Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


பசுமையாகும் கனடா

Posted: 08 Jun 2016 07:25 PM PDT

io

ioபருவநிலை மாற்றம் காணரமாக கனடா மற்றும் அலஸகாவின் நிலப் பகுதியில் மூன்றில் இரண்டு பகுதி பசுமையானதாக மாறும் என்றும் நாசா தெரிவித்துள்ளது.

குறித்த அந்த பிராந்தியங்களில் 1984ஆம் ஆண்டிலிருந்து, 2012ஆம் ஆண்டு வரையில் தாவரங்கள் வேகமாக வளர்ச்சியடைய ஆரம்பித்துள்ளதனை தங்களின் ஆய்வுகள் மூலம் கண்டறிந்துள்ளதாகவும் அது தெரிவித்துள்ளது.

தம்மால் சேகரிக்கப்பட்ட சுமர் 87,000 செய்மதி ஒளிப்படங்களை ஆராய்ந்துள்ள நிலையில் அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அத்துடன் நாசாவின் ஏப்ரல் மாத அறிக்கையில், பசுமையாக மாறிவரும் இடங்களில் குறிப்பாக கியூபெக் மற்றும் லேபர்டோர் பகுதிகளில் அதிவேகமான தாவர வளர்ச்சியை அவதானிக்க முடிந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

The post பசுமையாகும் கனடா appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

வாகன விபத்தில் மூதாட்டி ஒருவர் படுகாயம்

Posted: 08 Jun 2016 06:23 PM PDT

k

kமிசிசாகாவில் உள்ள எரிபொருள் நிலையத்திற்கு அருகில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் மூதாட்டி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

ஆபத்தான காயங்களுக்கு ஆளான அவர் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Erin Mills Parkway மற்றும் Fowler Drive பகுதியில் இன்று மாலை 4.30 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

குறித்த மூதாட்டியும், அவரின் கணவரும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனமே மோதி விபத்துள்ளாகியுள்ளானதாகவும், கணவரே வாகனத்தை செலுத்திச் சென்றதாகவும் கூறப்படுகிறது.

விபத்துக்குள்ளான மூதாட்டிக்கு 76 வயது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாகன விபத்தில் மூதாட்டி ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

பிரம்டனில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம்

Posted: 08 Jun 2016 08:33 AM PDT

89

89பிரம்டன் பகுதியில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் ஒன்ராறியோ மாகாண சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த இந்த சம்பவத்தில் காவல்த்துறையினரும் தொடர்புபட்டுள்ளதாக கூறப்படும் நிலையிலேயே ஒன்ராறியோ சிறப்பு புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளில் ஈடபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இன்று அதிகாலை ஒரு மணியளவில் பிரம்டனின் North Park Drive மற்றும் Newhaven Manor பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

குறித்த அந்த பகுதியில் ஏற்பட்ட குழப்பநிலைமை காரணமாக தாம் அங்கு அழைக்கப்பட்டதாக தெரிவித்துள்ள பீல் பிராந்திய காவல்த்துறையினர், அங்கு ஆண் ஒருவருடன் ஏற்பட்ட தகராறு துப்பாக்கிச் சூட்டில் முடிவடைந்துள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர்.

அந்த துப்பாக்கிச் சூட்டில் ஆண் நபர் ஒருவர் காயமடைந்ததை அடுத்து, அவர் உடனடியாகவே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.

The post பிரம்டனில் துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

இலகுரக இராணுவ தளபாட விநியோகம் – ஸ்டீஃபான் டியோன் விளக்கம்

Posted: 08 Jun 2016 08:30 AM PDT

ui

uiசவூதி அரேபியாவுக்கு இலகுரக இராணுவ தளபாடங்களை விநியோகிப்பது குறித்த வர்த்தகத்தினை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இன்னமும் உள்ளதாக வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் தெரிவித்துள்ளார்.

சவூதி அரேபியாவுக்கு இலகுரக இராணுவத் தளபாடங்களை விநியோகம் செய்வதற்கான ஒப்பந்தங்கள் ஏற்கனவே முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

எனினும் தற்போதைய புதிய லிபரல் அரசாங்கம் இந்த விநியோக நடவடிக்கைகளை இடைநிறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையிலேயே சவூதி அரேபியாவுக்கு இலகுரக இராணுவ தளபாடங்களை விநியோகிப்பது குறித்த வர்த்தகத்தினை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் இன்னமும் உள்ளதாகவும் தற்போதைய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் தெரிவித்துள்ளார்.

நாடுகளுக்கு இராணுவ பொருட்களை விநியோகிக்க கூடாது என்ற கட்டுப்பாடுகள் எவையும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினம் கனேடிய நிறுவனங்கள் விற்பனை செய்யும் குறித்த அந்த ஆயுதங்கள் வெளிநாடுகளில் மனித உரிமைகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுவிடக்கூடாது என்பதே தமது கரிசனை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஒவ்வொரு முறையும் இராணுவ விநியோக ஒப்பந்தங்களை மீறும் போது அதற்கான தண்டனையும் இருக்கும் என்ற போதிலும், கனடா அனைத்துவித ஆயுத விநியோக கட்டுப்பாட்டு ஒப்பந்தங்களையும் கடைப்பிடித்தே வருகிறது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

The post இலகுரக இராணுவ தளபாட விநியோகம் – ஸ்டீஃபான் டியோன் விளக்கம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ

Posted: 08 Jun 2016 07:10 AM PDT

download (1)

download (1)தற்போது நாம் உண்ணும் உணவில் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைப்பதில்லை.

இரசாயனம் கலந்த உணவையே சாப்பிட நேரிடுகிறது. மேலும், போதிய உடற்பயிற்சியின்மை, சில நேரங்களில் அதிக வேலைப்பளு, சரியான நேரத்திற்கு உணவருந்தாமை போன்றவையால் உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டு செயலிழந்து சர்க்கரை நோயை உண்டாக்குகின்றன.

இந்த நோயை வாழைப்பூ சாப்பிடுவதன் மூலம் கட்டுப்படுத்தலாம்.

சர்க்கரை நோய்

சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் வாழைப்பூவை சுத்தம் செய்து சிறிது சிறிதாக நறுக்கி அதனுடன் சின்ன வெங்காயம், பூண்டு, மிளகு சேர்த்து பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் கணையம் வலுப்பெற்று உடலுக்குத் தேவையான இன்சுலினைச் சுரக்கச் செய்யும், இதனால் சர்க்கரை நோய் கட்டுப்படும்.

உடல் சூடு

இதேபோன்று உடல் சூடு உள்ளவர்கள் வாழைப்பூவுடன் பாசிப்பருப்பு சேர்த்து கடைந்து நெய் சேர்த்து வாரம் இருமுறை உண்டுவந்தால் உடல் சூடு குறையும்.

மாதவிலக்கு

மாதவிலக்குக் காலங்களில் பெண்களுக்கு அதிக உதிரப்போக்கு உண்டாகும். அவர்கள் வாழைப்பூவின் உள்ளே இருக்கும் வெண்மையான பாகத்தை பாதியளவு எடுத்து நசுக்கி சாறு பிழிந்து சிறிது மிளகுத்தூள் சேர்த்து கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு கலந்து அருந்தி வந்தால் உதிரப்போக்கு கட்டுப்படும். உடல் அசதி, வயிற்று வலி குறையும்.

கை, கால் எரிச்சல்

கை கால் எரிச்சலால் அவதிப்படுபவர்கள் வாழைப்பூவை இடித்து அதனுடன் சிற்றாமணக்கு எண்ணெய் சேர்த்து வதக்கி கை கால் எரிச்சல் உள்ள பகுதிகளில் ஒற்றடம் கொடுத்து வந்தால் கை கால் எரிச்சல் குணமாகும்.

மலட்டுத்தன்மை

வாழைப்பூவை அடிக்கடி உணவில் சேர்த்து வந்தால் மலட்டுத்தன்மை நீங்கி குழந்தை பாக்கியம் பெறுவர்.

The post சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வாழைப்பூ appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™