Tamil Star |
- 25 வயது பெண்ணின் சடலம் மீட்பு: ஒருவர் கைது
- அடுத்த வாரம் கனடாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர்
- கவலை அடைந்துள்ள பிரித்தானியா வாழ் கனேடியர்கள்
- நெடுஞ்சாலை 400இல் விபத்து – குறைந்தது ஐவர் பலி
| 25 வயது பெண்ணின் சடலம் மீட்பு: ஒருவர் கைது Posted: 25 Jun 2016 08:47 PM PDT
இது தொடர்பில் டூர்ஹாம் காவல்த்துறையினர் தகவல் வெளியிடுகையில், நபர் ஒருவர் இன்று சனிக்கிழமை காலையில் காவல் நிலையத்திற்கு வந்து தமது காதலிக்கு ஏதோ நடந்திருப்பதாக முறையிட்டதாக தெரிவித்துள்ளனர். அத்துடன் 25 வயதான பெண் ஒருவரின் சடலம் ஒன்றையும் தாம் வீடு ஒன்றி இருந்து கண்டு பிடித்ததாகவும் அவர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர். அதேவேளை காவல்த்துறையினரிடம் வந்து முறையிட்ட குறித்த நபர் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக மாத்திரம் குறிப்பிட்டுள்ள காவல்த்துறையினர், குறித்த அந்த நபருக்கு எதிராக குற்றம் சாட்டப்பட்டதா என்பது தொடர்பில் எதனையும் கூறவில்லை. எனினும் இது தொடர்பில் வேறு சந்தேக நபர்களை தாம் தேடவில்லை என காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். The post 25 வயது பெண்ணின் சடலம் மீட்பு: ஒருவர் கைது appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அடுத்த வாரம் கனடாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் Posted: 25 Jun 2016 12:39 PM PDT
வட அமெரிக்க நாடுகளின் தலைவர்களின் மாநாடு ஒன்று கனடாவில் அடுத்த வாரம் நடைபெறவுள்ள நிலையில், குறித்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அமெரிக்க அதிபர் கனடாவிற்கு வருகை தரவுள்ளார். அத்துடன் எதிர்வரும் 29ஆம் நாள் புதன்கிழமை கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் செனட் சபையினரின் கூட்டுக் கூட்டத்திலும் அவர் உரை நிகழ்த்தவுள்ளார் என்றும், அவ்வாறு அவர் உரையாற்றுவது சிறப்பான ஒரு முக்கிய நிகழ்வு எனவும் கருதப்படுகிறது. கடந்த 1995ஆம் ஆண்டில் அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிங்டன், கனேடிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனற் சபையினர் அடங்கிய கூட்டு கூட்டத்தில் உரையாற்றியுள்ளார். பில் கிளிங்டன் உரையாற்றி 21 ஆண்டுகள் கடந்ததன் பின்னர் அமெரிக்க அதிபர் ஒருவர் இவ்வாறு கூட்டு அமர்வில் உரையாற்றவுள்ளமை இதுவே முதல் தடவை என தெரிவிக்கப்படுகிறது. இதற்கு முன்னர் பிரபல தலைவர்களான வின்ஸ்டன் சேர்ச்சில், நெல்சன் மண்டேலா, மார்கிரட் தட்சர், இந்திரா காந்தி, றொனால்ட் ரீகன், ஜோன் எஃவ் கெனடி ஆகியோர் இந்த கூட்டு கூட்டத்தில் உரையாற்றியுள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை அமெரிக்க அதிபர் அடுத்த வாரம் மேற்கொள்ள உள்ள கனேடியப் பயணமானது, அவர் அதிபர் பதவியில் இருக்கும் போது கனடாவிற்கு மேற்கொள்ளும் இறுதிப் பயணமாக அமையவுள்ளது. ஏனெனில் எதிர்வரும் நவம்பர் எட்டாம் திகதி புதிய அமெரிக்க அதிபரைத் தேர்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் தற்போதைய அமரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் பதவிக் காலமும் நிறைவுக்கு வரவுள்ளது. அத்துடன் அமெரிக்க அதிபராக பதவிவகிக்கும் காலத்தில் அதிபர் ஒபாமா கனடாவுக்கு இரண்டு தடவைகளே வருகை தந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. The post அடுத்த வாரம் கனடாவுக்கு வருகை தரவுள்ள அமெரிக்க அதிபர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| கவலை அடைந்துள்ள பிரித்தானியா வாழ் கனேடியர்கள் Posted: 25 Jun 2016 08:47 AM PDT
