Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


மிசிசாகா வெடிப்புச் சம்பவம்: மேலும் ஒரு சடலம் மீட்பு

Posted: 30 Jun 2016 12:33 PM PDT

y

yமிசிசாகா வெடிப்புச் சம்பவத்தில் சேதமடைந்த வீடு ஒன்றில் இருந்து மேலும் ஒரு சடலத்தை இன்று வியாழக்கிழமை மீட்டுள்ளதாக பீல் பிராந்தியக் காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த வெடிப்புச் சம்பவத்தில் உயிரிழந்த பெண் ஒருவரின் சடலம் சம்பவம் இடம்பெற்ற கடந்த செவ்வாய்கிழமை கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இரண்டாவது சடலம் இது என்பது குறிப்பிடத்தக்கது.

Hickory Drive மற்றும் Dixie வீதிப் பகுதியில் இன்று கண்டுபிடிக்கப்பட்ட அந்த சடலம் ஆண் நபர் ஒருவரினது என்றும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் அந்த சடலம் யாருடையது என்பது இன்னமும் இனங்காணப்படவில்லை என்று கூறப்படுகிறது.

அதேவேளை வெடிப்புச் சம்பவம் இடம்பெற்ற நாளில் கண்டுபிடிக்கப்பட்ட பெண்ணின் சடலம் Dianne Page என்பவரது என இனங்காணப்பட்டுள்ளதாக இன்று பிற்பகலில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

The post மிசிசாகா வெடிப்புச் சம்பவம்: மேலும் ஒரு சடலம் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Dundas West தீ சம்பவம்: இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயம்

Posted: 30 Jun 2016 08:00 AM PDT

fg

fgரொரன்ரோ நகர மையப் பகுதியில் Dundas Street west மற்றும் Bathurst Street பகுதியில் அமைந்துள்ள அடுக்குமாடி கட்டிடம் ஒன்றில் நேற்று நள்ளிரவு வேளையில் தீ விபத்து ஒன்று இடம்பெற்றுள்ளது.

நள்ளிரவுக்கு சற்று முன்பாக 11.30 அளவில் கட்டிடத்தில் தீ பரவ ஆரம்பித்திருந்ததாகவும், குடியிருப்பாளர் ஒருவர் 911 இற்கு வழங்கிய தகவலை அடுத்து சுமார் 100 தீயணைப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டனர் எனவும் கூறப்படுகிறது.

இன்று காலை வரையில் தீயை அணைக்கும் முயற்சியில் படையினர் ஈடுபட்டிருந்தனர் என்றும், இதன்போது இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயமடைந்துள்ளனர் என்றும் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.fg

ஒருவருக்கு நெஞ்சுப் பகுதியிலும், மற்றுமொருவருக்கு கையிலும் காயங்கள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

தீப் பரவல் ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவிலலை என்பதுடன், விபத்தினால் ஏற்பட்ட சேத விபரமும் இன்னமும் மதிப்பிடப்படவில்லை என்றும் கூறப்படுகிறது.

இதேவேளை இந்த தீப்பரவல் காரணமாக அந்த பகுதியில் மின்சார தடை ஏற்பட்டுள்ளதுடன், அந்த பகுதி ஊடான போக்குவரத்துகளும் வேறு பகுதிகளூடாக திசை திருப்பி விடப்பட்டுள்ளன என தெரியவருகிறது.

The post Dundas West தீ சம்பவம்: இரண்டு தீயணைப்பு வீரர்கள் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர்

Posted: 30 Jun 2016 07:35 AM PDT

g

gகனடாவிற்கு வருகை தந்துள்ள அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள், செனட்சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பேராளர்கள் மத்தியில் உரையாற்றியுள்ளார்.

நேற்று மாலை அவர் ஆற்றிய அந்த உரையில், அனைத்து உலகின் நலனுக்கான நடவடிக்கைகளில் கனடா ஆற்றிவரும் பங்களிப்பிற்கு தமது பாராட்டைத் தெரிவித்துள்ளார்.

