Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





4TamilMedia செய்திகள்

4TamilMedia செய்திகள்

Link to 4TamilMedia News

லசந்த படுகொலை வழக்கு; முன்னாள் பொலிஸ் மா அதிபரிடமும் விசாரணை!

Posted:

ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்க படுகொலை வழக்கு விசாரணைகளின் ஒருகட்டமாக, முன்னாள் பொலிஸ் மா அதிபர் மஹிந்த பாலசூரியவிடம் குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தியுள்ளனர். 


Read more ...

பிரபாகரனை ‘ஐயா’ என்றுதான் அழைக்கிறேன்: மனோ கணேசன்

Posted:

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை ‘ஐயா’ என்றே தான் அழைப்பதாக தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சருமான மனோ கணேசன் தெரிவித்துள்ளார். 


Read more ...

பிரார்த்தனை முடிந்து திரும்புகையில் கால் தடுக்கி விழுந்தார் போப்!:காயமின்றி தப்பித்தார்

Posted:

இன்று வியாழக்கிழமை போப் பிரான்ஸிஸ் போலந்தில் நடைபெற்ற பிரார்த்தனைக் கூட்டம் ஒன்றில் பங்கு பற்றி உரையாற்றிய பின்னர் திரும்புகையில் கால் தடுக்கி கீழே வீழ்ந்துள்ளார். ஆனாலும் அருகில் இருந்த பாதிரியார்கள் துணையுடன் உடனே எழும்பி  நின்ற அவர் காயம் ஏதும் இன்றித் தப்பித்துள்ளார். தமது கண்முன்னே பாப்பரசர் கால் தடுமாறி வீழ்ந்ததைக் கண்ட அவரின் பாதுகாவலர்கள் அதிர்ச்சி அடைந்தனர். 


Read more ...

வியாழக் கிரகத்தில் காணப் படும் பாரிய சிவப்பு சுழல் யாது? : விஞ்ஞானிகள் கூறுவதென்ன?

Posted:

நமது சூரிய குடும்பத்தில் மிகப் பெரிய கிரகமும் சூரியனில் இருந்து 5 ஆவது இடத்திலும் பூமி மற்றும் செவ்வாய் ஆகிய கிரகங்களைத் தாண்டியும் அமைந்துள்ள மிகப் பெரிய வாயுக் கோளான கிரகம் தான் வியாழக் கிரகம் ஆகும். 1000 பூமி கிரகங்களை உள்ளடக்க கூடிய வியாழனில் 400 mph வேகத்தில் காற்றுக்கள் வீசுவதாகவும் இது சூரியனில் இருந்து பூமியை விட 5 மடங்கு அதிக தொலைவில் உள்ள போதும் பூமியில் நிலவும் வெப்பமே வியாழனிலும் காணப் படுவதாகவும் வானியலாளர்கள் கூறுகின்றனர். 


Read more ...

சிரியாவில் பாதிக்கப் பட்ட அலெப்போ நகருக்கு உதவித் திட்டம் அளிக்க முன்வரும் ரஷ்யா

Posted:

அண்மையில் சிரிய அதிபர் பஷார் அல் அசாத் சரணடையும் கிளர்ச்சியாளர்களுக்குப் பொது மன்னிப்பு அளிப்பதாக வாக்களித்திருந்தார். இதைத் தொடர்ந்து சிரியாவில் மிக மோசமாகப் பாதிக்கப் பட்ட வடக்கு அலெப்போ நகரில் மாட்டிக் கொண்டுள்ள பொது மக்கள் மற்றும் கிளர்ச்சியாளர்களுக்கு மிகப் பெரியளவில் அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்யும் உதவித் திட்டத்தை அளிக்கப் போவதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. 


Read more ...

சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனையோட்டம்

Posted:

சின்னமலை-விமான நிலையம் வரையான மெட்ரோ ரயில் சோதனை இரண்டு நாட்களாக நடைப்பெற்று வருகிறது.


Read more ...

விலைவாசி குறைப்பு என்கிற வாக்குறுதியை மோடி நிறைவேற்றவில்லை: ராகுல்

Posted:

ஆட்சிக்கு வந்தால் விலைவாசி குறைக்கப்படும் என்கிற தமது தேர்தல் வாக்குறுதியை பிரதமர் நரேந்திரே மோடி நிறைவேற்றவில்லை என்று, காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.


Read more ...

தமிழக மீனவர்கள் இன்று மத்திய அரசுடன் பேச்சுவார்த்தை

Posted:

ராமேஸ்வரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, நாகப்பட்டினம், கன்னியாகுமரி, சென்னை ஆகிய மாவட்ட மீனவர்களின் பிரதிநிதிகள் இன்று டெல்லி சென்றுள்ளனர்.


Read more ...

உலக புலிகள் தினம் இன்று

Posted:

இன்று உலகம் முழுவதும் உலக புலிகள் தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகிறது.


Read more ...

பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வங்கிகள் வேலை நிறுத்தம்

Posted:

பாரத் வங்கியுடன் ஐந்து வங்கிகளை இணைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்து இணைக்கப்பட உள்ள வங்கிகளின் தொழிலாளர்கள் இன்று ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.


Read more ...

சார்க் மாநாட்டில் பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு

Posted:

பாகிஸ்தானில் நடக்க உள்ள சார்க் மாநாட்டில் கலந்துக்கொண்டு பயங்கரவாத பிரச்னையை எழுப்ப ராஜ்நாத் சிங் முடிவு செய்துள்ளார் என்று தெரிய வருகிறது.


Read more ...

நிபுணர்களின் ஆலோசனைகள் பெற்றே பொருளாதார மையத்தின் சந்தைகள் அமைக்கப்படும்: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

பொருளாதார மையத்தின் சந்தைகளை எங்கெங்கு அமைப்பது என்பது தொடர்பில், நிபுணர்களின் ஆலோசனைகள் பெறப்பட்டே இறுதி முடிவெடுக்கப்படும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

போர்க்குற்ற விசாரணைகளை நீதியாக நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை: சுரேஷ் பிரேமச்சந்திரன்

Posted:

இறுதி மோதல்களில் இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பிலான விசாரணைகளை நீதியாக நடத்துவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்   தெரிவித்துள்ளார். 


Read more ...

மொரகஹாகந்த திட்டத்தில் எமது பங்களிப்பையும் பெற வேண்டும்; வடக்கு மாகாண சபை வலியுறுத்தல்!

Posted:

வடக்கு மாகாணத்திற்கும், வடமத்திய மாகாணத்திற்கும் நீரினைப் பங்கீடு செய்யும் வகையில் விஸ்தரிக்கப்படவுள்ள மகாவலி திட்டத்தின் மொரகஹாகந்த திட்டத்தில் வடக்கு மாகாண சபையின் பங்களிப்பு உள்ளடக்கப்பட வேண்டும் என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் உள்ளிட்ட வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் வலியுறுத்தியுள்ளனர். 


Read more ...

ஜனநாயகத்தைப் பலப்படுத்தும் இலங்கையின் முயற்சிகளுக்கு கனடா பாராட்டு!

Posted:

இலங்கையின் நீதிமன்ற முறைமையினை பலப்படுத்தி ஜனநாயத்தை வலுவடையச் செய்வதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் தொடர்பில் கனடா பாராட்டுக்களைத் தெரிவித்துள்ளது. 


Read more ...

தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள் தரங்கெட்டு போவதற்கு இடமளிக்க முடியாது: சி.வி.விக்னேஸ்வரன்

Posted:

தரமான வாழ்வு வாழ்ந்த தமிழ் மக்கள் தரங்கெட்டுப் போவதற்கு இடமளிக்க முடியாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். 


Read more ...

ஹிலாரி கிளிங்டன் அதிபராவதற்கு ஆதரவாக தற்போதைய அதிபர் ஒபாமா பேச்சு!

Posted:

எதிர்வரும் நவம்பர் 8 ஆம் திகதி அமெரிக்காவில் நடைபெறவுள்ள அதிபர் தேர்தலில் ஜனநாயகக் கட்சி சார்பாக உத்தியோகபூர்வமாக அறிவிக்கப் பட்டு வேட்பாளராகப் போட்டியிடும் ஹிலாரி கிளிங்டன் அமெரிக்க அதிபராக வருவதற்கு முழுத் தகுதி உடையவரே அதிபர் ஒபாமா ஆதரவளித்துப் பேசியுள்ளார்.