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரித்தானியா விலகும் முடிவினை அடுத்து தமது நீண்டகால திட்டங்கள் தொடர்பில் பரிசீலித்து வருவதாகவும் தெரிவித்துள்ள அவர்கள், சில தொழில்த்துறை வேலைவாய்ப்புக்களில் இருந்து தாம் நீக்கப்படுவதற்காக சாத்தியப்பாடுகள் உள்ளதாகவும் கவலை வெளியிட்டுள்ளனர். அத்துடன் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு முன்னரைப் போல பயணிக்க முடியாது என்ற நிலைமை, தொழில் ரீதியாக தமக்கு பாதிப்பினை ஏற்படுத்தக்கூடும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர். வேற்று நாட்டவரை வெளியேறுமாறு வலியுறுத்தும் நிலைப்பாடு இதுவரையில் கனேடியர்களை நோக்கி மேற்கொள்ளப்படவில்லை என்றும், எனினும் எதிர்காலத்தில் அந்த நிலைமை தொடராது என்பதை மறுப்பதற்கு இல்லை எனவும் அவர்கள் அச்சம் வெளியிட்டுள்ளனர். The post கவலை அடைந்துள்ள பிரித்தானியா வாழ் கனேடியர்கள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| நெடுஞ்சாலை 400இல் விபத்து – குறைந்தது ஐவர் பலி Posted: 25 Jun 2016 07:29 AM PDT
ஷெப்பேர்ட் அவனியூவிற்கு தெற்காக நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய வழித்தடத்தில் நேற்று இரவு 9.45 மணியளவில் இந்த விபத்து சம்பவித்துள்ளது. விபத்தில் குறைந்தது மூன்று கனரக வாகனங்கள் உட்பட பல வாகனங்கள் சம்பந்தப்பட்டுள்ளதாகவும், விபத்தில் வாகனம் ஒன்று தீப்பற்றிக்கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. விபத்தை அடுத்து ஃபின்ச் அவனியூ பகுதியின் நெடுஞ்சாலையின் தெற்கு நோக்கிய தடங்களும், நெடுஞ்சாலை 401 இல் உள்ள வடக்கு நோக்கிய தடங்களும் போக்குவரத்திற்கு மூடப்பட்டுள்ளன. விபத்தில் காயமடைந்தவர்கள் தொடர்பில் தகவல்கள் எவையும் தெரிவிக்கப்படாத நிலையில், பலர் காயமடைந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. The post நெடுஞ்சாலை 400இல் விபத்து – குறைந்தது ஐவர் பலி appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஒன்ராறியோ Whitby பகுதியில் உள்ள வீடு ஒன்றில் பெண் ஒருவரின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் காவல்த்துறையினர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.
அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா அடுத்த வாரம் கனடாவுக்கு வருகை தரவுள்ளார்.
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரத்தானியா வெளியேறும் முடிவு தமது வேலை மற்றும் தங்கும் உரிமையில் தாக்கம் செலுத்தும் என்ற கருத்தினை பிரித்தானியாவில் பணிபுரியும் மற்றும் அங்கு வாழ்ந்துவரும் கனேடியர்கள் பலர் வெளிப்படுத்தியுள்ளனர்.
நெடுஞ்சாலை 400 இன் தெற்கு நோக்கிய தடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக ஒன்ராறியோ மாகாண காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர்.