொள்ள மாட்டோம் என்றும் ... |
| Posted: 03 Jul 2016 10:48 AM PDT புதுடில்லி:ஆண்டு வரவு செலவு கணக்கை தாக்கல் செய்யாமல் ஏமாற்றும், என்.ஜி.ஓ.,க்கள் எனப்படும், அரசு சார்பற்ற அமைப்புகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் வகையில், 10 லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என, மத்திய அரசு எச்சரித்துள்ளது. நாடு முழுவதும், பதிவு செய்யப்பட்ட, 30 லட்சம் அரசு சார்பற்ற அமைப்புகள் செயல்படுகின்றன. இதில், 10 சதவீத அமைப்புகள் மட்டுமே, ஆண்டு தோறும், வரவு செலவு கணக்குகளை முறை யாக தாக்கல் செய்கின்றன. வெளிநாடுகளில் இருந்து நன்கொடைகளை பெறும் இதுபோன்ற அமைப்புகள், அவற்றை வேறு பணிகளுக்கு பயன்படுத்துவதாக புகார்கள் உள்ளன. சில அமைப்புகள், ... |
| Posted: 03 Jul 2016 10:55 AM PDT புதுடில்லி:பிரதமர் நரேந்திர மோடி, வரும், 7ம் தேதி முதல், ஆப்ரிக்காவில் உள்ள நான்கு நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதனால், மத்திய அமைச்சரவை மாற்றம் தள்ளி வைக்கப் படுவதாக தகவல்கள் கூறுகின்றன. பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணி அரசு, 2014, மே, 26ல் பதவி ஏற்றது. அதன்பின் அவ்வப்போது, சிறிய அளவில் மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்பட்டு வந்தது. அடுத்தாண்டு, பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட ஏழு மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல் நடக்கவுள்ளது. இதனால், இம்மாநிலங்களைச் சேர்ந்த, பா.ஜ., தலைவர்களுக்கு மத்திய அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் தரும் ... |
| சுவிஸ் வங்கிகளில் முதலீடு 75வது இடத்தில் இந்தியா Posted: 03 Jul 2016 10:58 AM PDT புதுடில்லி:ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தில் உள்ள வங்கிகளில், அதிகளவு முதலீடு செய்துள்ள நாடுகளின் பட்டியலில், இந்தியா, 75வது இடத்துக்கு பின்தங்கியது. இந்த பட்டியலில், பிரிட்டன் முதலிடத்தில் உள்ளது. சுவிஸ் தேசிய வங்கியின், 2015ம் ஆண்டுக்கான அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:* கடந்த, 2014ம் ஆண்டில், 61வது இடத்தில் இருந்த இந்தியா, 2015ம் ஆண்டு இறுதியில், 75வது இடத்தில்உள்ளது* கடந்த, 2004ம் ஆண்டில், 37வது இடத்தில் இருந்தது* கடந்த, 1996 முதல் 2007ம் ஆண்டு வரை, முதல், 50 நாடுகளுக்குள் இருந்தது* கடந்த, 2014ம் ஆண்டு இறுதியின்படி, ... |
| கேரளாவில் பெட்ரோலுக்கு கட்டுப்பாடு 'பங்க்' உரிமையாளர்கள் குமுறல் Posted: 03 Jul 2016 11:02 AM PDT திருவனந்தபுரம்:'ஹெல்மெட் அணிந்து வரும் இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு மட்டுமே பெட்ரோல் நிரப்ப வேண்டும் என்ற கேரள அரசின் உத்தரவு, நடைமுறைக்கு சாத்திய மில்லை' என, பெட்ரோல் 'பங்க்' உரிமையாளர் கள் தெரிவித்துள்ளனர். முதல்வர் பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி அரசு உள்ள கேரளாவில், 'ஹெல்மெட் அணிந்து வருபவர்களுக்கு மட்டுமே பெட்ரோல் பங்க்குகளில் பெட்ரோல் நிரப்ப வேண்டும்' என, சமீபத்தில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மாநகராட்சிகளில்... சோதனை அடிப்படை யிலான இந்த திட்டம், ஆகஸ்ட், 1ம் தேதி முதல், ... |