அண்மையில் பிலடெல்பியாவில் நடந்த ஜனநாயகக் கட்சியின் மாநாட்டில் பேசிய போதே அதிபர் ஒபாமா இவ்வாறு பேசியுள்ளார். இவர் தனது உரையில் மேலும் தன்னை விடவும், பில் கிளிங்டனை விடவும் ஏனைய வேட்பாளர்களை விடவும் ஹிலாரி அதிபரானால் மிகச் சிறப்பாக சேவை ஆற்றக் கூடியவர் என்றும் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் முதன் முறையாகப் பெண் வேட்பாளர் ஒருவர் களம் இறங்கிப் போட்டியிடுவது இதுவே முதன்முறை என்பதுடன் ஹிலாரி கிளிங்டன் வெற்றி பெற்றால் அமெரிக்க சரித்திரத்தில் முதல் பெண் அதிபராக மாறியும் சாதனை படைப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னால் அதிபர் பில் கிளிங்டனின் துணைவியாரான ஹிலாரி கிளிங்டன் இதற்கு முன் ஒபாமா நிர்வாகத்தில் அமெரிக்க பாதுகாப்புச் செயலாளராகக் கடமை ஆற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Read more ...

அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை: எஸ்.கே.கவுல்

Posted:

அனைத்து விதமான வழக்குகளையும் விசாரிக்க நீதிபதிகளிடம் மந்திரக் கோல் இல்லை என்று, சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.கிருஷ்ண கவுல் தெரிவித்துள்ளார்.


Read more ...

திரைப்பட பெயர்களை பதிவு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை: இயக்குனர்கள் சங்கம்

Posted:

திரைப்பட பெயர்களை பதிவு செய்வதில் வெளிப்படைத் தன்மை தேவை என்று இயக்குனர்கள் சங்கம் இன்று, தயாரிப்பாளர்கள் சங்கத்தை எதிர்த்துப் போராட்டம் நடத்தினர்.


Read more ...

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன்

Posted:

போராட்டத்தின் போது கைது செய்யப்பட்ட ஐந்து வழக்கறிஞர்களுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


Read more ...

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு சதவிகித வெற்றி: ஜெயலலிதா

Posted:

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுகவுக்கு நூறு சதவிகித வெற்றி கிடைக்க பாடுபட வேண்டும் என்று அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமது உரையில் கூறியுள்ளார்.


Read more ...

அனைத்து மானியங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதால் நாடாளுமன்றத்தில் அமளி

Posted:

அனைத்து மானியங்களை பெற ஆதார் அட்டை கட்டாயம் என்பதால் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் அமளி ஏற்பட்டது.


Read more ...

ஒரு மகிழ்ச்சிக்காரனும் - ஒரு கலகக்காரனும்

Posted:

ரஜினி தன்னை முழுமையாய் ஒப்புக்கொடுத்து நடித்திருக்கும் படம் கபாலி.   இயக்குனர் இரஞ்சித்திற்கு  இது மூன்றாவது படம் ஆனால் ரஜினிக்கோ   நூறுகளை தாண்டிய  (156) படம். கபாலி என்கிற ரஜினியிடம் இயக்குனர் அதிகம் வேலை வாங்கியிருக்கலாம்.  இரஞ்சித் பிறக்கும் முன் நடிகனாக மிளிர்ந்த ரஜினியை, அதன்பிறகு சமகால நடிகனாக முடியுமென நம்பிக்கை கொள்ளும் வகையில், நடிக்கவைத்து நிருபித்திருக்கிறார். அதை ரஜினியும் ரசிக்கிறார். கொண்டாடி மகிழ்கிறார்.


Read more ...

அஜீத் படத்திற்குள் காஜல் வந்தது இப்படிதான்!

Posted:

தன்னுடன் நடிக்கும் எல்லா ஹீரோயின்களையும் ‘வேணும்’ அல்லது ‘வேணாம்’ என்று சொல்கிற உரிமையும் வழக்கமும் அஜீத்திற்கு உண்டு.


Read more ...

‘பேரணி’க்காரர்கள் மூன்று நாட்களில் சென்றுவிடுவார்கள்: ருவான் விஜயவர்த்தன

Posted:

நல்லாட்சி அரசாங்கத்துக்கு எதிராக பேரணி செல்பவர்கள் இரண்டு மூன்று நாட்களில் சென்றுவிடுவார்கள் என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்துள்ளார். 


Read more ...

மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் 14 போதை கடத்தல் பேர்வழிகளுக்கு மரண தண்டனை விதிக்கிறது இந்தோனேசியா

Posted:

எதிர்வரும் தினங்களில் இந்தேனேசியாவில் போதை மருந்துக் கடத்தல் குற்றச்சாட்டுடன் தொடர்புடைய 14 பேருக்கு நீதி மன்றத்தில் மரண தண்டனை தீர்ப்பு விதித்ததன் மூலம் அதனை உறுதி செய்துள்ளது அந்நாட்டு அரசு.


Read more ...


Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™