Tamil News | Online Tamil News |
- காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது : அனல் மின் நிலையங்கள் 'அலர்ட்'
- 'அவதூறு வழக்கை போலீசார் விசாரிக்க முடியாது' ராகுல் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு
- 'உதய்' மின் திட்டம் குறித்து பேச டில்லி செல்கிறது தமிழக குழு
- பால் கொள்முதல் ஏற்படுத்திய பரபரப்பு : தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி மோதல்
- ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி தேர்வு: சூடு பிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல்
- 'கொலை பண்ண போறாங்க!':அரவிந்த் கெஜ்ரிவால் அலறல்
- கலாம் நினைவு அஞ்சலி; ரகசியமாக வந்த விஜயகாந்த்
- 'அம்ரூத்' நகரங்களில் ராமேஸ்வரம் இணைப்பு:கலாம் பிறந்த புண்ணிய பூமி என்பதால் விலக்கு
- ராஜிவ் கொலையாளிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா? : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறு சீராய்வு மனு
- லோக்சபாவில் நிறைவேறியது பினாமி சட்ட மசோதா
- புதுச்சேரியில் 2 மாதத்தில் விமான சேவை
- சாமி மீதான அவதூறு வழக்குகள்; விசாரணைக்கு ஐகோர்ட் தடை
- சி.பி.ஐ.,யில் 20% பணியிடங்கள் காலி
- நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயரும்
| காற்றாலை மின் உற்பத்தி குறைந்தது : அனல் மின் நிலையங்கள் 'அலர்ட்' Posted: 27 Jul 2016 09:31 AM PDT காற்றாலை மின்சாரம் குறைவாக கிடைப்பதால், அனல் மின் நிலையங்களில், முழு அளவில் உற்பத்தி செய்வதற்கு தயாராக இருக்கும்படி, மின் வாரியம் அறிவுறுத்தி உள்ளது. தமிழகத்தில், 7,597 மெகாவாட் திறன் உடைய, காற்றாலை மின் நிலையங்கள் உள்ளன. மே முதல், செப்டம்பர் வரை, காற்றாலை சீசன். நடப்பு சீசனில், காற்றாலைகளில் இருந்து, தினமும் சராசரியாக, 3,000 மெகாவாட் மின்சாரம் கிடைத்தது. ஆனால், மின் வாரியம், அந்த மின்சாரத்தை முழு அளவில் வாங்கவில்லை. மின் வாரியத் திற்கு, 4,660 மெகாவாட் திறன் உடைய, ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில், தினமும் சராசரியாக, 3,800 - 4,000 மெகாவாட் உற்பத்தி ... |
| 'அவதூறு வழக்கை போலீசார் விசாரிக்க முடியாது' ராகுல் மீதான வழக்கில் சுப்ரீம் கோர்ட் உத்தரவு Posted: 27 Jul 2016 09:35 AM PDT புதுடில்லி:'ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு குறித்து அவதுாறாக பேசியதாக, காங்., துணை தலைவர் ராகுலுக்கு எதிராக தொடரப்பட்ட, அவதுாறு வழக்கை, போலீசார் விசாரிக்க முடியாது; புகார் கொடுத்தவர்கள் தான், குற்றத்தை நிரூபிக்க வேண்டும்' என, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது. மஹாராஷ்டிர மாநிலம், தானேவில், 2014ல் நடந்த, லோக்சபா தேர்தல் பிரசாரத்தில் பேசிய, காங்கிரஸ் துணை தலைவர் ராகுல், 'மகாத்மா காந்தியை கொன்றது, ஆர்.எஸ்.எஸ்., அமைப்புதான்' என்றார். இதை கண்டித்து, தானே மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., செயலர் ராஜேஷ் குண்டே, அங்குள்ள பிவான்டி கோர்ட்டில், ராகுல் மீது அவதுாறு வழக்கு தொடர்ந்தார். ... |
