Tamil News | Online Tamil News | TamilNews| Tamil Portal | TamilNews | Tamil News





Tamil Star

Tamil Star


Hagersvilleஇற்கு அருகில் விபத்து

Posted: 03 Jun 2016 07:12 PM PDT

oji

ojiHagersvilleஇற்கு அருகில் இன்று காலை பிக்கப் ரக் வாகனம் ஒன்றும் சிற்றூர்தி ஒன்றும் மோதி விபத்துள்ளாகியுள்ளன.

Concession 12 மற்றும் Sandusk வீதிக்க அருகில் இடம்பெற்ற விபத்தில், சிற்றூர்தியில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

காயமடைந்த அந்த இருவரில் சிற்றூர்த்தியைச் செலுத்திச் சென்றவர் பெண் நபர் என்றும், அவருக்கு 52 வயதெனவும் தெரிவித்துள்ள காவல்த்துறையினர், காயமடைந்த மற்றைய நபரும் பெண் நபர் என்றும், அவரின் வயது 20 எனவும் கூறியுள்ளனர்.

விபத்துத் தொடர்பான முழுமையான தகவல்கள் இன்னமும் வெளியாகவில்லை.

எனினும் விபத்துத் தொடர்பில் காவல்த்துறையினா விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

The post Hagersvilleஇற்கு அருகில் விபத்து appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஸ்காபரோவில் பாடசாலை ஒன்றின் அருகே கத்திக்குத்துச் சம்பவம்

Posted: 03 Jun 2016 02:21 PM PDT

l

lஸ்காபரோவில் பாடசாலை ஒன்றின் அருகே கத்திக்குத்துச் சம்பவம் ஒன்ற இடம்பெற்றுள்ளது.

இதில் 18 வயது இளைஞர் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

காயமடைந்த இளைஞருக்கு சத்திரசிகிக்சை மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகின்ற போதிலும், அவர் தொடர்பிலான மேலதிக விபரங்கள் வெளியிடப்படவில்லை.

மிட்லான்ட் அவனியூ மற்றும வுல்ஃப் அவனியூ பகுதியில் அமைந்துள்ள ஸ்காபரோ மாற்று கற்கை நிலையப் பகுதியில் நேற்று முற்பகல் 11 மணியளவில இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

பாடசாலையின் பின்பகுதியில் உள்ள தொடரூந்து பாதையிலேயே இந்தச் சம்பவம் இடம்பெற்றதாக தெரிவித்துள்ள பாடசாலையின் அதிபர் கத்திக்குத்துக்கு இலக்கான இளைஞர் காயங்களுடன் பாடசாலைக்குள் வந்து உதவி கோரியதாகவும், அதனைத் தொடர்ந்து தாம் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாகவும் விபரித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பான விசாரணைகளில் ஈடுபட்டுள்ள காவல்த்துறையினர், அந்த பகுதி குடியிருப்புகளில் தேடுதல்களை மேற்கொண்டதுடன், 18இலிருந்து 20 வயது மதிக்கத்தக்க கறுப்பின இளைஞர் ஒருவரை தேடிவருவதாக தெரிவித்துள்ளனர்.

The post ஸ்காபரோவில் பாடசாலை ஒன்றின் அருகே கத்திக்குத்துச் சம்பவம் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் 50ற்கும் அதிகமானோர் கைது

Posted: 03 Jun 2016 01:19 PM PDT

k

kகாவல்த்துறையினர் மேற்கொண்ட திடீர் சுற்றிவளைப்பு தேடுதல் நடவடிக்கைகளில் 50ற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ரொரன்ரோ பெரும்பாகம் மற்றும் மொன்றியல் ஆகிய பகுதிகளில் நேற்று காலையில் இந்த கைது நடவடிக்கைகள் இடம்பெற்றுள்ளன.

42 தேடுதல் உத்தரவுளின் அடிப்படையில் காவல்த்துறையினர் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ரொரன்ரோவில் இடம்பெற்ற இரண்டு படுகொலைச் சம்பவங்கள் தொடர்பிலேயே இந்த நடவடிக்கை முன்னேடுக்கப்பட்டதாக காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.

அத்துடன் மொன்றியல் பிராந்தியத்திலும் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டதாகவும், மொன்றியல் காவல்த்துறையினரின் அனுசரணையுடன் அவை மேற்கொள்ளப்பட்டதாகவம் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

பொதுமக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும் ரொரன்ரோ காவல்த்துறை அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

The post திடீர் தேடுதல் நடவடிக்கைகளில் 50ற்கும் அதிகமானோர் கைது appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now

ஆர்வத்துடன் சொந்த வீடுகளுக்கு திரும்பும் ஃபோர்ட் மக்முரே மக்கள்

Posted: 03 Jun 2016 12:29 PM PDT

ui

uiஅல்பேர்ட்டாவின் ஃபோர்ட் மக்முரேயில் ஏற்பட்ட காட்டுத்தீயினால் இடம்பெயர்ந்த மக்களில் சுமார் 20,000 பேர் தமது சொந்த இடங்களுக்கு நேற்று திரும்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இடம்பெயர்ந்த மக்கள் இந்த மாதத்தின் முதலாம் திகதியில் இருந்து நான்காம் திகதி வரையில் கட்டம் கட்டமாக தங்கள் சொந்த வீடுகளுக்கு செல்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ள நிலையில் நேற்றைய நாளில் மாத்திரம் இந்த எண்ணிக்கையான மக்கள் சொந்த வீடுகளுக்கு திரும்பியுள்ளனர்.

ஃபோர்ட் மக்முரேயிலிருந்து சுமார் 80,000 பேர் வரையில் இடம்பெயர்ந்திருந்த நிலையில், பார்சன்ஸ் கிரீக், ஸ்டோன் கிரீக், ரிம்பர்லியா, ஈகிள் ரிட்ஜ், டிக்கின்ஸ்ஃபீல்ட் ஆகிய இடங்களை உள்ளடக்கி சுமார் 40,000 குடியிருப்பாளர்கள் நேற்று வீடு திரும்ப அனுமதிக்கப்பட்டிருந்தனர்.ui

அந்த பகுதி மக்கள் மிகுந்த ஆவலுடனும், எதிர்பார்ப்புடனும் தமது செந்த இடங்களுக்கு நேற்று காலையிலிருந்தே திரும்பிச் செல்வதை அவதானிக்க முடிந்தத போதிலும், பெரும்பாலான மக்கள் தமது வீடுகளை மறுசீரமைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இதேவேளை ஃபோர்ட் மக்முரேயில் சுமார் ஆயிரம் வீடுகளுக்கான நீர், மின் வினியோகங்கள் சீர் செய்யப்பட்டுள்ளதாகவும், அங்குள்ள உள்ளூர் வைத்தியசாலை மட்டுப்படுத்தப்பட்ட சேவைகளுடன் மீள திறக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

The post ஆர்வத்துடன் சொந்த வீடுகளுக்கு திரும்பும் ஃபோர்ட் மக்முரே மக்கள் appeared first on Tamil.com.

This posting includes an audio/video/photo media file: Download Now



Post Comment


Copyright 2012 Ujiladevi NEWS™ All rights reserved Designed by Ujiladevi NEWS™