கனடா போன்ற சிறந்த நாடுகள் பலவற்றின் பங்களிப்பு உலகத்திற்கும், நோட்டோ போன்ற அமைப்புக்களுக்கும் தேவைப்படுகின்றன எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனடா உட்பட அனைத்து நோட்டோ உறுப்பு நாடுகளும், பொதுவான பாதுகாப்பிற்கான தமது பங்களிப்பினை முழுமையாக வழங்கும் போது, அனைவரினதும் பாதுகாப்பினை மேலும் உறுதிப்படுத்திக்கொள்ள முடியும் எனவும் அவர் கூறியுள்ளார்.g

தற்போது மக்கள் மத்தி்யில் புரிந்துணர்வும், அறிவும் வேகமாக பரவி வருகின்றது என்றும் குறிப்பிட்டுள்ள அவர் அது பயங்கரவாதிகளின் சகிப்பின்மையினையும், அழிவுப் பாதையையும் பரப்புவதற்கும் துணையாக அமைவதாகவும் கவலை வெளியிட்டுள்ளார்.

அதனால் இவ்வாறான நிலைமைகள் தொடர்பில் தற்போது உலகம் அதிக கரிசனை கொள்ளவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை அண்மையில் 49 பேரைப் பலிகொண்ட அமெரிக்காவின் ஓர்லான்டோ துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தினையும், கடந்த செவ்வாய்க்கிழமை 42 பேரைப் பலிகொண்ட இஸ்தான்புல் விமான நிலையத் தாக்குதல் சம்பவத்தையும் அமெரிக்க அதிபர் தனது உரையின் போது நினைவுகூர்ந்துள்ளார்.

The post கனேடிய நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமெரிக்க அதிபர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மின் விநியோகத்தை இழந்துள்ள 3,000 ரொரன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்கள்

Posted: 30 Jun 2016 07:29 AM PDT

b

bரொரன்ரோவின் கிழக்கு பிராந்தியத்தில் சுமார் 3,000 ரொரன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் மின் விநியோகத்தை இழந்திருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பில் தகவல் வெளியிட்டுள்ள ரொரன்ரோ ஹைட்ரோ பேச்சாளர் Jessica Martin, மின் விநியோகம் தடைப்பட்டதாக முதல் முறைப்பாடு அதிகாலை ஒரு மணிக்கு தமக்கு கிடைத்ததாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் அப்போது Bloor Street, Lakeshore Boulevard, Yonge Street, Coxwell Avenue பகுதிகளைச் சேர்ந்த சுமார் 6,000 வாடிக்கையாளர்களின் மின் விநியோகம் தடைப்பட்டிருந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

எனினும் அதிகாலை 4 மணியளவில் 3,000 வாடிக்கையாளர்களின் மின் விநியோகம் சீரடைந்துள்ளதுடன், மேலும் 3,000 பேருக்கான மின் விநியோகம் தொடர்ந்தம் தடைப்பட்டுள்ளதாகவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.b

Danforth Avenue, Queen Street, Don Valley Parkway, Coxwell Avenue பகுதிகளில் உள்ளோரே தொடர்ந்தும் மின் தடையை எதிர்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மின் விநியோகம் எப்போது முழுமையாக வழமைக்குத் திரும்பும் என்பதனை கூறமுடியாது என்ற போதிலும், கூடிய விரைவில் நிலைமை சீரடையும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

மின்மாற்றில் ஒன்றில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே இந்த மின் தடை ஏற்பட்டதாகவும் ஹைட்ரோ பேச்சாளர் Jessica Martin தெரிவித்துள்ளார்.

The post மின் விநியோகத்தை இழந்துள்ள 3,000 ரொரன்ரோ ஹைட்ரோ வாடிக்கையாளர்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™