Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil News | Online Tamil News

Tamil News | Online Tamil News


அபாரம்!கூடங்குளம் 2வது அணு உலையில் துவங்கியது மின் உற்பத்தி:தமிழகத்திற்கு கூடுதலாக 560 மெகாவாட் கிடைக்க வாய்ப்பு

Posted: 10 Jul 2016 11:14 AM PDT

திருநெல்வேலி:கூடங்குளம் அணுமின் நிலையத்தின், 2வது அணு உலையில், நேற்று இரவு மின் உற்பத்தி துவங்கியது. இதிலிருந்து தமிழகத்திற்கு கூடுதலாக, 560 மெகாவாட் மின்சாரம் கிடைக்கும் வாய்ப்பு உருவாகியுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில், ரஷ்ய நாட்டின் தொழில்நுட்ப உதவியுடன் தலா, 1,000 மெகாவாட் உற்பத்தி திறனுடைய, இரு அணு உலைகள் அமைக்கப்பட்டுள்ளன. முதலாவது அணு உலையில், 2013 ஜூலை, 13ல், 'கிரிட்டிகாலிட்டி' என்ற, அணுப்பிளவு துவங்கியது. அதே ஆண்டு அக்டோபர், 22 முதல் மின் உற்பத்தியை, தென்னக மின் தொகுப்பிற்கு அனுப்பினர். 2014 டிசம்பர், 31ல், வணிக ...

மதுரையில் ஸ்டாலின், வாசன் திடீர் சந்திப்பு:உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கு அச்சாரம்?

Posted: 10 Jul 2016 11:24 AM PDT

மதுரை:மதுரையில் நடந்த திருமண விழாவில் தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின், த.மா.கா., தலைவர் வாசன் சந்தித்தனர். இச்சந்திப்பு உள்ளாட்சி தேர்தல் கூட்டணிக்கு அச்சாரமாக அமையுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

தி.மு.க., முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு சகோதரி கவிஞர் தமிழச்சி தங்கபாண்டியன் மகள் சரயுக்கும், த.மா.கா., முன்னாள் எம்.பி., சித்தன் பேரன் ஸ்ரீ சித்தார்த் ராமிற்கும் மதுரையில் நேற்று திருமணம் நடந்தது.
இதில் வாசன் மற்றும் ஸ்டாலின், மனைவி துர்கா, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மெஹபூபா ஆட்சியேற்ற பின் மிகப் பெரிய வன்முறை:காஷ்மீர் கலவர பின்னணியில் பாகிஸ்தான்

Posted: 10 Jul 2016 11:26 AM PDT

கடந்த இரண்டு நாட்களாக ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் அரங்கேறி வரும் வன்முறை, முதலமைச்சராக மெஹபூபா முப்தி தலைமையேற்ற பின் நடந்துள்ள மிகப்பெரிய சம்பவமாகும். அது போன்றே, கடந்த டிசம்பரில், பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீபின் பிறந்த நாளன்று, பிரதமர் மோடி நேரடியாக சென்று, அவருக்கு வாழ்த்து தெரிவித்த பின்னர் காஷ்மீர் பகுதியில் நிகழும் மிகப்பெரிய வன்முறை சம்பவமும் கூட.

முன்னதாக மோடியின் லாகூர் பயணத்தை தொடர்ந்து, ஜனவரி 2ல், பதன்கோட் விமான படை தளத்தில் பயங்கரவாத தாக்குதல் நடந்தாலும், அது, அண்டை மாநிலமான பஞ்சாப்பில் நிகழ்ந்தது. மேலும், அந்த சம்பவம் ...

தான்சானியா வளர்ச்சிக்கு உதவ மோடி உறுதி

Posted: 10 Jul 2016 11:28 AM PDT

டர் - எஸ் - சலாம்:தான்சானியா நாட்டின் வளர்ச்சிக்கு அனைத்து வகையிலும் உதவத் தயாராக உள்ளதாக கூறிய பிரதமர் மோடி, ''குடிநீர் திட்டப் பணிகளுக்காக, 604 கோடி ரூபாய் கடன் அளிக்கப்படும்,'' என்றும் அறிவித்தார்.

ஆப்ரிக்க நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, நேற்று தான்சானியா நாட்டுக்கு சென்றார். தான்சானியா அதிபர் ஜான் போம்பே ஜோசப் மகுபுலியை சந்தித்து, இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பின், மோடி கூறியதாவது:
தான்சானியாவின் ...

சர்ச்சையில் சிக்கினார் கேரள முதல்வர் விஜயன்

Posted: 10 Jul 2016 11:29 AM PDT

கொச்சி:கேரள மாநிலம் கொச்சியில், அரசின் உயர் அதிகாரிகள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த விழாவில், முதல்வரும், மார்க்சிஸ்ட் மூத்த தலைவருமான பினராயி விஜயன் பங்கேற்றார்.