| 'உதய்' மின் திட்டம் குறித்து பேச டில்லி செல்கிறது தமிழக குழு Posted: 27 Jul 2016 09:48 AM PDT 'உதய்' மின் திட்டம் குறித்து பேச, தமிழக குழுவினர், செப்டம்பரில் டில்லி செல்ல உள்ளனர். மாநில மின் வாரியங்களின் நிதி நெருக்கடியை சரி செய்ய, 'உதய்' என்ற திட்டத்தை, மத்திய அரசு அறிவித்து உள்ளது.இதில், 'மின் வாரியங்களின் மொத்த கடனில், 75 சதவீதத்தை, சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் ஏற்க வேண்டும். 'மூன்று மாதங்களுக்கு, ஒரு முறை மின் கட்டணம் மாற்றி அமைக்க வேண்டும்; மின் நிலையங்களுக்கு தடையில் லாமல், அதிக நிலக்கரி வழங்க வேண்டும்' என்பது உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றன. இந்த அம்சங்களை தளர்த்தும்படி, தமிழக அரசு, மத்திய அரசுக்குகோரிக்கை விடுத்தது. ஆனால், ... |
| பால் கொள்முதல் ஏற்படுத்திய பரபரப்பு : தி.மு.க., - அ.தி.மு.க., நேரடி மோதல் Posted: 27 Jul 2016 10:00 AM PDT சென்னை: சட்டசபையில், பால் கொள்முதல் தொடர்பான விவாதத்தில், அ.தி.மு.க., - தி.மு.க., நேரடி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அமளி ஏற்பட்டது. சட்டசபையில் நடந்த விவாதம்: தி.மு.க., - சக்கரபாணி: பால் உற்பத்தியாளர்கள், போராட்டம் அறிவித்து ள்ளனர். ஆவின் நிறுவனம், விவசாயிகளிடம் இருந்து, பால் முழுவதையும் கொள்முதல் செய்யாமல், 20 சதவீதம் நிறுத்தி வைக்கிறது. அமைச்சர் சண்முகநாதன்: முதல்வர் உத்தரவுப்படி, கிராம அளவில், முழு அளவில் பால் கொள்முதல் செய்யப்படுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்தியதால், தரமற்ற பாலை ... |
| ஜனநாயக கட்சி வேட்பாளராக ஹிலாரி தேர்வு: சூடு பிடிக்கிறது அமெரிக்க அதிபர் தேர்தல் Posted: 27 Jul 2016 10:26 AM PDT பிலடெல்பியா: அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான ஜனநாயகக் கட்சி வேட்பாளராக, அந்த நாட்டின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹிலாரி கிளிண்டன், 68, ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் முதல் பெண் வேட்பாளர் என்ற பெருமை, இவருக்கு கிடைத்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா வின் பதவிக்காலம், அடுத்த ஆண்டு ஜனவரியில் முடிகிறது. அதைத் தொடர்ந்து, புதிய அதிபரை தேர்வு செய்வதற் கான தேர்தல், வரும் நவம்பர், 8ல், நடக்க உள்ளது. முன்னதாக தேர்தலில் போட்டியிடும் கட்சி வேட்பாளரை தேர்ந்தெடுக்கும், 'காகஸ்' ... |
| 'கொலை பண்ண போறாங்க!':அரவிந்த் கெஜ்ரிவால் அலறல் Posted: 27 Jul 2016 10:29 AM PDT புதுடில்லி:''பிரதமர் மோடி, என்னை கொலை செய்தாலும் ஆச்சர்யமில்லை,'' என, டில்லி முதல்வரும், ஆம் ஆத்மி தலைவருமான கெஜ்ரி வால் கூறியுள்ளார். டில்லியில், அரவிந்த் கெஜ்ரிவால் தலைமை யிலான ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. கெஜ்ரி வால், முதல்வராக பதவியேற்றதிலிருந்து, மத்திய அரசுடன் மோதல் போக்கை பின்பற்றி ;வருகிறார். பிரதமர் மோடியையும், கடுமை யாக விமர்சிக்கிறார். இதற்கிடையே, பல்வேறு குற்றச்சாட்டுகளால், டில்லி அமைச்சர்களும், ஆம் ஆத்மி கட்சி தலைவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்நிலையில், 'ஆன்லைனில்' வீடியோ ஒன்றை, கெஜ்ரிவால் வெளியிட்டுள்ளார்அதில் ... |
