Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


மனைவி, குழந்தைக்கு உணவு கொடுக்க கணவர் பிச்சை எடுத்தாலும் தவறில்லை: உயர்நீதிமன்றம் கருத்து

Posted: 12 Jul 2016 07:39 AM PDT

மதுரை: ஸ்ரீவில்லிபுத்துார் செல்வராஜன். இவருக்கும், கோவில்பட்டி ரங்கசுபத்ராவிற்கும் திருமணம் நடந்தது. ஆறு வயதில் ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாட்டால் கணவன், மனைவி பிரிந்தனர். மகன், தாயுடன் உள்ளார்.

ரங்கசுபத்ரா, ''குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் தங்க இடம், பராமரிப்புத் தொகை, இழப்பீடு வழங்க கணவருக்கு உத்தரவிட வேண்டும்,'' என கோவில்பட்டி நீதிமன்றத்தில் மனு செய்தார். 'வீட்டு மாத வாடகை 10 ஆயிரம், பராமரிப்புத் தொகை 10 ஆயிரம், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு, சீதனப் பொருட்களை கணவர் வழங்க வேண்டும்,' என நீதிமன்றம், ...

சி.பி.ஐ., 'மாஜி' இயக்குனருக்கு புது நெருக்கடி : நிலக்கரி ஊழல் வழக்கில் திருப்பம்

Posted: 12 Jul 2016 09:36 AM PDT

புதுடில்லி: நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் தொடர்பாக, சுப்ரீம் கோர்ட்டால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழு, சி.பி.ஐ., முன்னாள் இயக்குனர் ரஞ்சித் சின்ஹாவுக்கு எதிராக குற்றம் சுமத்தியுள்ளது.
நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழலில் குற்றம் சாட்டப்பட்டோரை, அப்போது, சி.பி.ஐ., இயக்குனராக இருந்த ரஞ்சித் சின்ஹா சந்தித்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து,
சி.பி.ஐ., விசாரணைகளில் பாதிப்பு ஏற்பட்டதா என்பதை கண்டறிய, சி.பி.ஐ., முன்னாள் சிறப்பு இயக்குனர் எம்.எல்.சர்மா தலைமையில், விசாரணைக்குழுவை, சுப்ரீம் கோர்ட்அமைத்தது. இந்நிலையில், அட்டர்னி ஜெனரல் முகுல் ரோஹத்கி, ...

பாலாற்றின் குறுக்கே 25 அடி உயரத்தில் தடுப்பணை அட்டூழியம் ! நீர்வழிகளையும் தடுத்து மண் கொட்டியுள்ளது ஆந்திர அரசு

Posted: 12 Jul 2016 10:02 AM PDT

நதி நீர் ஒப்பந்தத்தை மீறி, பாலாற்றின் குறுக்கே, ஏழடி உயர தடுப்பணைகளை, 25 அடி உயரத்திற்கு, ஆந்திர அரசு உயர்த்தி கட்டியுள்ளது. அத்துடன் பாலாற்றுக்கு வரும் நீர் வழிகளையும் தடுத்து, ஆங்காங்கே தடுப்பணைகள் கட்ட, 10 அடி உயரத்திற்கு மண் கொட்டப்பட்டு உள்ளது.

கர்நாடகாவில் உற்பத்தியாகும் பாலாறு, ஆந்திராவில், 45 கி.மீ., ஓடி, வாணியம்பாடி வழியாக தமிழகம் வருகிறது. ஆந்திராவில் பாலாற்றின் குறுக்கே, 45 கி.மீ., துாரத்திற்குள், 22 தடுப்பணைகள் கட்டப்பட்டுள்ளன. ஒவ்வொன்றின் உயரம், ஐந்து முதல், ஏழு அடி கொண்டதாக இருந்தது.தெலுங்கானா பிரிந்த பிறகு, ஆந்திர அரசு, நீர் மேலாண்மையில், ...

விடைபெற்றார் கேமரூன்

Posted: 12 Jul 2016 10:03 AM PDT

லண்டன்: பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூன் பதவி விலகுவதைத் தொடர்ந்து, சக அமைச்சர்கள், சோகத்துடன் அவரை வழியனுப்பி வைத்தனர்.
'ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறக் கூடாது' என்ற பிரிட்டன் பிரதமர் டேவிட் கேமரூனின் கோரிக்கையை, அந்த நாட்டின் பெரும்பான்மையான மக்கள் ஏற்கவில்லை. இதையடுத்து, பிரதமர் பதவியிலிருந்து விலகுவதாக டேவிட் கேமரூன் அறிவித்தார். பிரிட்டனின் அடுத்த பிரதமராக தெரசா மே, இன்று பதவியேற்க உள்ளார்.
இந்நிலையில், பிரதமர் கேமரூன் தலைமையிலான கடைசி அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. அப்போது, அமைச்சரவையில் இருந்த அவரது ...

தென் சீன கடலில் ஆதிக்கம் செலுத்திய சீனாவுக்கு...அடி ! வரலாற்று ரீதியாக உரிமை கோர முடியாது என தீர்ப்பு

Posted: 12 Jul 2016 10:07 AM PDT

தி ஹேக்,:தென் கிழக்காசியாவில் பதற்றத்தை ஏற்படுத்தி வந்த, தென் சீனக் கடல் விவகாரத்தில்,சீனாவுக்கு எதிராக, சர்வதேச தீர்ப்பாயம், நேற்று பரபரப்பு தீர்ப்பளித்து உள்ளது. 'தென் சீனக் கடல் பகுதிக்கு, சீனா, வரலாற்று ரீதியாக உரிமை கோருவதற்கு சட்ட அடிப்படைஏதுமில்லை' என, சர்வதேச தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

தென் சீனக் கடலில், சீனா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அங்கு, பல்வேறு பகுதிகளில் மணல், கற்களை கொட்டி செயற்கை தீவுகளை, சீனா அமைத்து வருகிறது. விமானப்படை தளம், கலங்கரை விளக்கம், கடற்படை தளம் போன்றவற்றை உருவாக்கி வருகிறது. இதன் காரணமாக, பிலிப்பைன்ஸ், ...

காஷ்மீரில் வன்முறையை கட்டுப்படுத்துவது எப்படி?: பிரதமர் மோடி தலைமையில் ஆலோசனை

Posted: 12 Jul 2016 10:21 AM PDT

புதுடில்லி,:ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் தீவிரவாத இயக்கத் தலைவன் பர்ஹான் வானி கொல்லப்பட்டதை தொடர்ந்து, அம்மாநிலம் முழுவதும் ஏற்பட்ட வன்முறை சம்பவங்கள் குறித்து, பிரதமர் நரேந்திர மோடி தலைமையில், நேற்று, உயர்மட்டக் கூட்டம் நடந்தது.

ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் தீவிரவாத இயக்க தளபதி பர்ஹான் வானி, கடந்த வாரம், பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து, அம்மாநிலம் முழுவதும் வன்முறை வெறியாட்டங்கள் அரங்கேறின. இதுவரை 24 பேர் பலியானதாக - தகவல்கள் கூறுகின்றன. இந்நிலையில், ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் ...

பதவியேற்க 'படுத்திய' அ.தி.மு.க., - எம்.பி.,க்கள்-: ராகு காலம் - எம கண்டத்தால் வந்தது வினை

Posted: 12 Jul 2016 10:25 AM PDT

நல்ல நாள், நல்ல நேரம் பார்த்து பதவியேற்க முடிவெடுத்துள்ள, அ.தி.மு.க.,வைச் சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.,க்களால், பெரும் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

பல மாநிலங்களில் இருந்து, இந்த முறை ராஜ்யசபாவுக்கு, 50க்கும் மேற்பட்டோர், ஒரே நேரத்தில் தேர்வாகி உள்ளனர். இவர்களுக்கு மொத்தமாக பதவி ஏற்பு நிகழ்ச்சி நடத்தினால், அதிகம் நேரம் பிடிக்கும்.அதன் காரணமாக, விருப்பம் உள்ளவர்கள் முன்கூட்டியே வந்து பதவியேற்கலாம் என, ராஜ்யசபா செயலகம் கேட்டிருந்தது. இதுகுறித்து, ஒவ்வொரு எம்.பி.,க்கும், தனித்தனியே கடிதமும் எழுதப்பட்டது.அதன்படி, இரு வாரங்களுக்கு முன், ஆந்திராவைச் சேர்ந்த ...

நஜ்மா, சித்தேஸ்வரா ராஜினாமா அமைச்சரவையில் மீண்டும் மாற்றம்

Posted: 12 Jul 2016 10:26 AM PDT

புதுடில்லி:மத்திய சிறுபான்மை நலத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா கனரக தெழில் துறை இணை அமைச்சர் சித்தேஸ்வரா, ஆகியோர், நேற்று தங்கள் பதவியை ராஜினாமா செய்தனர்.

இவர்களது ராஜினாமாவை, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஏற்றார்.பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, சமீபத்தில் மாற்றி அமைக்கப்பட்டது. அப்போது, ஐந்து அமைச்சர்கள் நீக்கப்பட்டனர். அதற்கு முன்னதாக, நஜ்மா ஹெப்துல்லா, கர்நாடகாவைச் சேர்ந்த சித்தேஸ்வரா ஆகியோரது பெயரும், நீக்கப்படும் அமைச்சர்களின் பட்டியலில் இடம் பெற்றிருப்பதாக கூறப்பட்டது. ஆனால், நீக்கப்பட்ட அமைச்சர்களின் பட்டியலில், அவர்கள் ...

'தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு இல்லவே இல்லை': ஸ்டாலின்

Posted: 12 Jul 2016 10:33 AM PDT

தி.மு.க., பொருளாளரும், கொளத்துார் தொகுதி எம்.எல்.ஏ.,வுமான ஸ்டாலின், கொளத்துார் தொகுதியின் பல்வேறு பகுதிகளுக்கும் நேற்று சென்று, ஆய்வு மேற்கொண்டார்.

அங்கு திரண்ட பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களையும் பெற்று, அதன் மீது நடவடிக்கை எடுக்க, அதிகாரிகளை கேட்டுக் கொண்டார். பின், அவர் அளித்த பேட்டி: கொளத்துார்
தொகுதியின் ஜி.கே.எம்., காலனியில், முத்துமாரியம்மன் கோவிலின் பின்புறம் உள்ள குளத்தை சீர்செய்ய வேண்டும். சீர் செய்யப்படாததால், மழைக் காலங்களில் அந்த பகுதி, தண்ணீரில் மூழ்குகிறது. கொசு தொல்லையும் அதிகமாக உள்ளது. இது ...

பருப்பு சாகுபடி செய்ய அரசு ஊக்குவிக்குமா?விவசாயிகள் எதிர்பார்ப்பு; வேளாண்துறை இழுத்தடிப்பு

Posted: 12 Jul 2016 10:36 AM PDT

நெல், கரும்புக்கு மாற்றாக, பருப்பு வகைகள் சாகுபடி செய்யும் அளவிற்கு, பல மாவட்டங்களில் மண் வளம் உள்ளது. இருப்பினும், டெல்டா உள்ளிட்ட பல மாவட்டங்களில், நெல் சாகுபடிக்கு மட்டுமே வேளாண் துறையினர் முக்கியத்துவம் அளிக்கின்றனர்.

தமிழகத்தில், ஆண்டுதோறும், 23 லட்சம் டன் அளவுக்கு, துவரை உள்ளிட்ட பருப்பு வகைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஆனால், தேவை, உற்பத்தியைவிட மும்மடங்கு உள்ளது. எனவே, வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலை ஏற்படுகிறது. ரேஷன் கடைகளுக்கும் ெவளிநாட்டு இறக்குமதி தான் சப்ளை ஆகிறது. இதனால், பருப்பின் விலை, ...

தென்காசி: ஜவுளிக் கடையில் தீவிபத்து

Posted: 12 Jul 2016 11:41 AM PDT

தென்காசி: தென்காசி புது பஸ் நிலையம் அருகே உள்ள தனியார் ஜவுளிக் கடையில் தீவிபத்து ஏற்பட்டது. தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ...

காஷ்மீர் விவகாரம்: மோடி அரசு மீது ராகுல் குற்றச்சாட்டு

Posted: 12 Jul 2016 01:42 PM PDT

புதுடில்லி: மோடி அரசின் தவறான கொள்கைகளே காஷ்மீர் பிரச்னைக்கு காரணம் என காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் குற்றம்சாட்டியுள்ளார்.

டில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் காங். துணை தலைவர் ராகுல் பேசியது, மத்தியில், பிரதமராக மன்மோகன் சிங் ஆட்சியின் போது தான், படாத பாடுபட்டு காஷ்மீரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுத்தோம். அதை தற்போதைய மோடி அரசு சீரழித்துவிட்டது.மோடி அரசின் ஆபத்தான கொள்கைகள் மற்றும் மிகவும் சாதாரண அணுகுமுறைகள் ஆகியவற்றால் காஷ்மீர் விவகாரத்தில் அனைத்தும் வீணாக போய்விட்டது என்றார். ...

அமெரிக்கா உதவ சம்மதம்; நிதின் கட்கரி தகவல்

Posted: 12 Jul 2016 03:30 PM PDT

வாஷிங்டன் : ''இந்திய சாலைகளின் மேம்பாட்டிற்கு, அமெரிக்கா உதவி செய்வதாக தெரிவித்து உள்ளது,'' என, மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.
இந்தியாவில், சாலை போக்குவரத்து துறையில், அன்னிய முதலீட்டை ஈர்ப்பதற்காக, மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அமெரிக்கா சென்று உள்ளார். அங்கு, அவர் கூறியதாவது: இந்தியாவில், சாலை விபத்துகளை குறைப்பதற்கான புதிய தொழில்நுட்பம், போக்கு வரத்தை கண்காணிக்கும் மென்பொருள் உள்ளிட்டவற்றை வழங்குவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் அனுபவம் மற்றும் அவர்களது தற்போதைய விதிமுறைகள் ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™