போலீஸ் அதிகாரிகளின் ஒழுங்கு மற்றும் கட்டுப்பாடு குறித்த ஆலோசனை வழங்கும் வகையில், இந்த விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அப்போது, முதல்வர் பினராயி விஜயன் அருகே, மேடையில் அமர்ந்து, அவருடன் பேசிக் கொண்டிருந்தவரை பார்த்து, விழாவுக்கு வந்திருந்தவர்கள் முணு முணுத்தனர். போலீஸ் உதவி கண்காணிப்பாளர் அப்துல் ரஷீத் என்பவர் தான், ...

மீண்டும் 'நேஷனல் ஹெரால்டு':காங்கிரஸ் தீவிர முயற்சி

Posted: 10 Jul 2016 11:31 AM PDT

புதுடில்லி:கடந்த, 2008ல் நிறுத்தப்பட்ட, 'நேஷனல் ஹெரால்டு' உள்ளிட்ட மூன்று பத்திரிகைகளை மீண்டும் வெளியிட, காங்கிரஸ் கட்சி திட்டமிட்டுள்ளது.

கடந்த, 1938ம் ஆண்டில், சுதந்திர போராட்டத்தின் போது, ஜவஹர்லால் நேருவால் தொடங்கப்பட்டது, நேஷனல் ஹெரால்டு பத்திரிகை.'அசோசியேட் ஜர்னல் லிமிடெட்' என்ற நிறுவனத்தின் கீழ்,
நேஷனல் ஹெரால்டு என்ற ஆங்கில பத்திரிகையும், குவாமி ஆவாஸ் என்ற உருது பத்திரிகையும், நவ்ஜீவன் என்ற ஹிந்தி பத்திரிகையும் வெளி வந்தன. கடும் நிதி நெருக்கடி உள்ளிட்ட ...

துறை பறிபோன அதிருப்தி: சர்ச்சையில் பங்கஜா

Posted: 10 Jul 2016 11:32 AM PDT

மும்பை: அமைச்சரவை மாற்றத்தின்போது, முக்கியமான துறை பறிக்கப்பட்ட அதிருப்தியை வெளிப்படுத்தி, சர்ச்சையில் சிக்கியுள்ளார் மஹாராஷ்டிர அமைச்சர் பங்கஜா முண்டே.

மஹாராஷ்டிராவில் முதல்வர்தேவேந்திர பட்னவிஸ் தலைமையிலான பா.ஜ., - சிவசேனா கூட்டணி அரசு அமைந்துள்ளது. சமீபத்தில், அமைச்சரவை மாற்றி அமைக்கப்பட்டது.
அப்போது, பங்கஜாவிடம் இருந்து நீர்வளத்துறை பறிக்கப்பட்டது. அதன்படி தற்போது, ஊரக வளர்ச்சித் துறை மற்றும் மகளிர் - குழந்தைகள் நலத் துறை அமைச்சராக அவர் ...

அமெரிக்காவை பழிவாங்குவேன்:ஒசாமா மகன் திடீர் எச்சரிக்கை

Posted: 10 Jul 2016 11:34 AM PDT

துபாய்:''என் தந்தையை கொலை செய்த அமெரிக்காவை பழிவாங்குவேன்,'' என, அல் - குவைதா பயங்கரவாத அமைப்பு தலைவன் ஒசாமா பின்லேடனின் 20 வயது மகன் ஹம்சா பின்லேடன் எச்சரிக்கை விடுத்துள்ளான்.

கடந்த, 2011ல், அமெரிக்கப் படையினரால்
பாகிஸ்தானில் கொல்லப்பட்ட ஒசாமாவின் மகன், இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள ஒரு ஆடியோவில் கூறியுள்ளதாவது:
நாங்கள் எல்லாருமே ஒசாமா தான். பாலஸ்தீனம், ஆப்கானிஸ்தான், சிரியா, ஈராக், ஏமன், சோமாலியா மற்றும் இதர முஸ்லிம் நாடுகள் மீது, ...

ஜம்மு - காஷ்மீர் கலவரத்தால் 5,000 தமிழக பக்தர்கள் தவிப்பு:யாத்திரை சென்றவர்கள் ராணுவ முகாம்களில் தஞ்சம்

Posted: 10 Jul 2016 11:37 AM PDT

ஜம்மு - காஷ்மீரில் பயங்கரவாத அமைப்பின் தலைவன் கொல்லப்பட்டதால் ஏற்பட்ட கலவரம் காரணமாக, அமர்நாத் யாத்திரைக்கு சென்ற தமிழகத்தைச் சேர்ந்த, 5,000 பக்தர்கள், பாதி வழியில் தவிக்கின்றனர். இவர்கள், ஸ்ரீநகர் அருகேயுள்ள ராணுவ முகாமில் தஞ்சமடைந்து உள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரில், ஹிஸ்புல் முஜாகிதீன் அமைப்பின் முக்கிய தலைவர்களில் ஒருவனான புர்ஹான் வானி, 22, ஜூலை, 8ல் பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டான். இதையடுத்து, காஷ்மீரில், போலீசாருக்கு எதிராக கலவரம் வெடித்தது. இதனால், ஸ்ரீநகர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டு உள்ளது. ...

