Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


மதியும் விதியும் (கவிதை )

Posted: 27 Jul 2016 03:18 PM PDT

நில வொளிர்ந்திட வெண்முகிலதை மூடும் - நல் நினை வெழவொரு விதி யெழுந்ததைச் சாடும் பலமிருந்திடும் போதிலு முயிர் தானும் - ஒரு பழிசுமந்தெமை பாரென உளம் வாட்டும் நிலமிருந்துமென் வாழ்வதிலென்ன லாபம் - எனும் நினை வெழுந்துயிர் விடமனமதும் நாடும் குலமழித்திடப் போய் முடியெனும் தாகம் - வந்து குமைந்தழியும் அவ் வேளையில் ஒளிவேண்டும் மதி மறைந்திடக் கதிர் விடியலில் தோன்றும் - நம் மதியிழந்திடும் வேளையில் ஒளிவேண்டும் புதிதென அடிவான் சிவந்தொளி ஏறும் - அங்கு பூவிதழ் தொடப் போய்வரும் தென்றலோடும் முதிர் ...

ஓடாதே, இருள் வரும் நேரம்-சுஜாதா

Posted: 27 Jul 2016 09:12 AM PDT

சுஜாதா வின் இரண்டு புத்தகங்கள்... ஓடாதே - பதிவிறக்க இருள் வரும் நேரம்-பதிவிறக்க

கை, கால் குடைச்சலுக்கு என்ன செய்வது?'

Posted: 27 Jul 2016 07:36 AM PDT

ஐம்பது வயதான எனக்கு மூட்டின் ஒரு பகுதியில் மட்டும் ஓராண்டாக வலி உள்ளது. சிகிச்சை செய்தும் பலனில்லை. இதற்கு பகுதி மூட்டு மாற்று சிகிச்சை செய்ய வேண்டும் என டாக்டர் கூறுகிறாரே, சரியா? - பகுதிமூட்டு மாற்று சிகிச்சையில் மூட்டினில் தேய்மானம் அடைந்த பகுதியை மட்டும் அகற்றி, செயற்கை மூட்டு பொருத்தப்படும். இளம்வயதில் மூட்டின் வடிவம் மாறாமல் இருந்து, இணைப்பு நார்கள் நன்றாக இயங்கிக் கொண்டிருப்போருக்கு இது நல்ல சிகிச்சை. பகுதி மூட்டு மாற்று சிகிச்சையில் வலி குறைவு. திருப்தியான செயல்பாடு, ...

புதுக்கவிதை.

Posted: 27 Jul 2016 03:44 AM PDT

அந்தரங்கம்…!! * பேசுபவர்கள் யார் என்று தெரியவில்லை? பேசியதும் என்னவென்று புரியவில்லை. அவர்களுக்குள் ஏதோவொரு ஆழந்தப் பிரச்சினையின் அடிவேரின் மூலம் உள்ளுணர்வில் புதைந்திருக்கிறது. இருவரும் விட்டுக் கொடுக்காமல் பேசினார்கள் கோபப்பட்டார்கள். யாரும் சமாதானமாகவில்லை போவோர் வருவோர் வேடிக்கைப் பார்க்கிறார்கள் என்று கூட அச்சப்படவில்லை வெட்கப்படவில்லை. பொதுவிடம் என்ற பொறுப்பின்றி மறந்துப் போய் சண்டையின் உச்சத்திற்கு நெருங்கிவிட்டார்கள். வாய்சத்தம் பெரும் சத்தமாகியது யார் விலகிப் போகுவதன்று ...

திருமண நாள்: பி.எஸ். கமலா பார்த்தசாரதி

Posted: 27 Jul 2016 03:36 AM PDT

- உற்றவர் பெற்றவர் ஆசிகள் சூழ இலத்தரசனும், அரசியுமாக பொன் விலங்கு பூண்டிடும் திருநாளே திருமண நாள் – வேறு வேறு மண்ணில் மலர்ந்தாலும் ஆயிரங்காலப் பயிராக கிளை பரப்பி செழித்து நிற்க அஸ்திவார நாளே திருமண நாள் – கண்ட கனவுகள் நனவுகளாக மகிழ்ச்சி வானில் சிறகடித்து பறக்க சமூகத்தில் புது அந்தஸ்து பெறும் நாளே திருமண நாள் – சுற்றம் வளர்த்து நட்பு வட்டம் பெருக்க இரு பாதங்கள் நடந்த வாழ்வுதனில் நான்கு பாதங்களாய் இணைந்து நடந்திட கருத்தொருமித்து மேன்மையான எதிர்காலம் சமைத்திட அடிகோலும் பெ-ருநாளே திருமணநாள் – ————————————-

அமெரிக்க அதிபராவதற்கு தகுதியானவர் ஹிலாரி

Posted: 27 Jul 2016 01:11 AM PDT

- அமெரிக்காவின் அடுத்த அதிபராவதற்கு உண்மையிலேயே தகுதி யானவர் ஹிலாரி கிளிண்டன் என்று இப்போதைய அதிபரின் மனைவி மிஷேல் ஒபாமா தெரிவித்துள்ளார். ஜனநாயகக் கட்சி சார்பில் வேட்பாளரை அறிவிப்பது தொடர்பான 4 நாள் மாநாடு பிலடெல்பி யாவில் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான ஹிலாரி கிளிண்டன் வேட்பாளராக அறிவிக்கப்பட உள்ளார். இந்த மாநாட்டில் மிஷேல் ஒபாமா பேசும்போது, "வரும் அதிபர் தேர்தலில் வெற்றி பெற்று அடுத்த அதிபராவதற்கு ஒரே ஒருவருக்கு மட்டும்தான் தகுதி ...

ரஜினிகாந்துடன் சேர்ந்து ‘கபாலி’ படம் பார்த்தார் சோ

Posted: 27 Jul 2016 12:53 AM PDT

- சோ.ராமசாமி நடிகர் ரஜினிகாந்துடன் துக்ளக் பத்திரிகை ஆசிரியரும், நடிகருமான சோ.ராமசாமி நேற்று 'கபாலி' படம் பார்த்தார். 'கபாலி' படம் வெளியானபோது அமெரிக்காவில் இருந்த நடிகர் ரஜினிகாந்த், இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை திரும்பினார். இந்நிலையில், தன்னுடைய நண்பரும் மூத்த பத்திரிகையாள ருமான சோ ராமசாமிக்காக 'கபாலி' படத்தின் சிறப்பு காட்சியை வள்ளுவர் கோட்டம் அருகே உள்ள ஒரு திரையரங்கில் ரஜினி ஏற்பாடு செய்திருந்தார். இதையடுத்து, சோ தனது குடும்பத்தினருடன் நேற்று 'கபாலி' படம் பார்த்தார். அப்போது ...

திருமண நாள்: வே.புனிதா வேளாங்கண்ணி

Posted: 27 Jul 2016 12:37 AM PDT

- அழகாக விடிந்தது அன்றொரு காலைப்பொழுது ஆம் எனக்காக நிச்சயிக்கப்பட்ட தினம்! அனைவரும் தெரிந்த முகமாக இருந்தாலும் ஏனோ தெரியவில்லை மனதிற்குள் ஒரு படபடப்பு நடுக்கம் கொஞ்சம் கொஞ்சமாக படபடப்பில் இருந்து அமைதி கிடைத்தது! – ஆம் எனக்கென்று ஒரு ஜீவன் என் கைபிடிக்கும் போது ஆம் எனக்கென்று ஒரு புது உறவு பேசிய முதல் வார்த்தை கேட்டவுடன் மனது எங்கோ பறந்தது! – இருவரும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள‌ சில தினங்கள் தேவைப்பட்டது! இல்லற வாழ்வில் அடி எடுத்து வைத்து அமைதியாக கழிந்தன நாட்கள்! – ————————– கவிதைமணி படம்- ...

திருமண நாள்: கே.நடராஜன்

Posted: 27 Jul 2016 12:35 AM PDT

- முதல் திருமண நாள் …என்ன பரிசு வாங்கலாம்? எப்படி கொண்டாடலாம் அந்த நன்னாளை ? கணவனுக்கும் மனைவிக்கும் விடை தெரியா கேள்வி ! முடிவே இல்லாத விவாதம் விடிய விடிய ! விடிந்தது காலை .. தொடர்ந்தது மீண்டும் விவாதம் ! – பக்கத்து வீட்டு தம்பதியிடம் யோசனை கேட்டால் என்ன ! ஒரு சிறு பொறி தட்டியது மனதில் ! "எங்களுக்கும் இன்று திருமண நாள்! … பொன்விழா ஆண்டு நிறைவு ! … ஐம்பது ஆண்டு இனிய இல்லற வாழ்வே இறைவன் தந்த அரிய பரிசு எங்களுக்கு ! – குறை ஒன்றுமில்லா ஒரு நிறைவான போதுமென்ற மனம். இதுவும் அந்த இறைவன் ...

எல்லாம் இயந்திர மயம்!

Posted: 26 Jul 2016 07:09 PM PDT

இன்றைக்கு அறிதிறன்பேசியில் (ஸ்மார்ட்போன்) குறும்பனுவல் (டெக்ஸ்டிங்) அனுப்புவோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது என்னவோ உண்மை. இத்தகைய கட்செவி அஞ்சல் (வாட்ஸ்அப்) அனுப்புவோர் தம் மூளையில் உண்டாகும் அதிர்வலைகள் வழக்கமான மனிதர்களின் மூளைத் தாளலயத்தைவிட மாறுபட்டதாகத் தெரிகிறது என்பது ஒரு அதிர்ச்சி தகவல். "வலிப்புநோய் மற்றும் நடத்தைப் பாங்கு' எனும் அறிவியல் சஞ்சிகை வெளியிட்ட உண்மை இது. அமெரிக்காவின் ஃபுளோரிடா மாகாணத்தில் "மாயோ கிளினிக்' ஆய்வக நரம்பியல் துறைப் பேராசிரியரும், வலிப்பு ...

ஏழாவது ஊதியக் குழு பரிந்துரை அமல் ஒரு கோடி பேருக்குப் பயன் செயல்திறன் அடிப்படையில் ஊதிய உயர்வு

Posted: 26 Jul 2016 07:01 PM PDT

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட ஏழாவது ஊதியக் குழுவின் ஊதிய உயர்வு உள்ளிட்ட பரிந்துரை கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு அமலுக்கு வந்துள்ளது. இதற்கான அறிவிக்கையை மத்திய நிதியமைச்சகம் செவ்வாய்க்கிழமை வெளியிட்டது.இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 1 கோடி பேர் பயனடைவர். மேலும், மத்திய அரசு ஊழியர்களுக்கு வருடாந்திர ஊதிய உயர்வானது இனிமேல் செயல்திறன் அடிப்படையில்தான் வழங்கப்படும். மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 23.6 சதவீதம் ஊதிய ...

பாரம்பரியம் என்பதற்காக ஜல்லிக்கட்டை ஏற்க முடியுமா? உச்ச நீதிமன்றம் கேள்வி

Posted: 26 Jul 2016 06:15 PM PDT

ஜல்லிக்கட்டு விளையாட்டுப் போட்டி பாரம்பரியமானது என்பதால் அப்போட்டிக்கு சட்ட அங்கீகாரம் வழங்கக் கோரலாமா? என்று தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. ஜல்லிக்கட்டு தொடர்பாக நிலுவையில் இருந்த இந்த வழக்கின் விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் தீபக் மிஸ்ரா, ஆர்.எஃப். நாரிமன் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை நடை பெற்றது. அப்போது, தமிழக அரசின் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், "மாநிலத்தின் பழைமை வாய்ந்த மற்றும் பல நூற்றாண்டு கால வழக்கமாக ஜல்லிக்கட்டு போட்டி நடத்தப்படுகிறது' ...

"பெண்களை இழிவுபடுத்தும் விளம்பரங்களுக்கு தடை விதிக்க வேண்டும்'

Posted: 26 Jul 2016 06:11 PM PDT

பெண்களை இழிவாக சித்திரிக்கும் சிவப்பழகு கிரீம்களின் விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடை விதிக்க வேண்டும் என்று மாநிலங்களவையில் காங்கிரஸ் கட்சி செவ்வாய்க்கிழமை கோரிக்கை விடுத்தது. இதுகுறித்து மாநிலங்களவையில் காங்கிரஸ் எம்.பி. விப்ளவ் தாக்குர் பேசியதாவது: "ஃபேர் அண்டு லவ்லி' மற்றும் "பாண்ட்ஸ்' போன்ற நிறுவனங்களின் சிகப்பழகு கிரீம்களின் விளம்பரங்கள் பெண்களை இழிவுபடுத்தும் நோக்கில் படமாக்கப்பட்டுள்ளன. எனவே, அத்தகைய விளம்பரங்களை தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதற்கும், அந்நிறுவனங்களின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™