| பிச்சைக்காரர்கள் இல்லா டில்லி ஆம் ஆத்மி அரசு புது திட்டம் Posted: 03 Jul 2016 11:05 AM PDT புதுடில்லி:பிச்சைக்காரர்கள் இல்லாத டில்லியை உருவாக்கும் புதிய திட்டத்தை செயல்படுத்த, டில்லியில் ஆளும் ஆம் ஆத்மி அரசு முடிவு செய்துள்ளது. டில்லியில் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி அரசு உள்ளது. டில்லியில் பிச்சை எடுப்போரின் தொந்தரவு அதிகரித்து வருவதாக புகார்கள் வந்தபடி உள்ளன.அதிருப்தி: 'பிச்சைக்காரர்கள் தொந்தரவு அதிகரித்து வருவதால் சுற்றுலா பயணிகள் அதிருப்தி அடைகின்றனர். நகரின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதைத் தடுக்க, பிச்சை எடுப்பவர்களை மீட்டு மறுவாழ்வு மையத்தில் அவர்களை தங்க வைக்க திட்டமிடப்பட்டு ... |
| பொய் வாக்குறுதிகளின் 'போஸ்டர் பாய்' மோடி கிண்டல் அடிக்கிறது காங்., இணையதளம் Posted: 03 Jul 2016 11:08 AM PDT புதுடில்லி:'நிறைவேறாத வாக்குறுதிகளுக்கான, 'போஸ்டர் பாய்' பிரதமர் நரேந்திர மோடி' என, காங்., குற்றம் சாட்டியுள்ளது. பித்தலாட்டம்காங்., கட்சியின் இணைய தளத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான ஆட்சி, பொய்களால் ஆனது. நிறைவேற்றப் படாத பொய் வாக்குறுதிகளின், 'போஸ்டர் பாய்' நரேந்திர மோடி. அவரது மொத்த அரசுக்கும், அரசியலுக்கும் அடித்தளமாக, பொய், பித்தலாட் டங்களே உள்ளன. லோக்சபா தேர்தலுக்கான பிரசாரங்களின்போது, மோடி, நாடு முழுவதும் பொய்களைகட்டவிழ்த்து விட்டார். ஆனால், இரண்டு ஆண்டு ஆட்சியில், அவை அனைத்தும் பொய் என்பது அம்பலமாகி ... |
| அரசுக்கு கோர்ட் கண்டனம்: கருணாநிதி கருத்து Posted: 03 Jul 2016 11:15 AM PDT சென்னை:தி.மு.க., தலைவர் கருணாநிதி, நேற்று வெளியிட்ட அறிக்கை: போலீஸ் அதிகாரி விஷ்ணுப்பிரியா தற்கொலை விவகாரத்தில், சி.பி.ஐ., விசாரணை கோரி அவரது தந்தை தொடர்ந்த வழக்கில், உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹூலுவாடி ரமேஷ், எம்.பி.முரளிதரன் ஆகியோர், 'மாநில போலீசாரின் விசாரணையில் எங்களுக்கு திருப்தி இல்லை. எனவே, விஷ்ணுப்பிரியா மரணம் தொடர்பான வழக்கை, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிடுகிறோம்' என்று, அனைவரும் வரவேற்கத்தக்க தீர்பை கூறியிருக்கின்றனர்.சுவாதி என்ற இளம்பெண்ணை கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடித்த காவல் துறை அதிகாரிகளை பாராட்டுகிறேன்.அதே நேரம், உயர் ... |
| மலேசியாவில் ரூ.50 ஆயிரத்திற்கு விலை போகும் தமிழர்கள் 8 ஆயிரம் பேர் தவிப்பு Posted: 03 Jul 2016 11:19 AM PDT மதுரை:போலி முகவர்களின் ஆசை வார்த் தைகள்... கைநிறைய கண்முன் வந்து போகும் கரன்சி கட்டுகள்... இதில் ஈர்க்கப்பட்ட வர்களை 'சிறைபிடித்து' விமானத்தில் பறக்கவிட்டு, கடைசியில் அதலபாதாளத்தில் தள்ளி தவிக்க வைத்து விடுகிறது குடும்பச்சூழல். மலேசியாவில் தற்போது 8 ஆயிரம் தமிழர்கள் பழைய இரும்பு உலோக கடைகளில் அடிமை கூலித் தொழிலாளர்களாக உள்ளனர். இவர்கள் மலேசியா செல்ல முகவர்களிடம் ரூ.1.50 லட்சம் பணம் கட்டியிருக்கிறார்கள். கடும் வேலைப்பளுவை சமாளிக்க முடியாமல் மீண்டும் இந்தியா செல்ல விரும்பினால், கடை உரிமையாளருக்கு ரூ.1 லட்சம் 'கப்பம்' கட்டி னால்தான் திரும்ப ... |
| 'தேவாங்கு போல இருக்கும் நீ, என்னை காதலிப்பதா?அவமானப்படுத்தியதால் சுவாதியை கொன்றேன்:ராம்குமார் Posted: 03 Jul 2016 11:25 AM PDT 'தேவாங்கு போல இருக்கும் நீ, என்னை காதலிப்பதாக சொல்கிறாயே என, சுவாதி அவமானப்படுத்தியதால், அவரது வாயில் வெட்டினேன்; கொலை செய்யும் எண்ணம் இல்லை' என, ராம்குமார் கூறியுள்ளான். சென்னை, சூளைமேடு, தெற்கு கங்கை அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் சுவாதி, 24; மென் பொறியாளர். ஜூன், 24ம் தேதி காலை, நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில், மர்ம வாலிபனால் கொடூரமாக வெட்டிக் கொல்லப்பட்டார்.இது குறித்து, சென்னை போலீஸ் கமிஷனர் டி.கே.ராஜேந்திரன், கூடுதல் கமிஷனர் சங்கர் தலைமையிலான போலீசார் துப்பு துலக்கி, நெல்லை மாவட்டம், செங்கோட்டையை அடுத்த, டி.மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த ... |