நாய் இறைச்சிக்கு தடை; நாகாலாந்து அரசு அதிரடி

Posted: 10 Jul 2016 11:43 AM PDT

கோஹிமா: நாகாலாந்தில், நாய் இறைச்சிக்கு தடை விதிக்க, அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான நாகாலாந்தில், முதல்வர் ஜெலியாங் தலைமையிலான, நாகலாந்து மக்கள் முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்கு, நாய் இறைச்சி, உணவுப் பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அங்குள்ள ஓட்டல்கள் மற்றும் வீடுகளில் நாய் இறைச்சி சமைக்கப்படுகிறது.
அம்மாநில மக்கள், அதை அதிகம் விரும்பி சாப்பிடுவதால், கடைகளிலும், நாய் இறைச்சி விற்பனை அமோகமாக நடக்கிறது. இதற்காக, தெரு நாய்கள் அதிக அளவில் பிடிக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. இதுகுறித்து, விலங்குகள் நல ...

'நான் ஏமாற்றவில்லை' மல்லையா விளக்கம்

Posted: 10 Jul 2016 01:03 PM PDT

லண்டன்: லண்டனுக்கு தப்பி சென்றுள்ள மல்லையா 'நான் யாரையும் ஏமாற்றவில்லை' எனத் தெரிவித்தார்.
வங்கி கடன் மோசடி உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் சிக்கிய மல்லையா, லண்டனுக்கு தப்பிச் சென்றுள்ளார். இந்த நிலையில், 1,225 கோடி ரூபாயை, மல்லையா, தன் நிறுவனங்களுக்கு மாற்றிக் கொண்டதாக, யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனம் குற்றம் சாட்டியது.
இது குறித்து, இ - மெயில் மூலம் அளித்துள்ள பதிலில் மல்லையா கூறியதாவது: நான் யாரையும் ஏமாற்றவில்லை. யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தில் இருந்த, என்னுடைய, யு.பி., குழுமத்தின் பங்குகளை, டியாஜியோ நிறுவனத்துக்கு, 2013ல் ...

ஆஸி., பொது தேர்தலில் திருப்பம் ஆளும் கட்சிக்கு மீண்டும் வாய்ப்பு

Posted: 10 Jul 2016 02:09 PM PDT

சிட்னி: ஆஸ்திரேலிய பொதுத் தேர்தலில், எட்டு நாட்கள் இழுபறிக்கு பின், ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய கூட்டணியே, மீண்டும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த பொதுத் தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டன. இதில், எந்த அணிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் கடும் போட்டி நீடித்தது. ஆஸ்திரேலிய பார்லிமென்டில், மொத்தம், 150 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளனர். இதில், 76 உறுப்பினர்களை பெறும் கட்சிதான் ஆட்சி அமைக்க முடியும். ஓட்டு எண்ணிக்கையின் இறுதிச்சுற்று நிலவரப்படி, ஆளும் லிபரல் கட்சி தலைமையிலான தேசிய ...

யூரோ கோப்பை கால்பந்து: போர்ச்சுகல் ‛சாம்பியன்'

Posted: 10 Jul 2016 02:32 PM PDT

செயின்ட் டெனிஸ் : யூரோ கோப்பை தொடரின் பைனலில் பிரான்ஸ் அணியை வீழ்த்திய போர்ச்சுகல் சாம்பியன் பட்டத்தை தட்டி சென்றது.
ஐரோப்பிய அணிகள் மட்டும் பங்கேற்கும் 15வது யூரோ கோப்பை கால்பந்து தொடர், பிரான்சில் நடைபெறுகிறது. மொத்தம் பங்கேற்ற 24 அணிகளில் ஸ்பெயின், ஜெர்மன் உள்ளிட்ட 22 அணிகள் வெளியேறின. இறுதிப் போட்டிக்கு உலக தரவரிசையில் 8வது இடத்திலிருக்கும் ரொனால்டோ தலைமையிலான போர்ச்சுகல் அணி, 17வது இடத்திலிருக்கும் பிரான்ஸ் அணியை சந்தித்தது.
ரெனால்டோ ‛அவுட்' :
சொந்த மண்ணில் உள்ளூர் ரசிகர்கள் முன்னிலையில் விளையாடிய பிரான்ஸ் அணி, ...



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™