Tamil Star |
- கொழுப்பு குறைவாக உள்ள காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள்
- கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி!
- Blake Street பகுதியில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம்
- துப்பாக்கிச் சன்னம் பாய்ந்ததில் 10 வயது சிறுவன் காயம்
- சீனாவின் போக்குக் குறித்து கனடா அதிருப்பதி
- ஈட்டோபிக்கோ துப்பாக்கிச் சூடு: இருவர் படுகாயம்
| கொழுப்பு குறைவாக உள்ள காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள் Posted: 04 Jun 2016 10:20 PM PDT
100 கிராம் புடலங்காயில் உள்ள சத்துக்கள் ஆற்றல் - 86.2 கலோரி கொழுப்பு - 3.9 கிராம் சோடியம் - 33 மி.கி பொட்டாசியம் -359.1 மி.கி நார்ச்சத்து - 0.6 கிராம் புரதம் - 2 கிராம் விட்டமின் ஏ 9.8 % விட்டமின் பி6 -11.3 % விட்டமின் சி -30.6% கால்சியம் - 5.1% இரும்புச்சத்து - 5.7% மருத்துவ பயன்கள் டைப் 2 நீரிழிவு உள்ளவர்களுக்கு இது மிகச் சிறந்தது. எடை அதிகரிக்காமலும் தேவையான ஊட்டச்சத்துகள் கிடைக்க உதவுகிறது. காய்ச்சல் உள்ளவர்கள் புடலங்காயைக் கொதிக்க வைத்த டிகாக்ஷனை கொடுத்தால் ஒரே இரவில் காய்ச்சல் தணிந்து, உடல்நலம் இயற்கையாக சீராகத் தொடங்கும். அதிக நீர்ச்சத்துள்ள காரணத்தினால், உடலுக்கு குளிர்ச்சியைக் கொடுக்கக் கூடியது இது. வெயில் நாட்களில் புடலங்காயை உண்பதன் மூலம் வெம்மையின் பாதிப்புகளில் இருந்து தப்பிக்கலாம். ஆலோபேஷியா எனப்படுகிற புழுவெட்டால் பாதிக்கப்பட்டு, முடியை இழப்போருக்கு புடலங்காய் இழந்த முடியை மீட்டுத் தரும். இதிலுள்ள அதிகப்படியான தாதுச்சத்துகள், வைட்டமின்கள் மற்றும் கரோட்டீன்கள் முடி மற்றும் சரும ஆரோக்கியத்தைக் காக்கக்கூடியவை. பொடுகைப் போக்கும் குணமும் இதற்கு உண்டு. குறிப்பு புடலங்காயின் விதைகளும் மருத்துவ குணம் வாய்ந்தவை என்றாலும் அவற்றை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் வயிற்றுப் போக்கு, வயிற்றுப் பொருமல், வாந்தி மற்றும் வயிற்று வலி உண்டாகலாம். புடலங்காயின் வேர்ப்பகுதிகளும் மருத்துவரின் ஆலோசனையின் பேரில் அளவோடு எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். கருவைப் பாதிக்கக் கூடும் என்பதால் கர்ப்பிணிப் பெண்கள், வேரைத் தவிர்ப்பது பாதுகாப்பானது. The post கொழுப்பு குறைவாக உள்ள காய்: கண்டிப்பாக சாப்பிடுங்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி! Posted: 04 Jun 2016 10:17 PM PDT
இன்றைய துரித உணவக கால கட்டத்தில் பரவலாக பெரும்பாலானோருக்கு சர்க்கரை நோய் பாதிப்பு காணப்படுகிறது. தனியா அல்லது மல்லிப் பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். மல்லிப்பொடியில் 8% நார்ச்சத்து மற்றும் 2.9% கால்ஷியம் அடங்கியுள்ளது. மிகவும் ஆபத்தான சால்மோனெல்லா என்ற பாக்டீரியாவை அழிக்க மல்லி (தனியா) பயன்படுகிறது என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. சால்மோனெல்லா பாக்டீரியா உணவு சம்பந்தமான நோய்களை உண்டாக்கும். நமது அன்றாட உணவுகளில் மல்லி (தனியா) போன்ற ஆரோக்கியமான மசாலாக்களை சேர்த்தால் இவ்வகை நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கலாம். மல்லியில் பைடோந்யூட்ரியெண்ட் குணங்கள் உள்ளதால் தான் அது நமக்கு பல மருத்துவ பயன்களை அளிக்கிறது. உடல்நல பலன்களை தவிர மல்லிப் பொடி பருக்களை நீக்கவும் பெரிதும் உதவுகிறது. மல்லிப் பொடியையும் மஞ்சளையும் அல்லது மல்லி சாற்றை பயன்படுத்தி பருக்களை பெரிதளவில் குறைக்கலாம். மல்லிப் பொடி கொலஸ்ட்ராலை வெகுவாக குறைக்கும். மல்லியை பொடி அல்லது கொட்டை வடிவாக உட்கொண்டால் அது உங்கள் உடலில் உள்ள கெட்ட கொலஸ்ட்ராலை வெகுவாக குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை அதிகரிக்கும் என்று ஆய்வுகள் கூறுகிறது. மாதவிடாயின் போது இரத்த கசிவு அதிகமாக இருந்தால் மல்லிப் பொடியை அல்லது மல்லி விதையை வெந்நீரில் போட்டு உட்கொள்ளுங்கள். மேலும் மாதவிடாய் காலங்களில் வரும் வயிற்று வலியை போக்கும் சக்தி கொண்டது மல்லிப் பொடி. மல்லி எந்த வடிவத்தில் (இலை, விதை, பொடி) இருந்தாலும் சரி, அதில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடண்ட் குணங்கள் உடலில் உள்ள இயக்க உறுப்புகளுக்கு எதிராக போராடும் என்பது குறிப்பிடத்தக்கது. The post கெட்ட கொலஸ்ட்ராலை குறைக்கும் தனியா பொடி! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Blake Street பகுதியில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம் Posted: 04 Jun 2016 07:43 PM PDT
படுகாயம் அடைந்த அந்த நபர் 20வயதுகளை மதிக்க கூடியவர் என தெரிவிக்கப்படுகிறது. இன்று சனிக்கிழமை பிற்பகல் அளவில் ஸ்காபரோவில இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. Pharmacy Avenue மற்றும் Janet Boulevard பகுதியில் வைத்து நேற்று மாலை 4.30 மணியளவில் அவர் வாகனத்தால் மோதப்பட்டதாக கூறப்படுகிறது. அவர் மோசமான காயத்திற்கு ஆளான போதிலும், அவருக்கு உயிராபத்து இல்லை என அவசர மருத்துவ பிரிவு தெரிவித்துள்ளது. The post Blake Street பகுதியில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| துப்பாக்கிச் சன்னம் பாய்ந்ததில் 10 வயது சிறுவன் காயம் Posted: 04 Jun 2016 01:37 PM PDT
Jones அவனியூ மற்றும் Gerrard Street பகுதியில் Blake Street இல் அமைந்துள்ள வீடு ஒன்றில் நேற்று இரவு 11.40 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெறறதாக தெரிவிக்கப்படுகிறது. சம்பவத்தின் போது அங்கிருந்த சிறுவனின் ஒன்றுவிட்ட சகோதரியான 13 வயது சிறுமி இது தொடர்பில் விபரிக்கையில், குறித்த 10 வயது சகோதரன் தமது தாயாரின் அறையில் உறங்கிக்கொண்டிருந்த வேளை வீட்டின் பின்புற யன்னல் ஊடாக பாய்ந்த துப்பாக்கிச் சன்னம் அவர் மீது பட்டதாக தெரிவித்துள்ளார். தோல்மூட்டில் அந்த துப்பாக்கிச் சன்னம் பாய்ந்து காயத்திற்கு உள்ளான நிலையில் குறித்த 10 வயது சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். இந்த சம்பவம் தெர்ர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இன்று பின்னேரம் தெரிவித்திருந்த காவல்த்துறை அதிகாரி ஒருவர், தற்போதைக்கு சந்தேக நபர்கள் என யாரும் இனம்காணப்படவில்லை என தெரிவித்துள்ளார். அதேவேளை இது தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் தங்களிடம் தெரிவிக்க முன்வருமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார் இதேவேளை கடந்த 24 மணித்தியாளத்தில் நகரில் இடம்பெற்றுள்ள மூன்றாவது துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இது என காவல்த்துறையின் குற்றத் தடுப்புப் பிரிவைச் சோந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். The post துப்பாக்கிச் சன்னம் பாய்ந்ததில் 10 வயது சிறுவன் காயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| சீனாவின் போக்குக் குறித்து கனடா அதிருப்பதி Posted: 04 Jun 2016 12:26 PM PDT
கடந்த புதன்கிழமை ஒட்டாவாவில் வைத்து சீன வெளியுறவு அமைச்சர் வாங் ஜீயிடம் கனேடிய ஊடகவியலாளர் ஒருவர் நாட்டின் மனித உரிமைகள் நிலவரம் குறித்து கேள்வி எழுப்பிருந்தார். ஆனால் அவ்வாறு கேள்வி எழுப்பிய கனேடிய ஊடகவியலாளர் தொடர்பில் சீன வெளியுறவு அமைச்சர் காட்டமான கருத்துக்களை வெளியிட்டிருந்தமை விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளியிட்டுள்ள கனோடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ, மனித உரிமைகள் தொடர்பில் சீனாவின் போக்குக் குறித்து தமது அதிருப்தியை வெளியிட்டுள்ளதுடன், ஊடகவியலாளர் ஒருவருக்கு ஊடக சுதந்திரம் என்பது மிகவும் அவசியம் என குறிப்பிட்டுள்ளார். கனேடிய ஊடகவியலாளர்கள் நடாத்தப்பட்ட விதம் குறித்த அதிருப்தியை கனேடிய வெளிவிவகார அமைச்சரும்,வெளியுறவுத் திணைக்கள அதிகாரிகளும் ஏற்கனவே சீன வெளியுறவு அமைச்சரிடமும், கனடாவுக்கான சீனத் தூதரிடமும் வெளியிட்டுள்ளதாகவும் பிரதமர் தகவல் வெளியிட்டுள்ளார். இந்த சம்பவம் மட்டுமல்லாது, சீனாவில் கனேடியர் ஒருவர் சிறைவைக்கப்பட்டுள்ளமை உள்ளிட்ட அனைத்துவித மனித உரிமைக்ள் விவகாரங்கள் தொடர்பிலும் சீனாமீது தொடர்ச்சியாக அழுத்தங்களைப் பிரயோகிக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். சீனா, கனடா ஆகிய இரு நாடுகலிடையேயும் தடைய்றற வர்த்தக உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொள்வது உள்ளிட்ட பொருளாதான உறவுகளைப் பலப்டுத்துவதற்கான முனைப்புகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், இந்த கருத்துக்கள் வெளியாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post சீனாவின் போக்குக் குறித்து கனடா அதிருப்பதி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஈட்டோபிக்கோ துப்பாக்கிச் சூடு: இருவர் படுகாயம் Posted: 04 Jun 2016 12:01 PM PDT
நேற்று மாலை 6 மணியளவில் Bloor Street மற்றும் Aukland வீதிப்பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றின் அருகே இந்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காமடைந்தவர்களுள் ஒருவர் உணவத்தின் அருகே வாகனத்தில் இருந்த போது சுடப்பட்டார் என்றும், எனினும் அந்த துப்பாக்கிச் சூட்டுக் காயத்துடன் அவர் Aukland வீதிவரை வாகனத்தினை செலுத்திச் சென்றிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தகவல் அறிந்து அந்த இடத்துக்கு விரைந்த காவல்த்துறையினர், அவரை மீட்டு அவசர மருத்துவப் பிரிவினர் வரும்வரை முதலுதவி வழங்கியதாகவும், பின்னர் அங்க விரைந்திருந்த அவசர மருத்துவப் பிரிவினர் உயிராபத்தான நிலையில் காணப்பட்ட அந்த இளைஞரை தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்துள்ளனர் என்றும் கூறப்படுகிறது. அந்த இளைஞன் சுமார் 20 வயது மதிக்கத்தக்கவர் என்றும் அவரின் காரினுள் இருந்து கைத்துப்பாக்கி ஒன்றினையும் காவல்த்துறையினர் மீட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை இந்த துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த மற்றைய நபர் சிகிச்சைக்காக மிசிசாகா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்த்துறையினர் தெரிவிக்கின்ற போதிலும், துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தின் போது அவரும் காரினுள் இருந்தாரா என்பது குறித்த விபரங்கள் உடனடியாக வெளியிடப்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்கள் பலரைத் தேடிவருவதாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் அவர்கள் எத்தனை பேர் என்றோ, சந்தேக நபர்கள் தொடர்பிலான ஏனைய விபரங்களையோ அவர்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. The post ஈட்டோபிக்கோ துப்பாக்கிச் சூடு: இருவர் படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

புடலங்காயில் ஆரோக்கிய வாழ்க்கைக்கு தேவையான சத்துக்கள் அடங்கியுள்ளதால் அதனை தவிர்க்காமல் சாப்பிடுவது நல்லது.
தனியா அல்லது மல்லிப் பொடியை உட்கொண்டால் அது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும் என்று பல ஆராய்ச்சிகள் கூறுகின்றன.
Blake Street பகுதியில் வாகனம் மோதி ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார். ஆபத்தான காயங்களுடன் அவதியுற்ற அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்குட்படுத்தப்பட்டுள்ளார்.
வீட்டின் யன்னல் ஊடாக பாய்ந்த துப்பாக்கிச் சன்னம் பட்டதில் சிறுவன் ஒருவர் காயமடைந்த சம்பவம் ஒன்று ரொரன்ரோவில் இடம்பெற்றுள்ளது.
மனித உரிமைகள் தொடர்பில் சீனாவின் போக்குக் குறித்து கனடா அதிருப்பதி வெளியிட்டுள்ளது.
ஈட்டோபிக்கோ பகுதியில் நேற்று மாலை துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் ஒன்று இடம்பெற்றதில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.