| நாளை மத்திய அமைச்சரவையில் மாற்றம்? Posted: 03 Jul 2016 11:36 AM PDT புதுடில்லி: மத்திய அமைச்சவையில், நாளை (ஜூலை 5ம் தேதி) மாற்றம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பா.ஜ., தலைமையிலான தே.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்து 2 ஆண்டுகள் முடிவடைந்துள்ளது. இந்நிலையில், பஞ்சாப், உ.பி., உள்ளிட்ட 7 மாநில சட்டசபை தேர்தலை மனதில் கொண்டு மத்திய அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் எனத் தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் கடந்த 30ம் தேதி டில்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், மத்திய அமைச்சர்களின் செயல்பாடு குறித்து பிரதமர் ஆய்வு மேற்கொண்டார். 4 மணி நேரம் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தின்போது, அனைத்து அமைச்சர்களின் செயல்பாடுகளையும் ... |
| இளங்கோவனுக்கு ஆதரவு: சோனியாவிடம் முறையீடு Posted: 03 Jul 2016 12:15 PM PDT சட்டசபை தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று, தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை இளங்கோவன் ராஜினாமா செய்தார். இதை, சோனியாவும் ஏற்றுக் கொண்டார். இந்நிலையில், இளங்கோவன் ஆதரவு மாவட்ட தலைவர்கள் ரங்கபாஷ்யம், சிவராமன், திருப்பூர் கிருஷ்ணன், கோபி சரவணன், ஈரோடு ரவி ஆகிய ஐந்து பேர், டில்லியில், காங்., தலைவர் சோனியாவை சந்தித்து அளித்த மனு: தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவன் பொறுப்பேற்ற பின், மக்கள் பிரச்னைக்காக போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள், உண்ணாவிரதங்களை நடத்தி, கட்சியை உயிரோட்டமாக வைத்திருந்தார். உள்ளாட்சி தேர்தல் வரை, தமிழக காங்கிரஸ் தலைவராக இளங்கோவனே ... |
| ஆஸ்திரேலியாவில் தொங்கு பார்லிமென்ட்? Posted: 03 Jul 2016 01:04 PM PDT கேன்பெரா: ஆஸ்திரேலியாவில் ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பங்களுக்கு தீர்வு கிடைக்கும் என, எதிர்பார்க்கப்பட்ட, பார்லிமென்ட் தேர்தல், மேலும் குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில், நான்கு பிரதமர்களை பார்த்துள்ள ஆஸ்திரேலியாவில், 226 எம்.பி.,க்களை தேர்ந்தெடுப்பதற்கான பார்லிமென்ட் தேர்தல், சமீபத்தில் நடந்தது. இதில், 150 எம்.பி.,க்களை உடைய கீழ்சபைக்கான தேர்தல் தான், பிரதமரை முடிவு செய்ய உள்ளது. தற்போது பிரதமராக உள்ள மால்கம் டர்ன்புல்லின், லிபரல் கட்சி தலைமையிலான லிபரல் - நேஷனல் கூட்டணி, கீழ் சபையின், 150 இடங்களில், 67 தொகுதிகளில் ... |
| பேரிடரை சமாளிக்க சிறப்பு பயிற்சி Posted: 03 Jul 2016 02:27 PM PDT புதுடில்லி : பேரிடர் சம்பவங்களை எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கும் வகையில், நாடு முழுவதும் ஒரு லட்சம் பேருக்கு, தேசிய பேரிடர் மீட்புப்படை சிறப்பு பயிற்சி அளித்துள்ளது. இதுகுறித்து, என்.டி.ஆர்.எப்., எனப்படும் தேசிய பேரிடர் மீட்புப்படை பொது இயக்குனர் ஓ.பி.சிங் கூறியதாவது: நாட்டின் பல்வேறு பகுதிகளில், ஒவ்வொரு ஆண்டும் வெள்ளம், நிலநடுக்கம் போன்ற இயற்கை பேரழிவுகள் நிகழ்கின்றன. இது போன்ற சவால்களை எதிர்கொள்ள, ஒவ்வொருவரும் தயார் நிலையில் இருக்க வேண்டும். எதையும் எதிர்கொள்ளும் வகையில் மக்கள் தயாராக இருந்தால், பேரிடர் கால சேதங்களை கணிசமாக ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 04,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |