Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மத்திய அரசு பெருமிதம் அன்னிய நேரடி முதலீட்டில் சாதனை:

Posted: 29 Jul 2016 09:13 AM PDT

புதுடில்லி:''மத்திய அரசு எடுத்து வரும் நடவடிக்கைகளால், கடந்த இரு ஆண்டுகளில், அன்னிய நேரடி முதலீடு, சாதனை அளவாக, 53 சதவீதம் அதிகரித்துள்ளது,'' என, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, பார்லிமென்ட்டில் தெரிவித்தார்.

அவர் மேலும் கூறியதாவது:நாட்டில், சுலபமாக தொழில் துவங்குவதற்கான நடவடிக்கைகளை, மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இதன் விளைவாக, கடந்த இரு ஆண்டுகளில், அன்னிய நிறுவனங்கள் இந்தியாவில் மேற்கொண்ட நேரடி முதலீடு, 53 சதவீதம் அதிகரித்துள்ளது. இது, புதிய சாதனையாகும். விலைவாசி உயர்வை கட்டுப்படுத்தி, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளை ...

வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தத்தால் ரூ.20 ஆயிரம் கோடி பரிவர்த்தனை பாதிப்பு

Posted: 29 Jul 2016 09:31 AM PDT

நாடு முழுவதும், நேற்று நடைபெற்ற வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பொதுத்துறை வங்கிகளில், 20 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கான பரிவர்த்தனைகள் பாதிக்கப்பட்டன.

பாரத ஸ்டேட் வங்கியுடன், திருவாங்கூர், ஐதராபாத், ஜெய்ப்பூர், மைசூர் உள்ளிட்ட, அதன் ஐந்து துணை வங்கிகளை இணைக்க, மத்திய அரசு முடிவு செய்தது. இதை கண்டித்து, 'அனைத்து பொதுத்துறை வங்கிகள் பங்கேற்கும் வேலை நிறுத்தப் போராட்டம், ஜூலை, 29ல் நடைபெறும்' என, வங்கி ஊழியர் சங்கங்களின் ஐக்கிய கூட்டமைப்பு அறிவித்தது. போராட்டம்:அந்த கூட்டமைப்பின் கீழ், நாட்டில் உள்ள ஒன்பது பொதுத்துறை வங்கி ஊழியர் ...

குளச்சல் துறைமுக திட்டம் கைவிடப்படாது என பிரதமர்...திட்டவட்டம்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை நிராகரிப்பு

Posted: 29 Jul 2016 10:38 AM PDT

தமிழகத்தில், கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகேயுள்ள இணயத்தில், துறைமுகம் அமைவதற்கு கேரளா தெரிவித்த எதிர்ப்பை நிராகரித்த பிரதமர் நரேந்திர மோடி, ''அந்த திட்டம், மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது; அதை கைவிட முடியாது,'' என, திட்டவட்டமாக கூறியுள்ளார்.

கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் அருகே உள்ள சிறிய மீன்பிடி துறைமுகத்தை, பெரியளவில் கட்டமைக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது. தமிழகத்தைச் சேர்ந்த அரசியல்வாதி களும், இதை வலியுறுத்தி வந்தனர்.இதையடுத்து, குளச்சல் அருகேயுள்ள இணயம் பகுதியில் துறைமுகம் அமைக்க, மத்திய ...

விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழையால் தலைநகர் டில்லி... ஸ்தம்பிப்பு: போக்குவரத்து நெரிசலை குறைக்க குர்கானில் தடை உத்தரவு

Posted: 29 Jul 2016 10:56 AM PDT

புதுடில்லி:டில்லியிலும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் கொட்டித் தீர்த்த கன மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டில்லி மற்றும் குர்கானில் நேற்று, போக்குவரத்து முடங்கியதால் மக்கள் ஸ்தம்பித்து போயினர். போக்குவரத்து நெரிசலை குறைக்க, குர்கானில், ௧௪௪ தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.

டில்லி, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில், சில தினங்களாக பலத்த மழை பெய்தது. டில்லியிலும் அதன் சுற்றுப்பகுதியிலும், இரண்டு நாட்களாக பெய்த மழையால், சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. டில்லியை ஒட்டியுள்ள, ஹரியானா மாநிலம் குர்கானில், நேற்று ...

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து பிரச்னை:ஜெட்லியுடன் அமைச்சர் வாக்குவாதம்

Posted: 29 Jul 2016 11:04 AM PDT

புதுடில்லி:ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிப்பது குறித்து, ராஜ்யசபாவில் நேற்று நடந்த விவாதத்தின் போது, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லியுடன், தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த, மத்திய அமைச்சர் ஒய்.எஸ்.சவுத்ரி கடும் வாக்குவாதம் செய்தார்.

ஆந்திராவை பிரித்து, தெலுங்கானா தனி மாநிலம் அமைப்பது தொடர்பான, ஆந்திரா மறுசீராய்வு சட்டத்தின்படி நிறைவேற்றப்பட்ட பணிகள் குறித்து, ராஜ்யசபாவில் நேற்று விவாதம் நடந்தது.அப்போது, 'ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்க வேண்டும்' என, மத்தியில் ஆளும் பா.ஜ., தலைமையிலான, தே.ஜ., கூட்டணியில் இடம்பெற்றுள்ள தெலுங்கு தேசம் ...

'மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணமில்லை'

Posted: 29 Jul 2016 11:09 AM PDT

புதுடில்லி:''மரண தண்டனையை ரத்து செய்யும் எண்ணம் எதுவும், அரசுக்கு இல்லை,'' என, ராஜ்யசபாவில், மத்திய உள்துறை இணை அமைச்சரும், பா.ஜ.,வைச் சேர்ந்தவருமான கிரண் ரிஜிஜு கூறினார்.

ராஜ்சபாவில், இந்திய கம்யூனிஸ்ட் உறுப்பினர் டி.ராஜா, 'மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்' எனக் கோரி, தனி நபர் மசோதாவை தாக்கல் செய்தார்.இந்த மசோதா மீதான விவாதத்தில் பேசிய தி.மு.க., - எம்.பி. சிவா, ''மரண தண்டனை அமலில் இருந்தும், நாட்டில், கொலை உட்பட பல கடும் குற்றங்களை தடுக்க முடியவில்லை. அதனால், மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும்,''என்றார்.அ.தி.மு.க.,வைச் சேர்ந்த நவநீதகிருஷ்ணன், ...

கேலி, கிண்டல், அநாகரிகம்:தி.மு.க.,வுக்கு சபாநாயகர் கடும் எச்சரிக்கை

Posted: 29 Jul 2016 11:23 AM PDT

சென்னை:''தி.மு.க.,வினரின் அநாகரிகமான செயல்பாடுகள் தொடர்ந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சபாநாயகர் அறிவித்தார். சட்டசபையில் நேற்று நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின்: நேற்று நடந்த பிரச்னையில், அமைச்சர் ஓ.எஸ்.மணி யன் பேசியதை சபைக்குறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என, வலியுறுத்தி னோம். இன்று தீர்ப்பு தருவதாக தெரிவித்தீர்கள்; தீர்ப்பை தெரிவிக்க வேண்டும்.சபாநாயகர்: தீர்ப்பை கூறுகிறேன்; பொறுமையாக இருங்கள். சபை கூடியதும் சொல்கிறேன் என்று நான் கூறவில்லை. பதில் கூறவில்லைஸ்டாலின்: கடந்த, 25ம் தேதி, அ.தி.மு.க., உறுப்பினர் ...

சந்திக்க தயார்: ஸ்டாலின் சவால்!

Posted: 29 Jul 2016 12:17 PM PDT

சென்னை: சபாநாயகர் எடுக்கும் நடவடிக்கையை சட்டப்படி சந்திக்க உள்ளதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சட்டசபைக்கு வெளியே, எதிர்க்கட்சியினர் அளித்த பேட்டி:தி.மு.க., - ஸ்டாலின்: தி.மு.க., ஜனநாயக முறைப்படி செயல்படுகிறது. எங்கள் எம்.எல்.ஏ.,க்கள் சட்டவிதிகளை பின்பற்றி, முறையாக செயல்படுகின்றனர். சபாநாயகர், சர்வாதிகாரி போல் செயல் படுவது வேதனையாக உள்ளது.சபாநாயகர் தேர்வு செய்யப்பட்ட போது, 'நாங்கள் எதிர்க்கட்சியாக இருப்போம். எதிரி கட்சியாக இருக்க மாட்டோம்' என, கூறினேன். ஆனால், அவர் நடுநிலையாக நடந்து கொள்ளவில்லை.சட்டசபையில், நேற்று முன்தினம், ...

மத்திய அரசு முடிவால் தமிழகம் பாதிப்பு:சட்டசபையில் நிதி அமைச்சர் பட்டியல்

Posted: 29 Jul 2016 12:38 PM PDT

சென்னை:''மத்திய நிதிக்குழு பரிந்துரையால், பல மாநிலங்கள் பயன் பெற்றாலும், தமிழகம் பாதிப்பை சந்தித்துள்ளது. தற்போதுள்ள நிதி பற்றாக்குறைக்கு, இதுவும் காரணம்,'' என, நிதி அமைச்சர் பன்னீர்செல்வம் தெரிவித்தார்.

சட்டசபையில், நேற்று அவர் பேசியதாவது: மத்திய அரசு, 14வது நிதிக்குழு பரிந்துரையை செயல்படுத்தியதால், தமிழகம் எவ்வாறு பாதிக்கப்பட்டது என்பதை விளக்குகிறேன்.கடந்த, 2015 - 16 முதல், மத்திய அரசு சில மாற்றங்களை கொண்டு வந்துள்ளது. மாநிலங்களுக்கான நிதி பகிர்வின் அளவு, மத்திய அரசின் வரி வருவாயில், 32 சதவீதத்தில் இருந்து, 42 சதவீதமாக உயர்த்தப்பட்டது. அதே ...

மொபைல் போன் சேவையை கிராமங்களில் விரிவுபடுத்த மத்திய அரசு முடிவு

Posted: 29 Jul 2016 12:43 PM PDT

புதுடில்லி: நாட்டில் கிராமப்புறங்களில் மொபைல் போன் சேவையை விரிவுபடுத்த மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது.தற்போது நாட்டில் உள்ள 5.97 லட்சம் கிராமங்களில் 5.41 லட்சம் கிராமங்களுக்கு மொபைல் நெட்வொர்க் வசதி உள்ளது. இருந்தாலும், மேலும் 55,669 கிராமங்களில் மொபைல் நெட்வொர்க் வசதி இல்லாத நிலையில், விரைவில் அங்கும் மொபைல் கவரேஜை ஏற்படுத்தி அங்கு மொபைல் போன் சேவைகளை கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த தகவலை தகவல்தொடர்பு துறை இணையமைச்சர் மனோஜ் சின்ஹா பார்லிமென்டில் தெரிவி்த்துள்ளார்.
மொபைல் நெட்வொர்க் கவரேஜ் இல்லாத கிராமங்களின் ...

சிறப்பு ரயில்கள் அறிவிப்பு

Posted: 29 Jul 2016 02:11 PM PDT

சென்னை:பயணிகளின் வசதிக்காக, சுவிதா மற்றும் சிறப்பு கட்டண ரயில்கள் அறிவிக்கப்பட்டு உள்ளன. இதுகுறித்து, தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை:எர்ணாகுளம் - ஹவுரா சுவிதா அதிவேக சிறப்பு ரயில்: ஆக., 9 மற்றும், 30ம் தேதிகளில், எர்ணாகுளத்தில் இருந்து, காலை, 8:50 மணிக்கு புறப்பட்டு, திரிசூர், பாலக்காடு, கோவை, ஈரோடு, ஜோலார்பேட்டை, காட்பாடி வழியாக, ஹவுரா செல்லும் ஆக., 9க்கு தற்போதும், ஆக., 30க்கு நாளை முதலும் முன்பதிவு செய்யலாம்.சென்னை சென்ட்ரல் - ஹவுரா ஏ.சி., அதிவேக சிறப்பு கட்டண ரயில்: சென்ட்ரலில் இருந்து, ஆக., 4 மற்றும் செப்., 11 தேதிகளில், மாலை, 5:10 மணிக்கு புறப்பட்டு நெல்லுார், ...

கன மழை: 91 முக்கிய அணைகளில் நீர்மட்டம் உயர்வு

Posted: 29 Jul 2016 03:30 PM PDT

புதுடில்லி:நாட்டின் முக்கிய நீர்நிலை பகுதிகளில் சென்ற வாரம் பெய்த கனமழை காரணமாக 91 அணைகளில் நீர்மட்டம் உயர துவங்கியுள்ளது. எனினும், சென்ற ஆண்டை விடவும், 10 ஆண்டு சராசரியை விடவும் குறைவாகவே நீர் இருப்பு உள்ளது. மத்திய நீர் ஆணையம் வெளியிட்டுள்ள தகவலின்படி, சென்ற ஆண்டு(2015) இதே நேரத்தில் 68.454 பில்லியன் கியூபிக் மீட்டர்கள் நீர் இருப்பில் இருந்தது. ஆனால், தற்போது(2016) 59.366 பில்லியன் கியூபிக் மீட்டர்கள் அளவுக்கே நீர் உள்ளது.

கங்கா, நர்மதா, கோதாவரி ஆகிய நதிகளில் கடந்த 10 ஆண்டுகளின் சராசரியை விட தண்ணீர் வரத்து அதிகமாக உள்ளது. 28-க்கும் மேற்பட்ட அணைகளில் சென்ற ஆண்டை ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™