Tamil Star |
- பிரம்டன் விபத்தில் 13 வயது சிறுமி படுகாயம்
- பிரம்டனில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு
- ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா சேர்ந்து இருப்பதை விரும்பும் கனடா
- வாங்க… காலை உணவு சாப்பிடலாம்!
| பிரம்டன் விபத்தில் 13 வயது சிறுமி படுகாயம் Posted: 23 Jun 2016 08:00 PM PDT
வடக்கு Centre வீதி மற்றும் Prouse Drive பகுதிச் சந்திப்பில் இன்று மாலை 5 மணிக்கு சற்று முன்னராக இந்த விபத்து இடம்பெற்றிருந்த நிலையில், உடனடியாகவே அங்கு அவசர மருத்துவப் பிரிவினர் வரவழைக்கப்பட்டிருந்தனர். 13 வயதான பதின்மயவது சிறுமி ஒருவரே இந்த விபத்தில் படுகாயமடைந்ததாகவும், அவர் அவசர உலங்குவானூர்தி மூலமாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார் என்றும் காவல்த்துறையினர் தகவல் வெளியிட்டுள்ளனர். அவரை மோதியதாக கூறப்படும் வாகனம் சம்பவ இடத்திலேயே தரித்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த அந்த விபத்தை அடுத்து விசாரணைகள் இடம்பெற்று வருவதனால் வாகன ஓட்டிகள் அந்த சந்திப்புப் பகுதியை போக்குவரத்திற்கு தவிர்த்துக்கொள்ளுமாறும் காவல்த்துறையினர் அறிவுறுத்தியிருந்தனர். The post பிரம்டன் விபத்தில் 13 வயது சிறுமி படுகாயம் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| பிரம்டனில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு Posted: 23 Jun 2016 07:59 AM PDT
Beaconsfield Avenueவில் அமைந்துள்ள வீடு ஒன்றில் இருந்து நேற்று புதன்கிழமை பிற்பகல் மூன்று மணியளவில் இரண்டு நபர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. தொலைபேசி அழைப்பின் மூலம் தமக்கு கிடைத்திருந்த முறைப்பாட்டை அடுத்து தாம் உடனடியகாவே சம்பவ இடத்துக்கு விரைந்திருந்ததாக பீல் பிராந்திய காவல்த்துறையினர் தெரிவித்துள்ளனர். தற்போது இது குறித்த விசாரணைகளை மனித கொலைகள் தொடர்பிலான அதிகாரிகள் முன்னெடுத்து வருவதாகவும் தகவல் வெளியிட்டுள்ள அவர்கள், உயிரிழந்தவர்கள் குறித்த விபரங்களையோ, உயிரிழப்புக்கான காரணங்களையோ உடனடியாக வெளியிடவில்லை. அதேவேளை இந்த சம்பவத்தினால் ஏனைய பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் இல்லை என்றும், இது ஒரு தனிப்பட்ட சம்பவம் என்றும் காவல்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். The post பிரம்டனில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுப்பு appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா சேர்ந்து இருப்பதை விரும்பும் கனடா Posted: 23 Jun 2016 07:53 AM PDT
ஒட்டாவாவில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்ற அஞ்சலி நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டுள்ள கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ரூடோ ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் பிரித்தானியா சேர்ந்து இருக்க வேண்டும் என்ற தமது விருப்பத்தை தெரிவித்துள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய ஒன்றியத்துடன் சேர்ந்து இருப்பதன் மூலம் வர்த்தகம் மற்றும் பொருளாதாரத்தின் செழிப்பிற்கான ஆதரவின் உறுதித் தன்மை தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். 28 நாடுகளைக் கொண்ட ஐரோப்பிய ஒன்றியத்தில் பிரித்தானியா தொடர்ந்தும் இருப்பதா அல்லது விலகுவதா என்பதை தீர்மானிப்பதற்கான மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரித்தானியாவில் இன்று நடைபெறும் நிலையில், கனேடியப் பிரதமர் தமது இந்த நிலைப்பாட்டை நேற்று வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்துடனான பொருளாதார வர்த்தக உடன்பாட்டை செய்வது தொடர்பான பேச்சுக்களை கனடா தொடர்ந்து வரும் நிலையில், கனடாவிற்கு ஆதரவாக பிரித்தானியா எப்போதும் தனது உறுதியான ஆதரவு நிலைப்பாட்டை ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளிப்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. The post ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரித்தானியா சேர்ந்து இருப்பதை விரும்பும் கனடா appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| Posted: 23 Jun 2016 07:49 AM PDT
பள்ளி செல்லும் மாணவர்கள், வேலைக்கு செல்வோர், இல்லத்தரசிகள் என பலரும் இன்று காலை உணவை தவிர்ப்பது அல்லது அதனைக் குறித்து அலட்சியமாக இருப்பது வழக்கமாகிவிட்டது. காலை உணவை தவிர்ப்பவர்கள் மிகுந்த இன்னலுக்கு ஆளாவார்கள் என்று மருத்துவர்களும் உணவு நிபுணர்களும் எச்சரிக்கின்றனர். இரவு முழுவதும் வயிறு காலியாக இருப்பதால், உடலுக்கு சக்தியை அளிக்கும் குளுக்கோஸ்சின் அளவு குறைந்துவிடும் இதனை உடனடியாகத் திரும்பப் பெற காலை உணவு அவசியம். அவ்வாறு காலை உணவை உட்கொண்டால்தான், நாள் முழுவதும் உரிய சக்தியுடன், களைப்பின்றி செயல்பட முடியும் என்கின்றனர் மருத்துவர்கள். காலை சிற்றுண்டி உங்கள் ஒருநாள் கலோரி தேவையை கட்டுக்குள் வைத்திருக்கும். நம்மிடையே மதிய உணவுக்கும்(லஞ்ச்), இரவு உணவுக்கும்(டின்னர்) இருக்கும் முக்கியத்துவம் காலை உணவுக்கு இல்லை. விருந்தினருக்கும் மதிய உணவு அல்லது இரவு உணவைத்தான் நாம் ஏற்பாடுச் செய்கிறோம்.ஆனால், வளரும் குழந்தைகளின் ஆரோக்கியத்திற்கும், அறிவு வளர்ச்சிக்கும் தேவை காலை உணவுதான் என்பது ஆய்வில் தெரியவருகிறது. அதிலும் குறிப்பாக பள்ளி செல்லும் குழந்தைகள் விஷயத்தில் காலை உணவு ரொம்ப முக்கியம். நார்சத்தும், விட்டமின் சியும் அடங்கியுள்ள பச்சைக் காய்கறிகளால் தயாரிக்கப்படும் சாம்பாரை உபயோகிக்கும் பொழுது காலை உணவு நல்ல ஆரோக்கியம் கொடுக்கும். The post வாங்க… காலை உணவு சாப்பிடலாம்! appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

பிரம்டன் பகுதியில் இன்று பிற்பகல் அளவில் இடம்பெற்ற விபத்தில் பதின்மயவது சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.
பிரம்டனில் இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
ஐரோப்பிய ஒன்றியத்துடன் தொடர்ந்தும் பிரித்தானியா சேர்ந்து இருப்பதற்கான விருப்பத்தை கனடா வெளியிட்டுள்ளது.
காலை உணவா? அதற்கு எங்கே நேரம்?' என அலட்சியமாக கேட்பவர்களும் நம்மில் உள்ளனர். நம்மிடம் இருக்கும் கெட்டப் பழக்கங்களில் காலை உணவை(Break fast) தவிர்ப்பதும் அடங்கும்.