Tamil News | Online Tamil News |
- பெரு நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை
- காஷ்மீரில் கலவரம் நீடிக்க பாக்., பயங்கரவாத அமைப்புகள்... சதி! பல நூறு பயங்கரவாதிகளை ஊடுருவ செய்ய பகீர் திட்டம்
- நவாஸ் ஷெரீப் கண்டனம்: இந்தியா பதிலடி
- அதிகரிக்கும் பருப்பு விலையை கட்டுப்படுத்த மத்திய அரசு...மும்முரம் ! விளைச்சலை கூட்டுவதற்கான யோசனை தர கமிட்டி அமைக்கிறது
- 'டிமிக்கி' தந்த ஜாகிர் நாயக்: இந்தியா வராததால் பரபரப்பு
- காஷ்மீரில் பரிதவிக்கும் தமிழர்கள் காப்பாற்ற கருணாநிதி கோரிக்கை
- கேரள நம்பூதிரிகளின் சிறப்பு யாகம் விஜயகாந்த் கட்சியை காப்பாற்றுமா?
- கைகொடுக்கும் கூடங்குளம், காற்றாலை மின்சாரம் பராமரிப்பை துரிதப்படுத்துமா மின் வாரியம்?
- தமிழக காங்., தலைவர் குஷ்பு? ராகுலுடன் சந்திப்பால் பரபரப்பு
- நாடு முழுவதும் மதுவிலக்கு சாத்தியமில்லை: மத்திய அமைச்சர்
- தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு
- கேரள போலீசார் அலட்சியத்தால் 41 பேருக்கு கிடைத்தது ஜாமின்
- 'அப்ரூவர்' ஆகிறார் 'ஜிண்டால்' அதிகாரி
- தெற்கு சூடானில் உள்நாட்டு போர்; 300 இந்தியர்கள் தவிப்பு
| பெரு நிறுவனங்களுடன் அரசு ஆலோசனை Posted: 11 Jul 2016 09:39 AM PDT சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டின் போது, தொழில் முதலீடு செய்வதாக ஒப்பந்தம் செய்த நிறுவனங்கள், எதிர்பார்த்த வேகத்தில் முதலீடு செய்யவில்லை. அதனால், அவர்களை தமிழக அரசு, இன்று நடக்கும் பேச்சுக்கு வரும்படி அழைத்துள்ளது. இது குறித்து, தமிழக தொழில் துறை வட்டாரங்கள் கூறியதாவது: கடந்த ஆண்டு செப்டம்பரில், சர்வதேச முதலீட்டாளர் மாநாட்டை தமிழக அரசு நடத்தியது. அதில், 2.42லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் கிடைக்கும் வகையில், 92 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஓராண்டு முடிந்த நிலையில், இதுவரை, 19 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு கிடைத்துள்ளது. அவை அனைத்தும், நீண்ட கால ... |
| Posted: 11 Jul 2016 09:52 AM PDT ஸ்ரீநகர்:ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், கடந்த மூன்று நாட்களாக நடந்து வரும் கலவரத்தை நீட்டிக்கச் செய்யும் வகையில், பல நுாறு பயங்கரவாதிகளை இந்தியாவுக்குள் ஊருடுவச் செய்ய, பாகிஸ்தானில் செயல்படும் பயங்கரவாத அமைப்புகள் திட்டமிட்டுள்ள பகீர் தகவல் வெளியாகியுள்ளது. ஜம்மு - காஷ்மீரில், ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதியான பர்ஹான் வானி, பாதுகாப்புப் படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதைக் கண்டித்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில், போராட்டங்கள் நடக்கின்றன; போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.மூன்றாவது நாளாக ... |
| நவாஸ் ஷெரீப் கண்டனம்: இந்தியா பதிலடி Posted: 11 Jul 2016 10:11 AM PDT
புதுடில்லி: பயங்கரவாதி பர்ஹான் வானி கொலை அதிர்ச்சி அளிப்பதாக, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் கூறியுள்ளதற்கு, இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. ஹிஜ்புல் முஜாகிதீன் பயங்கரவாத அமைப்பின் தளபதியான பர்ஹான் வானியை, பாதுகாப்புப் படையினர் சுட்டுக் கொன்றனர். அதைக் கண்டித்து, ஜம்மு - காஷ்மீரில், போராட்டக்காரர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர். கண்டிக்கத்தக்கது : இந்த நிலையில், இது குறித்து, பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் நேற்று கருத்து தெரிவித்திருந்தார். அவருடைய அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: ... |
| Posted: 11 Jul 2016 10:18 AM PDT புதுடில்லி,: பல்வேறு பருப்பு வகைகளின் விலை, கிலோ, 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் மத்திய அரசு மும்முரமாக உள்ளது. அதன்படி, பருப்புகளுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்துவது குறித்து ஆலோசனை அளிக்கும் குழுவை அமைத்துள்ளது. பருப்பு வகைகளின் விலை, கடந்த சில மாதங்களாகவே கடுமையாக உயர்ந்து வருகிறது. ஒரு கிலோ, 200 ரூபாய் அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், விலையைக் கட்டுப்படுத்த, மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.கடந்த ஆண்டில், பருப்பு உற்பத்தி, 1.7 கோடி டன்னாக இருந்தது. அதே நேரத்தில், தேவை, 2.46 கோடி ... |
| 'டிமிக்கி' தந்த ஜாகிர் நாயக்: இந்தியா வராததால் பரபரப்பு Posted: 11 Jul 2016 10:24 AM PDT மும்பை,: 'பாகிஸ்தானில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளான தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் ஆகியோரை பிடிப்பதைவிட, இந்தியாவைச் சேர்ந்த, பயங்கரவாதத்தை ஆதரிக்கும் ஜாகிர் நாயக்கை முதலில் பிடிக்க வேண்டும்' என, மத்திய அரசை சிவசேனா வலியுறுத்திஉள்ளது. மத்தியிலும், மஹாராஷ்டிராவிலும், பா.ஜ., தலைமையிலான கூட்டணி அரசில் இடம்பெற்றுள்ளது சிவசேனா கட்சி. கட்சியின் பத்திரிகையான 'சாம்னா'வில் நேற்று ெவளியான தலையங்கத்தில் கூறப்பட்டுள்ளதாவது:பாகிஸ்தானில் உள்ள தாவூத்தை பிடிப்போம், டைகர் மேமனை பிடிப்போம் என்று சொல்வதை தற்காலிகமாக நிறுத்துங்கள். வங்கதேசத்தில், ... |
| காஷ்மீரில் பரிதவிக்கும் தமிழர்கள் காப்பாற்ற கருணாநிதி கோரிக்கை Posted: 11 Jul 2016 10:25 AM PDT சென்னை,:'காஷ்மீரில் தவிக்கும் தமிழர்களை மீட்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தி.மு.க., தலைவர் கருணாநிதி வலியுறுத்தியுள்ளார். அவரது அறிக்கை: ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் புர்ஹான் வானி, ௮ம் தேதி, பாதுகாப்பு படையினரால், சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார். அதைத் தொடர்ந்து, அங்கு, போலீசாருக்கு எதிராக கலவரம் நீடிக்கிறது.அமர்நாத்யாத்திரைக்காக காஷ்மீர் சென்ற தமிழக பக்தர்கள், 5,000 பேரை மீட்ட எல்லை பாதுகாப்பு படையினர், அவர்களை பால்டால் பகுதி முகாமில் பத்திரமாக வைத்துள்ளனர்.முகாம்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் தங்க ... |
| கேரள நம்பூதிரிகளின் சிறப்பு யாகம் விஜயகாந்த் கட்சியை காப்பாற்றுமா? Posted: 11 Jul 2016 10:31 AM PDT கட்சியினரை தக்க வைக்கும் கடைசி முயற்சியாக, கேரள ஜோதிடரின் ஆலோசனைப்படி, நிகும்பல பிரித்தியங்கர யாகத்தை விஜயகாந்த் நடத்தியுள்ள தகவல் அம்பலமாகி உள்ளது. தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், ஜோதிடத்தில் அதீத ஈடுபாடு உள்ளவர். 'அவர், ஒன்பதரை ஆண்டுகள் மட்டுமே பதவி நாற்காலியில் அமர முடியும்' என, அவரது குடும்ப ஜோதிடர் ஏற்கனவே கணித்து கூறியுள்ளார். அதன்படி, ஐந்து ஆண்டுகள் எம்.எல்.ஏ.,வாகவும்; நான்கரை ஆண்டுகள், சட்டசபை எதிர்க்கட்சி தலைவராகவும் விஜயகாந்த் இருந்துள்ளார். ஆஸ்தான ஜோதிடரின் வாக்கையும் கடந்து, தமிழக முதல்வராக வேண்டும் என்பதற்காக, சட்டசபை ... |
| கைகொடுக்கும் கூடங்குளம், காற்றாலை மின்சாரம் பராமரிப்பை துரிதப்படுத்துமா மின் வாரியம்? Posted: 11 Jul 2016 10:34 AM PDT காற்றாலைகளில் அதிக மின்சாரம் கிடைப்பதுடன், கூடங்குளம் அணுமின் நிலையத்தில் இருந்தும், கூடுதல் மின்சாரம் கிடைக்க உள்ளதால், 'அனல் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை, மின் வாரியம் துரிதப்படுத்த வேண்டும்' என்ற கோரிக்கை எழுந்து உள்ளது. தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, 4,660 மெகாவாட் திறன் உடைய, ஆறு அனல் மின் நிலையங்கள் உள்ளன. இவற்றில் உள்ள மின் உற்பத்தி அலகுகளில், ஆண்டு பராமரிப்பு மற்றும், 'ஓவர்ஹாலிங்' எனப்படும், முழு பராமரிப்பு என, இரண்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆண்டு பராமரிப்புக்கு சராசரியாக, 15 நாட்கள்; முழு பராமரிப்பு பணிக்கு, 45 ... |
| தமிழக காங்., தலைவர் குஷ்பு? ராகுலுடன் சந்திப்பால் பரபரப்பு Posted: 11 Jul 2016 10:37 AM PDT ''தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால், அதை ஏற்க தயார்,'' என்று, நடிகை குஷ்பு கூறினார்.தமிழக காங்கிரசுக்கு, புதிய தலைவரை நியமிப்பது தொடர்பாக, காங்கிரஸ் மேலிடம் தீவிர ஆலோசனையில் உள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல், தமிழக காங்கிரசின் முக்கிய தலைவர்களை அழைத்து, ஆலோசனை நடத்தினார்.இந்நிலையில், அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு,நேற்று டில்லியில், ராகுலை சந்தித்துப் பேசினார்.பின், அவர் அளித்த பேட்டி:தமிழக அரசியல் நிலவரங்கள் குறித்து, ராகுலுடன் பேசினேன். தலைவர் பொறுப்பிலிருந்து, இளங்கோவன் ராஜினாமா செய்ததற்கு, ... |
| நாடு முழுவதும் மதுவிலக்கு சாத்தியமில்லை: மத்திய அமைச்சர் Posted: 11 Jul 2016 11:58 AM PDT சென்னை: ''நாடு முழுவதும் மதுவிலக்கு சாத்தியமில்லை,'' என, மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார். சென்னையில் நேற்று அவர் அளித்த பேட்டி: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, அமெரிக்கா சென்றுள்ளார். அங்குள்ள சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து குறித்தெல்லாம் தெளிவுற அறிந்து வந்து, இந்தியாவிலும் அமல்படுத்த முயற்சிப்பார். இதனால் இந்தியாவில், சாலை மற்றும் கப்பல் போக்குவரத்து மேம்படும். மீனவர்கள் பிரச்னையில் கச்சத்தீவு விவகாரத்தை போட்டு குழப்பக் கூடாது. 1974ல், கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டுவிட்டது. இப்போது, அதை மீட்க வேண்டும் என்பது ... |
| தமிழகத்தில் சில இடங்களில் மழைக்கு வாய்ப்பு Posted: 11 Jul 2016 12:30 PM PDT சென்னை: 'சென்னையில் தரைக்காற்று பலமாக வீசும்; தமிழகத்தின், ஓரிரு பகுதிகளில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது' என, சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில், மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் உள்ள மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழை, 'சீசன்' உள்ளதால், மலையடிவார பகுதிகளில் மழை பெய்து வருகிறது. நேற்று காலையுடன் முடிந்த, 24 மணி நேரத்தில், நீலகிரி மாவட்ட ஜி பஜார் பகுதியில், அதிகபட்சமாக, 7 செ.மீ., மழை பெய்துள்ளது. நாளை காலை வரை, 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழைக்கு ... |
| கேரள போலீசார் அலட்சியத்தால் 41 பேருக்கு கிடைத்தது ஜாமின் Posted: 11 Jul 2016 02:41 PM PDT கொல்லம் : கேரள மாநிலத்தில் நடந்த கோவில் வெடி விபத்து வழக்கில், போலீசார் இன்னும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாததால், குற்றம்சாட்டப்பட்ட, 41 பேருக்கு, கேரள ஐகோர்ட், நேற்று ஜாமின் வழங்கியது. கேரள மாநிலம் கொல்லம் அருகே, பரவூர் புற்றிங்கல்தேவி கோவிலில், ஏப்ரலில் நடந்த திருவிழாவின்போது, வாணவேடிக்கை நடத்தப்பட்டதில், பட்டாசு வெடித்து, பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 110 பேர், தீயில் கருகி பலியாயினர்; 1,000க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இச்சம்பவம் தொடர்பாக, கோவில் நிர்வாகிகள், வாணவேடிக்கை நடத்திய ஒப்பந்ததாரர்கள் உள்ளிட்ட, 41 பேர் ... |
| 'அப்ரூவர்' ஆகிறார் 'ஜிண்டால்' அதிகாரி Posted: 11 Jul 2016 03:22 PM PDT புதுடில்லி : நிலக்கரி ஊழல் வழக்கில், ஜிண்டால் குழும அதிகாரி ஒருவர், 'அப்ரூவர்' ஆக, சி.பி.ஐ., சிறப்பு கோர்ட், நேற்று அனுமதி அளித்தது. கடந்த, 2008ல், காங்., கட்சியைச் சேர்ந்த, பிரபல தொழிலதிபரும், முன்னாள் எம்.பி.,யுமான நவீன் ஜிண்டாலுக்கு சொந்தமான, 'ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர்' நிறுவனத்துக்கு, விதிமுறைகளை மீறி நிலக்கரி சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக புகார் எழுந்தது. இது தொடர்பாக, ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மது கோடா, முன்னாள் மத்திய இணையமைச்சர் தாசரி நாராயண ராவ், நவீன் ஜிண்டால் மற்றும், 12 பேருக்கு எதிராக, சி.பி.ஐ., வழக்கு தொடர்ந்தது. ... |
| தெற்கு சூடானில் உள்நாட்டு போர்; 300 இந்தியர்கள் தவிப்பு Posted: 11 Jul 2016 03:56 PM PDT ஜுபா : தெற்கு சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டு போரில் 300 இந்தியா்கள் சிக்கி தவித்து வருகின்றனர். தெற்கு சூடானில் அதிபர் சல்வா கீர் மற்றும் துணை அதிபர் ரியக் மாசர் ஆகியோருக்கும் இடையேயான அதிகார போட்டி காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பலியாகியுள்ளனர். பின் நீண்ட நாள் போர் நிறுத்தம் கடைபிடிக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி முதல் அந்நாட்டு தலைநகர் ஜுபாவில் மீண்டும் இரு தரப்பு ராணுவ வீரர்களுக்கிடையே கடும் துப்பாக்கி சண்டை நடந்து வருகிறது. இதில் 150 ராணுவ ... |
| You are subscribed to email updates from Dinamalar.com |ஜூலை 12,2016. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |