Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


முள்ளங்கியின் முத்தான நன்மைகள்

Posted: 06 Jun 2016 08:25 AM PDT

images (1)

images (1)முள்ளங்கி சாப்பிடுவதால் நாம் ஆரோக்கியமாய் இருப்பது மட்டுமின்றி உடல்நலம் பற்றிய பயம் இல்லாமலும் வாழலாம், முள்ளங்கியில் இரண்டு வகை உண்டு.

ஒன்று சிகப்பு முள்ளங்கி, மற்றொன்று வெள்ளை முள்ளங்கி

முள்ளங்கியில் உள்ள சத்துக்கள்

கலோரி- 17 கிராம்
நார்ச்சத்து- 2 கிராம்
வைட்டமின் சி - 15 மில்லி கிராம்
கால்சியம்- 35 மில்லி கிராம்
பாஸ்பரஸ்- 22 மில்லி கிராம்
காய்கறிளிலேயே வைட்டமின் சி, கால்சியம், பாஸ்பரஸ் அதிகளவில் இருப்பது முள்ளங்கியில் தான்.

முள்ளங்கியைவிட அதன் கீரையில் ஏராளமான சத்துக்கள் உள்ளன.

100 கிராம் கீரையில்

கலோரி- 41 கிராம்
புரதம்- 3.8 கிராம்
நார்ச்சத்து- 1 கிராம்
வைட்டமின்சி - 81 மில்லி கிராம்
கால்சியம்- 400 மில்லி கிராம்
பாஸ்பரஸ்- 59 மில்லி கிராம்
முள்ளங்கியின் மகத்துவங்கள்

முள்ளங்கியை உணவில் அதிகம் சேர்ப்பதால், உடலில் தாதுபலம் அதிகரிக்கும்.
சிறுநீரகத்தில் சேரும் கற்களைக் கரைத்து விடும்.

நரம்புத் தளர்ச்சியைப் போக்கி உடலுக்கு அதிக சக்தியை கொடுக்கும்.

வயிற்று வலி, வயிற்று எரிச்சல் ஏற்பட்டால் முள்ளங்கியைச் சாப்பிட்டால் குணமாகி விடும்.

முள்ளங்கியை அவ்வப்போது சமைத்து உண்டு வந்தால், தொண்டை சம்பந்தப்பட்ட வியாதிகள் நீங்கி விடும்.

முள்ளங்கியைத் தட்டி சாறெடுத்து அதிகாலையில் வெறும் வயிற்றில் குடித்துவந்தால் கல் அடைப்பு வியாதி குணமாகிவிடும்.

முள்ளங்கியில் உள்ள பைட்டோ நியூட்ரியன்ட்ஸ்(phytonutrients) தாதுச் சத்துக்கள், வைட்டமின்கள் போன்றவை புற்றுநோய்க்கு எதிராகப் போராடக்கூடியவையாக இருக்கின்றன.

8.50 முதல்100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து வர சிறுநீர் தாராளமாய் இறங்கும்.

முள்ளங்கி சாறு- செய்முறை

முள்ளங்கியை எடுத்து சுத்தம் செய்து சிறிதாக வெட்டி வைத்துக் கொள்ளுங்கள்.

ஒரு பாத்திரத்தில் வெட்டி வைத்துள்ள முள்ளங்கியை போட்டு நீர் விட்டு கொதிக்க வைத்து அதில் மிளகு, சீரகம் ஒரு சிட்டிகையளவு சேர்த்து வடிகட்டி ஒரு டம்ளர் அளவு முள்ளங்கி சாறு சாப்பிடலாம். தேவைப்படுவோர் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.

The post முள்ளங்கியின் முத்தான நன்மைகள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

கருணைக்கொலை தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – பீட்டர் ஹொக்

Posted: 06 Jun 2016 08:17 AM PDT

uio

uioகருணைக்கொலை தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது என பீட்டர் ஹொக் தெரிவித்துள்ளார்.

பீட்டர் ஹொக் கனேடிய அரசியலமைப்பு தொட்பிலான புத்தகத்தினை எழுதியுள்ளார் என்பதுடன், இவரது புத்தகங்களி்ல் காணப்படும் பல்வேறு விடயங்களை கனேடிய உச்ச நீதிமன்றமே வழக்கு விசாரணைகளின் போது பெருமளவான தருணங்களில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருணைக் கொலைக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டமூலம் ஒன்றை மத்திய லிபரல் அரசாங்கம் கடந்த செவ்வாய்கிழமை வழங்கியிருந்ததை அடுத்து, தற்போது இந்த விவகாரம் தொடர்பிலான சட்டம் மூலம் செனற் சபையின் இறுதி அங்கீகாரத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.uio

இந்த நிலையிலேயே C-14 எனப்படும் குறித்த இந்த கருணைக்கொலைச் சட்டமானது, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட முக்கிய நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என பீட்டர் ஹொக் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இன்று செனட்டின் சட்ட மற்றும் அரசியலமைப்பு விவகார குழுவின் முன்னிலையில் பீட்டர் ஹொக் முன்னிலையாகவுள்ளதுடன், இந்த சட்டமூலம் நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என்பது தொடர்பில் அவர் விளக்கமளிக்கவும் உள்ளார்.

மத்திய லிபரல் அரசாங்கத்தினால் பரிந்துரைக்கப்பட்ட கருணைக்கொலை தொடர்பான சட்டமூலம் தொடர்பில் புதிய விதிமுறைகளை அறிவிக்குமாறு மத்திய அரசுக்கு கனேடிய உச்ச நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு நேற்று நள்ளிரவுடன் முடிவடைந்துள்ள நிலையில், இன்று அவர் விளக்கமளிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

The post கருணைக்கொலை தொடர்பான சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது – பீட்டர் ஹொக் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

மிசிசாகாவின் நெடுஞ்சாலை 427 மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது

Posted: 06 Jun 2016 07:59 AM PDT

hj

hjமிசிசாகா பகுதியில் நெடுஞ்சாலை 427 இல் வாகனம் ஒன்று தீபற்றிக்கொண்ட சம்பவத்தை அடுத்து மூடப்பட்ட வடக்கு நோக்கிய தடங்களில் மூன்று, போக்குவரத்திற்காக மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளன.

அதேவேளை மிசிசாகா பகுதியில் நெடுஞ்சாலை 427 இன் வடக்கு நோக்கிய முதலாவது தடம் இன்னமும் மூடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Rexdale Boulevard பகுதியில் இன்று அதிகாலை பராவூர்தி ஒன்று தீ பற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது.hj

எனினும் இந்த சம்பவத்தின் போது யாரும் காயங்களுக்கு ஆளானார்களா என்பது தொடர்பில் காவல்த்துறையினர் தகவல்கள் எதனையும் வெளியிடவில்லை.

The post மிசிசாகாவின் நெடுஞ்சாலை 427 மீண்டும் திறந்துவிடப்பட்டுள்ளது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் விபத்து: ஐவர் காயம்

Posted: 06 Jun 2016 07:36 AM PDT

gh

ghஸ்காபரோ பகுதியில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் ஐந்து போர் காயமடைந்துள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்க்பபட்டுள்ளனர்.

நேற்று நள்ளிரவுக்கு சற்று பின்னராக நெடுஞ்சாலை 401 மற்றும் மோர்னிங்சைட் அவனியூ பகுதியில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

வீதியால் சென்றுகொண்டிருந்த வாகனம் ஒன்று ஸ்காபரோ பகுதியில் கவிழந்து விபத்துக்குள்ளானதாகவும், அதில் பயணித்த ஐவரே காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எனினும் இந்த விபத்தில் காயத்திற்கு உள்ளானவர்களுக்கு உயிராபத்து இல்லை என்று ரொரன்ரோ அவசர மருத்துவப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் இன்னமும் கண்டறியப்படவில்லை.

விபத்துத் தொடர்பான விசாரணைகளை காவல்த்துறையினர் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.

The post ஸ்காபரோவில் விபத்து: ஐவர் காயம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™