Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Bluffers Parkஇலிருந்து 2 சடலங்கள் மீட்பு

Posted: 13 Jun 2016 07:30 PM PDT

ghfy

ghfyரொரன்ரோ காவல்த்துறையின் கடற்படைப்பிரிவு வாவி ஒன்றில் இருந்து இரண்டு சடலங்களை மீட்டுள்ளனர்.

Bluffers Park இல் நேற்று ஞாயிற்றுக்கிழமை படகோட்டத்தில் ஈடுபட்டிருந்த இரண்டு நபர்கள் காணாமல் போயிருந்த நிலையில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இந்த சடலங்கள் இரண்டும் இன்று காலை 7.15மணியளவில் மீட்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

உயிரிழந்த இருவரும் கடைசியாக நேற்று காலை 8 மணியளவில் Bluffers Parkஇல் காணப்பட்டனர் என்றும் கூறப்படுகிறது.

அத்துடன் அவர்கள் இருவரும் முதியவர்கள் என கருதும் காவல்த்துறையினர், அவர்களில் ஒருவரான 72 வயது நபர் அந்த பகுதியில் உள்ள படகு வீட்டில் வசித்து வந்தவர் என நம்புவதாகவும், அவர் ஐம்பது வயதான தமது நண்பருடன் இருந்து வந்ததாக கூறப்படுவதாகவும் தகவல் வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை நேற்று பலத்த காற்று வீசியமையால் நீரோட்டம் கடுமையாக இருந்ததாகவும், அவர்கள் பயணித்த 14 அடி நீளமான படகு கவிழ்ந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post Bluffers Parkஇலிருந்து 2 சடலங்கள் மீட்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

Walmartஇன் குற்றச்சாட்டை வீசா(Visa) நிறுவனம் நிராகரிப்பு

Posted: 13 Jun 2016 06:43 AM PDT

jk

jkWalmart Canada" முன்வைத்துள்ள குற்றச்சாட்டினை "வீசா"(Visa) நிறுவனம் நிராகரித்துள்ளது.

முன்னதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்த சில்லறை வணிக நிறுவனமான "Walmart Canada", அதில் வாடிக்கையாளர்களின் கொள்வனவுகளுக்காக வீசா நிறுவனம் அறவிடும் கட்டணம் ஏற்றுக்கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக இருப்பதாக தெரிவித்துள்ளது.

அதனால் முதல் கட்டமாக ஒன்ராறியோவின் Thunder Bayயில் அமைந்துள்ள Walmart வணிக மையத்தில் எதிர்வரும் யூலை மாதம் 18ஆம் நாளில் இருந்து வாடிக்கையாளர்கள் வீசா கடனட்டைகளை பயன்படுத்த முடியாது என்றும், அதனைத் தொடர்ந்துவரும் நாட்களில் கனடா முழுவதிலும் உள்ள Walmart நிலையங்களுக்கு இந்த தடை விரிவாக்கப்படும் எனவும் அந்த நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.jk

இந்த நிலையிலேயே Walmartஇன் இந்த குற்றச்சாட்டினை நிராகரித்துள்ள "வீசா"(Visa) நிறுவனம், கனடாவில் மிகக்குறைந்த அளவு கட்டணத்தினை அறவிடும் நிதி நிறுவனங்களில் தமது நிறுவனமும் ஒன்று என்றும் விளக்கமளித்துள்ளது.

வாடிக்கையாளர்களின் நலனைக் காட்டிலும் தனது பொருளாதார நலன்களை முன்னிலைப்படுத்தியே Walmart இந்த முடிவினை எடுத்துள்ளது என்றும் "வீசா" நிறுவனம் விமர்சனம் வெளியிட்டுள்ளது.

 

The post Walmartஇன் குற்றச்சாட்டை வீசா(Visa) நிறுவனம் நிராகரிப்பு appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஓர்லான்டோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரொரன்ரோவில் அஞ்சலி

Posted: 13 Jun 2016 06:15 AM PDT

jh

jhஅமெரிக்காவின் ஃபுளோரிடா மாநிலத்தில் உள்ள இரவு விடுதி ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டவர்களை நினைவுகூரும் நிகழ்வொன்று ஒன்ராறியோவில் நேற்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த நினைவுகூரல் நிகழ்வின் ஒரு பகுதியாக Church Streetஇல் அமைந்துள்ள Barbara Hall Parkஇல் நேற்று இரவு எட்டு மணியளவில் மெழுகுவர்த்தி பேரணி ஒன்றும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

அந்த பேரணியில் அரசியல்வாதிகள், சமூகத் தலைவர்கள், பொதுமக்கள் என 1,600ற்கும் அதிகமானோர் கலந்துகொண்டனர்.

நிகழ்வில் கலந்து கொண்டிருந்த ஒன்ராறியோ முதல்வர் கத்தலின் வின் உரையாற்றிய போது, ஓர்லான்டோவில் இடம்பெற்ற சம்பவம் நம் அனைவருக்கும் நேர்ந்த சம்பவமாகவே கருதப்படவேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஓர்லான்டோவில் (Orlando) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் இத்தனை பேர் கொல்லப்பட்டதை அறிந்து தான் அதிர்ச்சியும் கவலையும் அடைந்ததாக பிரதமர் ஜஸ்டின் ரூடோ தெரிவித்துள்ளார்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் இடம்பெற்றுவரும் நிலையில், தகவல்கள் முழுமையாக உறுதிப்படுத்தப்படவில்லை என்ற போதிலும், இந்த உள்ளூர் பயங்கரவாத நடவடிக்கையில் சுமார் ஐம்பது பேர் வரையில் கொல்லப்பட்டுள்ளமை சாதாரண விடயம் அல்ல எனவும் அவர் கூறியுள்ளார்.

சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் அனைவரது குடும்பத்தார், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களையும் தெரிவித்துள்ள கனேடியப் பிரதமர், காயமடைந்தோர் விரைவில் குணமடைய தாம் பிரார்தனை செய்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை இவ்வாறான வெறுப்பு நிரம்பிய நடவடிக்கைகள் உலகில் எங்கும் இடம்பெறக்கூடாது என ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி தெரிவித்துள்ளார்.

எனினும் இவை அனைத்தையும் அன்பினால் வெற்றிகொள்ள முடியும் என்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

The post ஓர்லான்டோ துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு ரொரன்ரோவில் அஞ்சலி appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™