Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


சட்ட உதவிகளுக்காக மேலும் நிதி ஒதுக்கீடு

Posted: 09 Jun 2016 06:40 AM PDT

uyg

uygசட்ட உதவித் திட்டங்களுக்காக மாநிலங்களுக்கு மேலும் ஒரு தொகை நிதியை மத்திய அரசாங்கம் வழங்கவுள்ளது.

நீதித் துறையின் மேலும் விரிவுபடுத்துவதற்கு உதவும் வகையில் இந்த நிதி ஒதுக்கீடு மேற்கொள்ளப்படவுள்ளது.

இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ள நீதி அமைச்சர் Jody Wilson-Raybould, ஏற்கனவே இந்த துறைக்காக ஆண்டுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை விட மேலும் 30 மில்லியன் நிதியை ஒதுங்கியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

சட்டவாளர்களுக்கு பணத்தை செலுத்த முடியாத மக்களுக்கான சட்ட உதவி்ச் சேவையை விரிவுபடுத்த அந்த நிதி உதவும் என்றும் அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் ஐந்து ஆண்டுகளுக்கான நிதித்திட்டமிடலில் நீதித் துறைக்காக இந்த நிதி ஒதுக்கீடு முக்கியம் பெறுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

The post சட்ட உதவிகளுக்காக மேலும் நிதி ஒதுக்கீடு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ள கனேடிய கல்வியலாளர்

Posted: 09 Jun 2016 06:36 AM PDT

o

oகனேடிய கல்வியலாளர் ஒருவர் ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகிறது.

மொன்றியலில் கொன்கோர்டியா(Concordia ) பல்கலைக்கழக பேராசிரியரான 65 வயது ஹோமா ஹூட்ஃபர்(Homa Hoodfar) என்பவரே இவ்வாறு சிறை வைக்கப்பட்டுள்ளார்.

மானிடவியல் வல்லுநரான அவர் பெண்ணியம் குறித்த ஆய்வுகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வரும் நிலையில், மத்திய கிழக்கு வட்டார வாழ்வியலில் பெண்களின் பங்களிப்பு தொடர்பில் அவர் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த விடயம் தொடர்பில் ஈரானில் ஆய்வில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அவரிடம் கடந்த திங்கட்கிழமை அந்த நாட்டு அதிகாரிகள் விசாரணை நடாத்தியிருந்ததாகவும், பின்னர் அவரைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

இவர் ஈரானில் பிறந்தவர் என்ற போதிலும், கடந்த 30 ஆண்டுகளாக அவர் மொன்றியலிலேயே வாழ்ந்து வருவதாகவும், ஈரானில் உள்ள தமது உறவினர்களை சந்திப்பதற்காகவும், தனது கல்வியியல் ஆய்வுகளுக்காகவும் கடந்த பெப்ரவரி மாதம் அளவில் அவர் ஈரான் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post ஈரானில் சிறைவைக்கப்பட்டுள்ள கனேடிய கல்வியலாளர் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பாக சாப்பிடவும்!

Posted: 09 Jun 2016 06:31 AM PDT

jk

jkஆரோக்கியமான வாழ்க்கை வாழ வேண்டும் என்று நினைப்பவர்கள் கீழே கொடுப்பட்டுள்ள வழிமுறைகைளை பின்பற்றுங்கள்.

தினமும் ஒரு டம்ளர் மாதுளை ஜூஸ் குடித்தால் உடலில் ரத்த அழுத்தம், கொழுப்பு, நச்சுத்தன்மை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வாக இருக்கும்.

மனநலக் கோளாறு மற்றும் மூளை நரம்புகளில் பாதிப்பு உள்ளவர்களின் தினசரி உணவில் தர்பூசணி துண்டுகள் அவசியம். மன அழுத்தம், பயம் போன்ற பாதிப்புகளை தகர்க்கும், விட்டமின் பி-6 தர்பூசணியில் அதிகம்.

ஆப்பிள் தோலில் பெக்டின் என்ற வேதிப்பொருள் கணிசமாக இருப்பதால், தோலோடு சாப்பிட வேண்டும். பெக்டின் நம் உடலின் நச்சுக்களை நீக்குவதில் சிறந்தது.jk

பூண்டு சாப்பிட்டீர்களென்றால் உங்கள் உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி வெகுவாக அதிகரிக்கும்.

வெள்ளை அணுக்கள் அதிகம் உற்பத்தியாவதோடு, புற்றுநோய் செல்கள் உருவாகாமலும் தடுக்கும்.

சிவப்பணு உற்பத்திக்கு புடலங்காய், பீட்ரூட், முருங்கைக்கீரை, அவரை, பச்சைநிறக் காய்கள், உளுந்து, துவரை, கம்பு, சோளம், கேழ்வரகு, பசலைக்கீரை போன்றவற்றை அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும்.

பச்சைப் பயறு, மோர், உளுந்துவடை, பனங்கற்கண்டு, வெங்காயம், சுரைக்காய், நெல்லிக்காய், வெந்தயக்கீரை, மாதுளம் பழம், நாவற்பழம், கோவைக்காய், இளநீர் போன்றவை உடலின் அதிகப்படியான சூட்டைத் தணிக்கும்.

சுண்டைக்காயை உணவில் சேர்த்தால் நாக்குப்பூச்சித் தொல்லை, வயிற்றுப்பூச்சித் தொல்லை தூர ஓடிவிடும்.

வெங்காயம், பூண்டு, சிறுகீரை, வேப்பிலை, மிளகு, மஞ்சள், சீரகம், கருப்பட்டி, வெல்லம், சுண்டைக்காய் வற்றல், செவ்விளநீர், அரைக்கீரை, எலுமிச்சை போன்றவை உடலில் உள்ள நச்சுத்தன்மை நீக்கும் உணவுகள் ஆகும்.

பொன்னாங்கண்ணிக் கீரையைத் துவையல் செய்து சாப்பிட்டு வந்தால், மூல நோய் தணியும்.

இந்தக் கீரையின் தைலத்தை தலைக்குத் தேய்த்துக் குளித்து வந்தால் கண் நோய்கள் நெருங்காது.

தினசரி சிறு துண்டு பைனாப்பிளை தேனில் ஊற வைத்து, அந்தத் தேனை இரண்டு வாரம் சாப்பிட்டால் கல்லீரல் ஆரோக்கியமாக இருக்கும்.

The post ஆரோக்கியமான உணவுகள்: கண்டிப்பாக சாப்பிடவும்! appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™