| கலாம் நினைவு அஞ்சலி; ரகசியமாக வந்த விஜயகாந்த் Posted: 27 Jul 2016 10:31 AM PDT திருப்பூர் நீதிமன்றம் பிறப்பித்துள்ள, 'பிடிவாரன்ட்' காரணமாக, அப்துல் கலாம் நினைவு அஞ்சலியை, அவசரமாக முடித்துவிட்டு, விஜயகாந்த் கிளம்பினார். முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த அவதுாறு வழக்கில் ஆஜராகாததால், தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், அவரது மனைவி பிரேமலதா ஆகியோருக்கு, திருப்பூர் நீதிமன்றம், நேற்று முன்தினம், 'பிடிவாரன்ட்' பிறப்பித்தது.இதனால், எந்த நேரமும்போலீஸ், தன்னை கைது செய்யலாம் என்ற அச்சம், விஜயகாந்திற்கு ஏற்பட்டுள்ளது. எனவே, வீட்டில் தங்குவதை விஜயகாந்தும், பிரேமலதாவும் தவிர்த்து வருகின்றனர். இதற்கிடையில், 'பிடிவாரன்ட்'டை எதிர்த்து, ... |
| 'அம்ரூத்' நகரங்களில் ராமேஸ்வரம் இணைப்பு:கலாம் பிறந்த புண்ணிய பூமி என்பதால் விலக்கு Posted: 27 Jul 2016 10:39 AM PDT ராமநாதபுரம்:''அப்துல் கலாம் பிறந்த புண்ணிய பூமி என்பதால், நகரங்களை மேம்படுத்தும், 'அம்ரூத்' திட்டத்தில் ராமேஸ்வரம் சேர்க்கப்பட்டுள்ளது,'' என, மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு பெருமிதத்துடன் கூறினார். ராமேஸ்வரம் பேக்கரும்பில் உள்ள, அப்துல் கலாம் நினைவிடத்தில், கலாமின் வெண்கலச் சிலையை திறந்து வைத்து, அவர் பேசியதாவது: சாதாரண மனிதனும், கல்வியால் முன்னேற முடியும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர் கலாம். இந்த நேரத்தில், தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். கடந்த வாரம் அவரை சந்தித்த போது, நினைவகம் அமைக்க கூடுதல் இடம் ஒதுக்க ... |
| ராஜிவ் கொலையாளிகளுக்கு நிவாரணம் கிடைக்குமா? : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மறு சீராய்வு மனு Posted: 27 Jul 2016 11:00 AM PDT புதுடில்லி:முன்னாள் பிரதமர் ராஜிவ் கொலை யாளிகள், ஏழு பேரை விடுதலை செய்வது குறித்து, சுப்ரீம் கோர்ட் அரசியல் சாசன அமர்வு அளித்த தீர்ப்பை மறுபரிசீலனை செய்யக் கோரி, தமிழக அரசின் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னாள் பிரதமரும், காங்கிரசைச் சேர்ந்தவரு மான ராஜிவ் கொலை வழக்கில், முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோருக் கான மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப் பட்டது. நளினி, ராபர்ட் பயஸ், ஜெயகுமார், ரவிச்சந்திரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.இந்த, ஏழு பேரையும் விடுதலை செய்ய, 2014ல், தமிழக அரசு முடிவு செய்தது. தங்களை ... |
| லோக்சபாவில் நிறைவேறியது பினாமி சட்ட மசோதா Posted: 27 Jul 2016 11:27 AM PDT
புதுடில்லி: பினாமி பரிவர்த்தனை தடுப்பு திருத்த மசோதா, லோக்சபாவில் நேற்று நிறைவேறியது. கறுப்புப் பண புழக்கத்தை தடுக்கும் வகையில், 1988ல், கொண்டு வரப்பட்டுள்ள பினாமி பரிவர்த்தனை தடுப்பு சட்டத்தில் பல்வேறு திருத்தங்கள் செய்து, புதிய மசோதாவை மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி, லோக்சபாவில் நேற்று தாக்கல் செய்தார். நீண்ட விவாதத்துக்குப் பின், அந்த மசோதா நிறைவேறியது. இதுகுறித்து அருண் ஜெட்லி கூறியதாவது: கணக்கில் வராத பணத்தை வைத்துள்ள சிலர், பெய்யான பெயரில் பல்வேறு சொத்துக்களை வாங்கி குவித்துள்ளனர். இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்கவே ... |
| புதுச்சேரியில் 2 மாதத்தில் விமான சேவை Posted: 27 Jul 2016 11:54 AM PDT சென்னை : புதுச்சேரியில் 2 மாதத்தில் விமான சேவை துவக்கப்படும் என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கூறியதாவது: விரைவில் தமிழக காங்., தலைவர் அறிவிக்கப்படுவார். புதுச்சேரியில் அடுத்த 2 மாதத்தில் விமான சேவையை துவக்க நடவடிக்கை எடுத்துள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார். ... |
| சாமி மீதான அவதூறு வழக்குகள்; விசாரணைக்கு ஐகோர்ட் தடை Posted: 27 Jul 2016 01:10 PM PDT
சென்னை: பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமிக்கு எதிராக, முதல்வர் ஜெயலலிதா தொடர்ந்த, ஆறு அவதுாறு வழக்குகளின் விசாரணைக்கு, இடைக்கால தடை விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பா.ஜ., மூத்த தலைவர் சுப்பிரமணியன் சாமி, முதல்வர் ஜெயலலிதாவின் உடல்நலம் குறித்தும், மீண்டும் அவரை ஆட்சியில் அமர்த்தியது குறித்தும், 'டுவிட்டர்' பக்கத்தில் கருத்து வெளியிட்டிருந்தார். மேலும், 'ஜெயலலிதா மீது இன்னொருசொத்து குவிப்பு வழக்கு தயாராக உள்ளது' என்றும் தெரிவித்திருந்தார். இது, முதல்வரின் நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் ... |
| சி.பி.ஐ.,யில் 20% பணியிடங்கள் காலி Posted: 27 Jul 2016 02:22 PM PDT புதுடில்லி : சி.பி.ஐ.,யில், 20 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளதாகவும் இதனால் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன எனவும் மத்திய இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்தார். இதுகுறித்து லோக்சபாவில், பணியாளர் நலத்துறை இணை அமைச்சர் ஜிதேந்திர சிங் தெரிவித்ததாவது: சி.பி.ஐ.,யில், 20 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இதனால், 1,300க்கும் அதிகமான வழக்குகள் தேங்கியுள்ளன. சி.பி.ஐ.,யிடம், 2014 டிசம்பர் 31 வரை 1,004 வழக்குகள் தேங்கி கிடந்தன. இப்போது, இது, 1,286 வழக்குகளாக அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார். ... |
| நாட்டின் பொருளாதார வளர்ச்சி 8 சதவீதமாக உயரும் Posted: 27 Jul 2016 02:57 PM PDT
புதுடில்லி : பருவமழை காரணமாக நடப்பு, 2016 - 17ம் நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 8 சதவீதமாக உயரும் என 'நிடி ஆயோக்' அமைப்பின் துணை தலைவர் அரவிந்த் பனகரியா தெரிவித்துள்ளார். திட்டக் குழுவுக்கு மாற்றாக அமைக்கப்பட்ட, 'நிடி ஆயோக்' அமைப்பின் துணை தலைவர் அரவிந்த் பனகரியா கூறியதாவது: கடந்த இரண்டு ஆண்டுகளாக வறட்சி பாதிப்பால், வேளாண் பொருட்களின் உற்பத்தி குறைந்தது. இந்த நிலையிலும், கடந்த நிதியாண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, 7.6 சதவீதமாக உயர்ந்து இருந்தது. இந்தாண்டு, பருவமழை துவங்கியுள்ளது; இது, வழக்கத்தை விட, கூடுதலாக இருக்கும் என, ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 28,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |