Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





ஈகரை தமிழ் களஞ்சியம்

ஈகரை தமிழ் களஞ்சியம்


சாலை ஆண்டவர்

Posted: 11 Jul 2016 02:27 PM PDT

வள்ளலார் தனக்கு பின்வருபவரான தனித்தலைமைப்பதி @ சமரசவேதாந்தி பார்வதிபுரம் சபைக்கு வந்து செத்தவரை உயிரோடு எழுப்புவார் ; அவர் காலத்தில் சமரச சன்மார்க்கம் உலகெங்கும் தழைத்து ஓங்கும் என கூறியுள்ளார் அவர் வந்து எழுப்ப வள்ளலாரின் அனுக்கசீடர் கல்பட்டு ஐயாவை வடலூர் பார்வதிபுரத்தில் அடக்கம் செய்துள்ளனர் சாலை ஆண்டவரும் மெய்வழிச்சலையில் சமாதியில் அடங்கியதொடு தன் சீடர்கள் அநேகருக்கு பரிசுத்த அடக்கம் செய்துவருகிறார்கள் இது பரிசுத்த அடக்கமே தவிர நித்திய ஜீவன் அல்ல . நித்திய ஜீவன் என்பது ஒளிசரீரம் அடைவது ...

நான் எதிர்க்கட்சித் தலைவரா மட்டும் இருந்துக்கறேன்."

Posted: 11 Jul 2016 10:26 AM PDT

திருமணமாகிப் புதிதாக வீட்டுக்கு வந்த மருமகளிடம் மாமியார் சொன்னார்: "இந்த வீட்டுக்குன்னு சில வரைமுறை இருக்கும்மா. இது ஒரு அமைச்சரவை மாதிரி. இந்த வீட்டுக்கு முதல் மந்திரி உங்க மாமனார்தான். அவர்தான் பாதுகாப்புத் துறை, வெளியுறவுத்துறை எல்லாம் கவனிச்சுக்குவார். "இங்க நான்தான் துணை முதல்வர். உள்துறை, நிதித்துறை, ஜவுளித்துறை எல்லாம் என் கட்டுப்பாட்டுல வரும். "என் மகன் அதாவது உன் வீட்டுக்காரன்தான் தொழில் துறை, போக்குவரத்துத் துறை, வீட்டு வசதித்துறை எல்லாம் பாத்துக்குவான். "என் ...

விநாயகப் பெருமான்

Posted: 11 Jul 2016 10:23 AM PDT

- விநாயகப் பெருமான் அரவத்தை தனது இடுப்புக் கச்சையாக அணிந்திருக்கும் தத்துவம் என்ன? … மாயையினைத் தமது விருப்பம்போல இயக்கும் வல்லமை பெற்றவர் என்பதாகும். விநாயகரின் பெருச்சாளித் தத்துவத்தின் விளக்கம் என்ன? … பெருச்சாளி இருளை விரும்பும், கீழறுத்துச் சென்று கேடு விளைவிக்கும். அதனால் அது அறியாமை அல்லத ஆணவ மலத்தைக் குறிக்கும். எனவே அப் பெருச்சளியைப் பிள்ளையார் தமது காலின்கீழ் கொண்டிருப்பது அவர் அறியாமையையும், செருக்கையும் அடக்கி ஆட்கொள்பவர் என்பதை உணர்த்துகின்றது. - காகவடிவாக ...

கின்னஸ் சாதனை முயற்சி: ஒரே நாளில் 5 கோடி மரங்கள் நடுகிறது உ.பி.

Posted: 11 Jul 2016 10:18 AM PDT

உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெறும் முயற்சியாக ஒரே நாளில் 5 கோடி மரங்களை நடும் பணியில் இறங்கியுள்ளது உத்தரப் பிரதேச அரசு. இன்று (திங்கள்கிழமை) உ.பி.யின் 6500 இடங்களில் ஒரே நாளில் ஐந்து கோடிக்கும் அதிகமான மரங்கள் நடப்படுகிறது. இதன்மூலம், உலக சாதனை படைத்து கின்னஸில் இடம் பெற முயற்சிக்கப்படுகிறது. இன்று ஜூலை 11-ம் தேதி காலை 10.00 முதல் நாளை 12 ஆம் தேதி காலை 10.00 வரை நடைபெறும் மரம் நடும் விழாவை உத்தரபிரதேச மாநிலத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் சிங் யாதவ் துவக்கி வைத்தார். இதற்கு ...

வேலன்:-வித்தியாசமான தேடுபொறி -யூசி ப்ரவ்சர்.

Posted: 11 Jul 2016 09:52 AM PDT

தேடுதல் பொறிகள் அதிகம் இருந்தாலும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையில் வித்தியாசபடுகின்றன. அந்த வகையில் இந்த தேடுபோறி பல வித்தியாசங்களை கொண்டுள்ளது. 50 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம்செய்திட இங்கு கிளிக் செய்யவும். இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் நாம அதிகம் பயன்படுத்தும் பேஸ்புக்.இமெயில்.வாட்ச்அப் முதலியவற்றை முதலிலேயே கொடுத்துள்ளார்கள். அதனை கிளிக் செய்வதன் மூலம் நாம் நேரடியாக அதனுடைய தளத்திற்கு செல்லாம். அடுத்து வலது பக்கத்தில் ஸ்பிட் ...

மனதிலே ஒரு குடைச்சல் !

Posted: 11 Jul 2016 09:25 AM PDT

அவனுக்குக் கடமைகள் எதுவும் இல்லை கடன் தொல்லையும் கிடையாது ஆனாலும் கடுகளவு உறுத்தல் நெஞ்சில் இருந்துகொண்டுதான் இருக்கிறது . அவன் குற்றம் எதுவும் செய்யவில்லை யார் குடியையும் கெடுக்கவில்லை ஆனாலும் நெஞ்சிலே ஒரு நெருடல் இருந்துகொண்டுதான் இருக்கிறது . அவனுக்கு வியாதியென்று பெரிதாக எதுவும் கிடையாது ; எல்லோருக்கும் இருக்கின்ற சர்க்கரை வியாதிதான் ! அதுவும் கட்டுக்குள் ! ஆனாலும் ஒரு அச்சம் இருந்துகொண்டுதான் இருக்கிறது . அவனுக்குப் பணத் தட்டுப்பாடு எதுவும் கிடையாது படுத்தவுடன் ...

சருகு ஒன்று தளிரானது

Posted: 11 Jul 2016 09:23 AM PDT

– சருகு ஒன்று தளிரானது ஒப்பனை அறையில் நடிகை – —————————- தலைவிரி கோலத்தை யார் அழகில்லை என்பது மரத்தைப் பார் பதினெட்டு ஒட்டு – ——————– – என்ன வேலை தெரியும் நான் கான்வென்டில் படித்தவன் சரி, மூட்டை தூக்கப்போ! – ———————– – வெட்டும் வாளானாலும் அதன் உறைவிடம் உறைதான்! – (ஊருக்கு ராசாவானாலும் தாய்க்கு அவன் மகன்தான்) – —————————– – பட்டினியில் இறந்தான் கேட்காமல் கிடைக்கிறது வாய்க்கரிசி – —————————– நெல்லை சு.முத்து தமிழில் ஹைகூ- தொகுப்பிலிருந்து

காதல் கொலை: கா. மகேந்திரபிரபு

Posted: 11 Jul 2016 08:41 AM PDT

அன்பின் இளமை வடிவம் காதல் அகிலம் எங்கும் பசுமையாய் காதல் இன்பத்தோட்டத்தில் மலை உச்சியில் ஆழ்கடலில் முத்தாய் அமைதி தரும் காதல் காதல் அழகில் தோன்றாது காதல் அகத்தில் தோன்றும் ஒரு தலைக் காதல்-அது ஒரு வித முரட்டுக்காதல் தோற்ற பல ஒரு தலைக் காதல்கள் தொலைக்கும் மனிதநேயங்களை தொலைக்கும் பல மனிதர்களை தொல்லை தரும் மிருகமாகும் மதம், சாதி என சதி வலைகளில் மறந்தும் சிக்காது உண்மைக்காதல்கள் இனக்கவர்ச்சிக்கு இரவல் அல்ல காதல் கொலையாவது காதல் அல்ல கொலையாவது மனிதம் மட்டுமே ...

புதுக்கவிதை

Posted: 11 Jul 2016 08:36 AM PDT

தாவணி
–
சிகரங்களை
மூடும்
சிற்றாடை
–
———————–
–
மேகம்
–
வாலிபத்தில் வளர்ந்து
வயோதிகத்தில்
தேய்வது
–
————————
–
ஊழல்
–
அரசியல் மழையிலே
பூத்த
அதிசய காளான்
–
————————-
–
இதயம்
–
கொடுக்க துடிப்பது
கொடுத்தபின்
தவிப்பது!
–
————————
நன்றி- குடும்ப மலர் – 24-11-96

தமிழக காங்கிரஸ் தலைவர் பதவியை தந்தால் ஏற்பேன்: குஷ்பு பேட்டி

Posted: 11 Jul 2016 08:11 AM PDT

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், அவரது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, அடுத்த தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், சுதர்சன நாச்சியப்பன், பீட்டர் அல்போன்ஸ், ஹெச்.வசந்தகுமார், விஜயதரணி, செல்லக்குமார் என்று அடுத்த தலைவருக்கான பட்டியல் நீண்டு கொண்டே போகிறது., இந்நிலையில், கட்சியின் செய்தித் தொடர்பாளர் குஷ்பு, இன்று டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்தார். அப்போது தமிழக காங்கிரஸ் கமிட்டியில் தற்போதுள்ள சூழ்நிலை, கட்சி வளர்ச்சி குறித்து ...

அஜ அநியாயம் செய் வேதியரே…

Posted: 11 Jul 2016 07:29 AM PDT

வேதங்களில் அஜம் என்ற ஒன்றை அக்னியில் ஆகுதி கொடுக்க வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. அஜம் என்ற சொல்லுக்கு என்ன பொருள்? – ஜம் – பிறப்பு. அ – இல்லை. அஜம் பிறப்பில்லாதது. மூன்றாண்டுகளான நெல் முளைக்காது. அந்தப் பழைய நெல்லை ஆகுதி தருமாறு வேதங்கள் கூறுகின்றன. இந்த நுட்பத்தை அறியாதவர்கள், அஜம் என்றால் "ஆடு' என்று ஒரு அர்த்தம் உண்டு. அதனால் பழைய நெல்லை ஆகுதி கொடுக்காமல் ஆட்டை நெருப்பிலிட்டு வேள்வி செய்கிறார்கள். இதனை அருணகிரிநாதர், "அஜ அநியாயம் செய்வே தியரே" என்று கண்டிக்கின்றார். . – ——————————————– – "ஆறிலும் ...

விஷம் இல்லாத ஒரே கரப்பான் கொல்லி மருந்து

Posted: 11 Jul 2016 02:45 AM PDT

விஷம் இல்லாத ஒரே கரப்பான் கொல்லி மருந்து சுத்தம்! – ————————— – ஆண் சிந்தித்தால் சாமியார் ஆவான் பெண் சிந்தித்தால் சர்வாதிகாரி ஆவாள்! – ——————————- – பிரிக்க முடியாதது எது? – பெண்ணும் வம்பும்! – ——————————– – அனுபவம் பழக்கம் இரண்டிற்கும் உள்ள வேறுபாடு…? – முதல் இரவு அனுபவம் மற்ற இரவுகள் பழக்கம்! – —————————– – படுத்ததும் தூக்கம் வர… – கண்ணை மூடுங்கள், பிறகு திறங்கள், மூடுங்கள் திறங்கள்…அப்படியே சிறிது நேரத்தில் தூங்கி போய் விடுவீர்கள்! – ———————————— – ஜேப்படி ...

