Tamil Star |
- ஐக்கிய அரபு இராச்சியத்தில் விடுதலையான கனேடியர் நாடு திரும்பினார்
- வீதி விபத்துக்கள் தொடர்பில் ரொரன்ரோ நகரபிதா வேண்டுகோள்
- அவுஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள கனேடியர்
| ஐக்கிய அரபு இராச்சியத்தில் விடுதலையான கனேடியர் நாடு திரும்பினார் Posted: 21 Jun 2016 06:35 AM PDT
நேற்று மாலை 6.10 மணியவில் கனடா பியேர்சன் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடைந்த அவர், அங்கிருந்த ஊடகவியலாளர் மத்தியில் கருத்து வெளியிட்ட போது, தனது உணர்வுகளை வார்த்தைகளால் வர்ணிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளார். சுமார் இரண்டு ஆண்டுகளின் பின்னர் தாய்நாடு திரும்பியிருப்பதையிட்டு மகிழ்வதாகவும், தனது விடுதலைக்கு உதவிய ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகம்,கனேடிய அரசாங்கம், வழக்கறிஞர்கள், தனது குடும்பத்தார் என அனைவருக்கும் தமது நன்றியை தெரிவிப்பதாகவும் அவர் கூறியுள்ளார். கனடாவிலும், உலக நாடுகளிலும் உள்ள ஆயிரக்கணக்கானோர் தனக்காக குரல் கொடுத்தமையாலேயே தான் இன்று தாய்நாட்டில் கால்பதிக்க முடிந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். கனேடியரான சாலிம் அலராடி கடந்த 2014ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் டுபாயில் வைத்து அந்த நாட்டு அரசாங்கத்தினால் கைது செய்யப்பட்டிருந்தார். அவர் மீது பல பொய்யான குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு அவர் சிறைவைக்கப்பட்ட நிலையில், அவரின் விடுதலையை வலியுறுத்தி மனித உரிமை அமைப்புக்கள் உள்ளிட்ட பல தரப்பினர் ஐக்கிய அரபு இராச்சிய அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுத்து வந்திருந்தன. இந்த நிலையில் கடந்த மே மாதம் 31ஆம் திகதி எந்தவித விளக்கங்களும் தெரிவிக்கப்படாத நிலையில் சாலிம் அலராடி விடுதலை செய்யப்பட்ட நிலையில் நேற்று அவர் கனடாவிற்கு திரும்பியுள்ளார். The post ஐக்கிய அரபு இராச்சியத்தில் விடுதலையான கனேடியர் நாடு திரும்பினார் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| வீதி விபத்துக்கள் தொடர்பில் ரொரன்ரோ நகரபிதா வேண்டுகோள் Posted: 21 Jun 2016 06:16 AM PDT
வானொலி அறிவிப்பு ஒன்றின் மூலமாக இந்த வேண்டுகோளை விடுத்துள்ள அவர், வீதிகளில் பயணிக்கும் போது வாகனங்களை மிகவும் அவதானமாக செலுத்துவதன் மூலம் உயிரிழப்புக்களை தவிர்க்க முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார். வாகன சாரதிகள் வீதிகளில் அதிக கவனத்துடனும், வீதிச் சமிக்கைகளை பின்பற்றியும் வாகனங்களைச் செலுத்த வேண்டும் என்றும், அவ்வாறு அவதானமாக வாகனங்களைச் செலுத்துவதன் மூலம், தாங்கள் செல்ல வேண்டிய இடத்திற்கு பாதுகாப்பாக சென்று சேர்ந்து விடலாம் என்பதுடன், பிறரது உயிரையும் பாதுகாக்க முடியும் எனவும் அவர் விளக்கமளித்துள்ளார். இந்த வீதி விபத்துக்களால் பாதசாரிகள் பலர் பலியாகியுள்ளதையும் ரொரன்ரோ நகரபிதா சுட்டிக்காட்டியுள்ளார். இதேவேளை இந்த ஆண்டின் தற்போது வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துக்களில் குறைந்தது 36 பேர் பலியாகியுள்ளதுடன், அவர்களில் 17 பேர் பாதசாரிகள் என்பதை ரொரன்ரோ நகர புள்ளிவிபரத் தகவல்கள் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது. The post வீதி விபத்துக்கள் தொடர்பில் ரொரன்ரோ நகரபிதா வேண்டுகோள் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| அவுஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள கனேடியர் Posted: 21 Jun 2016 06:12 AM PDT
29 வயது மக்சிமீ காக்னொன் என்ற அந்த கனேடியர் அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டிருந்த நிலையில், கடந்த மே மாதத்திலிருந்து காணவில்லை என தெரிவிக்கப்படுகிறது. கடந்த மே மாதம் ஆறாம் திகதி வெள்ளிக்கிழமை அவுஸ்திரேலியாவின் கார்ன்ஸ் பகுதியில் இருப்பதாக தனது குடும்பத்தாருக்கு தெரிவித்திருந்தார் என்றும், அதன் பின்னர் அவர் குடும்பத்தாருடன் தொடர்பு கொள்ளவில்லை எனவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் காணாமல் போயுள்ள குறித்த கனேடியரைத் தேடிவரும் அவுஸ்திரேலிய காவல்த்துறையினர், இவ்வளவு நீண்ட காலம் அவர் காணாமல் போயுள்ளமை தமக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இதேவேளை அவுஸ்திரேலியாவின் சிட்டினியில் உள்ள கனேடிய தூதரக அதிகாரிகள், உள்ளூர் அதிகாரிகளுடன் தொடர்ச்சியான தொடர்புகளைப் பேணி வருவதுடன், தேவையான உதவிகளை வழங்கிவருவதாக கனேடிய வெளியுறவுத் திணைக்களத்தின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். இரகசிய பாதுகாப்பைக் கருதிற்கொண்டு இந்த விவகாரம் தொடர்பில் மேலதிக தகவல்களை தற்போதைக்கு வெளியிட முடியாது எனவும் அவர் கூறியுள்ளார். அத்துடன் குறித்த கனேடியர் காணாமல் போயுள்ளமை தொடர்பில் மேலதிக தகவல் அறிந்தோர் குயீன்ஸ்லான்ட் காவல்த்துறையினரை அல்லது குற்றத்தடுப்பு பிரிவினரை தொடர்பு கொள்ளுமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளார். The post அவுஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள கனேடியர் appeared first on Tamil.com. This posting includes an audio/video/photo media file: Download Now |
| You are subscribed to email updates from Tamil.com. To stop receiving these emails, you may unsubscribe now. | Email delivery powered by Google |
| Google Inc., 1600 Amphitheatre Parkway, Mountain View, CA 94043, United States | |

ஐக்கிய அரபு இராச்சியத்தில் சுமார் இரண்டு ஆண்டு காலமாக சிறைவைக்கப்பட்டிருந்த கனேடியரான சாலிம் அலராடி, விடுதலையாகிய நிலையில் நேற்று கனடாவுக்கு திரும்பியுள்ளார்.
ரொரன்ரோ வீதிகளில் வாகன விபத்துக்களால் நேரும் மரணங்கள் அதிகரித்துவரும் நிலையில், வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களை அவதானத்துடன் செலுத்துமாறு ரொரன்ரோ நகரபிதா ஜோன் ரொறி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் காணாமல் போயுள்ள கனேடியர் ஒருவரை அவுஸ்திரேலிய காவல்த்துறையினர் தேடிவருகின்றனர்.