கொச்சைத்தனத்தில் இருந்து தமிழ் திரையுலகை மீட்க வேண்டும்: கவிஞர் வைரமுத்து விருப்பம்

Posted: 11 Jul 2016 12:26 AM PDT

சமூகத்தில் நடைபெறும் நிகழ்வுகளுக்கு திரையுலகின் கொச்சைத்தனம் ஊக்கம் கொடுத்துவிடுமோ என்ற அச்சம் நிலவுவதால், கொச்சைத்தனத்தில் இருந்து திரையுலகை மீட்க வேண்டும் என கவிஞர் வைரமுத்து கூறினார். மதுரைக்கு நேற்று வந்த கவிஞர் வைரமுத்து செய்தியாளர்களிடம் கூறியதாவது: இப்போது நடப்பது தொழில்நுட்ப நூற்றாண்டு. வரப்போவது கல்வியின் நூற்றாண்டு. இவை இரண்டும் இல்லாமல் ஒரு அங்குலத்தைக்கூட அடுத்தத் தலைமுறை கடக்க முடியாது. இதனால் தொழில் நுட்பம், கல்வியை காக்கின்ற கடப்பாடு புதிய தலைமுறைக்கு உள்ளது. 28 சதவீதம் ...

அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக பின்லேடன் மகன் மிரட்டல்: புதிய வீடியோ வெளியானதால் பரபரப்பு

Posted: 10 Jul 2016 11:49 PM PDT

அமெரிக்காவை பழிவாங்கப் போவதாக ஒசாமா பின்லேடன் மகன் மிரட்டல் விடுத்து பேசிய காட்சிகள் அடங்கிய வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இரட்டை கோபுர தாக்குதலுக்கு பழிவாங்கும் விதத்தில் பாகிஸ் தானின் அபோதாபாத் நகரில் பதுங்கி இருந்த அல் குவைதா தலைவர் ஒசாமா பின்லேடனை, அமெரிக்க சிறப்பு படையினர் 2011, மே மாதம் சுட்டுக் கொன்றனர். அவரது உடலையும் கடலில் கரைத்தனர். பாகிஸ்தானுக்கே தெரியாமல் நடத்தப்பட்ட இந்த அதிரடி தாக்குதல் உலகம் முழுவதும் பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி யிருந்தது. அதே சமயம் பின்லே டன் ...

மனக்குறை நீக்கும் மகான்கள்-ஸ்ரீமத் பாம்பன் சுவாமிகள்

Posted: 10 Jul 2016 10:29 PM PDT

வேண்டும் என்பதற்கும், வேண்டாம் என்பதற்கும், ஒற்றை எ ழுத்துதான் வித்தியாசம். ஆனால், வாழ்க்கையின் வேரையே அசைக்கும் வித்தியாசம் அந்த ஒற்றை எழுத்திற்கு இருக்கிறது. - இந்த இரண்டு வார்த்தைகளுக்கு நடுவே நின்றார் குமரகுருதாசர். அந்த அதிகாலை அவருள் தாங்க முடியாத தவிப்பை ஏற்படுத்தி இருந்தது. மெல்ல நடந்து கடற்கரைக்கு வந்தார். எதையோ விடாது துரத்திக் கொண்டிருக்கும் அலையை இமை கொட்டாமல் பார்த்த படி நின்றார். மனதின் தவிப்பு அவரது நெற்றியில் வியர்வையாய் பூத்து நின்றது. - - குமரகுருதாசரின் ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™